Thursday, January 8, 2009

புத்தகங்களை தேடி

போன வாரம் நான் இந்தியா (திருச்சி) வந்தபோது எப்படியும் ஒரு சில புத்தகங்கள வாங்கிடனும்னு NSB ரோடு போனேன். அங்க ஒரு நாலைஞ்சு புத்தக கடை இருக்கு. ஆனா எல்லா கடைலயும் தமிழ் புத்தகம்னா பாரதியார் கவிதைகள், வைரமுத்துவோட கள்ளி காட்டு இதிகாசம், கலைஞரோட ஒரு சில புத்தகங்கள், தி ஜானகிராமனோட "மோகமுள்", "அம்மா வந்தாள்", சாண்டில்யனோட நாவல்கள் ! அவ்வளவு தான் !

தமிழ்நாட்டுல உள்ள பதிப்பகங்கள் கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலையா இல்லாட்டி நம்ப மக்கள் வேற எந்த புக்கும் வாங்கமாட்டாங்களா ! ஒருவித ஏமாற்றத்தோடு சாண்டில்யனோட "கடல்புறா" மற்றும் ஆர்தர் ஹைலியோட ஒரு நாவலையும் வாங்கினேன். இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் இருந்தா பழைய புத்தககடையில எல்லாத்தையும் பொறுக்கி இருக்கலாம். ஊருக்கு வந்ததே மூணு நாளுக்கு ! அதுலயும் புக் வாங்க ஒரு நாள் முழுக்க அலைய வேண்டாம்ன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

நாலாம் தேதி சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக் இன்னில் மூணு மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு வந்து உக்காந்தா எதிர்ல ஒரு புத்தககடை. அங்க நான் தேடின புத்தகத்துல ஒருசிலது கிடைச்சது.

1) ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள்
2) சுஜாதாவின் கடைசி பக்கங்கள் (கணையாழி)
3) வாமு கோமுவின் கள்ளி
4) ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி

இப்போதைக்கு "கடைசி பக்கங்கள் ' படிச்சி முடிச்சுட்டேன். பயங்கர சுவாரசியமான எழுத்து. டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் வாலிய பத்தி சுஜாதாவோட அபிப்ராயத்தோட ஆரம்பிக்குது இந்த புக். 1965ல சுஜாதாவுக்கு தமிழ் சினிமா மேல இருந்த பற்று 2007ல சிவாஜிக்கு வசனம் எழுதறபோது மாறிபோனது ஒருவித பரிணாம வளர்ச்சியே ! (உள்ளிருந்து மாற்றம் கொண்டுவர முயலும் அனைவரிடமும் காணப்படும் முரண்பாடு என்று கூட சொல்லலாம்.)

7 comments:

Sammy said...

arthur hailey...long long time back read his books..if you have read it..was it good ?..and what novel ?

மணிகண்டன் said...

sam,

சரியான அறுவை அந்த நாவல். "on high places" அப்படின்னு நினைக்கறேன்.

பரத் said...

மணிகண்டன்,
சிங்காரத்தோப்பில் நியூ செஞ்சுரி புக்ஹௌவுஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கு ஓரளவிற்கு நல்ல புத்தகங்கள் கிடைக்கும். நான் வழக்கமாக அங்குதான் வாங்குவேன்

மணிகண்டன் said...

நன்றி பரத். எனக்கு இந்த புக் ஷாப் தெரியும். ஆனா இந்தமுறை போக நேரம் இல்ல. பொதுவா, ரஷ்யன் புக்ஸ் எல்லாம் தமிழ்ல கிடைக்கும் இந்த கடைல.

Anonymous said...

எனக்கும் இதே அனுபவம்தான், அகஸ்தியர், ஹிக்கின் பாதம்ஸ் ரெண்டுலயும். சில எழுத்தாளர்கள் பெயர் சொல்லி, கேட்டபோது இங்க கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க சொல்லற பழைய புத்தகக்கடை எங்க இருக்கு? மலைக்கோட்டை பக்கத்திலயா?

மணிகண்டன் said...

அனானி,
மலைகோட்டைக்கு எதிர்த்தாமாதிரி நடந்து போனா நிறைய கடை வரும். அங்க போய் என்ஜாய் பண்ணுங்க

ராஜ நடராஜன் said...

நீங்க புத்தகப் பித்தரா:)நான் கண்ணுல மாட்டுற எல்லா எழுத்தையும் மேய்பவன்.