பிஷப் B மைதானத்தில் நடந்த 3rd டிவிஷன் கிரிக்கெட் மேட்ச். பயங்கர tense மேட்ச். ஒரு டீம் லீக் வின்னர்சுக்கும் இன்னொரு டீம் relegation அவாய்ட் பண்றதுக்கும் விளையாடறாங்க. தெரியாத்தனமா அம்பயரிங்க்கு போய் மாட்டிக்கிட்டேன். இவரு கூட வருவாருன்னு தெரிஞ்சி இருந்தா வீட்டுலயே நிம்மதியா இருந்து இருப்பேன்.தப்பு தப்பா டெசிஷன் கொடுக்கறது மட்டும் பத்தாதுன்னு ஏதாவது ஒரு டீம டார்கெட் பண்றா மாதிரி வேற வேல பண்ணுவாரு. மேட்ச் ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் கூட ஆகி இருக்காது. அவரும் ரொம்ப மோசமா எல்லாம் அம்பயரிங் பண்ணல.
நிச்சயமா அவுட் இல்ல. Padல பட்டு போவுது பந்து.
8 ஸ்டம்ப் வச்சி இருந்தா கூட பட்டு இருக்காது. இதுக்கு போய் LBW.
அவன் போட ஆரம்பிச்சதுலேந்து எல்லாமே நோ பால். அவரு சும்மா நின்னுக்கிட்டு இருக்காரு.
கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் ஆரம்பிச்சது பேட்டிங் டீம்கிட்டேந்து. மேட்ச் கண்டிப்பா ஜெயிச்சு ஆகணும். இல்லாட்டி அடுத்த வருஷம் 4th டிவிஷன்.
பந்த மிட்விக்கெட்டுக்கு அடிச்சுட்டு ரெண்டு ரன் ஓடினாங்க. ஒரு பேட்ஸ்மேன் கிரீஸ் கிட்ட வராமயே ரெண்டாவது ரன் ஓடினான். நான் "ஒன் ஷார்ட்" டிக்ளேர் பண்ணினேன். ஒரே களேபரம் ! "அவரு நோபால் கூட பாக்க மாட்டேன்கறார்" நீங்க என்னடானா ? கேப்டன் கூப்பிட்டு பேசி மறுபடியும் மேட்ச் ஸ்டார்ட் பண்ணினோம்.
பீல்டிங் டீம் மக்களோட தோள் மேல கைய போட்டுக்கிட்டு இவரு ஜாலியா பேச ஆரம்பிச்சாரு.
நீங்க கவலைபடாதீங்க மணி. இவனுங்க எப்போதும் இப்படி தான்.
திடீர்னு "நோபால்" அப்படின்னு சௌன்ட். யாருடானு பாத்தா ரன்னர் எண்ட்ல இருக்கற பேட்ஸ்மண் அம்பயரிங் பாக்கறாரு" . கூப்பிட்டு வார்ன் பண்ணி அனுப்பினோம்.
ஒருவழியா இந்த டீம் பேட்டிங் முடிஞ்சது. நல்லா பரோட்டா தின்னுட்டு தூக்க கலக்கத்துல வெயில்ல போய் நிக்கறோம்.
பிரமாதமா நியூ பால்ல பௌலிங் போட்டாங்க.
காலைல padல பட்டதுக்கே அவுட் கொடுத்தீங்க. இப்ப என்னடானா க்ளீன் நிக். இந்த சத்தம் கூடவா கேக்கல.
இத விட பழமா கால்ல வாங்க முடியாது. இது தான் LBW definition.
கொஞ்சம் கொஞ்சமா பேட்டிங் டீம் ரன் எடுக்க ஆரம்பிச்சானுங்க. வெயில் வேற கொளுத்திச்சு.
எல்லாத்துக்கும் அப்பீல். ஒரு ஓவர் போட பத்து நிமிஷம். எத எடுத்தாலும் ஆர்குயுமென்ட். கீப்பர் பேட்ஸ்மேன் கிட்ட தகராறு.
இதுக்கு நீங்க ஒன் ஷார்ட் கொடுத்து தான் ஆகணும். அவன் கிரீஸ் கிட்ட வரவே இல்ல. பவுண்டரி சிக்னல் பண்ணின போது ஒரு புண்ணியவான் வந்து என்கிட்ட மிரட்டினான்.
ஸ்கோரர் எந்த சிக்னலுக்கும் acknowledge பண்ணல. ஒவ்வொரு முறையும் அதுக்கு டிலே !
மணி அஞ்சரை. மேட்ச் முடிஞ்சபாடு இல்ல. எல்லாத்துக்கும் தகராறு. டிலே. ஒரு ஓவருக்கும் அடுத்ததுக்கும் நடுவுல எல்லா ப்ளேயரும் சேர்ந்து மாநாடு. அது முடிஞ்சவுடன "ஒன் ஷார்ட்" கேட்ட தலைவர் வந்து Bad Light கிளைம் பண்றாரு. எனக்கு பந்து சுத்தமா தெரியலயே ! நான் எப்படி போடறது !
இதே மாதிரி நின்னுக்கிட்டு இருந்தா மேட்ச் அவார்ட் பண்ணிடுவோம். பவுல் பண்ண ஆரம்பிங்க.
முடிஞ்சா பண்ணுங்க சார். நாங்க வெளில போனாதான அவார்ட் பண்ணுவீங்க.நாங்க இங்கயே தான் இருக்கோம்.
பவுலும் பண்ணாம, மேட்சும் விளையாடாம அஹிம்சா வழி போராட்டம்.
ஸ்டம்ப் புடுங்கி போட்டுட்டு A க்ரவுண்டுக்கு வேகமா ஓடி போனேன். (காலேஜ் நண்பர்கள் கிட்ட) இங்க ஒரே பிரச்சனை. ஸ்கோர் ஷீட் பிச்சி போட்டாங்க.
டீம் மேல கம்ப்ளைன்ட்.வருஷம் முடிஞ்சவுடன என்கொயரி. நெகடிவ் பாயின்ட்ஸ்.
எனக்கு பெங்களூர்ல வேல கிடைச்சது.
ரெண்டு வருஷம் கழிச்சி அசோசியேஷன்னுக்கு போனேன்.
"மணிகண்டன், நாளைக்கு அம்பயரிங் பாக்கறீங்களா ?போதும் சார். அன்னிக்கு பட்ட அவதியே" .
"பயப்படாதீங்க மணிகண்டன். மூணு மாசம் முன்னாடி ஒரு பிரச்சனைல யாரையோ வெட்டிட்டு முருகன் ஜெயிலுக்கு போய்ட்டான். இப்ப வேலூர்ல தான் இருக்கான்".
அந்த முருகன் தான் பவுண்டரிக்கு போன பந்துக்கு "ஒன் ஷார்ட்" கேட்டு தகராறு பண்ணின புண்ணியவான்.
7 comments:
அம்பெயரோட கஷ்ட நச்டங்கள தெரிவிக்கிற, பிரமாதமா சொல்லப்பட்டிருக்கிற கதை....
அங்கொன்னும் இன்கோன்னுமான சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால், ரொம்ப நல்லா இருக்கு....
// தெரியாத்தனமா அம்பயரிங்க்கு போய் மாட்டிக்கிட்டேன். //
// அவரும் ரொம்ப மோசமா எல்லாம் அம்பயரிங் பண்ணல. // - இதை "நானும் ரொம்ப மோசமா எல்லாம் அம்பயரிங் பண்ணல" என்று மாத்தியிருக்கலாம்....
// அவன் போட ஆரம்பிச்சதுலேந்து எல்லாமே நோ பால். அவரு சும்மா நின்னுக்கிட்டு இருக்காரு.//
=>
இதை
"பேட்ஸ் மேன் சும்மா நின்னுக்கிட்டு இருக்காரு" என்று மாத்தி இருக்கலாம்...
சில இடங்கள்ல இந்த மாதிரி சில விஷயங்கள் குழப்புவது போல் உள்ளது...
இன்னும் ஈசியா எழுத வரல. அது "எழுத எழுத" தான் பழகும்ன்னு நினைக்கறேன். ஒருவேளை இங்கிலிஷ்ல எழுதினா இன்னும் கொஞ்சம் எளிதா புரிய வைக்க முடியும். பார்க்கலாம்.
want to write something not related to your post,
dont you think last week was a very bad week for international umpires.....yuvraj dismissal in 2nd ODI was wrong and to top that he was charged for dissent, one sports writer has went on to say that, louder and longer you shout for LBW more you stand to win the appeal...and as usual sachin dismissal has always looked unconvincing for indian's.
and the controversy in broom dismissal...focus has went to haddin and vettori comments, though it was primarily an umpiring error..
-Sam
and forgot to mention brendon muccullum dismissal...inside edge again given LBW.
and dhoni finally showing some little spirirt in walking when not given out...
-Sam
sam, Being in central europe is a bit of an advantage ! I don't need to see all these matches .
And also, i don't really think that umpire can find out if keeper collects the ball just before stumps. offcourse, square leg umpire can see it but as per the laws, he should help only if umpire at the bowlers end asks for it ! A little bit of common sense is needed and even third umpire should be able to participate in decision making if it is clearly a wrong decision (in his mind) ! Who knows ? They could already be doing that.
But to me, tasteless comments came from ponting and not from vettori and to an extent, i can even understand Haddin !
""""offcourse, square leg umpire can see it but as per the laws, he should help only if umpire..... """"'
you would have known the law better than anyone.but i read a report that as per law square square leg umpire has to declare it as no-ball.
thanks
-sam
sam, i think the report is correct. if the square leg umpire calls a no-ball, then the batsman can't be bowled !
I was wrong
Post a Comment