Friday, February 27, 2009

ஜே கே ரித்தீஷ் மற்றும் சாம் ஆண்டர்சன் ரசிகர்களே

Monday, February 23, 2009

பிரம்ம பிரயத்தனம்

Manikandan: டேய் டுபுக்கு
KSR: என்னடா ?
Manikandan: நேத்திக்கு என்னோட ப்ளாக் படிச்சுட்டு கமெண்ட் போடறேன்னு சொன்ன தான ?

KSR: காலைல உயிர வாங்காத...இப்ப தான் ஆபீஸ் வந்தேன்.
Manikandan: நீ தானடா சொன்ன. சொல்லும் பேச்சும் ரொம்ப முக்கியம்டா.

டேய்...
--------------
-------------
சூனியம் வச்சிடுவேன் மச்சி.
KSR: இன்னிக்கு E.O.B குள்ளார கமெண்ட் போடறேன். வெயிட் பண்ணு.
Sent at 7:04 AM on Monday

Manikandan: ஹாய் டா இருக்கியா ?
sent at 1:03 PM on Monday

Manikandan: டேய் கபோதி, இருக்கியா இல்ல செத்து கித்து போய்ட்டியா ?
sent at 3:15 PM on Monday

KSR: டேய் மணி, எப்படிடா கமெண்ட் போடணும் ?
Manikandan: அது சரி. படிச்சு முடிச்ச உடன கமெண்ட்ஸ்ன்னு ஒண்ணு இருக்கும் பாரு. அத கிளிக் பண்ணு. அதுக்கு அப்புறம் உன்னோட கமெண்ட்ஸ் எழுதிட்டு அனானிமஸ் பட்டன் செலக்ட் பண்ணி சப்மிட் பண்ணு.
sent at 4:11 PM on Monday

Manikandan: டேய் என்னடா ஆச்சு ?
KSR: கமெண்ட் போடறது ரொம்ப காம்ப்ளெக்ஸா இருக்கே.
Manikandan: கன்னாபின்னானு வாய்ல வருது
KSR: இருடா. இருடா. இன்னும் 2 hoursல போடறேன். இப்ப wife கூட போன்ல இருக்கேன்.
sent at 5:02 PM on Monday

Manikandan: குட்மார்னிங், என்னடா பண்ற ?
KSR: ஹலோ மணி, நான் ஸ்ருதி. எப்படி இருக்கீங்க ? அவர் இப்பதான் குளிக்க போனாரு.
Manikandan: நல்லா இருக்கேன். பையன் எப்படி இருக்கான் ?
KSR: அவனுக்கு என்ன ? சூப்பரா இருக்கான். பக்கத்துலயே தான் இருக்கான்.

Manikandan: oh. வெப்காம் போட்டு விடுங்க. பையன் கிட்ட பேசலாம்.
sent at 6:56 AM on Tuesday

KSR: டேய் மணி, காலைல buzz பண்ணினயா ?

Manikandan: செருப்பால அடிப்பேன் ........ ...கமெண்ட் போட சொன்னா பொண்டாட்டி பேருல பேசறயா நீ ?
KSR: :)-
sent at 11:13 AM on Tuesday

Friday, February 20, 2009

ஹேக்கில் நடந்த ஈழத்தமிழர் போராட்டத்தின் தொகுப்பு


கடந்த மாதத்தில் இருமுறை ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கையில் நடக்கும் கொடும் செயல்களை வெளிக்கொண்டுவர நெதர்லாந்து பாராளுமன்றதிற்கு முன்னே அமைதியான முறையிலே போராட்டங்கள் நடைபெற்றன. நிச்சயமான ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தின் வன்கொலைகளை முன்னிறுத்தியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் placards காண்பிக்கபட்டன.


இந்த செய்தியை இங்குள்ள ஒன்றிரண்டு ஊடகங்களே ஒளிபரப்பின. அவற்றிலும் சில கேள்விகள் தீவிரவாதம் சம்பந்தமாக இருந்தன. ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருந்த போதும், முன்னூறு மக்கள் வந்ததாகவே செய்தி ஒளிபரப்பபட்டது.


http://www.youtube.com/watch?v=N6DNtrUXmLQ


http://www.nujij.nl/nederlandse-tamils-protesteren-in-den-haag.4687999.lynkx


அடுத்தமுறை நிச்சயமாக mainstream ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்றே நம்புகிறேன். இங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டாயிரம். (official). இதில் பத்து சதவீதம் மக்களாவது கலந்து கொண்டால் இது நடக்கும். கேரளத்தில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கை தமிழ் அகதிகளாக வந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு பெரிய அளவில் கூட்டம் கூடமுடியும். அதே சமயம் வெளிநாடுகளில் நடக்கும் போராட்டங்களில் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்வது வருந்தத்தக்கதே. புலம் பெயர்ந்த மக்கள் தங்களை ஒரு சிறு வட்டத்துக்குள் அடைத்து கொண்டதாகவே தோன்றுகிறது.

Tuesday, February 10, 2009

கிச்சடி - 10/02/2009

எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.
**************************************************

ப்ளாக் வந்ததுல யாருக்கு லாபமோ இல்லையோ சினிமாத்துறைக்கு நேரடி லாபம் இருக்கு. யப்பா ! சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆனா சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் ! பூஜாவுக்காக போனேன்னு !
**************************************************

தமிழ் ப்ளாக் உலகத்துக்கு சம்பந்தமே இல்லாத என்னோட நண்பர் ஒருத்தர் "நான் கடவுள்" படம் பாத்துட்டு சொன்ன கமெண்ட் "இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா " ! ப்ளாக் படிச்சா, ஜேமோவோட உள்குத்து வெளிபட்டுட்டுச்சு, திரை பிஞ்சிடுச்சுன்னு எழுதறாங்க. In crude terms, இது தான் திரைக்கதை ஆசிரியரின் நடுநிலைக்கு கிடைச்ச நற்சான்றிதழா ?
**************************************************

சாகும் வரை உண்ணாவிரதத்தோட நோக்கம் சாகறது கிடையாது ! மக்களோட கவனத்த திருப்பறது, பிரச்சினையின் ஆழத்த புரிஞ்சிக்க வைக்கறது, அது மூலமா அதற்கு ஒரு தீர்வு காண்பது. சாகும் வரை உண்ணாவிரததுக்கே இந்த ரெஸ்பான்ஸ் தான், இதுல அடையாள உண்ணாவிரதம்ன்னு announce பண்ணி இருந்தா ராஜ் டிவில கூட வந்து இருக்காது. ஆனா, மறுபடியும் வேறு எந்த பிரச்சனைக்கும் இதே யுக்திய கையாளமுடியாது.
**************************************************

Fitna படம் பாத்தேன். Geert Wilders (Dutch parliamentarian) எடுத்த படம். இஸ்லாம் தீவிரவாதம் சம்பந்தமா எடுக்கப்பட்ட படம். WTC இன்சிடென்ட்ல ஆரம்பிச்சி பலப்பல வீடியோக்கல தொகுத்து ( குரானில் வரும் சுராவுடன் இணைத்து ) முதல் பத்து நிமிஷம் ஓட்டறாங்க. அத தவிர ஒரு மூணு வயசு முஸ்லீம் குழந்தைக்கிட்ட jews பத்தி கருத்து கேக்கறாங்க. கடைசில டைரக்டர் ஒருசில அதிர்ச்சி தரும் தகவல் சொல்றாரு. அதுல ஒண்ணு "In nederlands, Government has started declaring public holidays for islamic festivals". யப்பா! மத தீவிரவாதம் பத்தி பேச இவருக்கு என்ன அருகதையோ !
**************************************************

இந்திய இலங்கை கிரிக்கெட் மேட்சுக்கு குமார தர்மசேனா அம்பயரிங் பண்ணினாரு. ஒரு பதினைந்து வருசத்துக்கு முன்னால இந்திய கிரிக்கெட் வாரியம் ரிடையரான வீரர்கள அம்பயரிங் பண்ணறதுக்கு ஒரு scheme கொண்டு வந்தாங்க. அவங்களுக்கு preference கொடுத்தாங்க. ரொம்ப வருஷமா நேஷனல்(ரஞ்சி) லெவல் அம்பயரிங் பாத்துக்கிட்டு இருந்தவங்க எல்லாம் ஒதுக்கப்பட்டாங்க. அதுனால அவங்க எரிச்சலாயி ரிடையர் ஆனாங்க.கடைசில அந்த scheme ஊத்திக்கிச்சு,இருந்த நல்ல அம்பயர்சும் போயாச்சு.இப்போ இன்டர்நேஷனல் அம்பயர் இந்தியாவுலேந்து வராததுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

Thursday, February 5, 2009

சிறுகதை - மார்கழி

அழகழகான வடிவங்கள். நேர்கோடாக, சுழிசுழியாக, வளைவாக

மெலிதான குளிர். குறுக்கும் நெடுக்குமாக, குனிந்தும் எம்பியும் வடிவத்தை சமன் செய்யும் பெண்கள்.

விதவிதமான வண்ணங்கள், கலர்பொடிகளின் எல்லைக்கு உட்பட்டு.

எண்ணங்களின் பிரதிபலிப்பாக, அழகியலின் அளவுகோளாக, கற்பனையின் எல்லையாக.

நைட்டியின் மேல் துண்டோடு, வெளிர்நீல சுடிதாரோடு

சாணத்திற்கு நடுவில் செம்பருத்தியும், சூரியகாந்தியும்.

தலையை துவட்டியபடியே, புத்தம் புதிதாக, வாசனையாக அருகில் வந்தமரும் எனது மனைவி.

என்னடா செல்லம் யோசிச்சிக்கிட்டு இருக்க ? விழித்தெழுப்பிய அவளது குரல்.

இல்லடி. மழை சோன்னு கொட்டினா எப்படி இருக்கும் !