எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.
**************************************************
ப்ளாக் வந்ததுல யாருக்கு லாபமோ இல்லையோ சினிமாத்துறைக்கு நேரடி லாபம் இருக்கு. யப்பா ! சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆனா சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் ! பூஜாவுக்காக போனேன்னு !
**************************************************
தமிழ் ப்ளாக் உலகத்துக்கு சம்பந்தமே இல்லாத என்னோட நண்பர் ஒருத்தர் "நான் கடவுள்" படம் பாத்துட்டு சொன்ன கமெண்ட் "இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா " ! ப்ளாக் படிச்சா, ஜேமோவோட உள்குத்து வெளிபட்டுட்டுச்சு, திரை பிஞ்சிடுச்சுன்னு எழுதறாங்க. In crude terms, இது தான் திரைக்கதை ஆசிரியரின் நடுநிலைக்கு கிடைச்ச நற்சான்றிதழா ?
**************************************************
சாகும் வரை உண்ணாவிரதத்தோட நோக்கம் சாகறது கிடையாது ! மக்களோட கவனத்த திருப்பறது, பிரச்சினையின் ஆழத்த புரிஞ்சிக்க வைக்கறது, அது மூலமா அதற்கு ஒரு தீர்வு காண்பது. சாகும் வரை உண்ணாவிரததுக்கே இந்த ரெஸ்பான்ஸ் தான், இதுல அடையாள உண்ணாவிரதம்ன்னு announce பண்ணி இருந்தா ராஜ் டிவில கூட வந்து இருக்காது. ஆனா, மறுபடியும் வேறு எந்த பிரச்சனைக்கும் இதே யுக்திய கையாளமுடியாது.
**************************************************
Fitna படம் பாத்தேன். Geert Wilders (Dutch parliamentarian) எடுத்த படம். இஸ்லாம் தீவிரவாதம் சம்பந்தமா எடுக்கப்பட்ட படம். WTC இன்சிடென்ட்ல ஆரம்பிச்சி பலப்பல வீடியோக்கல தொகுத்து ( குரானில் வரும் சுராவுடன் இணைத்து ) முதல் பத்து நிமிஷம் ஓட்டறாங்க. அத தவிர ஒரு மூணு வயசு முஸ்லீம் குழந்தைக்கிட்ட jews பத்தி கருத்து கேக்கறாங்க. கடைசில டைரக்டர் ஒருசில அதிர்ச்சி தரும் தகவல் சொல்றாரு. அதுல ஒண்ணு "In nederlands, Government has started declaring public holidays for islamic festivals". யப்பா! மத தீவிரவாதம் பத்தி பேச இவருக்கு என்ன அருகதையோ !
**************************************************
இந்திய இலங்கை கிரிக்கெட் மேட்சுக்கு குமார தர்மசேனா அம்பயரிங் பண்ணினாரு. ஒரு பதினைந்து வருசத்துக்கு முன்னால இந்திய கிரிக்கெட் வாரியம் ரிடையரான வீரர்கள அம்பயரிங் பண்ணறதுக்கு ஒரு scheme கொண்டு வந்தாங்க. அவங்களுக்கு preference கொடுத்தாங்க. ரொம்ப வருஷமா நேஷனல்(ரஞ்சி) லெவல் அம்பயரிங் பாத்துக்கிட்டு இருந்தவங்க எல்லாம் ஒதுக்கப்பட்டாங்க. அதுனால அவங்க எரிச்சலாயி ரிடையர் ஆனாங்க.கடைசில அந்த scheme ஊத்திக்கிச்சு,இருந்த நல்ல அம்பயர்சும் போயாச்சு.இப்போ இன்டர்நேஷனல் அம்பயர் இந்தியாவுலேந்து வராததுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
Tuesday, February 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
ரொம்ப முக்கியம் இப்ப கிச்சடி நாட்டுக்கு ?
//"இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா " ! ப்ளாக் படிச்சா, ஜேமோவோட உள்குத்து வெளிபட்டுட்டுச்சு, திரை பிஞ்சிடுச்சுன்னு எழுதறாங்க. In crude terms, இது தான் திரைக்கதை ஆசிரியரின் நடுநிலைக்கு கிடைச்ச நற்சான்றிதழா ?//
இது எனக்குப் புரியலை. கொஞ்சம் விளக்குங்க
//எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.//
:):):)
அவரு சொல்ல வந்த / சொல்ல வராத கருத்துக்கு ரெண்டு பக்கமும் திட்டறாங்க ! அதுனால அவரு சொன்னது நடுநிலையோன்னு கேக்க வந்தேன் ! புதுசா எழுத ஆரம்பிச்சி இருக்கேன் இல்ல. அது தான் பிரச்சனை......கொஞ்ச நாள் ஆகும், புரியறா மாதிரி எழுதறதுக்கு ! அது வரைக்கும் பாவம் நீங்க.
வருகைக்கு நன்றி.
வாங்க பரணி
\\
ரொம்ப முக்கியம் இப்ப கிச்சடி நாட்டுக்கு ?
\\
வழிமொழிகின்றேன்..
இப்போதைக்கு நாட்டுக்கு உப்புமா,பூரிக்கிழங்குதான் தேவை
எனக்கு கிச்சடி புடிக்காது
கிச்சடி உட்டலக்கடியா இருந்துச்சு. பாஸ் அடிக்கடி எழுதுங்க
உங்க வருகைக்கு நன்றி அதிஷா.
//எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.//
:-)))))))))
thanks radhakrishnan sir and also for all the people who voted in tamilish !
அம்பயரிங் மேல ரொம்பவே அக்கரைங்க உங்களுக்கு ....
good information.
kichadi super :)
Enaku upmavai vida Kichadi thaan pidikum :)
//ப்ளாக் வந்ததுல யாருக்கு லாபமோ இல்லையோ சினிமாத்துறைக்கு நேரடி லாபம் இருக்கு. யப்பா ! சினிமா விமர்சனம் எழுதறதுக்காகவே நூத்துக்கணக்கான மக்கள் தியேட்டர்ல போய் சினிமா பாக்கறாங்க. ஆனா சொல்றது என்னவோ பாலாவுக்காக போனேன் ! பூஜாவுக்காக போனேன்னு !//
ithai naan ithanai naala yosikave illaiye :)
**** Enaku upmavai vida Kichadi thaan pidikum ****
பெங்களூர் தாக்கம்.
ரொம்ப நல்லா இருக்கு இந்த blog. Enjoyed reading it !!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
*****
அம்பயரிங் மேல ரொம்பவே அக்கரைங்க உங்களுக்கு
*****
சொல்லிக்க வேண்டியது தான் !
Thanks for coming shree.
// டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல. //
சரியா சொன்னீங்க.... எனக்கு டாப் 10, நம்பர் 1 இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல...!
// இதே மாதிரி வேற மத நம்பிக்கைகல காட்டி இருந்தா விட்டு இருப்பாங்களா? //
யோசிக்க வேண்டிய கேள்வி... ஆனால் இந்து மதத்தில் இருப்பது போல் மற்ற மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருப்பது உண்மைதான். அனால் அது பற்றி மக்களுக்கு சரியாக தெரிவதில்லை... மக்களுக்கு அதிகம் தெரிந்த மூட நம்பிக்கை பற்றி எழுதினாலோ/படம் எடுத்தாலோ தான் நாளா ரீச் ஆகும்... என்பது என் தாழ்மையான கருத்து....!
நல்ல ருசி.. நிறைய கிண்டவும்.
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.
உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்
தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்
Nice :) :)
தேங்க்ஸ் நவநீதன், வண்ணத்துபூச்சியார், ராஜி
Mani Sir,
You writing about umpiring is a truth. I have seen even this in district level umpiring exams.
People who are closed to the District association used to clear the exams than people who really qualified. If it's happens just in district level then why not in international level where you will handfull of $$$$
-Vinod
வினோத்,
அவனா நீ ? உனக்கு எல்லாம் தெருல அம்பயரிங் பண்ண கூட தகுதி கிடையாது !
எந்த எழுத்தாளரோட பரிந்துரையுரைய படிச்சாலும் ஏதாவது ஒரு சிறுகதையை குறிப்பிட்டு இது உலகத்துல உள்ள டாப் 20 சிறுகதைல ஒண்ணுன்னு சொல்றாங்க. டாப் 20 சிறுகதைகள் ஆயிரக்கணக்குல இருக்கும் போல.//
idhu super mani.
Post a Comment