Wednesday, September 16, 2009

சஷி தரூரின் ட்விட்

"Tell us minister, next time you travel to Kerala, will it be cattle class?"
Absolutely, in cattle class out of solidarity with all our holy cows."

சஷி தரூரின் நகைச்சுவை உணர்வு அபாரம்.
மனதில் பட்டதை உடனே தெரிவித்துவிட ஏதுவாக ட்விட்டர். யோசிக்க நேரம் கிடைத்து இருந்தால் இவர் இப்படி எழுதி இருப்பாரா என்பது சந்தேகமே ! வாழ்க ட்விட்டர் ! வளர்க addiction.

காங்கிரஸின் austerity டிரைவ் மீது இவருக்கு இருக்கும் விமர்சனத்தை மேலிடத்தில் முன்பே தெரிவித்து இருக்கலாம். மேலிடமும் இவர்களிடம் பேசிவிட்டு திட்டத்தை மக்களிடம் அறிவித்து இருக்கலாம்.

political fallout ஐ தடுக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்கலாம். அதற்கு பதிலாக இவரின் கருத்துக்கான காரணத்தை புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். சிக்கனத்தை கடைபிடி என்று ஆணையிடுவதற்கு பதிலாக நடவடிக்கைக்கான காரணம்/தேவை/ நன்மை/ மக்களுக்கு கூற விரும்பும் மெசேஜ் போன்றவற்றை விளக்கலாம். கட்டாயத்தை சஷி தரூர் ட்விட்டி விட்டார். சென்சிடிவிட்டி புரிந்து கருத்து சொல்லி இருக்கவேண்டும் என்று உளருவதை விட்டு அனைவருக்கும் புரியும் விதமாக திட்டத்தை விளக்குவதே காங்கிரஸின் கடமை.

சரோஜினி நாயுடு காந்தியின் மூன்றாம் வகுப்பு பயணத்தை கிண்டல் செய்ததை நினைவு கூர்ந்தால் கருத்து வேற்றுமைக்கான காரணம் எளிதாக புரியும். சிலருக்கு Austerity க்கான தேவையை புரிந்து கொள்வது கடினம். அவர்களுக்கு காந்தியின் மூன்றாம் வகுப்பு பயணம் மற்றும் அவரின் costume விளம்பரமாக தான் தெரியும் அல்லது தேவையற்றதாக தெரியும். தியாகங்கள் கேள்விக்குறியாக்கப்படும். அவர்களுக்கு புரியவைப்பது தான் தீர்வு. எதிர்நடவடிக்கை அல்ல.

11 comments:

பிரபாகர் said...

மணி,

இன்று எளிமை என்பது விளம்பரத்துக்காக மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறீர்கள். ஊரில் சைக்கிள் ஓட்டிப்பாருங்கள், பந்தா பண்றான் என சொல்லுவார்கள்...

வெளிநாட்டில் எப்படி பார்ப்பார்கள் என உமக்கு நன்றாகவே தெரியும்..

பிரபாகர்.

மணிகண்டன் said...

வாங்க பிரபாகர். என்னைய பொருத்தவரைக்கும் விளம்பரத்துக்காக நல்லது செஞ்சாலும் ஓகே தான்.

நீங்க எப்ப ஊருக்கு வந்தீங்க ? நம்ப வூருல எல்லாம் சைக்கிள் ஓட்டினா நேரா வைகுண்டம் தான் :)-

பாருங்க. முன்னாடி எல்லாம் ரொம்ப விலையுர்ந்த கார், வண்டி எல்லாம் ஓட்டினா பந்தான்னு சொல்லுவாங்க. இப்ப அதை யாரும் கண்டுக்கறது இல்லை. ஆனா, எளிமையா இருக்க ட்ரை பண்ணினா சொல்றாங்க. அதுவே ஒரு மாற்றம் தான !

tamil0 சைட் முன்னாடி எனக்கு மால்வேர் இருக்குன்னு கூகிள் க்ரொம் சொல்லிச்சே !

Samuel | சாமுவேல் said...

பிரபாகர்.
// பந்தா பண்றான் என சொல்லுவார்கள்...
//
வெளிநாடா சார் நீங்க...எப்படி சார் வெளிநாடு போனாலே ..சொந்த நாட்டு காரைங்கள குறைவா தான் பார்பீங்களா.
ஒன்னு தெரிஞ்சுகோங்க , நேதேர்லாண்ட்ள சைக்கிள் ஒற்றதுகும், ஸ்ரீரங்கத்துல ஒற்றதுகும் உள்ள முக்கிய வித்யாசம் ..climate ...அங்க இந்த மாதிரி climate இருந்தா எவனும் ஓட்ட மாட்டான் ....இங்க இந்த climate ஒட்நீங்கனா ..ஒன்னு சன் stroke வரும் ...இல்லனா குளிச்சிட்டு போய் நிப்பீங்க ஆபீஸில்.இந்த வித்யாசத்தை புரிஞ்சிகோங்க.
..//இன்று எளிமை என்பது விளம்பரத்துக்காக மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது//
வெளிநாட்டில் இருப்பவர்கள் மனநிலை ...இது உண்மை இல்லை.

Samuel | சாமுவேல் said...

மணி ..

நம்ம சஷி தரூர் ....வோட்டு கேட்கும் பொது ...cattle (மாட்டு வண்டில ) மேல வேர்க்க விறு விருக்க தெரு தெருவ சுத்தி போய் வோட்டு கேட்டார் ...மனுஷன் மினிச்டெர் ஆன உடன் ...இப்ப அரசாங்க வீடும், எகோநோமி கிளாசும் ...குறைவா தெரியுது..


. அவருடைய கடந்த காலத்து வேலை அனுபவங்களை பார்க்கும் போது தெரியுது ..எங்க இருந்து வந்தது இந்த மன நிலை என்று.

மணிகண்டன் said...

***
நேதேர்லாண்ட்ள சைக்கிள் ஒற்றதுகும், ஸ்ரீரங்கத்துல ஒற்றதுகும் உள்ள முக்கிய வித்யாசம் ..climate
***

ஆஹா ! நான் சைக்கிள் பெடல்ன்னு இல்ல நினைச்சேன் :)

நான் காலேஜ் படிக்கும்போது எனக்கு சன் ஸ்ட்ரோக் எல்லாம் வரலியே :)

பிரபாகர் சொல்ல விரும்பிய பாயிண்ட் வேற. பொழுது போகாமல் விவாதம் செய்யும் கோஷ்டியை சேர்ந்தவர் அல்ல அவர் ! அதுக்கு நான் இருக்கேன்.

Samuel | சாமுவேல் said...

//நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறீர்கள். ஊரில் சைக்கிள் ஓட்டிப்பாருங்கள், பந்தா பண்றான் என சொல்லுவார்கள்...வெளிநாட்டில் எப்படி பார்ப்பார்கள் என உமக்கு நன்றாகவே தெரியும்..///
//நான் காலேஜ் படிக்கும்போது எனக்கு சன் ஸ்ட்ரோக் எல்லாம் வரலியே :)///

ஹய் நான் இப்ப ஊரில் சைக்கிள் ஓட்டும் பொது பந்தா பண்றான்னு சொல்லலையே !!!!

அவர் அப்படி என்ன தான் பாயிண்ட் சொல்ல வந்தார் ?.....சைக்கிள் பத்தி சொன்னார் ...அப்புறம் விளம்பரம் பத்தி சொன்னார்.

Samuel | சாமுவேல் said...

பிரபலமான ஆளா இருந்தா, எளிமையா இருந்தா விளம்பரம்னு எதை வச்சு சொல்றீங்க ?
மக்களுடைய மன நிலை அப்படின்னு சொல்றீங்க ...அதுக்கு தான் அவர் சொன்ன சைக்கிள் விஷயம் ...தப்புன்னு சொல்லவந்தேன் ...

மணிகண்டன் said...

***
ஹய் நான் இப்ப ஊரில் சைக்கிள் ஓட்டும் பொது பந்தா பண்றான்னு சொல்லலையே !!!!
***

நீங்க ஓட்டினா சொல்லலை. அதுவே பாரின் ரிடர்னா சொல்றாங்க போல :)- அந்த அநியாயத்தை தான் அவர் சொல்றாரு :)- பணக்கரான் / அமைச்சர் economy class ல போனா வெட்டி பந்தான்னு சொல்ற மனநிலைக்கு மக்கள் வந்துட்டாங்கன்னு.

கண்ணை கட்டுதே :)

ers said...

விவாதத்திற்கிடையே குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும்


புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Samuel | சாமுவேல் said...

//நீங்க ஓட்டினா சொல்லலை. அதுவே பாரின் ரிடர்னா சொல்றாங்க போல :)- //

பாத்தீங்களா மணி .நீங்க மட்டும் காலேஜ் படிக்கும் போதுனு சொன்னீங்க ...ஸ்கூல் என்ன பாரினா ?
நாங்களும் பாரின் ரிடுர்ன் தான் மணி .

பாரின் ரிடுர்ன் ஆபவர்கள் ...சைக்கிள் ஓடுனா எல்லாரும் பந்தா பண்றான்னு நினைகிரானு நினைப்பது ..பாரின் ரிடுர்ன் மன நிலை .
மக்கள் மன நிலை இல்லை.
இது பணக்காரன், அமைச்சருக்கும் பொருந்தும்.

என்னுடைய வாதம் மக்கள் மன நிலை ஒன்னும் தப்பான மன நிலை இல்லை ...எளிமை விளம்பரத்துகாக பண்ணுவதும் இல்லை

(இதுக்கு மேல சமாளிக்க முடியுமான்னு தெரியல ...பார்க்கலாம் )

மணிகண்டன் said...

ok !