Thursday, March 26, 2009

கிச்சடி - 26/03/2009

எங்க ஊருல மூனு வாரம் முன்னாடி turkish airline விமானம் ஆக்சிடென்ட் ஆச்சு. அந்த நியூஸ் முதல்ல வெளிவந்த இடம் twitter.com (ஆக்சிடென்ட் ஆன ரெண்டு நிமிஷத்துல). விமானத்த விட்டு தப்பிக்கும் போதே யாரோ மொபைல் மூலமா அப்டேட் பண்ணி இருக்காங்க.

சுயசரிதை

பழைய நினைவுகள் குறித்தான இன்றைய ஞாபகத்த வச்சி எழுதனுமா, இல்லாட்டி குறிப்புக்கள தேடி கண்டுபுடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதனுமா ?

அலுவலகத்துல உங்கள சுத்தி வேலை பாக்கற ஒவ்வொருத்தருக்கா வேலை போச்சுனா உங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?

கேள்விகள் எல்லாத்துக்கும் கேள்விக்குறி அவசியமா.

எங்க வீட்டுலேந்து நூறு மீட்டர் தூரத்துல ஒரு டென்னிஸ் டோர்னமன்ட் நடந்தது. செமிபைனல் பாக்க போயிருந்தேன். நாடல், மொன்பில்ஸ்ன்னு ஒரு பிரெஞ்சு ப்ளேயர தோக்கடிச்சாரு. சரின்னு மேட்ச் முடிஞ்சவுடன கிளம்பினேன். அடுத்த மேட்ச்சும் அதே டிக்கெட்ல பாக்கலாம்ன்னு சொன்னாங்க. நம்ப லியாண்டர் பேஸ் டபுல்ஸ் விளையாட வந்தாரு. எனக்கு பயங்கர ஆச்சரியம். சுத்தமா எதிர்பார்க்கல. என்னால முடிஞ்ச vocal சப்போர்ட் கொடுத்து ஜெயிக்க வச்சேன் ! ஆனாலும் மேட்ச் முடிஞ்சவுடன அவர் கிட்ட போயி ஆட்டோகிராப் வாங்க ஒரே கூச்சம். வாங்கல. ஏன் இப்படி ?

டூ வீலர், பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் எங்கயாவது குத்தினா அத ஆங்கிலத்துல ஆக்சிடென்ட்ன்னு சொல்றோம். அது ஏன் விமானத்துக்கு மட்டும் crashன்னு சொல்லணும் ?

உங்க அலுவலகத்துல எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தா, நீங்க புது வேலை தேடணுமா இல்லாட்டி ப்ளாக் எழுதனுமா ?

பத்து வருஷம் முன்னாடி ஒரு எடத்துல நான் நுகர்ந்த வாசனையை இப்ப நினைச்சாலும் நுகரவும், உணரவும் முடியுது. யாருக்காவது இது மாதிரி அனுபவம் இருக்கா ? இதுக்கு பேரு (term) என்ன ?

பத்தி எழுத்துல எத்தன சதவீத கேள்விகள், எத்தன சதவீத சேதிகள் இருக்கணும் ? பத்தி எழுத்து இலக்கணம் ஸ்கூல் சிலபஸ்ல இருந்ததா ? வெண்பா இலக்கணம் ஏன் ஞாபகம் வந்து தொலையமாட்டேங்குது ? கூகுள்ல தேடி எழுதனுமா இல்லாட்டி ஞாபகம் இல்லன்னு விட்டுடலாமா ?

எழுதினத திருப்பி படிக்கும் போது பார்க்கற தவறுகள திருத்தி மாத்தலாமா ? இல்லாட்டி இது தவறா ?

கடைசியா இந்த கவிதையோட இத முடிச்சுக்கறேன்.

Friday, March 13, 2009

மசக்க

Get this widget Track details eSnips Social DNA

ரஹ்மானின் மாஸ்டர் பீஸ். மோஹித் சௌஹான் குரல்ல. ஒரு மணிநேரமா இத மட்டும் தான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.

Sunday, March 8, 2009

கல்லூரி - முதல் நாள்


வேணு எங்கடா ? "B" க்ரவுண்ட்ல இருப்பான் இல்லாட்டி TT விளையாடி கிட்டு இருப்பான் மச்சி.


இவ யாருடா ? கெமிஸ்டரி டிபார்ட்மென்ட். நமக்கு கூட அலைய்ட் கிளாஸ் எடுக்க வந்தாலும் வருவா. ஷோபான்னு பேரு.


என்னடா ஆட்டு மந்தை கூட்டம் மாதிரி இருக்கு ? இன்னும் ரெண்டு மாசத்துல எல்லாம் ஓடிடுவானுங்க. நமக்கு மட்டும் தான் இங்க சாலிட் பேஸ்.


புதிதாக இருந்தது கல்லூரியின் வகுப்பறைகள் மட்டுமே. மைதானத்தில் உள்ள புற்களை உச்சி வெய்யிலில் இருந்து காப்பாற்ற பல வருடங்களாக முயன்று வருகிறோம்.


யாருடா இது ? மச்சி, நமக்கு இவரு தான் மெக்கானிக்ஸ் எடுக்க போறாரு. சரியான மண்டை ஆனா சிடுமூஞ்சி. பன்னி சூ... இருக்கற தேனு மாதிரி இந்தாள் கிட்ட இருக்கற அறிவுன்னு முகுந்த் சொன்னான். வீட்டுல பொண்டாட்டி சரி இல்லையாம்.


போதும் மூடுடா. உன் கூட இதே கொடுமையா போச்சு. எவனும் கிளாஸ்க்கு வர்ற மாதிரி தெரியல. நம்ப போய் டீ குடிச்சுட்டு வரலாம் வா. சிவா கிட்ட வேற பேசணும். எப்ப கிரிக்கெட் டீம் செலக்க்ஷன்ன்னு கேக்கணும்.


எங்க சார் போறீங்க ? எங்கயும் இல்ல சார். இங்க தான் சும்மா நிக்கறோம். சரி வாங்க. உள்ளார போகலாம் என்று அழைத்து சென்றவர் எனக்கு அட்மிஷன் தராமல் இழுத்தடித்த எங்க டிபார்ட்மென்ட் HOD.


என்பது சதவீத அட்டென்டன்ஸ், டிசிப்ளின், லேப் வொர்க், பைன் என்று கல்லூரி வாழ்க்கைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத வார்த்தைகளுடன் தொடங்கியது அன்றைய லெக்சர்.


மனதில், கடந்து சென்ற பள்ளி வாழ்க்கை ஒரு பிடித்தமான அனுபவமாக மாற தொடங்கிய முதல் நாள்.


டீக்கடை, வள்ளி ஒயின்ஸ், PG பிகர், கிரிக்கெட் செலக்ஷன்
வள்ளி ஒயின்ஸ், வள்ளி ஒயின்ஸ், PG பிகர்
காபிடேரியா, PG பிகர், கார்டன், பீ க்ரவுண்ட், PG பிகர்
டீக்கடை, சிவா, மெயின்காட்கேட், சாம், வள்ளி ஒயின்ஸ்


மனப்பிராந்தி.


இது ஒன்னும் விளங்கறா மாதிரி தெரியல. எவன் கிட்டயாவது பேசி அட்டென்டன்ஸ் பிரச்சனை (காண்டனேஷன்) வராம தப்பிக்க என்ன பண்ணனும்ன்னு கண்டுபிக்கணும் மச்சி.


முதல் நாள் கவலைகள்.


என்னடா, எப்படி இருந்தது காலேஜ் ? எல்லாம் நல்லா பேசறாங்களா ? ஒழுங்கா போகணும் சொல்லிட்டேன். இப்பவும் பொறுப்பு வரலேன்னா உருப்படறது கஷ்டம்.


தேய்ந்து போன ரிக்கார்ட்.

Thursday, March 5, 2009

கிச்சடி - பதிவுகள், பதிவர்கள், பின்னூட்டங்கள், கிசுகிசு

ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி பதிவு எழுதலாம்ன்னு முடிவு பண்ணி ஏதோ கிறுக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல ஜ்யோவ்ராம் சுந்தரின் காம கதைகள், லக்கி லுக்கின் சட்டி கதைகள்ன்னு பதிவுலகமே பரபரப்பா இருந்தது. தமிழ்மணமே இது நியாயமா, நீதியான்னு மனோகரா ஸ்டைல்ல ஒவ்வொருத்தரும் அறவழி பதிவுகள் எழுதி திரட்டிய கலாய்த்த நேரம். நான் ஏதோ ஷகீலா பட ஸ்டைல்ல என்னோட பதிவுக்கு பேரு வைக்க போக, தமிழ்மணம் கிட்ட எவ்வளவு மன்றாடியும் சேர முடியல. ஆனா விடாம டெய்லி தமிழ்மணம்ல "சேர்க்கை நிலவரம்" பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ என்னைய மாதிரியே சேர முயற்சி செஞ்ச மற்றொரு வலைப்பூ http://www.tamilish.com/

எந்த திரட்டிளையும் சேர முடியாட்டியும் நான் விடாம அந்த கிறுக்கல தொடர்ந்து 21 நாள் எழுதினேன். அதுக்கு அப்புறம் எனக்கே தாங்க முடியாம ஒருநாள் எரிச்சல்ல டெலீட் பண்ணினேன். அந்த 21 நாள்ல என்னோட அந்த பதிவ ( உளரல) படிச்சவங்க எண்ணிக்கை 4500. எந்த திரட்டிளையும் இல்லாம இவ்வளவு ஹிட்ஸ் வந்ததுக்கு ஒரே காரணம் :- பேரு தான் ! பெயரில் என்ன இருக்கிறதுன்னு கேட்பவர்களுக்கு ! (சின்ன வயசுல சக்கரத்தாழ்வார் சன்னதிய என்னோட நண்பன் 21 முறை சுத்துவான். எதுக்குடா 21 முறை சுத்தறன்னு கேட்டா, சுத்தி முடிக்கற போது அவன புடிச்சி இருக்கற சனியன் எல்லாம் ஓடி போயடும்ன்னு சொல்லுவான்.அவன் பத்து ரவுண்ட் முடிக்கறதுக்கு முன்னாடியே நான் மடப்பள்ளிக்கு ஓடிடுவேன்)
மடப்பள்ளி - லட்டு, அதிரசம்,முறுக்கு கிடைக்குமிடம்.
*******************************************

பதிவுலகத்துல உள்ள ரெண்டு தோழர்களோட நட்பு நட்பிலக்கணத்தின் சான்றாக பிற்காலத்தில் புகழப்படும் என்பது உறுதி. ரெண்டு பேருமே சாருவின் சிஷ்யகோடிங்க. ஒருத்தருக்கு எழுதுவதில் வெறுப்பு வந்து வாசிக்க ஆரம்பித்தால் அடுத்தவரும் அதே. ஒருவருக்கு கம்ப்யூட்டர் கிடைக்காமல் போனதால் அடுத்தவர் அவரிடம் இருந்த லேப்டாப்பை குப்பைதொட்டியில் போட்டதாக ஒரு வதந்தி.
**************************************

ஆறு வருஷம் முன்னாடி என்னோட நண்பனின் கல்யாணத்துக்காக சென்னை வந்து இருந்தேன். ஸ்கூல் மக்களை எல்லாம் மறுபடியும் பாக்கறதுக்கு ஒரு சான்ஸ். எல்லார் கிட்டயும் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு சாமின்னு ஒரு நண்பர் என்கிட்ட வந்து "உன்னைய மாதிரியே இன்னொரு பிரம்மகத்தி பெர்முடா போட்டுக்கிட்டு கல்யாணத்துக்கு வந்து இருக்கு பாருன்னு சொன்னாரு". அப்புறம் விசாரிச்சதுல அவரு என்னோட நண்பன் வேல செஞ்ச cricinfo நிறுவனத்தின் பாஸ்ன்னு சொன்னாங்க. சிறிது காலம் முன்பு வரை நான் படித்து வந்த பதிவர் இவரும்,மருத்துவர் ப்ருனோவும் மட்டும் தான். தற்செயலா இவர் எழுதின சிறுகதை ஒண்ண படிச்சேன். நல்லவேளையா இவரு இப்போ சிறுகதை எழுதறது இல்ல !
*************************************

எனக்கு சமீபகாலமா தமிழ்ல பிடிக்காத வார்த்தைனா "யூத்" தான். அத வச்சி ஒரு மூத்தவர் பண்ற அலும்பு இருக்கே ! யப்பா சொல்லி மாளாது.
*************************************

வாமு கோமு எழுதின கள்ளி நாவல் படிச்சு முடிச்சேன். இன்டர்நெட்ல ப்ரீயா குட்டி கதைகள் படிச்சுட்டு மக்கள் ரொம்ப ஓவரா திட்டறாங்க. இத விட மோசமா எல்லாம் நான் பத்திரிகைல எழுதின போது ஒருத்தனும் திரும்பி கூட பாக்கலன்னு சாரு சொல்றது ஒருவகைல உண்மையோன்னு யோசிக்க வச்சது.
***********************************************

ராமு :- எதுக்கு ரவி வர்மா பத்தி பதிவு இருக்கற ஒவ்வொரு எடத்துலயும் போயி மே ஏ வே கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்க ?
சோமு :- ரவி வர்மா ஒரு பிராடு. மக்கள் தேவை இல்லாம தூக்கி வச்சி ஆடறாங்க. வேணும்னா கானாலிசாவ ரிலீஸ் பண்ண சொல்லு. நான் நிறுத்தறேன்.
ராமு :- உனக்கு பிடிக்கலன்னா விட வேண்டியது தான. அவரு தான copy right வச்சி இருக்காரு. அத தவிர, அவரு வேறு எவ்வளவோ சூப்பர் படம் வரைஞ்சி இருக்காரே.
சோமு :- அப்புறம் எதுக்கு அவருக்கு பாராட்டு விழா, டாச்ற்ரோ பட்டம் ? மக்களுக்கு சரியான தகவல் போய் சேரனும். சரியான தகவல் தெரியாம தான் மக்கள் செயல்படறாங்க. பத்திரிகை காரங்க தப்பு தப்பா ரிப்போர்ட் பண்றாங்க. சமீபத்துல கூட இதுக்காக தான் நான் வீட்டுடைமை பத்தி எழுதினேன்.
ராமு :- ஐயய்யோ ! (மராத்தான் தூரத்த 100 மீட்டர் ச்ப்ரின்ட் ஸ்பீட்ல ஓடியபடியே)


[இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை. எந்த வனில்சன விருது நாயகரை பற்றியும் அல்ல. இதே போன்று கற்பனை கதையோடு வரும் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த நிகழ்வும் கற்பனையே !]
*******************************************

நான் பதிவு எழுதாம ஜாலியா இருந்த போது எழுத சொல்லி "சினிமா சினிமா" தொடர் ஓட்டத்துக்கு கூப்பிட்டவங்க திரு ராதாகிருஷ்ணன் மற்றும் தாமிரா. "எழுதிட்டேன்னு" சொல்லியும் ஒரு பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும். இந்த வாரம் குட்ட மேட்டர் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படறதா ஒரு தகவல்.