Friday, April 24, 2009

விருதுநகரில் Ma Foi கே.பாண்டியராஜன்

விஜயகாந்த் கட்சியின் சார்பாக நிற்கும் கே. பாண்டியராஜன் அவர்களை குறித்து உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். Ma Foi என்ற நிறுவத்தின் தலைவர். முதல்முறையாக ஒரு வேட்பாளர் தனது தொகுதியின் தேவையை கருத்தில் கொண்டு தொழில்முனைவோர் / மருத்துவர்கள் / பொறியாளர்கள் / பினான்சியல் அட்வைசர்கள் உதவியுடன் தொகுதிக்கான "election manifesto" தயார் செய்துள்ளார். இது வழக்கம் போல தேர்தலுக்காக தயாரிக்கப்படும் அறிக்கையாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.

இவரது Ma Foi Foundation வாயிலாக பலகாலமாக சமூக சேவைகள் செய்து வந்துள்ளார். அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு, பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் திறமைசாலியான இவருக்கு இந்த முறை வாய்ப்பு அளித்து பாக்கலாமே !


திருமங்கலம், அருப்புகோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் திருப்பருங்குன்றம் வாக்காளர்களின் கவனத்திற்கு.

இவரது கட்சியின் வலைத்தளத்தில் இவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காது. Ma Foi வலைத்தளத்தில் பவுண்டேஷன் குறித்த விவரங்கள் கிடைக்கும் அல்லது இவரது வலைத்தளமான http://kpandiarajan.com/home.html மேய்ந்து பார்க்கலாம்.

இவரது பலகலர் சட்டை பிடித்து இருந்தாலும் இவருக்கு வாக்கு அளிக்கலாம். இல்லையேல் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நன்றி அதிஷா மற்றும் ப்ருனோ.

18 comments:

C said...

எவ்வளவு vote கிடைக்கும்னு எண்ணி பார்த்து தான் நிற்கிறாரா?
யார் பணமோ?
Deposit திரும்பி வரதே கஷ்டம்.

மணிகண்டன் said...

C,

Cynical ஆக இருக்க உங்களுக்கு காரணம் இருக்கலாம். ஆனால் நிச்சயமான திறமைசாலி எனபது என் கருத்து.

யாத்ரீகன் said...

Sharathbabu-vuku kudutha velichathai ivaruku kudukadhadhu yaen ? indha Kaelvi Mainstream Media-vuku thaan yendru ninaithaen.. aanal Blog-galilumaa...

மணிகண்டன் said...

யாத்ரீகன்,
முக்கியத்துவம் கொடுப்பது தகவல் தெரிந்து இருப்பதை பொறுத்ததே. தகவல் தெரியவரும் பட்சத்தில் ப்ளாக்கில் நிச்சமாக மக்கள் எழுதுவார்கள். ஆனால் தேடி கண்டுபிடித்து ஊடகத்துறையினர் எழுத வேண்டும் என்பதே என் கருத்து. கூகுளில் தேடினால் ஹிந்து பத்திரிகை செய்தி கிடைக்கிறது. ஒருவேளை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்களோ என்னவோ. அதை தவிர இவரது தொகுதியில் வைகோ நிற்கிறார். அது கூட ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்.

ராசா said...

//இவருக்கு இந்த முறை வாய்ப்பு அளித்து பாக்கலாமே !//
இந்த கேள்விகேக்கான பதிலை மக்கள் எப்பவோ வாங்கிட்டாங்க. இதை தவிர்த்து நீங்க சொன்ன விடயம் உண்மையானால் (// இவரது Ma Foi Foundation வாயிலாக பலகாலமாக சமூக சேவைகள் செய்து வந்துள்ளார். அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர்// மக்களுக்கு கண்டிப்பாக தெரியம். அவர்கள் ஒட்டு யாருக்குனு.....

சுட்டி குரங்கு said...

ALL the best to him !

C said...

வேட்பாளரின் திறமை தேர்தல் முடிவில் தெரியும் மணி.

வித்யா said...

All the best to him:)

லக்கிலுக் said...

இவர் ஐம்பதாயிரம் வாக்குகளாவது பெறுவார் என்று நம்புகிறேன்.

டக்ளஸ்....... said...

ஹி..ஹி..இவரு எப்டிங்க ஜெயிப்பாரு..?
அவர எதுத்துதான் அகில இந்திய லெட்டர்பேடு..சாரி. நாடாளும் மக்கள் கட்சியின் தல‌
ந.நா. கார்த்திக் போட்டியிடுறதா "ஷொல்லி"யிருக்காங்களே..!

Sammy said...

மருத்துவர்கள், பொறியாளர்கள், பினான்சியல் அட்வைசர்கள்...ஓகே .
விவசாயம் sector பத்தி என்ன சொல்றார் ?
வெற்றி பெற வாய்ப்பு இல்லாட்டி .. atleast they are doing their 'spoilers' work properly.

புருனோ Bruno said...

//Sharathbabu-vuku kudutha velichathai ivaruku kudukadhadhu yaen ? indha Kaelvi Mainstream Media-vuku thaan yendru ninaithaen.. aanal Blog-galilumaa...//

இந்த கேள்வியை வலையுலகில் நான் எழுப்பினேன்.

இது வரை பதில் இல்லை :) :) :)

--

இவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன்

--

இது தவிர தேதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ள மற்றொரு தொகுதி கன்னியாகுமரி

மணிகண்டன் said...

C - நீங்கள் சொல்லுவது சரி. திறமை இருந்தால் ஜெயிப்பார்.

ராசா / சுட்டிகுரங்கு / வித்யா/லக்கி - நன்றி

டக்லஸ் - ஆமாம் இல்ல ! மறந்துட்டேன்.

சாம் :- விவசாயம் குறித்து அவரோட லிங்க்ல இருக்கு. படிச்சி பாருங்க. புரிஞ்சா சொல்லுங்க. சில சமயம் over-analysis பண்ணி நல்ல கேண்டிடேட்டுக்கு வாக்கு செலுத்தாம போயிடறோம்.

ப்ருனோ :- நீங்க கூட ஒரு பேமஸ் வலைப்பதிவர். சோ, நீங்களும் வலையுலகில் ஒரு மெம்பர் தான் ! இட்லிவடை தான் பதிவு போடனும்ன்னு எதிர்ப்பார்க்கறது தப்புன்னு தோனுது ! கேள்விக்கு பதிலா, நீங்களே கூட இதுக்கு பதில் சொல்லி பாக்கலாம்! வலையுலக விட விசயகாந்த் கட்சி வெப்சைட்ல கூட இவரை பத்தி ஒரு செய்தியும் இல்ல.

விஷ்ணு. said...

// பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் திறமைசாலியான இவருக்கு இந்த முறை வாய்ப்பு அளித்து பாக்கலாமே //

கண்டிப்பாக நல்ல விசயம் தான்.

தே.மு.தி.கவுக்கு வாக்கு வங்கி விருநகர் நாடளுமன்ற தொகுதியில் ஒரளவு உள்ளது என்றாலும் ஜெயிக்கும் அளவுக்கு இல்லை என்பது என் கருத்து. நல்ல மனிதர்களை பார்த்து ஓட்டு போடும் பக்குவம் தற்போது உள்ள மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. வெறும் ஆடம்பரம் மற்றும் அனுதாபத்திற்காக மட்டுமே பெரும் வாரியான வாக்குகள் இடபடுகின்றன.
இதையெல்லாம் தவிர்த்து கே.பாண்டியராஜன் ஜெயித்தால்(?) நல்ல விசயம் தான்.

அதே மாதிரி நம்ம டக்ளஸ் தல சொன்ன மாதிரி நாட்டு மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் நாடாளும் மக்கள் நாயகன் வேற நம்ம தொகுதி மேல ஒரு கண் இருக்கு அப்புரம் எப்படி பாஸ் கே.பாண்டியராஜன் ஜெயிக்க முடியும்.

டக்ளஸ் : வேணுமுன்னா பாருங்க நாடளும் மக்கள் நாயகம் டெபாசிட்டு வாங்கி ஒங்க மூஞ்சில கரிய புசல. ஒருவேளை டெபாசிட்டு வாங்கலனா அது எதிர்கட்சிகளேல்லாம் சேர்ந்து செய்த சதி.

விஷ்ணு. said...

// மணிகண்டன் said...

C - நீங்கள் சொல்லுவது சரி. திறமை இருந்தால் ஜெயிப்பார் //

எந்த திறமையை சொல்லுறீங்க.

- அடியாள் வைத்து மிரட்ட தெரியுமா?

- கள்ள ஓட்டு போட ஆட்கள் வைத்துள்ளாரா?

மணிகண்டன் said...

விஷ்ணு,

நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும், ஒரு செயலை நிறைவேற்ற கூடிய திறமை என்பதும் முக்கியமே. நல்லவர்கள் தோற்கும் போதெல்லாம் வாக்கு செலுத்துபவர்களை குற்றம் சொல்லுவதே நமது வழக்கமாக இருக்கிறது. அது சரியான அப்ரோச் என்று எனக்கு தோன்றவில்லை.

விஷ்ணு. said...

நல்லவர்கள் தோற்பதற்க்கு யார் காரணமாக இருக்க முடியும்.
நல்லவன் என்று தெரிந்த பின்பும் தோற்றால்?

Kanna said...

// இவரது Ma Foi Foundation வாயிலாக பலகாலமாக சமூக சேவைகள் செய்து வந்துள்ளார். அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். சமூகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு, பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் திறமைசாலியான இவருக்கு இந்த முறை வாய்ப்பு அளித்து பாக்கலாமே !//

நானும் இவரது Ma Foi Foundation பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அதை தவிர வேறு தகவல்கள் கிடைக்க வில்லை..

பலருக்கு சிறிய அளவிலேனும் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் வரவேற்க படவேண்டியவர்களே....


நானும் அவரை பற்றி தகவல்களை தேடி கொண்டிருக்கிறேன்.. கிடைத்தவுடன் பதிவு போடுகிறேன்..

//ப்ருனோ :- நீங்க கூட ஒரு பேமஸ் வலைப்பதிவர். சோ, நீங்களும் வலையுலகில் ஒரு மெம்பர் தான் ! இட்லிவடை தான் பதிவு போடனும்ன்னு எதிர்ப்பார்க்கறது தப்புன்னு தோனுது ! கேள்விக்கு பதிலா, நீங்களே கூட இதுக்கு பதில் சொல்லி பாக்கலாம்! வலையுலக விட விசயகாந்த் கட்சி வெப்சைட்ல கூட இவரை பத்தி ஒரு செய்தியும் இல்ல. //

ரசித்தேன்..