உண்மையில் முடக்கப்பட்ட அக்கௌன்ட்டை எப்படி திரும்பப் பெறுவது என்பது எனக்கும் தெரியாது.ஆனால் கூகுளிடம் மெயில் செய்து கேட்டால்
திரும்பக்கிடைக்கும் என்றே நினைக்கிறேன். பலருக்கும் இவ்வாறு திரும்ப கிடைத்திருக்கிறது.
வரும்முன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் கீழ்வருபவன !
உங்கள் தளம் மால்வேர் மூலம் தாக்கப்பட்டால் மால்வேர் எங்கிருந்து வருகிறது / எப்படி நீக்குவது என்பதெல்லாம் கணிப்பொறி / மென்பொருள் அறிமுகம் உள்ளவர்களால் தான் எளிதாக செய்ய முடிகிறது.
இந்த சூழ்நிலையில் உங்கள் வலைப்பதிவில் உள்ள contents யை எளிதாக தக்கவைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
1) உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட் login செய்து கொள்ளுங்கள். பிறகு settings --> Basic சென்று Export Blog (Blog Tools அருகில் இருக்கும்) கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் Download Blog என்று ஒரு பட்டன் இருக்கும்.
அதை கிளிக் செய்து உங்கள் கணிப்பொறியில் .xml file ஆக சேமிக்கவும்.
பிறகு தேவைப்படும்போது import செய்து கொள்ளலாம்.
2) இதைவிட எளிதான வழி www.wordpress.com சென்று உங்களுக்கென ஒரு புது அக்கௌன்ட் தொடங்கவும். தொடங்கிய பிறகு, அங்குள்ள Tools --> Import கிளிக் செய்தால் உங்களுக்கு பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் ஒன்றான blogger கிளிக் செய்யவும். (உங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட் லாகின் செய்துக்கொண்டு கிளிக் செய்தால் எளிது) நீங்கள் வைத்திருக்கும் அனைத்து பதிவுகளும் லிஸ்ட் செய்யப்படும். அந்த லிஸ்ட்டில் தேவையானவற்றை மட்டும் இம்போர்ட் பட்டன் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
எனது இரண்டு வலைத்தளங்களையும் http://thodar.wordpress.com என்ற wordpress தளத்தில் சேமித்து உள்ளேன். இம்போர்ட் செய்யும்போது உங்களது widget மற்றும் திரட்டிகளுக்காக நீங்கள் இணைத்த add on scripts எதுவும் இம்போர்ட் செய்யப்படாது. ஆதலால், இந்த தளமும் malware மூலம் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
இவ்வாறு வாரம் ஒருமுறை இம்போர்ட் செய்து கொள்ளலாம். ஒவ்வொருமுறை இம்போர்ட் செய்யும்போதும் புதிதாக எழுதப்பட்டுள்ள இடுகைகளும் / பின்னூட்டங்களும் மட்டுமே ஏற்றப்படும். ஆதலால் நேரம் அதிகம் ஆகாது.
25 comments:
ரொம்ப நல்ல / உபயோகமான தகவல் மணி, இப்போவே வேர்ட்ப்ரெஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணிடறேன்
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இனி இதுவேற செய்யணுமா? ரைட்டு.
உபயோகமான தகவல். டவுன்லோட் இப்பவே பண்ணிடறேன்.
நல்ல தகவல் . . .
ஒரு வபை்பதிவை தொலைத்தாலும் ஏனையவற்றை காப்பாற்றிவிட்டேன்..
நன்றிகள்
மாயா
தேவையில்லாத விட்ஜெட்டுகளை போட்டுக் கொள்ளாதீர்கள், முக்கியமாக திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகள் (தமிழ்மணம் இதற்கு விதிவிலக்கு இதுவரை). அவற்றுக்கான தலங்களில் மால்வேர் இருந்தால் அது உங்கள் தளத்தையும் பாதிக்கும்.
இப்போது உண்மைத் தமிழனுக்கும் அதே நிலைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல தகவல்
//எனது இரண்டு வலைத்தளங்களையும் http://thodar.wordpress.com என்ற wordpress தளத்தில் சேமித்து உள்ளேன்.//
தல சூப்பர் ஐடியா :) :)
ஆனால் ஏன் இரண்டு தளங்களையும் ஒரே தளத்தில் சேமிக்க வேண்டும். இரண்டு வலைப்பதிவாகவே சேமிக்கலாமே
உண்மையில் பயனுள்ள தகவல் தல. இப்பவே நான் ப்ளாக் எக்ஸ்போர்ட் செய்து வைத்துக்கொண்டேன். :-)
எனக்கும் ஏதோ பிரச்னை செய்யுது....தகவலுக்கு நனறி!
@ஸ்ரீராம் @அம்மிணி @மாயா @பீர் - வருகைக்கு நன்றி
@டோண்டு நீங்கள் சொல்வது சரி. மால்வேர் வந்தால் தான் பிரச்சனை புரிகிறது.
@ராதாகிருஷ்ணன் @அருணா @ரோச்விக் - வருகைக்கு நன்றி
@ப்ருனோ - என்னோட தேவைக்கு போதுமா இருந்தது. பட், உங்க சாய்ஸ்
this is really good
எல்லாருக்கும் ரொம்ப உபயோகமான தகவல் :)
@மகா @ பிரசன்னகுமார் - தேங்க்ஸ்
அன்பின் மணிகண்டன்
பயனுள்ள தகவல்
செஞ்சிடுவோம்
நல்வாழ்த்துகள்
ம்.. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்..!
நல்ல தகவல்கள். வேர்ட்பிரஸ் வில் ட்ரை:)
நல்ல தகவல்களை எல்லருடைய நன்மை கருதி எழுதியிருக்கும் நண்பருக்கு நனிநன்றி.
புதிய தெளிவுகள் கிடைத்தன.
ஜயா நீங்கள் சொல்வது சரி இப்ப என் பிளாக் தடை செய்யப்பட்டுவிட்டது இப்போது நான் என்ன செய்வது சொல்லுங்கள், அப்புறம் நீங்கள் சொல்வது செய்கிறேன்.பிளாக்கில் மால்வேர் & ஸ்பேம் இருக்கிறதாம் ஆதலால் தாங்கள் என்ன செய்வது என்று அறிவுறை கூறினால் மிக நன்றாக இருக்கும்.இது பற்றி விஷயம் தெரிந்தவர்கள் எனக்கு மெயில் செய்தால் உதவியாக இருக்கும்
http://beermohamedtamilgroup.blogspot.com
mail id : beermohamed@gmail.com
@beermhammed கீழே இருக்கற லிங்க்ல உங்க வலைப்பதிவு url சப்மிட் பண்ணுங்க.
http://tinyurl.com/yc9pbu4
மேலும் அதிக தகவலுக்கு இந்த forum யூஸ் பண்ணுங்க.
http://tinyurl.com/yzh7l2q
சீனா, வித்யா, நற்குணம் - வருகைக்கு நன்றி.
உண்மைத்தமிழன் - உங்களோட ப்ளாக் திரும்ப கிடைச்சிடும். கவலைப்படாதீங்க. ரீடர்ல இன்னும் இருக்கே. அதுலேந்து அட்லீஸ்ட் பதிவு மட்டும் எப்படி திரும்ப எடுக்குதுன்னு நம்ப கணிப்பொறி experts கிட்ட கேளுங்க.
மணி.... மணியான தகவல்.... :)
ஹிஹி.. நீங்கள் சொன்ன இரண்டு செயல்களையுமே செய்துமுடித்துவிட்டு இப்பதான் அப்பாடியென்று மூச்சுவிட்டுக்கொண்டு உங்களுக்கு பின்னூட்டமிடுகிறேன்.
பின்னே என்ன.? நாம் எழுதியிருக்கிறதெல்லாம் பொக்கிஷமாச்சே.. ஹிஹி.!
http://www.nilaraseeganonline.com/2009/12/blog-post.html
இதையொத்த பதிவு.
என்னோட ப்ளாக்கர் எலோரும் பார்க்க வேண்டும் என்ன செய்வது ?
கூகிள் தேடுபொறியில் வரவில்லை
உதவி செய்யுங்கள்
nalmananba,
நீங்கள் பிளாக்கர் லாக் ஆன் செய்யுங்கள். பிறகு செட்டிங்க்ஸ் --> Let search engines find your blog என்ற இடத்தில் yes செலக்ட் செய்யுங்கள்.
Post a Comment