அழகழகான வடிவங்கள். நேர்கோடாக, சுழிசுழியாக, வளைவாக
மெலிதான குளிர். குறுக்கும் நெடுக்குமாக, குனிந்தும் எம்பியும் வடிவத்தை சமன் செய்யும் பெண்கள்.
விதவிதமான வண்ணங்கள், கலர்பொடிகளின் எல்லைக்கு உட்பட்டு.
எண்ணங்களின் பிரதிபலிப்பாக, அழகியலின் அளவுகோளாக, கற்பனையின் எல்லையாக.
நைட்டியின் மேல் துண்டோடு, வெளிர்நீல சுடிதாரோடு
சாணத்திற்கு நடுவில் செம்பருத்தியும், சூரியகாந்தியும்.
தலையை துவட்டியபடியே, புத்தம் புதிதாக, வாசனையாக அருகில் வந்தமரும் எனது மனைவி.
என்னடா செல்லம் யோசிச்சிக்கிட்டு இருக்க ? விழித்தெழுப்பிய அவளது குரல்.
இல்லடி. மழை சோன்னு கொட்டினா எப்படி இருக்கும் !
Thursday, February 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
:)-
அதெதுக்கு "செருப்படி" னு போட்டு இருக்கீங்க? எனக்கு புரியலையே :(
கல்யாணம் பண்ணிட்டு இந்த மாதிரி மனைவி கிட்ட சொல்லுங்க. அப்ப புரியும்.
சில வரிகளிலேயே மார்கழி மாத காலை நேரம்,கோலம் அனைத்தும் கதைக்குள் கொண்டு வந்துள்ளீர்கள்.
உங்களுக்கு நல்ல காலம் இல்லீன்னு அர்த்தம்... இப்படி கேட்டீங்கன்னா.....
குறுங்கதை வெகு அழகு..
உங்கள் வருகைக்கு நன்றி ஆதவா !
மனைவியிடம் சொல்ல முடியாயததை இங்கே கதை போல போட்டு ஆறுதல் அடைந்த மணிகண்டனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
அதிஷா,
உங்க கவிதை மாதிரி போல இந்த கதை...ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு புரிஞ்சிக்கறாங்க.
/ மணிகண்டன் said...
அதிஷா,
உங்க கவிதை மாதிரி போல இந்த கதை...ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு புரிஞ்சிக்கறாங்//
ஆமாங்க.. எனக்கு கூட வேற ஒன்னு தோணுச்சு.. நல்லாதான் இருக்கு
:-)))))))
நன்றி ராதாகிருஷ்ணன் சார் !
கார்க்கி - முதல் விசிட்டுக்கு நன்றி. அப்படி உங்களுக்கு என்னதான் தோணிச்சுன்னு சொல்லிடுங்களேன்.
Post a Comment