Friday, April 24, 2009

விருதுநகரில் Ma Foi கே.பாண்டியராஜன்

விஜயகாந்த் கட்சியின் சார்பாக நிற்கும் கே. பாண்டியராஜன் அவர்களை குறித்து உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். Ma Foi என்ற நிறுவத்தின் தலைவர். முதல்முறையாக ஒரு வேட்பாளர் தனது தொகுதியின் தேவையை கருத்தில் கொண்டு தொழில்முனைவோர் / மருத்துவர்கள் / பொறியாளர்கள் / பினான்சியல் அட்வைசர்கள் உதவியுடன் தொகுதிக்கான "election manifesto" தயார் செய்துள்ளார். இது வழக்கம் போல தேர்தலுக்காக தயாரிக்கப்படும் அறிக்கையாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.

இவரது Ma Foi Foundation வாயிலாக பலகாலமாக சமூக சேவைகள் செய்து வந்துள்ளார். அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு, பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் திறமைசாலியான இவருக்கு இந்த முறை வாய்ப்பு அளித்து பாக்கலாமே !


திருமங்கலம், அருப்புகோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் திருப்பருங்குன்றம் வாக்காளர்களின் கவனத்திற்கு.

இவரது கட்சியின் வலைத்தளத்தில் இவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காது. Ma Foi வலைத்தளத்தில் பவுண்டேஷன் குறித்த விவரங்கள் கிடைக்கும் அல்லது இவரது வலைத்தளமான http://kpandiarajan.com/home.html மேய்ந்து பார்க்கலாம்.

இவரது பலகலர் சட்டை பிடித்து இருந்தாலும் இவருக்கு வாக்கு அளிக்கலாம். இல்லையேல் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நன்றி அதிஷா மற்றும் ப்ருனோ.

Wednesday, April 22, 2009

சரத்பாபுவிற்கு வாக்களிப்போம்

நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எனது குடும்பத்தினரை சரத்பாபுவுக்கு வாக்களிக்க சொல்லி வற்புறுத்தினேன். ஏனென்றால் எனக்கு லைட்ப்ளூ கலர் சட்டை போட்டவர்களை மிகவும் பிடிக்கும். அதே காரணத்துக்காக உங்கள் அனைவரையும் அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
வேறு கலர் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இல்லையேல் உங்கள் கொள்கைக்கு / ருக்கு ஏற்ற கட்சிக்கு வாக்களிக்கவும்.

Monday, April 20, 2009

ரியாலிட்டி ஷோ - சிங்கிங்

சூசன் பாயில்

ரியாலிட்டி ஷோ பிடிக்காதுன்னு சொல்றவங்க பாக்க வேண்டிய எபிசொட் ! Britains Got Talent 2009 ஷோவோட ஆரம்ப எபிசொட். இந்த 47 வயசு பொண்ணு வந்தபோது இருந்த வரவேற்புக்கும் அவங்க பாடினதுக்குப்பிறகு கிடைச்ச கரகோஷத்துக்கும் உள்ள வித்தியாசத்த பாருங்க. நேற்று CNN ல லேரி கிங் லைவ் ஷோல பாத்துட்டு youtube ல தேடினேன். கடந்த ஒரு வாரத்துல கிட்டத்தட்ட 10 million hits.

உருவத்தை வச்சி ஜட்ஜ் பண்ணமுடியாது / கூடாதுன்னு அடிக்கடி யாராவது ஞாபகபடுத்திக்கிட்டே இருக்காங்க.


Susan Boyle - Singer - Britains Got Talent 2009 - Funny videos are here

Friday, April 17, 2009

கமெண்ட் எழுதி சம்பாதிக்க ஆசையா ?

கமெண்ட்/பின்னூட்டம் எழுதுவதில் நீங்கள் நிபுணத்துவம் உள்ளவரா ? வெட்டியாக கமெண்ட் எழுதி பொழுதை கழிக்கிறோமோ என்று உங்களை நீங்களே கேட்டு கொண்டது உண்டா ? அப்படியெனில், உங்களுக்கு இந்த லிங்க் ஒரு வரப்பிரசாதம். மே 26ம் தேதிக்கு முன்பு உங்களது முன் அனுபவத்தை சுட்டிக்காட்டி ஒரு ரெஷ்யூம் தயாரியுங்கள். அதன் பிறகு கீழ்க்கண்டுள்ள முகவரிக்கு சென்று ஏலத்தில் பங்கு கொள்ளவும்.

http://www.getafreelancer.com/projects/Copywriting-Data-Processing/Post-Blogs-Comments-Website.html

நீங்கள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றி nshima.com

Tuesday, April 14, 2009

கிச்சடி - 14/04/2009

சில பேருக்கு மனசுல ஓடற உணர்ச்சிகள் முகத்துல அப்படியே பிரதிபலிக்கும். அவங்களை எல்லாம் வெள்ளந்தி என்றும், மனசுல ஒண்ணு வச்சிக்கிட்டு வெளில வேற மாதிரி நடிக்க தெரியாதவங்கனும் சொல்லுவாங்க. அதுவே வேற சில பேரு என்ன பிரச்சனைனாலும் முகத்தை ஒரே மாதிரி வச்சிப்பாங்க.(ரங்கமணிகள்) இவங்களை எல்லாம் "என்னமா நடிக்கறா/நடிக்கறான்" பாருன்னு சொல்லுவோம். ஆனா, சினிமால அஜித் எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை முகத்துல காட்டினாலும் அவருக்கு நடிக்கவே தெரியலன்னு சொல்றாங்க. என்ன அநியாயம் ?

நான் ஒரு சிறுகதை எழுதி வச்சி இருக்கேன். ஆனா அதுக்கு முடிவு எழுத தெரியலை. இதுக்கு உதவி செய்ய ஏதாவது புத்தகம் இருக்கா ?

கல்லூரி சிறுகதை போட்டில வெற்றி பெற்ற பாலாஜிக்கு வாழ்த்துக்கள். கார்க்கியின் கதை டாப் 10ல வராதது பயங்கர அதிர்ச்சி தான். எனக்கு அவரோட கதையும் ரொம்பவே பிடிச்சி இருந்தது. Tastes differ !

Augusta National Golf tournament பைனல் ரவுண்ட் பாத்தேன். கார்பரா, கென்னிபெரிய ஷூட் அவுட்ல தோற்கடித்தார். டைகர் வுட் 17/18th ஹோல் ரெண்டுமே bogey. ஆறாவதா வந்தாரு. Is tiger woods capable of choking ?

தமிழ்ல எழுதும்போது எழுத்து பிழைகள் அதிகமா வருது. சரின்னு, மனசுல தோணும் எல்லா கருமாந்திரத்தையும் ஒரு நோட் புக்ல எழுதினேன். ரெண்டு மூணு நாள் கழிச்சி அதே மாதிரி NHM மூலமா வூட்டுல இருக்கும் கணிப்பொறில டைப் பண்ணினேன். இன்னொரு நாளைக்கு Google Transliterate மூலமா முயற்சி பண்ணினேன். கடைசி முறையில் பயங்கர பிரச்சனை. பலவித "ந" , "ன", "ண" ஆப்ஷன் வரும்போது எதை செலக்ட் பண்ணறதுன்னு குழப்பம் வருது. நோட்ல எழுதும் போது நூறுல ஒரு பத்து வார்த்தைகள் தவறா எழுதினா, இதுல முப்பது வார்த்தைக்கும் மேல தகிடுதத்தம் தான். I suppose language skills are more habitual.

கடைசியாக ஒரு சமையல் குறிப்பு.

அராபியாட்டா வேப்பம் பூ ரசம்

தேவையானவை :

அராபியாட்டா சாஸ்
புளி சிறிதளவு
சிகப்பு மிளகாய்
வேப்பம் பூ
துவரம் பருப்பு
இஞ்சி சிறிதளவு
சீரகம், கடுகு, உப்பு, எண்ணை தேவையான அளவு.

செய்முறை :

தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைக்கவும். அதனுடன் அராபியாட்டா சாஸ்(பழங்களுடன்), அரைக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ரசப்பொடியை சேர்த்து அடுப்பில் கொதிக்கவிடவும். (ரசப்பொடியின் வாசனை போகும் வரை)

மற்றொரு அடுப்பில் வாணலியில் எண்ணையை விட்டு கடுகை போடவும். கடுகு தாளித்தவுடன் சீரகம், இஞ்சி, துவரம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை கிள்ளி போடவும். கடைசியில் வேப்பம் பூவையும் சேர்த்து வறுக்கவும். (கருகாமல் பார்த்துக்கொள்ளவும்)

கொதிக்கும் ரசத்துடன் இவற்றை சேர்த்தால் அராபியாட்டா வேப்பம் பூ ரசம் ரெடி.

சற்றே புளிப்புடன் துவர்ப்பு கலந்து சுவையுடன் கூடிய இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Management Lesson : If you can't buy tomato before easter vacation, look up on your refrigerator and think sensible.

Friday, April 3, 2009

கிச்சடி - 03/04/2009

புவியீர்ப்பு சக்தி

வேறுபட்ட, வித்தியாசமான, குடும்பப்பாங்கான, மசாலாவான, வகையறுக்கப்படாத - இந்த வகையறையில் வரும் எந்த தமிழ் / ஹிந்தி படமா இருந்தாலும் ஒரு நிச்சயமான காட்சி ஒற்றுமை இருக்கு. அதாவது நம்ப ஹீரோ, ஹீரோயின் வூட்டுக்கு முதல் முறையா வராருன்னு வச்சிக்கோங்க. ஹீரோயின் வூட்டுல யாரும் இருக்கமாட்டாங்க. அந்த அம்மா, அப்பதான் குளிச்சுட்டு துண்டு கட்டிக்கிட்டு வெளில வருவாங்க. அவங்களோட துண்டுக்கும், புவியீர்ப்பு சக்திக்கும் ஒரு பைட் நடக்கும். இயக்குனரோட முடிவு நியூட்டனுக்கு ஆதரவாவே இருக்கும்.பாட்டு நல்லா இருக்கே, படம் ஏதோ வித்தியாசமா இருக்குன்னு சொன்னாங்களேன்னு டெல்லி - 6 பாத்தேன். மரண மொக்க.

அடிக்க வராதீங்க. நான் காலா பந்தர்ங்கர ஹிந்தி வார்த்தைய வெண்மேகம்ன்னு புரிஞ்சிக்கற ஆளு. அதுவும் சப்-டைட்டில் இல்லாம வேற பாத்தேன். சோ, நீங்களும் ஒருமுறை பைட் பாக்க ஆசைப்பட்டா, மீ நோ அப்ஜெக்க்ஷன்.
********************************************

அன்புள்ள சுந்தர் மாமாவுக்கு,
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ? ஒரு வாரமா இங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல . அடிக்கடி கடுதாசு போடு. ஆனா போன முறை நீ எழுதினது சரியா புரியல. கடுதாசில கதை எழுதாத. இந்த மாதிரி சிம்பிள்ளா எழுது.

இப்படிக்கு
மணி
********************************************
Golden Handshake

ஸ்வன் கோரன் எரிக்சன் இங்கிலாந்துக்கு கால்பந்து கோச்சா இருந்தாரு. 2006ல அவர அந்த பதவிலேந்து நீக்கினாங்க. அதுக்கு 3-4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. 2007ல மான்செச்டேர் சிடின்னு ஒரு கால்பந்து கிளப்புக்கு கோச்சா இருந்து பின்ன நீக்கப்பட்டாரு. மறுபடியும் 4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. நேத்திக்கு மெக்சிகோ அணி கோச் பதிவிலேந்து நீக்கி இருக்காங்க. இந்தமுறை 7 மில்லியன் போல.

நான் முன்னாடி வேல செஞ்ச கம்பெனி CEO பேரு கார்லி பியோரினா. அவங்கள 2005ல வேலைய விட்டு தூக்கினாங்க. நஷ்ட ஈடா 20 மில்லியனுக்கு மேல கொடுத்தாங்கன்னு செய்தி வந்தது. இவங்க தான் போன வருஷம் தேர்தல் போது ஜான் மக்கைன் டீமுக்கு நிதித்துறை ஆலோசகர். ஜான் மக்கைன்னோட சேர்ந்து Golden Handshake ஸ்கீமுக்கு எதிரா குரல் கொடுத்தாங்க.

நான் கூட பதிவு எழுதறதுலேந்து நீங்கிக்க ரெடி. சாமியோவ் !
*******************************************

சின்ன வயசுல, எதாவது துடுக்குத்தனம் பண்ணினா, அப்பா ஆபிஸ்லேந்து பூத கண்ணாடில பாத்துக்கிட்டு இருக்காருன்னு சொல்லி மிரட்டுவாங்க. கொஞ்சம் வயசு ஆனதுக்கு பிறகு பண்ற தப்பு எல்லாத்தையும் பாக்க சாமி இருக்காருன்னு பயம் காட்டுவாங்க. இப்ப இது எல்லாத்தையும் உண்மை ஆக்கிடுவாங்க போல. கூகிள் ஸ்ட்ரீட் வியூ உபயோகிச்சு பாருங்க.
**********************************************

ப்ளாக்ல யாராவாது குழந்தை போட்டோ போட்டாக்க, நான் அந்த பதிவ நிச்சயமா பாப்பேன். வரும் எல்லா பதிவுக்கும் ஒரு பதில் பின்னூட்ட டெம்ப்ளேட் இருக்கு. "மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.
******************************************

டெம்ப்ளேட் பத்தி வேற எழுதி இருக்கேன். பொதுவாவே, கட்டுமானத்துக்கு கட்டுப்பட்டவன் நான். ஏ ஜோக், நகைச்சுவை துணுக்கு எதுவும் ஸ்டாக் இல்ல. அதுனால

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
உன் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பியோடு தான்.

(எங்கேயோ, எப்பவோ படிச்சது. யாரு எழுதினதுன்னு தெரியாது. இது நல்ல கவிதையா தான் இருக்கணும். எனக்கே ஞாபகம் இருக்கே.)

Thursday, April 2, 2009

கவிதை தொகுப்பு - II

எழுதப்படும் கவிதை வரிகள்
என்றாவது ஒலி
எழுப்புமா.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.

Wednesday, April 1, 2009

கவிதை தொகுப்பு - I

ஓரெழுத்து கவிதை
அஆ
இரண்டெழுத்து கவிதை

மூணு எழுத்து கவிதை
அஆஇ
நாலெழுத்து கவிதை
அஆஇஈ
அஞ்சி எழுத்து கவிதை
அஆஇஈஉ
ஆறெழுத்து கவிதை
அஆஇஈஉக
ஏழு எழுத்து கவிதை
அஆஇஈஉகம
எட்டு எழுத்து கவிதை
அஆஇஈஉகமஎ
ஒம்போது எழுத்து கவிதை
ஈஉகஅஆஇமஎப
பத்தெழுத்து கவிதை
இதுக்கு மேல தெரியல

இந்த கவிதை தொகுப்புல எனக்கு பிடித்தமான கவிதைய சரியா தேர்ந்தெடுக்கறவங்களுக்கு ஒரு பரிசு உண்டு. பாக்கலாம் யாருக்கு பரிசுன்னு ?