கடந்த மாதத்தில் இருமுறை ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கையில் நடக்கும் கொடும் செயல்களை வெளிக்கொண்டுவர நெதர்லாந்து பாராளுமன்றதிற்கு முன்னே அமைதியான முறையிலே போராட்டங்கள் நடைபெற்றன. நிச்சயமான ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தின் வன்கொலைகளை முன்னிறுத்தியும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் placards காண்பிக்கபட்டன.
இந்த செய்தியை இங்குள்ள ஒன்றிரண்டு ஊடகங்களே ஒளிபரப்பின. அவற்றிலும் சில கேள்விகள் தீவிரவாதம் சம்பந்தமாக இருந்தன. ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருந்த போதும், முன்னூறு மக்கள் வந்ததாகவே செய்தி ஒளிபரப்பபட்டது.
http://www.youtube.com/watch?v=N6DNtrUXmLQ
http://www.nujij.nl/nederlandse-tamils-protesteren-in-den-haag.4687999.lynkx
அடுத்தமுறை நிச்சயமாக mainstream ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்றே நம்புகிறேன். இங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டாயிரம். (official). இதில் பத்து சதவீதம் மக்களாவது கலந்து கொண்டால் இது நடக்கும். கேரளத்தில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கை தமிழ் அகதிகளாக வந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் கூட ஒரு பெரிய அளவில் கூட்டம் கூடமுடியும். அதே சமயம் வெளிநாடுகளில் நடக்கும் போராட்டங்களில் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்வது வருந்தத்தக்கதே. புலம் பெயர்ந்த மக்கள் தங்களை ஒரு சிறு வட்டத்துக்குள் அடைத்து கொண்டதாகவே தோன்றுகிறது.
2 comments:
என்னால் வீடியோவைப் பார்க்க இயலாது.. எனினும் உங்கள் அக்கறைக்கு நான் தலைவணங்குகிறேன்.
ஊடகங்கள் என்றைக்குத்தான் பொய் பேசவில்லை??
காலம் ஒரு நல்ல பதில் சொல்லவேண்டும்!!!
Post a Comment