விஜயகாந்த் கட்சியின் சார்பாக நிற்கும் கே. பாண்டியராஜன் அவர்களை குறித்து உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். Ma Foi என்ற நிறுவத்தின் தலைவர். முதல்முறையாக ஒரு வேட்பாளர் தனது தொகுதியின் தேவையை கருத்தில் கொண்டு தொழில்முனைவோர் / மருத்துவர்கள் / பொறியாளர்கள் / பினான்சியல் அட்வைசர்கள் உதவியுடன் தொகுதிக்கான "election manifesto" தயார் செய்துள்ளார். இது வழக்கம் போல தேர்தலுக்காக தயாரிக்கப்படும் அறிக்கையாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.இவரது Ma Foi Foundation வாயிலாக பலகாலமாக சமூக சேவைகள் செய்து வந்துள்ளார். அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு, பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் திறமைசாலியான இவருக்கு இந்த முறை வாய்ப்பு அளித்து பாக்கலாமே !
திருமங்கலம், அருப்புகோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் திருப்பருங்குன்றம் வாக்காளர்களின் கவனத்திற்கு.
இவரது கட்சியின் வலைத்தளத்தில் இவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காது. Ma Foi வலைத்தளத்தில் பவுண்டேஷன் குறித்த விவரங்கள் கிடைக்கும் அல்லது இவரது வலைத்தளமான http://kpandiarajan.com/home.html மேய்ந்து பார்க்கலாம்.
இவரது பலகலர் சட்டை பிடித்து இருந்தாலும் இவருக்கு வாக்கு அளிக்கலாம். இல்லையேல் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
நன்றி அதிஷா மற்றும் ப்ருனோ.