குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையாம். தொலைபேசியில்
மனைவி அழுதாள். தூசு ஒத்துக்கொள்ளவில்லையாம்.
புரை ஏறுகிறதாம்.சாப்பிட மறுக்கிறானாம்.
சலைன் மற்றும் இன்னபிற.
அழுதேன். புலம்பினேன்.
பலரிடம் தொலைபேசினேன்.
மணிக்கொருமுறை மனைவிக்கு ஆறுதல் கூற முயன்றேன்.
இடையில் புதிய வேலைக்கான சம்பளப் பேரம் நடத்தினேன்.
யூரோவில், ரூபாயில்.
ட்விட்டரில் உள்ள மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டேன்.
விமான அட்டவனையை நோட்டம் விட்டேன்.
செய்துவரும் அலுவலை முறையாகப் பரிமாறினேன்.
ஊசிப் போட்ட மருத்துவரைக் குத்திவிடலாம் என்று
ச்பீக்கரில் குழந்தையிடம் பிதற்றினேன்.
என் கழிசடையான நகைச்சுவைக்குக் குழந்தை சிரிக்கிறதா என்று கேட்டேன்.
முதன்முதலில் இங்கு வந்த தினத்தை நாளேட்டில் தேடினேன்
கூரிய முனைக்கொண்ட பேனாவால்.
மீண்டும் ரீங்காரம்.
மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாராம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறான்.
ஈரமாகிப் போன டிஷ்யூவால் அவனது மூக்கருகில் இருந்த தூசியை துடைத்தேன்.
அடத் தூ.
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
அட!!!!
நல்லாயிருக்கு மணிகண்டன் :)))
//ஈரமாகிப் போன டிஷ்யூவால் அவனது மூக்கருகில் இருந்த தூசியை துடைத்தேன்.
அடத் தூ.
//
பணி நிமித்தம் மகனைப் பிரிந்திருக்கும் ஒருவனின் இயலாமை அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது..
அருமை.
twitter status collectionஆ பாஸூ
?
நல்லாயிருக்கு தல ;)
கவிதைப்போட்டிக்கா, வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனா ஏன் இப்படி திட்றீங்க
தொலவிலிருக்கும் தவிப்பை அழகாய்...
அருமை மணி.
பிரபாகர்.
ஆதவன் - இவ்வளவு ஆச்சரியமா ? ஹ்ம்ம்ம் :)-
எனக்கு புடிச்சுருக்கு.
Awesome writing mani. I can understand your feelings.
Onnu gavanichiya...hez also allergic to dust. Appanukku pulla thapaama poranthu irukku. Just wanted to confirm, if hez wagging (couldn't find a better word for aatarathu) his legs while sleeping
:((
மணி... கதை நல்லா இருக்கு.. கவிதை எங்க? :)
நல்லா இருக்கு மணி...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
@முகிலன் - வருகைக்கு நன்றி.
@பிரகாஷ் - சுத்தமா புரியலை :)-
கோபிநாத், ராஜு, வித்யா,பிரபாகர்,
sangkavi - வருகைக்கு நன்றி.
சின்னஅம்மிணி - :)- அடத் தூ க்கு அடுத்த வரியா "பண்பாக அடச் சீ" ன்னு எழுதி இருந்தேன். அதுல வெறும் புத்திசாலித்தனம் மட்டும் தெரியுதுன்னு தூக்கிட்டேன். ! நீங்க நடுவரா இருந்தா நான் ஜெயிச்சுடுவேன்.
டேய் ஆனந்த் - நான் சொல்லாமயே கூட ப்ளாக் படிப்பியா ? :)-
@அனைவருக்கும் - பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்புடன்- மணிகண்டன் விட்டுப் போச்சு ! பாஸ், லேபில் சரியா பாருங்க :)- வெறும் உரையாடல் தான் !
எனக்கும் பிடிச்சிருக்கு.. சூப்பர்.
இப்போ கவிதையா எழுதினாலும் அந்த நிமிஷத்து கஷ்டம் நல்லாவே தெரியுது!
பொங்கல் நல்வாழ்த்துகள்!
வெற்றி பெற வாழ்த்துகள்
நன்றி பீர். பையனோட என்ஜாய் பண்ணுங்க !
முதல் கமெண்டுக்கு தேங்க்ஸ் முல்லை.
சக்தியின் மனம் - வருகை மற்றும் வாழ்த்துக்கு நன்றி.
நல்லா இருக்கு மணி
அடத் தூள்!
Mani...keep posting atleast 1 post per day...ippo enakku velai illai, konjam bore adikuthu....oru payalum Blog ezhutha maatingaraanuga.
மணிகண்டன் அபயனைப் பற்றியா..
நல்லா இருக்கு ஏக்கம் ...
இப்ப நல்லா இருக்கானா ..?
வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!
ennala mudiayalaada...mani...
nee periya torture'a irukka...idhu ellam summar pozhuduotta ezhudiriyaa...summa've un kudumba kastathai solriya ellathikittyum...
ada thoo madhiri irukku...
Vasan.
அருமை
Good
Post a Comment