Saturday, May 16, 2009

நாயகன்


தென்சென்னையில் ஆர் எஸ் பாரதிக்கு பதிலாக கலைஞர் வடிவேலிற்கு சீட் கொடுத்து இருந்தால் மற்றுமொரு தொகுதி கிடைத்து இருக்கும்.

Friday, May 15, 2009

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி - CNN IBN Exit Poll

திமுக கூட்டணி - 47 சதவீத வாக்குகள்

அதிமுக கூட்டணி - 34 சதவீத வாக்குகள் 

தமிழ்நாட்டில் பொதுவாக 5 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்தாலே ஒரு கூட்டணி ஸ்வீப் செய்யும்.

இதே போன்று பஞ்சாபிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த projection உண்மையாக இருந்தால் மன்மோகன்சிங்க் மறுபடியும் ஆட்சி அமைப்பது  உறுதி.

Wednesday, May 13, 2009

குப்பையற்ற திருச்சி

நவீன் சாவ்லா அவர்களே, 

மன்சூர் அலிகான் வெற்றி பெற ஏதாவது செய்யுங்களேன் !  

கோவிகண்ணன் அவர்களே :-  ராகுல்காந்தி மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறாரா ?  

மும்பை குண்டுவெடிப்பும் பெயர் மாற்றமும்

மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணமாக ஜமாத் உத் தாவா என்ற பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பை இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியது. உலக நாடுகள் ஒன்றினைந்து அந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக ஐ நா சபையின் மூலம் அறிவித்தது.  டிசம்பர் 11, 2008 ல், பாகிஸ்தான் இந்த இயக்கத்தை தடை செய்து அதன் தலைவர்களை கண்காணிக்க தொடங்கியது. 

பார்க்க http://thodar.blogspot.com/2008/12/blog-post.html
(பெயரை குறித்தான பதிவு)

மே 2009 - தீவிரவாத ஜமாத் உத் தாவாவின் புதிய பெயர் Falah-i-Insaniat ! இது இயங்க எந்த தடையும் கிடையாது. SWAT பள்ளத்தாக்கில் இருந்து குடி மாற்றப்படும் அகதிகளுக்கு இவ்வியக்கத்தை சேர்ந்தவர்கள் முகாம்கள் அமைத்து கொடுத்துள்ளனர். ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.  தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் இன்று இயக்கத்தின் பெயரை மற்றும் மாற்றி சுதந்திரமாக உலவி வருகின்றனர்.

http://www.guardian.co.uk/world/2009/may/13/pakistan-aid-terrorism

அடுத்த குண்டு வெடிப்பு எங்கோ 

Monday, May 11, 2009

மனிதவள மேம்பாட்டுத்துறை - கோபிநாத்தின் நீயா நானா !

கோபிநாத் நடத்தும் நீயா நானாவில் மனிதவள மேம்பாட்டு துறையில் வேலை பாக்கறவங்களும் மத்தவங்களும் கலந்து கிட்டாங்க. சுவையான விவாதங்கள்(!!) இருந்தன. உடனே இந்த பதிவு !!!

இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் மனிதவள மேம்பாட்டு துறைக்கு போதிய அளவு மரியாதையோ / அதிகாரமோ கொடுப்பது கிடையாது. சும்மா ஏதோ பேச்சுக்கு போர்டு மீட்டிங் / பாலிசி மீட்டிங் / XXXXX மீட்டிங் எல்லாவற்றிலும் ஒரு HR மேனேஜர் இருப்பார். அவ்வளவு தான். இன்றும் HR ஒரு necessary evil என்கிற கண்ணோட்டம் தான்.

Ethics :-
டெக்னிக்கல் இன்டர்வியூ க்ளியர் பண்ணிட்டு, HR ரவுண்டு வந்தா முதல் கேள்வி "நீ எப்ப ஜாயின் பண்ணுவன்னு தான்" . அடுத்த அஞ்சி நிமிஷத்துல ப்ராஜெக்ட் குறித்து சொல்லி "ஏன் நீங்க அடுத்த வாரமே ஜாயின் பண்ணனும்ன்னு விலாவாரியா விளக்குவாங்க". வேலை பார்த்து வரும் கம்பெனியோட நோடீஸ் பீரியட் பத்தி எல்லாம் கவலையே படமாட்டாங்க.

common sense :
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் காமன்சென்ஸ் கூட ரொம்பவே கம்மி ! சென்னையில 102 டிகிரி வெய்யில் அடிக்கும். எந்தவித client interaction இல்லாம வேலை பார்த்துகிட்டு இருக்கற employees கிட்ட வந்து Tie & shoe எல்லாம் எதிர்பார்ப்பாங்க. கேட்டா கம்பெனி பாலிசி.

ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு மிக பிரபலமான IT service கம்பெனி மூலமாக ஐரோப்பா வந்தார். அவங்க கம்பெனி பாலிசிப்படி பக்கா பார்மல் டிரஸ் போட்டுக்கிட்டு ஆபீஸ் வருவார். (blazer, tie etc). வந்த எடத்துல எல்லாரும் பெர்முடா போட்டுக்கிட்டு டேபிள் மேல காலை வச்சிக்கிட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா அவர் இருந்த மூணு மாசமும் பார்மல் டிரஸ்ல போக சொல்லி இந்தியாவுலேந்து ஒரே டார்ச்சர். கேட்டா கம்பெனி பாலிசி.

நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில் வெளிநாடு செல்லும் அனைவருக்கும் Travel Facilitation program நடக்கும். கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத ஒரு HR வந்து ஏதாவது உளறுவாங்க. அதை கேட்டுக்கிட்டு ஒருசில அம்மாஞ்சிகளும் அமெரிக்கா போகும் விமானத்துக்கு கோட் & சூட் போட்டுக்கிட்டு வருவாங்க. கேட்டா immigration கடக்கும் போது ஒரு நல்ல impression கொடுக்கனும்ன்னு சொல்லி இருப்பாங்க. (பக்கத்துக்கு ஊருக்கு கூட போகாத ஏதாவது ஒரு HR கொண்டு வந்த பாலிசியா இருக்கும்.) இதே தொல்லை விசா இன்டர்வியூவுக்கும் உண்டு.

Integrity :
employee referral program இந்தியாவில் recruitment க்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிகளில் முக்கியமான ஒண்ணு. ஆனா பல சமயம் HR recruiter கிட்டேந்து ரெஸ்பான்ஸ் வராது. HR recruiter வோட ப்ரைமரி முறை கன்சல்டன்ட் கிட்டேந்து ஆள் பிடிக்கறது தான். காரணம் யூகிக்க ரொம்பவே ஈசி.

இவங்க இப்படினா, நம்ப மக்கள் HR கிட்ட எதை கேக்கலாம், எதை கேக்கக்கூடாதுன்னு கூட தெரியாது. கொஞ்சம் கூட professionalism கிடையாது. அடுத்த கம்பனிக்கு ஏன் போறன்னு கேட்டா வரும் ஒரே பதில் "பர்சனல் ரீசன்" இல்லாட்டி ஏதாவது தேவையில்லாத பொய்.

கோபிநாத் நிகழ்ச்சியில் வழக்கம் போல பலர் உணர்ச்சிவசப்பட்டு பேச முயற்சி பண்ணினாங்க. HR கிட்டேந்து fake resume போட்டு வேலைக்கு வராங்கன்னு ஒரு குற்றச்சாட்டு. அதுக்கு பதில் HR லயும் பலர் fake resume போடறாங்கன்னு ! என்ன சொல்றது ! எல்லா எடத்துலயும் ஒரு கேள்விக்கு பதில் எதிர் கேள்வி தான் போல. இந்த கூட்டத்தை வச்சி உருப்படியான விவாதம் நடத்தறது ரொம்பவே கஷ்டம்.

ஒரு HR கல்யாணமான பெண்களை வேலைக்கு / ப்ராஜெக்டுக்கோ சேர்க்கமுடியாதுன்னு நியாயப்படுத்தினார். வேலை பிளான் பண்ண முடியாதாம். ப்ராஜெக்ட் வேலை பாதிக்கப்படுமாம். கம்பெனில அவரோட ரோலே அவருக்கு தெரியல. ஜென்டர் மற்றும் வயது காரணமா discrimination இருக்ககூடாதுங்கற ஒரு Basic அறிவு கூட இல்லை. இவர் எப்படி மேனேஜ்மண்ட கொடுக்கற பிரஷர் ஹேண்டில் பண்ணுவார் ?

Thursday, May 7, 2009

கிச்சடி - சாரு, இசை மற்றும் நான்

சாருநிவேதிதாவின் இசைக் குறித்தான கருத்துக்களை அவரது தளத்தில் தொடர்ந்து படித்து வந்துள்ளேன்/வருகிறேன்.  அவர் கொடுத்தப் பல சுட்டிகளை கிளிக் செய்து பாடல்களை கேட்டும் உள்ளேன். சிலது எனக்கு பிடித்தும் இருக்கின்றன. ஆனால் அவரது இசைக் குறித்தான எந்த புத்தகமும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஆதலால் அவரது கருத்துக்களை விமர்சனம் செய்யவோ / பாராட்டவோ உரிமை இருக்கிறதா/இல்லையா என்று தெரியவில்லை.

தொண்ணூறுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்த தாயுமானவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். அவனது அண்ணன் மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீராம் அந்தக்காலத்திலே சாருவின் "தல" ரசிகர்கள். அவர்கள் மூலமாக சாரு மற்றும் அவரது எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். பேன்சி பனியன் மற்றும் அவரது வேறு சில சிறுகதைகளை படித்ததாக ஞாபகம்.  அந்தச்சமயத்தில் கையில் கிடைக்கும் புத்தகங்கள் எதுவென்றாலும் படிப்பேன்.  பிடித்தது / பிடிக்காதது / இலக்கியம் / குப்பை என்ற எந்தவொரு வேறுபாடுமின்றி. உண்மையை சொல்வதென்றால் அந்த வேறுபாடுகள் எனக்கு பல சமயங்களில் புரிவதில்லை. சுஜாதாவின் எழுத்துக்களை பல்ப் பிக்ஷன் என்ற வகையறையில் படித்து பின்பு அதுவே இலக்கியம் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டு.    

இந்த நண்பர் குழுமம் மூலமாக எனக்கு கிடைத்த மற்ற அறிமுகங்கள் ஓஷோவும்,  உலக திரைப்படங்களும்.  ஆனால் ஒருசில மாதங்களிலையே தெளிவுப் பெற்று இன்றிருக்கும் மத்திய தர வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டினேன்.  இவ்வகை வாழ்க்கை தரும் அனுபவங்கள் அலாதியானது.   "ஏக்கம்" என்ற சொல்லின் அர்த்தம் வேறு எவ்வித பிரிவிலும் புரிய உழைக்க வேண்டியிருக்கும்.

உழைப்பு என்று எழுதியவுடன் ஒரு நினைவு.  இதுவரை எதையும் ஆராய்ந்து எழுதுவதற்காக உழைத்ததில்லை. நேற்று சச்சினின் ஒருநாள் போட்டி செஞ்சுரிகளை ஆராய்ந்தபோது ஒரு மகிழ்ச்சி.  அதை எழுதியபோது ஒரு திருப்தி.  யாரும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிந்தபோது ஒரு தெளிவு.  இவை அனைத்தும் சாரு யுவனுக்கு எழுதிய பதில் மூலமாகவே சாத்தியப்பட்டது.

எனக்கும் இசை பயின்றவர்கள் பாடும் பாடல்களை விட இசை தெரியாதவர்கள் பாடும் பாடல்கள் கேட்க பிடிக்கும். ஒருவித rawness தான் காரணம் என்று நினைக்கிறேன். ஸ்ருதி, ராகம், ஸ்வரம், அபஸ்வரம் என்று குழம்ப வேண்டியதில்லை. இன்று தொலைக்காட்சியில் நடைபெறும் இசை தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்ப / தகுதி சுற்றுக்களில் கேட்கும் பாடல்களே சாட்சி. ஒருசில வரிகளில் கவரும் பல தனித்துவமான குரல்கள்.  மெதுவாக தேய்ந்து ப்ரொபஷனல் குரலாக மாறுவதை கண்டு வந்துள்ளேன். எனது இசையார்வம் பின்நவீனத்துவரகமா என்றறிய பதினைந்து கட்டளைகளை பலமுறை படித்தும் பயனில்லை.  எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும். ஆதலால் பயப்பட அவசியம் இல்லை என்று எனக்கு நானே தேற்றிக்கொண்டேன்.  அதைத் தவிர எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம் நாதஸ்வரம்.  நான் ஸ்கூல் / காலேஜ் படித்துக் கொண்டு இருந்த காலக்கட்டம். மாலையில் நண்பர்களுடன் கூடும் இடம் ரயில்வே பிளாட்பாரம் தான். தினமும் வீட்டில் இருந்து சைக்கிள் பிரயாணம். போகும் வழியில் ஷேக் சின்னமௌலானாவின் வீடு. அங்கு அவரது இரு புதல்வர்களும் தினம் தவறாது சாதகம் செய்வார்கள். பல சமயங்களில் அவர்களின் இசையை நின்று  கேட்டுவிட்டு மெதுவாக நண்பர்கள் குழாமுடன் இணைந்துள்ளேன். இசை என்னை மிகவும் கவர்ந்த நிமிடங்கள் அவை தான். 

இளையராஜாவை வட இந்திய மக்கள் கேட்பதில்லை. ரகுமானின் தில்லி - 6 பாடல்களை கொண்டாடுகிறார்கள் என்று எழுதி பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதியதால் இந்தக் குளறுபடி என்று ஒரு திருத்தம் செய்துள்ளார். அதே போன்று தான் மொரோக்கோவின் இசை வடிவங்களை பிரான்ஸ் நாட்டில் கேட்பதும். மொரோக்கோ நாட்டை சேர்ந்த வம்சாவழியினர் ஒரு மில்லியனுக்கும் மேல் பிரான்சில் வசிக்கின்றனர்.

எனக்கு ஒரு உணவகம் பிடித்து விட்டால், அங்கேயே அடிக்கடி செல்வேன். அதில் அலுப்பு வந்தால் மட்டுமே மாற்றம் வரும். இதில் பல குறைகள் இருந்தாலும் எனக்கு சரியாகவே வருகிறது. அதே போன்றே இசையும். பல புதிவித இசை வடிவங்கள் கேட்கும் பொழுது பிடிக்கிறது. ஆனால் மற்றவைகளை தேடிச்செல்ல முயற்சி செய்வதில்லை. இதில் உள்ள தேக்கமோ / குறைகளோ பிறர் சொன்னால் தான் புரிகிறது. ஆனால் ஒருசில நிமிடங்கள் கடந்தால் புரிய மறுக்கின்றது.  அதற்காக நாட்டார் கலை / செவ்வியல் கலை மற்றும் அதனை சான்ற குளறுபடிகள் என்று எழுத விருப்பமில்லை.

சாருவின் பல கட்டுரைகளில் பிடித்தமானது அவரது உணர்வுப்பூர்வமான எழுத்து மற்றும் மெல்லிய நகைச்சுவை. அதே சமயம் அவரது மையக்கருத்தை புரிய வைக்க /  அழுத்தம் கொடுக்க அவர் கொடுக்கும் பல உபரித் தகவல்கள் தவறாக இருப்பதாக தோன்றும். துருக்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஓரான் பாமுக் குறித்த கட்டுரையில் பல தகவல் பிழைகள் இருந்ததாக நினைவு.  அதைக்குறித்து ஒரு நண்பருடன் பேசியபொழுது அவரின் கருத்து வியப்பை அளித்தது. சாருவின் கட்டுரைகளில் "இம்பாக்ட்" மட்டுமே பார்க்கவேண்டும் என்றார். சரி என்று விட்டுவிட்டேன்.

தூக்கம் வருகிறது. நான் கடவுள் படப்பாடலை raaga.com ல் போட்டுவிட்டேன். தூங்க வேண்டும்.

எனது எழுத்து நடை கோழிக்கிறுக்கலை போன்று இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறினார். பள்ளியில் லீவ் லெட்டர் எழுதுவது மட்டுமே எனக்கு எழுத தெரிந்த எழுத்து. அதே கவனத்துடன் எழுத முயன்றேன். சரியாக வந்து இருக்கிறதா என்று தெரியவில்லை.  பார்க்கலாம்.

Tuesday, May 5, 2009

ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை

நம்ப ஹீரோ ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கிட்டு, ஐபாட் மாட்டிக்கிட்டு ஜாகிங் போக கிளம்பறார். 

ஒரு பெரிய ரோட்  ஜங்ஷன். ஹீரோ கிராஸ் பண்ண வேண்டிய சைடுல ரெட் சிக்னல். (ஐபாட்ல கண்கள் இரண்டால் பாட்டு )

ரோட்ல எந்த டிராபிக்கும் இல்ல.  ஹீரோ பக்கத்துல இருக்கும் ஒரு பிகர் வேகமா ஓடி கிராஸ் பண்ணும். நம்ப ஹீரோ சிக்னல் பாத்துக்கிட்டே நிக்கறார். (ஐபாட்ல இரவும் அல்லாத  பகலும் அல்லாத பொழுதும் உன்னோடு கழியுமா ) 

மறுபடியும் ஒருசிலர் மெதுவா கிராஸ் பண்றாங்க. ஹீரோ வெயிட் பண்றார். 

சிக்னல் மெதுவா ரெட்லேந்து க்ரீனுக்கு மாறுது.  நம்ப ஹீரோ  ஜாக் பண்ண ஆரம்பிக்கறார். வேகமா ஒரு கார்.  ஐபாட் பறக்குது. (இல்லாட்டி கிராபிக் தெரிஞ்சா அலைபாயுதே படத்துல வருமே அது மாதிரி ஹீரோ பறக்கிறார்.)

ஆறு மாதத்திற்கு பிறகு, அதே ரோடு ஜங்ஷன். அதே ஹீரோ. அதே காஸ்ட்யூம். (ஐபாட்ல மசக்கரலி பாட்டு)

ரெட் சிக்னல். மக்கள் கிராஸ் பண்றாங்க. ஹீரோ வெயிட் பண்றார். 

மெதுவா சிக்னல் க்ரீனுக்கு மாறுது.  ஹீரோ மெதுவா ஜாக் பண்ண ஆரம்பிக்கறார்.

ஒரு சின்ன ஜென் கதை ஸ்லைட்.  (Snake's habit is to bite whereas  habit of the sage is to save the snake )

இந்த குறும்படத்திற்கான கான்செப்ட் எப்ப தோணிச்சோ அப்பவே ப்ளாகிங்லேந்து ஒரு மாதத்திற்கு பிரேக் எடுத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் !

மறுபடியும் ஜூன் 6  சந்திக்கலாம்.

Friday, May 1, 2009

கிச்சடி 01 / 05 / 09

ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.


சமீபத்தில் ட்விட்டர்ல பார்த்த/கவர்ந்த ஒரு மெசேஜ் :-


நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?


தமிழ்மணம் முகப்பு பகுதில "எங்கே பிராமணன் - நிறைவு பகுதி" எப்போ வரும் ?


ஷெல் நிறுவனம் கடந்த வருடம் 8 பில்லியனுக்கும் மேலாக லாபம் ஈட்டி கார்ப்பரேட் வரலாறு படைத்தது. கடந்த மூன்று மாதங்களாக புதிதாக வேலைக்கு யாரையும் சேர்க்காமல் நிறுத்தி வைத்து இருக்கிறது. என்ன காரணமா இருக்கும் ?


என்னோட கம்பெனில பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து செய்த ஒரு ஆப்படிக்கும் பிளான். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதில் உங்களுக்கு ஏதாவது முக்கிய முரண்பாடு தெரிகிறதா ?





சமீபத்தில் படித்த புத்தகங்கள் :-



1) Murder


2) Fatal Attraction


3) Crime in London


4) Murder


5) The Testament of Adolf Hitler


6) சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்


7) எங்கே பிராமணன்.


உண்மையிலே ஒரு பத்து வாக்கியம் கொண்ட கட்டுரையோ / கதையோ கூட எழுத தெரியல. அதனாலே அடிக்கடி கிச்சடி எழுத வேண்டியதா இருக்கு.


சமீப காலமா வலையுலகத்துல politically correct பதிவுகள் மட்டும் தான் எழுத முடியுது. ஏதாவது நக்கலோ / satire எழுதினா யாராவது வந்து ரகளை பண்றாங்க. பதிவுலக தீவிரவாதம்.


பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்துமதம் - பா ஜ க - இந்துத்துவா. உண்மையிலே மேலோட்டமா எழுதறத குறிப்பால உணர்த்துவதாம் இந்த தலைப்பு. இது தெரியாம என்னனவோ நினைச்சிட்டேன்.


இந்திய கிரிக்கெட் போர்டு ஐ.சி.எல்ல விளையாடினவங்க எல்லாம் மறுபடியும் IPL / இந்திய அணிக்கு வருவதற்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க. எங்க ஏரியா பையன் ஒருத்தன் ICL சென்னை அணில விளையாடறான். ICL இந்திய அணிக்கு கூட கேப்டனா இருந்தான். சதீஷ்ன்னு பேரு. மறுபடியும் ஒரு சுத்து வந்தா நல்லா இருக்கும்.


இன்னும் ஒரு வாரத்துக்கு கண்தானம் விட்ஜெட் வச்சி இருக்கலாம்ன்னு இருக்கேன். யாருக்காவது ஆர்வம் இருந்தா அந்த லிங்க் கிளிக் பண்ணி படிச்சு பாருங்க.