பேட்ரிக் பட்டேர்சன் பந்துல தொடர்ச்சியா மூணு பவுண்டரி அடிச்சுட்டு , நாலாவது பந்தையும் அடிச்சி அவுட் ஆனபோது ஸ்ரீகாந்தை எப்படியெல்லாம் திட்டினேன்னு இன்னும் ஞாபகம் இருக்கு. இப்ப என்னவோ நாலு / ஆறுன்னாலே ஒரே அலர்ஜியா இருக்குங்க. எதை ஞாபகம் வச்சிக்கறது எதை மறக்கறது ?
முதல்முறையா தீபாவளி எங்க வீட்டுல கொண்டாடாம உறவினர் வீட்டுக்கு போனது எந்த வருஷம்ன்னு ஞாபகம் இல்லை. ஆனா வெடி வெடிச்சுட்டு மேட்ச் பார்த்தது நல்லாவே நினைவுல இருக்கு. ஸ்ரீகாந்த் ரப்பர் சோல் உள்ள ஷூ போட்டுக்கிட்டு ஸ்லிப் ஆகி விழுந்து ரன் அவுட் ஆனார்ன்னு ஞாபகம் இருக்கு. அவருக்கு பிறகு வந்தவங்க எப்படி ஒன் டே மேட்ச் விளையாடக்கூடாதுன்னு பாடம் எடுத்தது ஞாபகம் இருக்கு. இம்ரான் கபிலை வெளுத்து வாங்கினது மறக்கலை. அமர்நாத் அவரோட ஸ்பெல்ல கடைசி ஓவர் போட வரும்போது இன்னிக்கு இவனுக்கு லக் இல்லை. ரெண்டு தான். அதுக்கு மேல சான்ஸ் கிடையாதுன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. பக்கத்துல இருந்தவன் திரும்பி பார்த்து முறைச்சது ஞாபகம் இருக்கு. முதல் ஒன்பது ஓவர்ல ஒரு விக்கெட் எடுத்திருந்தாரா இல்லாட்டி விக்கெட் எதுவும் எடுக்கலையான்னு ஞாபகம் இல்லை.
முதல்முறையா BSRB எக்ஸாம் எழுத காவேரி காலேஜ் போன சமயத்துல மனோஜ் பிரபாகரும், மோங்கியாவும் (WI எதிரா) சிறப்பா விளையாடி இந்தியாவை காலி பண்ணினாங்கன்னு ஞாபகம் இருக்கு.
என்னோட கல்யாணத்தன்னிக்கு எந்த கிரிக்கெட் மேட்சும் நடக்கலைன்னு ஞாபகம் இருக்கு :)-
வாசிம் அக்ரமோட முதல் ஸ்பெல்லை சச்சின் டெண்டுல்கர் அடிச்சி ஆடின்னா கடுப்பு கடுப்பா வரும். ரெண்டு /மூணு ஓவர்ல ஸ்பெல் முடிச்சிக்கிட்டு மறுபடியும் (சச்சின் அவுட் ஆனபிறகு) வந்து கழுத்தறுப்பார்ன்னு பயம் தான் காரணம். இப்ப கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது மாதிரி எந்த பவுலர் கிட்ட பயம் ? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.
ஹைஸ்கோருக்கு காரணம் பேட்ஸ்மன் திங்கிங்ல ஏற்பட்ட paradigm shift தான் காரணம்ன்னு புரிஞ்சாலும் ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.
2003 ல ஜெர்மனி வந்து ஒரே மாசம் தான் முடிஞ்சி இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியா டூர் நடந்துக்கிட்டு இருந்தது. ஏதோ ஒரு சேனல் கார்டு வாங்கி போட்டு அடிலைட் டெஸ்ட் மேட்ச் பார்த்தேன். கலக்கல் மேட்ச். அடுத்த மெல்போர்ன் மேட்ச் நண்பர்களோட பார்க்கனும்ன்னு டக்குன்னு ஒரு டிக்கெட் வாங்கி கிறிஸ்துமஸ் போது திருச்சி வந்தேன். இப்ப பையனை பார்க்கனும்ன்னு ஆசை ஆசையா இருந்தாலும் வேலை / விசா காரணங்களால வரமுடியலை. கலியுகத்துல பண்ணின பாவத்துக்கு அந்த ஜென்மத்துலயே பலனை அனுபவிக்கனும் போல !
Serie A லீக் ரொம்ப பார்த்தது கிடையாது. ஆனா ஸ்வீடன் மேட்ச்ல Zlatan Ibramovich விளையாடினதை பலமுறை பார்த்து இருக்கேன். வெறும் ஹைப் தான்ன்னு நண்பர்கள் கிட்ட சொல்லி இருக்கேன். பட், இப்ப Barca மேட்ச் பார்க்கும்போது தான் தெரியுது, ஏன் எல்லாரும் தலைமேல வச்சி கொண்டாடினாங்கன்னு ! Pure Class.
டால்மியா மாதிரி ஒரு ஆளு நம்ப வூரு கால்பந்து நிர்வாகத்துக்கு வந்தா நல்லா இருக்கும். (கமர்ஷியளைஸ் பண்ணிட்டாருன்னு பின்னாடி திட்டிக்கலாம் !) இந்தியாவுல கால்பந்துக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பயங்கர அதிகம். oliver kahn பார்வெல் மேட்ச் பார்க்க கல்கத்தாவுல ஒரு லட்சத்துக்கு அதிகமானவங்க stadium வந்திருந்தாங்க !
ட்விட்டர் கொஞ்சம் ஈசியா இருக்கறதுனால ஒரு மூணு வாரமா ப்ளாக் ரொம்ப படிக்கலை. எந்த வலைப்பக்கத்தை திறந்தாலும் ஒண்ணு சாரு இல்லாட்டி வேட்டைக்காரன். ரெண்டுலயும் சுவாரசியம் போயிடிச்சு. சோ, மறுபடியும் ப்ளாக் எழுதனும்ன்னு வலுக்கட்டாயமா ஆரம்பிச்சா ஸ்போர்ட்ஸ் மேட்டர் தான் மனசுல தோணுது. சோ, ரொம்ப கஷ்டப்பட்டு கீழ்வருபவன.
ஒரு மொழில ஒரே அர்த்தம் கொடுக்கற பல சொற்கள் இருக்கும் காரணம் என்ன ? குருதி, இரத்தம் (ரத்தம்) ஏன் ?
empathy ங்கர ஆங்கில சொல்லை தமிழ்ல நேரடியா மொழிபெயர்க்க முடியுமா ? பல ஆன்லைன் டிக்ஷ்ணரில பச்சாதாபம்ன்னு எழுதி இருக்கு. பட், எனக்கு திருப்தி இல்லை.
ஒரு நம்பிக்கை முட்டாள்த்தனமா இருந்தா மூடநம்பிக்கை ஆகுதா இல்லாட்டி மூடர்களோட நம்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை ஆகுதா ?
எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது, கைரேகை, கிளி ஜோசியம் ஆகியவையில் நம்பிக்கை கிடையாது. நாடி ஜோதிடம் / எனர்ஜி transformation போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கை குறித்து தெரியவில்லை. ஆனால் பிள்ளையார், முருகன் மற்றும் சிங்கபெருமாளிடம் நம்பிக்கை உண்டு. பேய்களில் உள்ள அனைத்து classification மீதும் நம்பிக்கை கிடையாது.
தமிழ்நாட்டில் வசிக்கும் வரை மார்கழி மாதம் என்றால் குளிரும் என்றும் நம்பினேன்.
எனது நம்பிக்கைகளின் அடிப்படையில் என்னை எப்படி வகையறுக்கவேண்டும் ?
19 comments:
எதிர்தாப்புல யார்கிட்டயோ பேசிகிட்டுருக்க மாதிரி இருக்கே?
:) நல்லாயிருக்கு
//ஒரு நம்பிக்கை முட்டாள்த்தனமா இருந்தா மூடநம்பிக்கை ஆகுதா இல்லாட்டி மூடர்களோட நம்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை ஆகுதா ?//
இதுக்கு முடிவு தெரியுற வரைக்கும் வேணும்னா அடைப்புகுறிக்குள்ள ‘ர்’ போட்டுக்கலாம். மூட(ர்)நம்பிக்கைன்னு :)
சர்ர்ர்ன்னு ஸ்க்ரோல் பண்ணி பாதிக்கு மேல தான் படிச்சேன்
வாங்க ஆதவன். இந்த ஸ்டைல்ல தான் முன்னாடி கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். நடுவுல தானா மாறி இருக்கு :)- தேங்க்ஸ்.
பீர் - ஆமாம். அதுவரைக்கும் வெறும் விளையாட்டு தான். personal nostalgia :)- அடுத்தவங்களுக்கு சுவாரசியமா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் :)-
// நாடி ஜோதிடம்//
Amused. ஜோசியங்களிலேயே அடிப்படையே இல்லாத Humbug இந்த நாடி ஜோதிடம்தான்.
ஜாதகம் கணிப்பது என்பது வெறும் கணக்குதான். அதில் பலன்கள் சொல்லும்போதுதான் மக்களை ஏமாற்றுவார்கள். இந்த நாடி ஜோசியத்தில் அடிப்படையே கிடையாது. கொஞ்சம் வட்டார பின்புலன் அறிவு இருந்தால் ஒரு நபருடன் பேசிக்கொண்டே பல விஷயங்களை அவர் அறியாமல் கறந்துவிடலாம். ஓலைச் சுவடி, சங்கிலி எழுத்து, அகத்தியர் நாடி, ஏடு கிடைக்கல போன்ற தேய்வழக்குகளை வைத்து சுலபமாக ஏய்த்து விடுவார்கள்.
ஸ்ரீதர், நீங்க சொல்றது சரியா இருக்கலாம் :)- நம்பிக்கைக்கு அடிப்படை எதுக்குங்க ?
நான் நாடி ஜோசியம் எல்லாம் பார்த்தது கிடையாது. அதே சமயம் ஒருமுறை சொந்தக்காரரோட திருவானைக்காவல்ல உள்ள ஒரு ஜோசியர் கிட்ட போயிருக்கேன். ஆச்சரியப்பட்டதும் உண்மை தான்.
கிச்சடி நல்லாயிருக்கு
இது கிச்சடி இல்ல.. கிரிக்ச்சடி.. :)
கடைசி கேள்விகள் நச்.. பதில் தான் இல்லை.. :(
//ஸ்ரீகாந்த் .... ரன் அவுட் ஆனார்ன்னு ஞாபகம் இருக்கு///
மட்டையை கீழ போட்டுட்டு தத்தக் புதக்னு ஒடி அவுட் ஆனாரே, அதுவா ? எனக்கு நல்ல நியாபகம் வரும் ரன் அவுட் அது .
//கலியுகத்துல பண்ணின பாவத்துக்கு அந்த ஜென்மத்துலயே பலனை அனுபவிக்கனும் போல//
"முற்பகல் செய்யின் பிற்பகல் ......." காலைல பண்ணிங்கனா சாய்காலம் அடி விழும்....உங்களுக்கு ரொம்ப தாமதமா ஆறு வருஷம் ஆகிருக்கு.
ரொம்பவே ஓவர் மணி சார் ....மேட்ச் பாக்ரதுக்காக ஜெர்மனியில் திருச்சி வந்தது.
//ஒரு நம்பிக்கை முட்டாள்த்தனமா இருந்தா மூடநம்பிக்கை ஆகுதா இல்லாட்டி மூடர்களோட நம்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை ஆகுதா ?//
ரெண்டும் தப்பு, பெரியார் வாதிகள் சொன்னால் தான் மூடநம்பிக்கை ஆகும் (பத்த வச்சு பார்க்கலாம்)
ஒருத்தர் மூடர்னு எப்படி சொல்றோம்? அவர் பண்ற முட்டாள்தனத்தை வெச்சு தானே? அதனால முட்டாள்தனமான செயல்களே மூட நம்பிக்கை, என்னை பொறுத்த வரை!
நானும் பாதிக்கு மேலத்தான் ஸ்க்ரால் பண்ணி படித்தேன்! :) நமக்கு பழய நோகியாவுல உள்ள ஸ்னேக் கேம்தான் புடிக்குமே!
{empathy ங்கர ஆங்கில சொல்லை தமிழ்ல நேரடியா மொழிபெயர்க்க முடியுமா ? பல ஆன்லைன் டிக்ஷ்ணரில பச்சாதாபம்ன்னு எழுதி இருக்கு. பட், எனக்கு திருப்தி இல்லை.}
நீங்க empathetic க்கு அர்த்தம் பார்க்கிறீர்களா அல்லது நௌன்'க்கா?
empathy என்ற வார்த்தைக்கு அடுத்தவர் நிலையைப் புரிந்து கொள்ளும் உணர்வு என்பது பொருள்.
empathetic பொருள்தான் பச்சாதாபம் என்ற நிலையில் வரும்.
தமிழில் கையறு நிலை அப்படின்னு ஒரு சொல் இருக்கே,தெரியாதா?
கிச்சடி நல்லா கிண்டிருக்கீங்க:)
கிச்சடி சூப்பர் கண்ணா!
அறிவன், கையறு நிலை எப்படிங்க இதுக்கு சரியா வரும் ? emphathy அர்த்தம் தெரியும். ஒரே சொல்லில் தமிழில் சொல்லமுடியுமான்னு யோசிச்சேன் ?
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
நன்றி மணிகண்டன்
சாம், சாபம் கொடுக்காதீங்க :)-
வருகைக்கு நன்றி. தமிழ் பதிவுகளை பொறுத்தவரை நீங்க சொல்றதும் உண்மை தான். அவங்க தான் ஆன் த ஸ்பாட் தீர்ப்பு தராங்க :)-
ஒருத்தரை மூடர்ன்னு அவரோட செயல் நமக்கு முட்டாள்த்தனமா தெரிஞ்சா சொல்றோம் :)- சோ, என்னோட கேள்விகள் இன்னும் valid தான் ! வருகைக்கு நன்றி நாசியா.
நன்றி வித்யா.
முதல் வருகைக்கு நன்றி ravisuga.
ரொம்ப நாட்களுக்குப் பின். நல்லா இருக்கு கிச்சடி. இப்ப எங்கே? Amsterdam? தமிழ்மணம் இடது பக்கம் (வா.பரிந்துரை) வரும் அளவு தொழில் நுட்பம் தெரிந்து விட்டதா? பரவாயில்ல. நீங்களும் பிரபல பதிவர்தான் :)
empathy - அறிவன் சொன்ன 'அடுத்தவர் நிலையைப் புரிந்து கொள்ளும் உணர்வு' பொருள் சரி. ஒரே வார்த்தையில் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதில் கையறு நிலை எப்படி வருகிறது? அது கிட்டத் தட்ட 'Desperate' அல்லது 'Despondent' என்று புரிந்து கொண்டிருந்தேன். என் எண்ணம் தவறாக இருக்கலாம்.
அனுஜன்யா
வாங்க அனுஜன்யா. ரீஎன்ட்ரி கொடுக்கும்போது மக்களை நம்பறதை விட தொழில்நுட்பத்தை தான் நம்பனும் :)- இதுக்குப் பேரு Twitter Campaigning :)- கிரிக்கெட் நிறைய இருக்கு அதுனால நீங்க கமெண்ட்விங்கன்னு நினைச்சேன் :)-
மணிகண்டன் சச்சின் 100 அடிக்காமல் செய்த தினேஷ் கார்த்திக் மீது பலர் பொங்கிட்டாங்களே!
@கிரி
இன்னும் ஏன் எக்ஸ்டிரா பத்து ரன் கொடுக்கலைன்னு பவுலர்களை யாரும் திட்டாம இருக்காங்களேன்னு சந்தோஷப்பட வேண்டியது தான் :)-
Post a Comment