மீனாட்சி மெடிக்கல்ஸ்.
****************************************
ஸ்கூல்ல படிக்கற போது டிராயிங் கிளாஸ் வாரத்துக்கு ஒரு பீரியட் உண்டு. அத எப்பவும் 4th இல்லாட்டி 7th பீரியடுக்கு மாத்திட்டு வீட்டுக்கு ஓடறதுலயே குறியா இருப்போம். Geomentryல ஸ்கேல் வச்சி நேர்கோடு போடவே எனக்கு வராது. சரி, டிராயிங் கிளாஸ்ல எதாவது வளைச்சி வளைச்சி வரையலாம்னா அப்ப தான் நேரா பென்சில் போகும். இந்த மாதிரி கிளாஸ் வச்சி கொடுமைபடுத்தராங்களேன்னு நிறைய வருத்தப்பட்டு இருக்கேன் ( ஒரு விதமான ப்ராக்டிகல் யூசும் இல்லையேன்னு ). ஐரோப்பால வந்து நாலு வருஷம் ஆவுது. எங்காயாவது டாய்லெட் தேடும் போது படத்த பாத்துதான் ஆம்பளை / பொம்பளை வித்தியாசம் கண்டுபுடிக்க வேண்டியிருக்கு. சில எடத்துல இவங்க வரைஞ்சி வச்சி இருக்கற படத்த பாத்து குழம்பும்போது வரைஞ்சவன் என்னையே மாதிரியே டிராயிங் கிளாஸ் 4th இல்லாட்டி 7th பீரியடுக்கு மாத்தி இருப்பானோன்னு தோணும் !
6 comments:
பின்னூட்ட அதிஷாத்தனம்
கிச்சடி சூப்பர்...
முதல் பின்னூட்டம் அதை விட சூப்பர்... :-))))
நன்றி ச்சின்னப்பையன்.
ஆகா..மணி..கிச்சிடி சூப்பர்..
ரொம்ப நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
அன்பின் மணி
உண்மையிலேயே கிச்சடி சூப்பர்
நல்வாழ்த்துகள் மணி
Post a Comment