Sunday, March 7, 2010

கிச்சடி - 07/03/2010

இங்கு நடந்த லோக்கல் முன்சிபல் தேர்தலில் கீர்ட் வில்டர்சின் கட்சி பங்குபெற்ற இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொரு இடத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர். ஒரு அடிப்படைவாதக் கட்சியின் (முஸ்லிம்களுக்கு எதிரான) வெற்றி ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்தலாம். மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல். மறுபடியும் ஆப்கானுக்கு குறைந்த அளவில் ராணுவம் அனுப்ப ஆளும்கட்சி முடிவெடுத்ததால் கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வில்டர்ஸ் கட்சி வெற்றி பெற்றால் ? இதை தான் கேட்ச் 22 என்று சொல்கின்றனர்.

திருச்சியில் எனது நெருங்கிய நண்பனின் பெயர் தாயுமானவன். நல்ல புத்திசாலி. பொறியியல் படிப்பை முடித்த இரண்டு வருடத்தில் திடீரென்று ஜக்கி வாசுதேவ் ஆசுரமத்தில் சேர்ந்தான். உடனடியாகவே பிரம்மச்சரியம் வேறு தரப்பட்டது. சேர்ந்த புதிதில் அதை நான் எஸ்கேபிசம் என்றே நினைத்தேன். பலமுறை ஆசிரமம் சென்று அவனை திரும்ப அழைத்து வர முயன்றோம். எதற்கும் அசையவில்லை. இவை நடந்தது பதினோரு வருடங்களுக்கு முன்பு. இன்று வரை அவன் அங்கு அருமையாகவே இருந்து வருகிறான். Hopefully for his sake, I wish jakki is not proved fake during our life time.

நம்பிக்கை என்றால் என்ன ?

ஏதாவது சாமியாரை பின்பற்ற யோசனை இருந்தால், இறந்தவர்களாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

சச்சின் டெண்டுல்கர் 200 அடித்ததை பார்க்க முடியவில்லை. அருமையாக ஆடி இருக்கவேண்டும். இனி பலரும் இரட்டை சதம் அடிப்பார்கள் என்றே அனுமானிக்கிறேன். வெறும் அனுமானம் மட்டும் தான். ஜோதிடம் எல்லாம் இல்லை !

எனது மகன் அடிக்கடி Nick Hits என்ற சேனலில் ஆங்கிலப் பாடல்களை விரும்பி பார்க்கிறான். நல்லவேளையாக தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் Sun News சேனல் பார்க்க நேரிட்டிருக்கலாம்.

Galerianki என்ற போலிஷ் மொழி திரைப்படம் முடிந்தால் பாருங்கள். தமிழ் பதிவுகளில் விமர்சனம் முன்பே விமர்சனம் எழுதப்பட்டு இருக்கலாம். Designer wear அணிவதற்காக / வாங்குவதற்காக விபசாரத்தில் ஈடுபடும் mall girls பற்றிய படம். போலந்தில் ஒருவித கலகத்தை ஏற்படுத்திய படம்.

கடந்த பதிவில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை படித்த ஒரு பிரபல பதிவர் உங்களுக்கு பதிவு வியாதியா என்று கேட்டார். அவரிடம் கவிதை வெறும் புனைவு தான் என்று கூறி தப்பித்துக்கொண்டேன். பொய் சொல்லியிருந்தாலும் மறுபடியும் அதுபோன்ற தவறுகளை செய்வதாக இல்லை.

கடந்த ஒரு மாதத்தில் ஏன் பதிவு எழுதவில்லை என்று ஒருவர் கூட கேட்கவில்லையே ? இதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா ?

அதிஷாவின் திருமணத்தில் பல பதிவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தம்பதிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

15 comments:

கோபிநாத் said...

தல

Galerianki online link ஏதாச்சும் இருந்த கொடுங்க..;)

☀நான் ஆதவன்☀ said...

//எனது மகன் அடிக்கடி Nick Hits என்ற சேனலில் ஆங்கிலப் பாடல்களை விரும்பி பார்க்கிறான். நல்லவேளையாக தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் Sun News சேனல் பார்க்க நேரிட்டிருக்கலாம்.//

புண்ணியம் செஞ்சிருக்கீங்க போல :)))

எம்.எம்.அப்துல்லா said...

இங்க பின்னூட்டம் போட்டு ரொம்ப நாளாச்சேன்னு ச்சும்மா ஒரு பின்னூட்டம்.

பின்னூட்டம்தான் போடுறதில்லை.ரெகுலரா படிக்கிறோம்..நீங்க ஒரு மாசமா எழுதாததையும் சேர்த்து :)

பரிசல்காரன் said...

கடந்த ஒரு மாதமா ஏன் எழுதலன்னு கேட்கலாம்னு இருந்தேன்.. நீங்களே பதில் சொல்லிட்டீங்க.. (இல்லையா...?)

:-)

செந்தழல் ரவி said...

sitcom அப்படீன்னு ஒரு ப்ரெஞ்சு படம் கூட இருக்கு. ஒரு எலி ஒரு பையனை கடிக்க அவன் கேயா மாறி அந்தவீட்டு ...ச்சே விடுங்க.

அன்புடன்-மணிகண்டன் said...

//கடந்த ஒரு மாதத்தில் ஏன் பதிவு எழுதவில்லை என்று ஒருவர் கூட கேட்கவில்லையே ? இதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா ?//

என்ன மணி இப்படி சொல்லிட்டீங்க? கிச்சடி சாப்பிடாம நான் எவ்வளோ கவலையா இருந்தேன்... ;)

வித்யா said...

//எனது மகன் அடிக்கடி Nick Hits என்ற சேனலில் ஆங்கிலப் பாடல்களை விரும்பி பார்க்கிறான். நல்லவேளையாக தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் Sun News சேனல் பார்க்க நேரிட்டிருக்கலாம்.//

:))

thenammailakshmanan said...

//எனது மகன் அடிக்கடி Nick Hits என்ற சேனலில் ஆங்கிலப் பாடல்களை விரும்பி பார்க்கிறான்.//

அட அபயன் பாட்டு எல்லாம் பார்க்கிறாரா பெரிய மனுஷன் ..


அப்புறம் ஏன் பதிவு எழுதலனு யார்கிட்ட கேக்குறது .. வந்தவுடனே கேக்கலாம்னு இருந்தோம் மணிகண்டன்

அதிஷா said...

//
ஏதாவது சாமியாரை பின்பற்ற யோசனை இருந்தால், இறந்தவர்களாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.
//

மணிகண்டன் டச்!

சாமுவேல் | Samuel said...

so the government fell due to sending minimum forces to afgan...understood.
if they win in the coming election, how it will become catch 22..they will be winning without allies right ? or did i understood wrong ?

i think only opening or at the most 1 down batsmen on a good batting pitch being in a form of his life while batting first(not chasing)....lot of factors, so i expect it not to be broken for a long time.

மணிகண்டன் said...

thanks gopinath, aathavan, abdulla, parisalkaaran, mani, vidhya, thennamai.

ravi - why kolaveri ??

athisha - your comment is worthless !

samuel, Currently a guy named geert wilders who has never won a constituency is gaining popularity and he has good chance of winning appreciable number of constituencies. So that is why catch 22.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

உங்கள் அன்பு காதலி said...

ஆண்டுகள் பல கடந்தாலும் தொடர்ந்து உங்கள் வலைப்பூவை வாசிக்கும் ஒரே ஜீவன் கேட்கிறேன் ப்ளீஸ் புதுப்பதிவு போடுங்க மாமா!

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்