உணர்ச்சிக்கு வடிகாலாக எழுது.
எழுதியதை வகைப்படுத்து
வகை இலக்கணத்தைப் பரிச்சயம் செய்துகொள்
திரும்ப எழுதியதை படி.
கிழித்தெறி அல்லது திருத்து.
தெரிந்து செய்யும் இலக்கண பிழைகளில் கவித்துவம் மிளிரும்.
எழுதியதை திரும்பப் படி
அல்லது
திரும்ப எழுதியதை படி.
செப்பனிடு செப்பனிடு.
படித்துப் பார். தூரச் சென்றிருப்பாய்.
பிரதியிலிருந்து படைப்பவன் விலகும் தருணம் இது.
Thursday, May 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நீங்க எதை எழுதினாலும், கிண்டலா எழுதற மாதிரியே ஒரு ஃபீலிங் :).
இது நல்லாயிருக்கு.
எனக்கும் ஜ்யோவ் மாதிரி சந்தேகம் வந்தாலும்....give the benefit of doubt :)
நல்லா இருக்கு மணி.
அனுஜன்யா
சமூகத்தைப்படிக்காதவர் அப்படி படிக்க வேண்டிய தேவையில்லாதவர் எவரும் தனது பிரதியிலிருந்து அவ்வளவு சுலபமாக விலகிவிடுவதில்லை.
நல்ல பதிவு நன்றி விதி
நல்லாயிருக்கு மணிகண்டன்.
கிண்டல் மாதிரி எனக்கு தெரியல.
//எழுதியதை திரும்பப் படி
அல்லது
திரும்ப எழுதியதை படி.
செப்பனிடு செப்பனிடு.
படித்துப் பார்//
இன்னும் சரிவரலையா? ப்ளாக்'ல போடு..
இதான் என் பாலிசி.. ஹி.. ஹி..
எப்பூடி மணி..?!?
தேங்க்ஸ் ஜ்யோவ் & அனுஜன்யா. கிண்டலா இடுகை எழுதும்போது வந்து "கிண்டலா எழுதினேன்னு" சந்தேகப்படறதும், சீரியஸா எழுதி இருக்கேன்னு நினைக்கும் பதிவுல வந்து "சீரியஸா எழுதேன்னு" சொல்லுவதும் என்னை தற்கொலைக்கு தூண்டும் செயலாக இருக்கிறது :)- will post a letter to commisioner of police !
வினவு - உண்மை தான். பலரும் இலவச விளம்பரங்களுக்கு அடிமையே.
அதிஷா - தலைவிதி தான் :)-
நான் ஆதவன் - ரெண்டு மாசம் முன்னாடி "அடத்தூ" என்று ஒரு காவியம் எழுதினேன். அதுக்கு பலரும் வந்து இன்னும் நல்லா செப்பனிட்டு இருக்கலாம்ன்னு சொன்னாங்க. சோ, கடைசி ரெண்டு மாசமா எழுதின அத்தனையும் படிச்சி மாத்தி படிச்சி மாத்தி ஒரே கூத்து தான். முதல்ல எழுதினதுக்கும் கடைசில வந்ததுக்கும் சம்பந்தமே இல்லாம வந்தது. சோ, அதை கிண்டல் பண்ணி எழுதப்பட்டது இந்த காவியம். கடைசி ரெண்டு வாக்கியம் " தூரச் சென்றிருப்பாய்.
பிரதியிலிருந்து படைப்பவன் விலகும் தருணம் இது". யாருக்கும் புரிய சான்ஸ் இல்லைன்னு தெரியும் :)-
அன்புடன் மணிகண்டன் - வாங்க பாஸ். அது தான் பெஸ்ட் அப்ரோச். அது உறைக்க எனக்கு ரெண்டு மாசம் ஆகி இருக்கு.
அன்பான நண்பர் திரு மணி,
என்ன சார் நலமா? நல்ல கருத்துகள். உங்களை பாராட்டதான் வந்தேன். அனால் பாருங்கள் இதுக்கு நண்பர் திரு வினவு ஐயா வந்து சிங்கி அடிப்பதுதான் தமாஷு! அதுதான் கொஞ்சம் ஏதோ என்னால முடிந்தது, அவருக்காக!!
// உணர்ச்சிக்கு வடிகாலாக எழுது.// - ஆனால் வடிகட்டின பொய்களை எழுதாதே!
//எழுதியதை வகைப்படுத்து// - மாவோ வாழ்த்து, ஸ்டாலின் சஹஸ்ரநாமம் என்று
//வகை இலக்கணத்தைப் பரிச்சயம் செய்துகொள்// - அதாவது மாவோவின் துதி பாடல்கள் அல்லது ஸ்டாலினிச அழிப்பு இலக்கணங்கள் என்று
//திரும்ப எழுதியதை படி// - வேற என்ன வழி, அதுதானே எங்க தொழிலு .
//கிழித்தெறி அல்லது திருத்து//. நல்லவைஎல்லாம் கிழித்தெறி, நல்ல பாதைகளை திருத்து தீயவழிகளுக்கு
//தெரிந்து செய்யும் இலக்கண பிழைகளில் கவித்துவம் மிளிரும்//.- கவித்துவமா, கேவலத்தனம்தான மிளிருது!
//எழுதியதை திரும்பப் படி// Do not repeat, its business as usual
//அல்லது திரும்ப எழுதியதை படி.// THis is too much!
//செப்பனிடு செப்பனிடு.// என்ன செப்பல் எடு செப்பல் எடா?? அதுக்கு எப்பவும் எங்களுக்கு ஆளிருக்கு!
//படித்துப் பார். தூரச் சென்றிருப்பாய்//. இல்லாட்டி உட்டுருவோமா?
//பிரதியிலிருந்து படைப்பவன் விலகும் தருணம் இது// உண்மைகளே விலகியாச்சு மத்த விலகல் எல்லாம் எம்மாத்திரம்?
நன்றி
இங்கதான் 'வினவு' & 'NO' மீட்டிங் பாயிண்ட்டா.. Point noted.. :)
//அதிஷா said...
நல்ல பதிவு நன்றி விதி //
:-))))))
வித்தியாசமாத்தான் இருக்கு.
பாராட்டுக்கள்.
உயிர் வாழ விரும்பு !!! www.avasaramda.blogspot.com
Post a Comment