Thursday, March 26, 2009

கிச்சடி - 26/03/2009

எங்க ஊருல மூனு வாரம் முன்னாடி turkish airline விமானம் ஆக்சிடென்ட் ஆச்சு. அந்த நியூஸ் முதல்ல வெளிவந்த இடம் twitter.com (ஆக்சிடென்ட் ஆன ரெண்டு நிமிஷத்துல). விமானத்த விட்டு தப்பிக்கும் போதே யாரோ மொபைல் மூலமா அப்டேட் பண்ணி இருக்காங்க.

சுயசரிதை

பழைய நினைவுகள் குறித்தான இன்றைய ஞாபகத்த வச்சி எழுதனுமா, இல்லாட்டி குறிப்புக்கள தேடி கண்டுபுடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதனுமா ?

அலுவலகத்துல உங்கள சுத்தி வேலை பாக்கற ஒவ்வொருத்தருக்கா வேலை போச்சுனா உங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?

கேள்விகள் எல்லாத்துக்கும் கேள்விக்குறி அவசியமா.

எங்க வீட்டுலேந்து நூறு மீட்டர் தூரத்துல ஒரு டென்னிஸ் டோர்னமன்ட் நடந்தது. செமிபைனல் பாக்க போயிருந்தேன். நாடல், மொன்பில்ஸ்ன்னு ஒரு பிரெஞ்சு ப்ளேயர தோக்கடிச்சாரு. சரின்னு மேட்ச் முடிஞ்சவுடன கிளம்பினேன். அடுத்த மேட்ச்சும் அதே டிக்கெட்ல பாக்கலாம்ன்னு சொன்னாங்க. நம்ப லியாண்டர் பேஸ் டபுல்ஸ் விளையாட வந்தாரு. எனக்கு பயங்கர ஆச்சரியம். சுத்தமா எதிர்பார்க்கல. என்னால முடிஞ்ச vocal சப்போர்ட் கொடுத்து ஜெயிக்க வச்சேன் ! ஆனாலும் மேட்ச் முடிஞ்சவுடன அவர் கிட்ட போயி ஆட்டோகிராப் வாங்க ஒரே கூச்சம். வாங்கல. ஏன் இப்படி ?

டூ வீலர், பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் எங்கயாவது குத்தினா அத ஆங்கிலத்துல ஆக்சிடென்ட்ன்னு சொல்றோம். அது ஏன் விமானத்துக்கு மட்டும் crashன்னு சொல்லணும் ?

உங்க அலுவலகத்துல எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தா, நீங்க புது வேலை தேடணுமா இல்லாட்டி ப்ளாக் எழுதனுமா ?

பத்து வருஷம் முன்னாடி ஒரு எடத்துல நான் நுகர்ந்த வாசனையை இப்ப நினைச்சாலும் நுகரவும், உணரவும் முடியுது. யாருக்காவது இது மாதிரி அனுபவம் இருக்கா ? இதுக்கு பேரு (term) என்ன ?

பத்தி எழுத்துல எத்தன சதவீத கேள்விகள், எத்தன சதவீத சேதிகள் இருக்கணும் ? பத்தி எழுத்து இலக்கணம் ஸ்கூல் சிலபஸ்ல இருந்ததா ? வெண்பா இலக்கணம் ஏன் ஞாபகம் வந்து தொலையமாட்டேங்குது ? கூகுள்ல தேடி எழுதனுமா இல்லாட்டி ஞாபகம் இல்லன்னு விட்டுடலாமா ?

எழுதினத திருப்பி படிக்கும் போது பார்க்கற தவறுகள திருத்தி மாத்தலாமா ? இல்லாட்டி இது தவறா ?

கடைசியா இந்த கவிதையோட இத முடிச்சுக்கறேன்.

18 comments:

யாத்ரீகன் said...

>> இப்ப நினைச்சாலும் நுகரவும், உணரவும் முடியுது<<

idhu ilatiyum, adhey vasanaiyai thirupi nugarndha, adhutha nodiyey 10 varusham udaney pinaadi poga mudiyudhu :-)

:-) nice kichadi..

மணிகண்டன் said...

யாத்ரீகன், நக்கல் பண்ணாதீங்க. தாயத்து மந்திரிச்சி அனுப்பறேன். சரியாயிடும். வருகைக்கு நன்றி.

அறிவே தெய்வம் said...

தனக்குத்தானே கேள்வி கேட்டாலே
முன்னேற்றம்தான். தொடருங்கள்...
வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//எங்க ஊருல மூனு வாரம் முன்னாடி turkish airline விமானம் ஆக்சிடென்ட் ஆச்சு. அந்த நியூஸ் முதல்ல வெளிவந்த இடம் twitter.com (ஆக்சிடென்ட் ஆன ரெண்டு நிமிஷத்துல). விமானத்த விட்டு தப்பிக்கும் போதே யாரோ மொபைல் மூலமா அப்டேட் பண்ணி இருக்காங்க//

:)

நிலநடுக்கம் நடந்த 2 ஆவது நிமிடம் படபடப்போடு பதிவு எழுதி உடனேயே பதிவும் போட்ட அனுபவம் உண்டு.

கோவி.கண்ணன் said...

//அலுவலகத்துல உங்கள சுத்தி வேலை பாக்கற ஒவ்வொருத்தருக்கா வேலை போச்சுனா உங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?//

நமக்கு நாளையோ, மறுநாளோ !

T.V.Radhakrishnan said...

//எழுதினத திருப்பி படிக்கும் போது பார்க்கற தவறுகள திருத்தி மாத்தலாமா ? இல்லாட்டி இது தவறா ?//

தவறுகளை...

இப்படி தவறுகளை தவறோட எழுதினா..தவறை சுட்டிக்காட்டி..தவறாமல் பின்னூட்டம் வரும்..அதனால்..தவறுகளை தவராமல் தவறுடனேயே எழுதவும்.

மணிகண்டன் said...

தெய்வம் அண்ணேன் ! இந்த கேள்வி எல்லாம் உங்களுக்கு தான். எனக்கு நானே கேள்வி எல்லாம் கேட்டுக்கறது இல்ல ! பதில் நல்ல தெரிஞ்சும் கேள்வி கேட்டு என்ன பிரயோஜனம் ?

மணிகண்டன் said...

கோவி, நீங்களும் அந்த category'aa ? ஆனா, இந்த விமான crashla பல பேரு இறந்தாங்க வேற.

நாளையோ, நாளை மறுநாளோ நம்ப அப்படின்னு தோணினா உருப்படலாம் ! இல்லாட்டி ?

ஆனாலும் இந்த அனுபவம் பயங்கர கடியா இருக்கு.

மணிகண்டன் said...

ராதாகிருஷ்ணன் சார், இனிமே நிச்சயம் கரெக்ட் பண்ண வச்சிடுவீங்க போல ! இந்த மாதிரி பின்னோட்டம் போட்டா அப்புறம் நான் உண்மையாவே கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன். அப்பதான் தவறுகளும் அழகா தெரியும். ஹி ஹி ஹி

tamilishla வோட்டு போட்ட அத்தனை மகாஜனங்களுக்கும் என்னோட நன்றி.

ஆனா இந்த முறை சுந்தர் இன்னும் குத்தல.

முரளிகண்ணன் said...

கிச்சடி நல்ல ருசி

மணிகண்டன் said...

முரளிகண்ணன், ருசிச்சதுக்கு ரொம்ப நன்றி.

Anonymous said...

மணி,

full form போல, :-).

"கடைசியா இந்த கவிதையோட இத முடிச்சுக்கறேன்."
கவிதை? omg

இந்த மாசத்து post எல்லாமே நல்ல இருக்கு.

Nithya Jambu

எம்.எம்.அப்துல்லா said...

தூள் கேள்விகள் :)

வசந்த் - c/o கணேஷ் said...

சார் பின்னூட்டத்தை ரிலீஸ் பண்ணுங்க

இல்லாட்டி உங்களுக்கு கணேஷ் கிட்ட சொல்லி நூறு பின்னூட்டம் போட சொல்லிருவேன்.

முப்பத்திரண்டாம் முனியம்மா said...

அன்பரே

ஆறடி அழகரே

இன்பத்தை அள்ளித்தரும் உங்களை

ஈயென சுற்றும் எனக்கு

உங்கள் மலர்க்கரத்தால்

ஊர்கூடி தாலிகட்ட

என்ன தயக்கம்

ஏன் இந்த மயக்கம்

ஐந்தரைக்குள் வண்டி

ஒரு நிமிடமும் தவறாமல்

ஓடோடி வரவும் - இல்லாவிட்டால்

ஔ என வடிவேலு போல் அழுதுவிடுவேன்

அஃதே உங்கள் முடிவென்றால் மரணத்தை முத்தமிடுவேன்

இப்படிக்கு உங்கள் முப்பத்து இரண்டாம் காதலி

முனியம்மா

அதிஷா said...

முனியம்மா காதலரே அருமையான பதிவு

அதிஷா said...

;-)))

மணிகண்டன் said...

:)- நித்யா, கவிதைய காக்கா தூக்கிக்கிட்டு போய்டுச்சி. ஜம்புகிட்ட ஸ்டாக் இருக்கும். எடுத்துவிட சொல்லுங்க. நான் யூஸ் பண்ணிக்கறேன்.

முனியம்மா, அதிஷா :- ஒரே நன்றியே போதும்ன்னு நினைக்கறேன்.

அப்துல்லா / முரளி - வருகைக்கு நன்றி.