Friday, June 26, 2009

கிச்சடி - சிதைவுகள்

மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.

உரையாடல் சிறுகதை போட்டிக்கு ஒரு பிரபல பதிவரின் பதிவில் எனது சிறுகதையை பிரசுரித்துள்ளேன். பரிசு கிடைக்குமா ?

பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது என்று எழுதினால் நான் இந்துத்துவவாதியா ?

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இந்த குறளை படித்துவிட்டு அடுத்தவரை நாண வைப்பதற்காக நல்லவற்றை செய்ய ஆரம்பித்துள்ளேன். இது சரியா ?

சரி இல்லையென்றால் தவறா ?

தமிழில் ஒரு நல்ல ஆண்பெயர் கூறுங்களேன்.

பெயருக்கு மொழி உண்டா ?

மொழிக்கு பெயர் இருக்கும்போது பெயருக்கு மொழி இருக்கக்கூடாதா ?

வித்தியாசம் என்ற புதரில் என்றாவது அகப்பட்டதுண்டா?

பல்ப் பிக்ஷன் என்ற வகையறுக்கப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே எனக்கு படிக்க பிடிக்கறது. அப்படியென்றால் நான் வெகுஜன எழுத்தாளர்களை ரசிக்கும் இலக்கியவாதியா ?

கோர்வையற்ற எண்ணங்களை எழுத்தாக மாற்றும் இலக்கியவாதிகளிடம் ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம்.

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை பல லட்சங்கள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

நான் லீனியர் முறையில் எழுதப்படும் நாவல்கள், சிறுகதைகள் எப்படி படித்தாலும் புரியாதா ?

என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை ஒரு லட்சம் காசுகள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?

உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?

முடியுமென்றால் எப்படி ?

பிரபலப்பதிவர் பலரின் பதிவுகளை படித்து அவற்றை பற்றி எழுதியும், அவற்றுக்கு தமிழிஷ்ல் வாக்களித்தும் வருவதற்கு பதிலாக கும்மாங்குத்து பதிவுகள் எழுதுவது மாதிரியாகவா ?

கடைசிப் பத்தியை எழுதாமல் இருந்து இருந்தால் இதை சிறுகதையாக அறிவித்து இருக்கலாமா ?

கதையின் முடிவில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்காவிட்டால் அது சிறுகதை என்ற இலக்கண வகையறையில் வராதா ?

இந்த சிறுகதை "உரையாடல்" அமைப்பின் சார்பாக நடைபெறும் போட்டிக்காக எழுதப்பட்டது.

Wednesday, June 24, 2009

பயணம் - சிறுகதை

ரொம்ப பயமா இருக்கு நிதின். கிளம்பும் போது 20G அழுத்தம் இருக்கும்ன்னு சொல்றாங்க. மொத்த ரத்தமும் தலையிலேந்து காலுக்கு வந்துடும். இது எல்லாம் எனக்கு தேவையா ?

ஸ்பேஸ்ஷட்டிலில் கயலை வழியனுப்ப வந்திருந்த நிதின் அவளை நோக்கி ஒரு அலட்சிய பார்வையை வீசினான்.

உனக்கு முன்னாடி நானூறு பேரு இதே ஷட்டில்ல பயணம் பண்ணிட்டு பத்திரமா திரும்பி வந்து இருக்காங்க. ஜாலியா அனுபவிச்சுட்டு வா. பாதுகாப்பு இல்லைனா சீகேட் இன்சூரன்ஸ் கொடுத்து இருக்கமாட்டான். நானும் உன்னைய அனுப்பியே இருக்கமாட்டேன். இதை கேட்ட கயலுக்கு தைரியம் வருவதற்கு பதிலாக ரீதாவின் ஞாபகம் ஏன் வந்து தொலைந்தது என்று நிதினுக்கு புரிய சில நிமிடங்கள் ஆயிற்று. ஆனால் பயணத்தை குறித்த பயம் வேறு திசையில் சென்றதில் அவனுக்கு மகிழ்ச்சியே.

ட்பிச்ட்பாஅனனாவ் நஜந்ம௦அ ஜ்ச்டுபாஅஸ் அஸ்ட்ப் அனாவட்பிதஷ்ட்பில்

ஒவ்வொரு வினாடியும் என்ஜாய் பண்ணினேன் நிதின். உடம்பே முறுக்கேறினா மாதிரி இருக்கு. ஒரு மாதிரியான நொஸ்டால்ஜிக் பீல் டா. இது மாதிரி வருசத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது ஒரு அட்வென்ச்சர் பண்ணனும். உன்னைய தான் ரொம்பவே மிஸ் பண்ணினேன். நெக்ஸ்ட் டைம், நீ இல்லாம போகமாட்டேன் சொல்லிட்டேன்.

ஒகே கயல். நீயே சொல்லு அடுத்த வருஷம் என்ன பண்ணலாம்ன்னு. எதுவா இருந்தாலும் ஐ ம் ரெடி.

யப். நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன் டியர். அடுத்த வருஷம் அரசாங்கம் ஏதோ ஒரு ரசாயனம் மூலமா பூமில ரோடு போட பிளான் பண்ணி இருக்காங்களாம். அந்த பிளான் சக்சஸ்னா நம்ப airbottoms எல்லாம் கழட்டிட்டு கால அந்த ரோடு மேல வச்சி நடக்கலாமாம். வாவ் ! I feel as if i am already over the earth man !

Monday, June 15, 2009

பன்றி காய்ச்சல் - இந்திய அரசின் எச்சரிக்கை.

இன்று இந்திய அரசின் மருத்துவ மந்திரி குலாம் நபி ஆசாத் பன்றி காய்ச்சல் கட்டுபாட்டுக்கு வரும்வரை வெளிநாடு பயணம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அதுவும் இந்திய மாணவர்களை தங்களது வெளிநாட்டு பயணங்களை இரண்டு / மூன்று மாதங்களுக்கு ஒத்தி போடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம், இந்த இன்ஃப்ளுயென்சா முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே என்றும், இந்தியாவில் இதற்குரிய மருந்துகள் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக இந்தியாவில் இதுவரை ரிப்போர்ட் செய்யப்பட்ட கேஸ் - ௨௩.

அமைச்சர் சொல்லி இருக்கும் அறிவுரைகள் நடைமுறைக்கு சாத்தியமா ? இது ஒரு பெரிய உயிர்கொல்லி நோய் இல்லையென்ற பொழுது அரசிடம் இருந்து இவ்வாறான அட்வைஸ் அவசியமா ?

Friday, June 12, 2009

கிச்சடி - 12/06/09

ஏதாவது ஒரு வலையுலக பிரபலத்துக்கிட்ட சேட்டில் விடாம உங்களை தொடர்பதிவுக்கு கூப்பிட சொல்லி புடுங்குங்க. அவங்க கூப்பிட்ட பிறகு "பிஸி" ன்னு சொல்லி எழுதாதீங்க. இப்படி பண்ணினா, நீங்க உங்களை கூப்பிட்டவரை விட சீக்கிரமா பிரபலம் ஆகிடலாம். அட்லீஸ்ட் மனசை தேத்திக்கலாம்.


எந்தவொரு பழக்கமும் என்னைய ரொம்ப எளிதா அடிச்ஷனுக்கு கொண்டு தள்ளும். அதுனாலயே நான் முன்னாடி எழுதிக்கிட்டு இருந்த பல பதிவுகளை திடீர்ன்னு ஒரு நாள் டெலீட் பண்ணிடுவேன். ஆனா, இந்த முறை ஆறு மாதம் ஆகியும் வச்சிருக்கேன். கடந்த ஒரு மாசமா ரொம்ப இன்டர்நெட் பக்கம் வராம இருந்தேன். நல்லாவே இருக்கு.


ஒருவாரம் ஊருக்கு வந்து இருந்தேன். பல ரசிக/ரசிகைகள் போன் பண்ண சொல்லி இருந்தும் யார்க்கிட்டேயும் பேச முடியலை. எல்லார்கிட்டையும் பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கறேன்.


திருச்சி ரம்பா திரையரங்குல "அயன்" படம் பார்த்தேன். ஓரளவுக்கு தியேட்டரை சீரமைச்சு இருக்காங்க. போனமுறை மகாமோசமா இருந்தது. இதுக்குமேல படத்தை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல.

எங்க ஊருல ஜீயர் யார்க்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயோ போயிட்டாரு. (டெல்லின்னு சொல்றாங்க.) ஒரே தர்ணா, களேபரம். போலீஸ்ல வேலை செய்யற நண்பர் ஒருவர் பயங்கர கடுப்புல இருக்காரு. தொண்ணூறு வயசுக்கு மேல இவர் ஏன் எங்களை இப்படி பாடாய் படுத்தராறேன்னு.

தமிழ்நாட்டுல தாம்பிராஸ்ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க இந்த முறை தேர்தல்ல (மதுரையில்) அழகிரிக்கு வாக்களிக்க சொல்லி பிரச்சாரம் பண்ணினாங்களாம். என்ன காரணமா இருக்கும் ?

ஊருல அதிமுக தோத்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு எல்லாம் அலசி ஆராஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஏகோபித்த கருத்து அம்மா அரசு ஊழியருக்கு பண்ணின துரோகம்தான்னு. என்னத்த சொல்லுறது !

நான் இருந்த ஒருவாரத்துல எந்த தொலைக்காட்சியிலும் ஈழப்பிரச்சனை பத்தி மருந்துக்கு கூட எதுவும் காட்டலை. ப்ளாக்ல மட்டும் தானா ?

மும்பை தாக்குதல்ல என்னோட அக்கா (கசின்) கணவரோட அண்ணன் சுடப்பட்டு இறந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் இருந்து நாலு பேரு இறந்தாங்களாம். இருவர் BSF. ஒருத்தர் போலீஸ். இன்னொருத்தர் பேங்க். (வாய்வழி செய்தி தான். எந்தளவு சரின்னு தெரியாது) தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ?

ரெங்கநாதர் கோவில்ல சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு மட்டும் போயிருந்தேன். ஸ்ரீரங்கத்துல இருக்கறவங்க ரெங்கநாதர் சந்நிதிக்கு ரெண்டுவருஷத்துல ஒருமுறை போவாங்களா ? அதுவே சந்தேகம் தான். ஐய்யங்கார்வாள் புளியோதரை சூப்பரா இருக்கும்ன்னு கேட்டுக்கேட்டு காதே புளிச்சு போச்சு. ரெங்கநாதர் கோவில் புளியோதரை மண்ணு மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி மண்ணும் இருக்கும்.

ஏன் பதிவு போடலைன்னு கேட்டு என்னோட கூகிள் ஐடிக்கு நூறு பேருக்கு மேல மெயில் பண்ணி இருந்தாங்க. இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின பெங்களூர் மற்றும் மும்பை வாசகிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.