Monday, October 20, 2008

சினிமா சினிமா - தொடர் பதிவு

இத்தொடருக்கு அழைத்த திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், தாமிராவுக்கும் எனது நன்றி.(திரு போடாததுக்கு மன்னிக்கணும் தாமிரா)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு நினைப்புல இல்ல. பார்த்தால் பசி தீரும்ன்னு நினைக்கறேன்.எங்க தெருல ஒருத்தர் வீட்டுல பெரிய டயனோரா டிவி இருக்கும். அங்க தான் கூட்டத்தோட டிடில பாத்தேன்.டவுரி கல்யாணம்"திருச்சி ரம்பா தியேட்டர்ல பாத்த ஞாபகம் இருக்கு.இண்டெர்வல் கோன் ஐஸ்காக தான் சினிமா போனேன்னு நினைக்கறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். (நேதர்லாந்த்ல, ரோசண்டால்ன்னு ஒரு ஊருல). படத்த நிம்மதியா பாக்கவுடாம ரீல மாத்தி மாத்தி போட்டு உயிர் எடுத்தானுங்க. முன்னாடி இதே மாதிரியே வேட்டையாடு விளையாடு படத்துலயும் பண்ணினாங்க. தமிழ் இயக்குனர்கள் நான்-லீனியர் ஸ்டைல்ல படம் எடுத்தா தான் இனிமே ஐரோப்பால தமிழ் படத்துக்கு போகலாம்ன்னு இருக்கேன். (இந்த ஸ்டைல் திரைக்கதை எழுத தமிழ் எழுத்துலத்துல யாருப்பா இருக்காங்க ! )

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

டெய்லி எதாவது ஒண்ணு பாத்துக்கிட்டு தான் இருக்கோம்.அதுனால சரியா ஞாபகம் இல்ல.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா ?

பாரத் பந்த். தெலுங்கு டப்பிங் படத்த மட்டுமே தமிழ்படம்ன்னு நினைச்சிகிட்டு இருந்த காலம்.க்ளைமாக்ஸ்ல வில்லன் இந்தியாவுல உள்ள அத்தன அணைகளுக்கும் பாம்ப் வைப்பான். ஒரு வரைபடத்த வச்சிக்கிட்டு "டேய், இதோ பாரு நைல் ரிவர். இதுல பாம்ப் வச்சி இருக்கேன். வெடிச்சா,டெல்லி காலி.இதோ பாரு தேம்ஸ் ரிவர்.இந்த பாம்ப் வெடிச்சா ஹிமாச்சல்ல உள்ள பனிமலை எல்லாம் வெள்ளத்துல உருகிடும்".இன்னிக்கு சாயந்திரம் பந்த் முடியும்போது இந்தியாவே துண்டு துண்டா ஆயிடும்ன்னு கனைப்பான். அத கேட்ட ஒரு இந்திய காளைமாடு சிலிர்த்து எழுந்து வந்து அவன கொம்பால குத்தி குதறிடும்.இந்திய இறையாண்மைக்கு பங்கம் வந்தா காளை கூட பொறுத்துகாதுன்னு எனக்கு உணர்த்தின படம்.படம் பாத்த எங்க கண்ணு முழுக்க ஒரே தண்ணி. நாங்க கிளம்பின உடன ஆப்பரேட்டர் கண்ணுல ஒரே ஆனந்த கண்ணீர்.நாங்க மூணே பேரு மட்டும் தான் அன்னிக்கு படம் பாக்க வந்து இருந்தோம் !

இதுக்கும் முன்னாடி மக்கள் என் பக்கம் வந்த போது," ராஜ் ராஜ் சாம்ராஜ்ன்னு" கத்திக்கிட்டு வீட்டுல இருக்கற அலுமினயம் பொட்டிய தூக்கிகிட்டு மாடிமாடியா குதிக்க முயற்சி பண்ணிருக்கேன்."டேய், என்னடா மேல சவுண்டு" ன்னு வந்த குரல கேட்டுட்டு,கடைசில வர வேண்டிய போலீஸ் முன்னாடியே வந்துடுச்சேன்னு வெறுப்புல திரும்பி வந்துருக்கேன்.

5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

திருச்சி உறையூர்லேந்து அலெக்ஸ்ன்ன்னு ஒரு நடிகர் பொறந்தநாள்,தீபாவளி எல்லாத்துக்கும் "நாட்டை காக்க வந்த தலைவனே, எங்கள் குலநாயகனே"ன்னு அவரே அவருக்கு போஸ்டர் அடிச்சி ஒட்டிப்பாறு. அவர தமிழ் திரையுலகமும் / அரசியல் அரங்கமும் சுத்தமா கவனிக்க தவறியதுனால 2011 ல ஒரு முதலமைச்சர் கம்மி.இதுவே சென்னைல இருந்து இருந்தா அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருக்குமானு நினைச்சி பாத்து நொந்து இருக்கேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

என்னை மஹேந்திரன் படங்கள் மிகவும் கவர்ந்ததுண்டு.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பிலிம் நியூஸ் அனந்தன் எழுதின ஒரு புத்தகம் வாசிச்சது உண்டு. அத தவிர AVM பத்தி வந்த ஒரு புக் படிச்சிருக்கேன்.சினிமா பொன்னையா,எலிசா,லைட்ஸ் ஆன் சுனில் எல்லாம் ஆர்வமா மேஞ்சதுண்டு. இப்ப எல்லாம் துணுக்கு படிக்கனம்னா சாரு ஆன்லைன் மட்டும் தான்.

7.தமிழ்ச்சினிமா இசை?

சினிமா ரசனைல அடைஞ்ச முன்னேற்றம் மாதிரி இசைல கிராஜுவேட் ஆகாதது எனக்கு வருத்தமே. இன்னமும் "அரிதாரத்த பூசி கொள்ள ஆச" மாதிரியான பாடல்கள் தான் என்னோட டேஸ்ட். விசுன்னு எனக்கு ஒரு நண்பர் இருக்காரு. அவரும் விடாம எங்க ரூம்ல இருந்த எல்லாரையும் திருத்தறதுக்கு முயற்சி பண்ணி பாத்து இருக்காரு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தசாவதாரம் தவிர வேற உலக படமா ?

டி டில ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆக்சிடென்ட்ன்னு ஒரு படம் பாத்த ஞாபகம் இருக்கு. கன்னட படம்ன்னு நினைக்கறேன். பெண் கதாபாத்திரமே இல்லாத ஒரு திரைப்படம். செர்பிய மொழி படமான No Man's land ஆங்கில சப் டைட்டிலோட பாத்து இருக்கேன்.ரொம்ப பிடிச்சி இருந்தது (லகான் கிட்டேந்து ஆஸ்கர் அவார்ட பறிச்ச சினிமா).நிறைய ஹிந்தி மசாலா படம் பாத்து இருக்கேன். (தாரே ஜமீன் பர் உட்பட)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மேன்மையான நிலைல உள்ள ஒரு பொருள் கீழ தான் வர முடியும். அதுனால கொஞ்சம் வருஷம் கழிச்சி மேலேத்த வந்தாலும் வருவேன். இப்போதைக்கு ஜே கே ரித்தீஷுக்கு காம்படீடர் அவர் மட்டும் தான்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தியேட்டர்கள் எல்லாம் காலி.பைரசிய கண்டிப்பா ஸ்டாப் பண்ண முடியாது. அதுனால எதிர்காலம் கவலைக்கிடம் தான்.அனைத்து கட்சி கூட்டம் போட வேண்டிய அளவுக்கு இன்னும் போகல.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி,இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் சினிமாவ அடுத்த ஒரு வருஷம் தடை பண்ணிட்டா என்ன ஆகும்ன்னு கேள்வியா ! ப்ளாக் ரசிகர்களுக்கு ஜாலி தான். நல்லா பொழுது போகும். ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி போன்றவர்கள் முதலாளித்துவ சிந்தனைக்கு எதிரா எழுதுவாங்க. (தடையை மீறி படம் பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான குற்றஉணர்ச்சி வரும் என்பதால்) இன்னும் சில பேரு வேலை இழந்த தொழிலாளர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவாங்க. சில பேரு தடைய வரவேற்று அதற்கு அறிவியல் சம்பந்தமா விளக்கங்கள் தருவாங்க.(வேறு மாநிலங்களில் தமிழ் சினிமா பார்ப்பதற்கும் /தமிழ் சினிமா தயாரிப்புக்கும் தடை இல்லைன்னு சுட்டிக்காட்டுவாங்க).ஒரு சில பேரு ஆந்திரால தமிழ் சினிமாவ தடை செய்யாம,தமிழ்நாட்டுல மட்டும் தடை செஞ்சி இருக்கறத கண்டிச்சி அறிவுஜீவித்தனமாக பேசுவாங்க.தடையையும் மீறி இன்டர்நெட்ல வரும் தமிழ்சினிமா செய்திகள பாத்துட்டு 2011முதல்வர் சரத்குமார் இண்டெர்நெட் செய்திக்கும் சென்சார் கொண்டு வரவேண்டும் என்று முழங்குவார்.

சில பதிவர்கள் சீரியலுக்கு மாறிடுவாங்க.நான் இந்த மாமி வீட்டுல சீரியல் பாத்தேன்.நீங்க எங்க ? அப்படின்னு பின்னூட்டம் போட்டுப்பாங்க.

மேலும் சில பதிவர்கள் "சினிமா பார்ப்பதை நானும் விட்டுவிட்டேன் "என்று ஒருமணிக்கு ஒரு தடவ வந்து (intermission போது )கத சொல்லிட்டு போவாங்க.

வேற என்ன ?

ஈமெயில இன்னும் அஞ்சி பேருக்கு பார்வார்ட் பண்ணாட்டி உங்களோட இதர இதர ஐயிட்டம் எல்லாம் பழுதடையும்ன்னு கிலிய கிளப்புவாங்க. அந்த அளவுக்கு இன்னும் பதிவுலகம் டீசன்சில முன்னேராதத நினைச்சி வருத்தமா இருக்கு. இந்த தொடர் பந்தயத்த நிறுத்தாம கொண்டு செல்ல நான் அழைக்கும் நபர்கள்.

1) பத்ரி - http://thoughtsintamil.blogspot.com/
2) பிரியா - http://synapse-junctionofthoughts.blogspot.com/
3) நவநீதன் - http://navaneethankavithaigal.blogspot.com/

16 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

super Mani..

மணிகண்டன் said...

thanks sir.

Athisha said...

வலைக்கு புதியவரா .... வாங்க வணக்கம்

மணிகண்டன் said...

நான் எழுதிய பதிவ படிக்காமயே பின்னூட்டம் போட்ட ஆதிஷாவுக்கு எனது நன்றி.

பரிசல்காரன் said...

//
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

என்னை மஹேந்திரன் படங்கள் மிகவும் கவர்ந்ததுண்டு.//

என்ன கொடுமைங்க இது..?

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா..?

பல இடங்கள்ல சிரிச்சுப் படிச்சேன் நண்பரே..! சபாஷூ!

மணிகண்டன் said...

இல்ல பரிசல். அவரோட படத்த இப்ப பாத்தா கூட 70/80 எடுத்த பீலிங் சத்தியமா வராது. அவரோட படத்துல நிழல உபயோகிக்கற விதம், கேமரா angle எல்லாம் இன்னும் யாருமே மேட்ச் பண்ணல.

மணிகண்டன் said...

ஆனாலும் எழுதின குப்பைக்கு நடுவுல அத எழுதி இருக்க வேண்டாம்.

வருண் said...

நீங்க என்ன விஜய் மற்றும் ரஜினி ரசிகரா? :)

முள்ளும் மலரும் பார்த்து இருக்கீங்களா?

மணிகண்டன் said...

**** நீங்க என்ன விஜய் மற்றும் ரஜினி ரசிகரா? :) ****

:)-

***** முள்ளும் மலரும் பார்த்து இருக்கீங்களா? *****

சின்ன வயசுல நான் எப்போதும் "ராமன் ஆண்டாலும்" பாட்டு முனுமுனுத்துகிட்டே இருந்தேன்னு வீட்டுல சொல்லுவாங்க.

இப்ப கூட கொஞ்ச நாள் முனாடி பாத்தேன். ரொம்ப பிடிச்ச படம் வருண்.

பாருங்க ! முன்னாடி ரஜினி ரசிகரான்னு கேட்டுட்டு உடனயே முள்ளும் மலரும் பத்தி பேசி இருக்கீங்க. ரஜினியும் நல்ல படத்துல நடிச்சு இருக்காருங்க.

நவநீதன் said...

அண்ணே.... என்னிய மதிச்சு கூபிட்டுடீங்க...
கண்டிப்பா எழுதீர்றேன்....
உங்களால் பார்வையில் தமிழ் சினிமா எப்படி என்பதை உணர்த்துகிறது இந்த பதிவு....
உங்கள் ரசனைகளை புரிந்து கொள்ள முடிகிறது...

மகேந்திரன் சிறந்த இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை...
முள்ளும் மலரும் மிக சிறந்த படம்....

கோவி.கண்ணன் said...

கலக்கலாக எழுதி இருக்கிங்க மணி,

தெலுங்க திரைப்படத்தில் காளை மாட்டின் தேச பக்தி, நானும் கண்ணீர் விட்டு விட்டு அழுதேன்.

//இந்த ஸ்டைல் திரைக்கதை எழுத தமிழ் எழுத்துலத்துல யாருப்பா இருக்காங்க !//

இப்ப வருகிற படமெல்லாம் ரீலை மாற்றித்தான் ஓட்டுகிறார்கள் என்று உங்களுக்கு தோணவே இல்லையா ?

:)))))

மணிகண்டன் said...

நன்றி நவநீதன். உங்க பதிவ எதிர்பார்த்து கிட்டு இருக்கேன்.

மணிகண்டன் said...

தேங்க்ஸ் கோவி. நீங்க சொல்றதும் கரெக்ட் தான். நான் ஆயுத எழுத்துன்னு ஒரு படம் அப்படி தான் பாத்தேன்.....எனக்கே தெரியாம ரெண்டாவது CD முன்னாடி பாத்தேன். படம் முடிஞ்ச உடன தான் புரிஞ்சது நான் பாதி பாக்கலன்னு ....என்னோட நண்பர் வந்து தலைல அடிச்சுகிட்டாரு.

நவநீதன் said...

அண்ணே எழுதியாச்சுன்னே...
உங்க மெயில் ஐடி கொடுங்கன்னே...

Unknown said...

mani romba nalla irrukku da

மணிகண்டன் said...

oh ! Is it ranga ?