Thursday, March 5, 2009

கிச்சடி - பதிவுகள், பதிவர்கள், பின்னூட்டங்கள், கிசுகிசு

ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி பதிவு எழுதலாம்ன்னு முடிவு பண்ணி ஏதோ கிறுக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல ஜ்யோவ்ராம் சுந்தரின் காம கதைகள், லக்கி லுக்கின் சட்டி கதைகள்ன்னு பதிவுலகமே பரபரப்பா இருந்தது. தமிழ்மணமே இது நியாயமா, நீதியான்னு மனோகரா ஸ்டைல்ல ஒவ்வொருத்தரும் அறவழி பதிவுகள் எழுதி திரட்டிய கலாய்த்த நேரம். நான் ஏதோ ஷகீலா பட ஸ்டைல்ல என்னோட பதிவுக்கு பேரு வைக்க போக, தமிழ்மணம் கிட்ட எவ்வளவு மன்றாடியும் சேர முடியல. ஆனா விடாம டெய்லி தமிழ்மணம்ல "சேர்க்கை நிலவரம்" பாத்துக்கிட்டு இருந்தேன். அப்போ என்னைய மாதிரியே சேர முயற்சி செஞ்ச மற்றொரு வலைப்பூ http://www.tamilish.com/

எந்த திரட்டிளையும் சேர முடியாட்டியும் நான் விடாம அந்த கிறுக்கல தொடர்ந்து 21 நாள் எழுதினேன். அதுக்கு அப்புறம் எனக்கே தாங்க முடியாம ஒருநாள் எரிச்சல்ல டெலீட் பண்ணினேன். அந்த 21 நாள்ல என்னோட அந்த பதிவ ( உளரல) படிச்சவங்க எண்ணிக்கை 4500. எந்த திரட்டிளையும் இல்லாம இவ்வளவு ஹிட்ஸ் வந்ததுக்கு ஒரே காரணம் :- பேரு தான் ! பெயரில் என்ன இருக்கிறதுன்னு கேட்பவர்களுக்கு ! (சின்ன வயசுல சக்கரத்தாழ்வார் சன்னதிய என்னோட நண்பன் 21 முறை சுத்துவான். எதுக்குடா 21 முறை சுத்தறன்னு கேட்டா, சுத்தி முடிக்கற போது அவன புடிச்சி இருக்கற சனியன் எல்லாம் ஓடி போயடும்ன்னு சொல்லுவான்.அவன் பத்து ரவுண்ட் முடிக்கறதுக்கு முன்னாடியே நான் மடப்பள்ளிக்கு ஓடிடுவேன்)
மடப்பள்ளி - லட்டு, அதிரசம்,முறுக்கு கிடைக்குமிடம்.
*******************************************

பதிவுலகத்துல உள்ள ரெண்டு தோழர்களோட நட்பு நட்பிலக்கணத்தின் சான்றாக பிற்காலத்தில் புகழப்படும் என்பது உறுதி. ரெண்டு பேருமே சாருவின் சிஷ்யகோடிங்க. ஒருத்தருக்கு எழுதுவதில் வெறுப்பு வந்து வாசிக்க ஆரம்பித்தால் அடுத்தவரும் அதே. ஒருவருக்கு கம்ப்யூட்டர் கிடைக்காமல் போனதால் அடுத்தவர் அவரிடம் இருந்த லேப்டாப்பை குப்பைதொட்டியில் போட்டதாக ஒரு வதந்தி.
**************************************

ஆறு வருஷம் முன்னாடி என்னோட நண்பனின் கல்யாணத்துக்காக சென்னை வந்து இருந்தேன். ஸ்கூல் மக்களை எல்லாம் மறுபடியும் பாக்கறதுக்கு ஒரு சான்ஸ். எல்லார் கிட்டயும் ஜாலியா பேசிக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு சாமின்னு ஒரு நண்பர் என்கிட்ட வந்து "உன்னைய மாதிரியே இன்னொரு பிரம்மகத்தி பெர்முடா போட்டுக்கிட்டு கல்யாணத்துக்கு வந்து இருக்கு பாருன்னு சொன்னாரு". அப்புறம் விசாரிச்சதுல அவரு என்னோட நண்பன் வேல செஞ்ச cricinfo நிறுவனத்தின் பாஸ்ன்னு சொன்னாங்க. சிறிது காலம் முன்பு வரை நான் படித்து வந்த பதிவர் இவரும்,மருத்துவர் ப்ருனோவும் மட்டும் தான். தற்செயலா இவர் எழுதின சிறுகதை ஒண்ண படிச்சேன். நல்லவேளையா இவரு இப்போ சிறுகதை எழுதறது இல்ல !
*************************************

எனக்கு சமீபகாலமா தமிழ்ல பிடிக்காத வார்த்தைனா "யூத்" தான். அத வச்சி ஒரு மூத்தவர் பண்ற அலும்பு இருக்கே ! யப்பா சொல்லி மாளாது.
*************************************

வாமு கோமு எழுதின கள்ளி நாவல் படிச்சு முடிச்சேன். இன்டர்நெட்ல ப்ரீயா குட்டி கதைகள் படிச்சுட்டு மக்கள் ரொம்ப ஓவரா திட்டறாங்க. இத விட மோசமா எல்லாம் நான் பத்திரிகைல எழுதின போது ஒருத்தனும் திரும்பி கூட பாக்கலன்னு சாரு சொல்றது ஒருவகைல உண்மையோன்னு யோசிக்க வச்சது.
***********************************************

ராமு :- எதுக்கு ரவி வர்மா பத்தி பதிவு இருக்கற ஒவ்வொரு எடத்துலயும் போயி மே ஏ வே கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்க ?
சோமு :- ரவி வர்மா ஒரு பிராடு. மக்கள் தேவை இல்லாம தூக்கி வச்சி ஆடறாங்க. வேணும்னா கானாலிசாவ ரிலீஸ் பண்ண சொல்லு. நான் நிறுத்தறேன்.
ராமு :- உனக்கு பிடிக்கலன்னா விட வேண்டியது தான. அவரு தான copy right வச்சி இருக்காரு. அத தவிர, அவரு வேறு எவ்வளவோ சூப்பர் படம் வரைஞ்சி இருக்காரே.
சோமு :- அப்புறம் எதுக்கு அவருக்கு பாராட்டு விழா, டாச்ற்ரோ பட்டம் ? மக்களுக்கு சரியான தகவல் போய் சேரனும். சரியான தகவல் தெரியாம தான் மக்கள் செயல்படறாங்க. பத்திரிகை காரங்க தப்பு தப்பா ரிப்போர்ட் பண்றாங்க. சமீபத்துல கூட இதுக்காக தான் நான் வீட்டுடைமை பத்தி எழுதினேன்.
ராமு :- ஐயய்யோ ! (மராத்தான் தூரத்த 100 மீட்டர் ச்ப்ரின்ட் ஸ்பீட்ல ஓடியபடியே)


[இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை. எந்த வனில்சன விருது நாயகரை பற்றியும் அல்ல. இதே போன்று கற்பனை கதையோடு வரும் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த நிகழ்வும் கற்பனையே !]
*******************************************

நான் பதிவு எழுதாம ஜாலியா இருந்த போது எழுத சொல்லி "சினிமா சினிமா" தொடர் ஓட்டத்துக்கு கூப்பிட்டவங்க திரு ராதாகிருஷ்ணன் மற்றும் தாமிரா. "எழுதிட்டேன்னு" சொல்லியும் ஒரு பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும். இந்த வாரம் குட்ட மேட்டர் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படறதா ஒரு தகவல்.

18 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும். இந்த வாரம் குட்ட மேட்டர் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படறதா ஒரு தகவல்.
//

:))))

மணிகண்டன் said...

எப்போதும் நானே தான் முதல் கமெண்ட் போடுவேன் ! முதல் வருகைக்கு நன்றி அப்துல்லா.

எம்.எம்.அப்துல்லா said...

//முதல் வருகைக்கு நன்றி அப்துல்லா.
//

முதல் வருகையா??? நான் நிறையவாட்டி வந்துருக்கேன். நேரமின்மையால் பின்னூட்டமிடாது படித்துவிட்டு போய்விடுவேன். முதல் பின்னூட்டம்னு வேனா சொல்லுங்க

:)

enRenRum-anbudan.BALA said...

//[இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை. எந்த வனில்சன விருது நாயகரை பற்றியும் அல்ல. இதே போன்று கற்பனை கதையோடு வரும் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த நிகழ்வும் கற்பனையே !]
//
:-) பாராட்டுக்கள் !

மணிகண்டன் said...

சாரி. முதல் கமெண்டுக்கு நன்றி. அதே தான் முன்னாடி சொல்ல வந்ததும்.

மணிகண்டன் said...

பாலா சார், உங்க profile படிச்சேன். சூப்பரா இருக்கு.

பாராட்டுக்களுக்கு நன்றி.

ஆளவந்தான் said...

//
சொல்லியும் ஒரு பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும்.
//
வரலேன்ன.. அவர் பதிவுல போய் ஒரு பெரிய மொக்கைய போட்டு உங்க எதிர்ப்ப தெரிவிங்க பாஸ் :))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஒரு பார்மாலிடிக்கு கூட நம்ப பக்கம் வந்து தலைகாட்டாத தாமிராவுக்கு ஞானி கிட்ட சொல்லி குட்டு வாங்கி தரனும்.//

:-))))

புருனோ Bruno said...

ஹி ஹி ஹி

//சோமு :- அப்புறம் எதுக்கு அவருக்கு பாராட்டு விழா, டாச்ற்ரோ பட்டம் ? //

:) :)

கார்க்கிபவா said...

தாமிரா
தாமிரா
தாமிரா

வர மாட்டறாருங்க

கோபிநாத் said...

\\இந்த கதை முற்றிலும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவதில்லை. எந்த வனில்சன விருது நாயகரை பற்றியும் அல்ல. இதே போன்று கற்பனை கதையோடு வரும் பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டால் அந்த நிகழ்வும் கற்பனையே !]\\

மணிகண்டன் அண்ணாச்சி உண்மையாக சொல்றேன் உங்க அளவுக்கு கற்பனை கதை எழுத என்னால முடியாதுங்க ;))

சூப்பரு ;)

மணிகண்டன் said...

ஆளவந்தான் / ராதாகிருஷ்ணன் சார் / ப்ருனோ / கோபிநாத் - உங்கள் வருகைக்கும் / கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

கிசு கிசு எங்கே இருக்கு, நானும் சல்லடைப் போட்டேன் சிக்கலையே.
:)

குசும்பன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
முதல் வருகையா??? நான் நிறையவாட்டி வந்துருக்கேன். நேரமின்மையால் பின்னூட்டமிடாது படித்துவிட்டு போய்விடுவேன். முதல் பின்னூட்டம்னு வேனா சொல்லுங்க//

பொய் சொல்றாரு பொய் சொல்றாரு, தமிழ்மண முதல் பக்கத்தில் பின்னூட்டம் வாரி வழங்கிய வள்ளல் பகுதியில் இவர் பெயர் எப்பொழுதும் வீங்கி போய் பெருசா இருக்கும், கொல குத்து குத்திக்கிட்டு இருப்பார் எல்லோர் பதிவிலும்!!!!

தாமிராவுக்கு குட்டு எல்லாம் போதாது உருட்டு கட்டையால் வேண்டும் என்றால் ஒரு அடி!

மணிகண்டன் said...

***
கிசு கிசு எங்கே இருக்கு, நானும் சல்லடைப் போட்டேன் சிக்கலையே.
***

அதான. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிசுகிசு எழுத வரமாட்டேன்குது. நான் முன்னாடி (alias) ல எழுதற போது உங்க பதிவுல ஏகப்பட்ட பின்னூட்டம் போட்டு இருக்கேன் !

மணிகண்டன் said...

குசும்பன், அது மட்டும் இல்ல. ராத்திரி பத்து மணிலேந்து விடியகாலைல மூணு மணி வரைக்கும் கமெண்ட் போட்டு கிட்டு ஆன்லைன்ல இருக்காரு.

தாமிரா பிரவுசிங் சென்டர் போய் பதிவு எழுதரவராம். சோ, மன்னிச்சு விட்டுடலாம்.

உங்களோட முதல் பின்னூட்டத்துக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

:)

நான் முதல் வருகைதான்!

மணிகண்டன் said...

வாங்க சிபி. வருகைக்கு நன்றி.