ஜஸ்ட் இரண்டு வார இந்திய ட்ரிப்.
குட்டிப்பையனுக்கு ஒரு வயசு கம்ப்ளீட் ஆயிடுச்சு. காது குத்தறபோது பயந்தளவுக்கு அழல.
ட்ரிப் பயங்கர ஹெக்டிக். சென்னைல வெறும் ட்ரான்சிட் மட்டும் தான்.
பெங்களூர்ல மூணு நாள் இருந்தேன். ட்ராபிக் ஜாம் கம்மி ஆகி இருக்கு. நண்பரோட கார் எடுத்து ஓட்டலாம்ன்னு யோசிச்சேன். பட், ஓட்டல. ஹூடி பக்கத்துல ரெண்டு வருஷமா முடிக்காம பூட்டி போட்டு இருந்த அபார்ட்மென்ட் போய் பார்த்தேன். பூட்டிட்டு திரும்பி வந்தேன்.
கொஞ்சம் நண்பர்கள் மீட் பண்ணினேன். ஐசிஐசியை பேங்க் போனேன். எழுத்தாளர் கோணங்கியை சந்திச்சேன். நடிகை நேஹா தூபியாவை பார்த்தேன். அத தவிர ஆடி 18போது காவேரி கரைல இருந்தேன். ஒரே ஒரு நாளைக்கு தண்ணி ஃபுல்லா ஓடிச்சு.
இந்தமுறை ட்ரிப்ல சுவாரசியமா நடந்த சம்பவம் எல்லாம் ப்ளாக் எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருந்தேன். தொலைஞ்சி போயிடிச்சி. அதுனால உங்க எல்லாருக்கும் அத்தியாவசியமா தெரியவேண்டிய மிக சுவாரசியமான சம்பவங்களை மட்டும் ஞாபகத்தில் இருந்து மேலே எழுதி இருக்கேன்.
(சுவாரசியம் தொடரும்)
1) பயணம் ஜெட் ஏர்வேஸ் விமானத்துல.
3) ஓட்ட நினைச்ச கார் சான்ட்ரோ.
4) பூட்டின பூட்டு கோத்ரேஜ்.
5) காவேரில தண்ணி ஃபுல்லா ஓடின தேதி ஆடி 18.
6) மீட் பண்ணின நண்பர்கள் பேரு ரகு அண்ட் சங்கர்.
7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.
(சுவாரசியம் முற்றும்)
8) ஸாரி. நான் போன ஐசிஐசியை பேங்க் பிரான்ச் திருச்சி தில்லைநகர்ல.
Friday, August 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பின்னவீனத்தை கரைத்து குடித்துவிட்டீர்களா!
//7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.//
இப்ப நீங்க இருக்கறது கனவுலகமா இல்லை நனவுலகமா
Good attempt :-)
சிம்பிளோ சிம்பிளான டிரிப் :)
இத பதிவிற்கு இவ்வளவு பின்னூட்டங்கள் கொஞ்சம் அதிகப்படி என்பதாலும் / இனி எதுவும் வராது என்பது தெரிந்ததாலும், வருகை புரிந்த / பின்னூட்டங்கள் மூலம் ஊக்கம் அளித்த இரட்டையர் அதிஷா / யுவகிருஷ்ணா வுக்கும் , ஆஸ்திரேலிய அம்மிணி அவர்களுக்கும், முதல் முறையாக வருகை புரிந்த ஆயில்யனுக்கும் - இனி வரும் பதிவுகளில் படிக்கும்படி எழுதுவேன் என்ற உறுதிமொழியுடன் நன்றி கூறி கொள்கிறேன்.
நன்றாக எழதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..
மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:
http://tamilkadu.blogspot.com
//இனி வரும் பதிவுகளில் படிக்கும்படி எழுதுவேன் என்ற உறுதிமொழியுடன் நன்றி கூறி கொள்கிறேன்.
//
Nanri
அம்பி மற்றும் கபீஷ் - வருகைக்கு நன்றி.
Post a Comment