Sunday, July 12, 2009

யாருக்கு யாரோ - உலகப்பட விமர்சனம்

(இதுவே எனது முதல் திரைப்பட விமர்சனம். ஒரு சில spoilers உள்ளது. எனவே கவனம். எனது எதிர்கால விமர்சனப் பார்வை பாதிக்கப்படும் அளவிற்கு திட்டி வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தபடலாம்)

படத்தின் நாயகன் பல தமிழ் படங்களின் நாயகர்களை போல் ஒரு இளைஞன். எதையாவது சாதித்தே தீரவேண்டும் என்று ஒரு வெறி கொண்டவன். மத்திய தர குடும்பத்தில் பிறந்தவன் ஆயிற்றே. எங்கும் தடைக்கற்கள். கற்களால் தடம் மாறி உலகத்தால் விழுங்கப்பட்டானா இல்லை மேலழுந்தானா என்பதை இயக்குனர் சிறிதும் செயற்கைத்தனம் கலக்காமல் சொல்லி இருப்பது தான் இந்த படத்தின் வெற்றி.

ஒரு ஆட்டோமொபைல் பொறியாளன். பலவித கார்களை டிசைன் செய்யும் திறமை உள்ளவன். செயல் வடிவம் கொடுக்க துடிப்பவன். பணத்திற்காக அலைபவன்.

அவனாலும், அவனை நோக்கியும் வீசப்படும் வஞ்சனைகளின் தொகுப்பே இத்திரைப்படம். வஞ்சனைகளின் காவியம் என்று சொல்லும் அளவிற்கு காட்சிகளை வடியமைத்த இயக்குனர் தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.

நாயகன் ஏறி இறங்கும் ஒவ்வொரு படியையும் நமது பார்வைக்குள் புகுத்தும் நுண்மையான கேமரா.

படிகளின் விளிம்புகளில் அடிபடும் விளிம்பு நிலை நாயகனின் தடுமாற்றங்களை மெல்லிய நகைச்சுவையுடன் கூறும் திரைக்கதை. Laughter of torture என்பதை விளக்க இனி உலகப்படங்கள் வேறெதுவும் தேவை இல்லை. போரிஸ் விஷ்மன் மற்றும் ரோபெர்டா பிண்ட்லையின் படைப்புக்களையும் தாண்டி.

இந்த படத்தில் வரும் இரு கதாநாயகிகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமா உலகில் நாயகிகள் என்றால் நடனம் ஆடவேண்டும் என்ற பார்முலாவை தகர்த்தெறிந்த கேரக்டர்கள்.

டேவிட்டின் லட்சியத்திற்கு ஊன்றுகோளாகி அவனை தனது பணத்தால் அடைய நினைக்கும் தீபா. பரந்த உலகத்தில் ஒரு கதவு மூடப்பட்டால் ஆயிரம் கதவுகள் நமக்காக காத்திருக்கும் என்பதை புரியவைக்க மஞ்சுளா. பெண்ணின் வாசனை நுகராத நாயகன். அவனைச் சுற்றி பெண்களால் கட்டப்படும் பல சிக்கலான முடிச்சுக்கள்.

கட்டுக்களை அவிழ்த்ததில் காட்டப்படும் surrealism நாம் தமிழ் சினிமா தான் பார்க்கிறோமோ என்ற அச்சத்தை வரவழைக்கின்றன.

ஆன்மீகத்தை, மதத்தின் சம்பிரதாயங்களை அதனுள் நம்பிக்கை கொண்ட நாயகனை வைத்தே எள்ளி நகையாடியுள்ள காட்சிகள் இயக்குனரின் சால்புகளை குறித்த பார்வையை பிரதியின் பிரதியாக வெளிக்கொணர்கின்றன. உதாரணத்திற்கு காரின் மேல் பற்றுள்ள நாயகன் டேவிட் காரை அக்னியாக பாவித்து தனது பற்றை தாரை வார்க்கும் திருமணக் காட்சி.

படத்தின் இசையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இசை. சூத்திரங்களின் மூலம் இசை அறிவு பெற்ற ஒருவனால் செய்தே இருக்கமுடியாது. எந்தவித இசையும் பயிலாத, இசையுணர்ச்சியும் அல்லாத ஒருவனால் மட்டுமே இவ்வுயரங்களை அடைந்து இருக்கமுடியும். தமிழ் இசையை, இந்திய இசையை உலகளவில் நிலைநிறுத்தும் முயற்சி. கட்டாயமாக பாராட்டப்பட வேண்டியது.

இந்த படத்தை முக்கியமான உலகத் திரைப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லாமல் தடுப்பது படத்தில் வரும் ஒருசில போதனைகள், தேவையற்ற துருத்தலாக. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் "திருடாதே" பட பாணியில். இவற்றை விட்டு மட்டும் இயக்குனர் மீண்டால் உலகத்திற்கு மற்றொரு ப்யுகோ கோவன்ச்க்கி ஜேம்ஸ் ஸ்டான்லி ரூபத்தில்.

(நடிப்பு பட்டறை நடத்துவதாக இப்படத்தின் நாயகன் சாம் ஆண்டர்சன் அறிவித்திருப்பது வளர இருக்கும் தமிழ் நடிகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.)

(ஒவ்வொரு மாதமும் உலகப்படம் காட்டி வரும் பைத்தியக்காரனிடம் ஓர் விண்ணப்பம். எந்தவொரு கலைப்படைப்பையும் நாம் அனுபவித்த பிறகே பிறருக்கு எடுத்துச்செல்லவும்/ நிராகரிக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களை முன்னிறுத்துவதில் நாம் நமது கடமையை தான் செய்து வருகிறோமா ? வரும் ஆகஸ்ட் மாத உலகத்திரைப்படமாக இத்திரைபடத்தை திரையிடுவதில் நமக்கு ஏன் தயக்கம் ? கிழக்கு மொட்டைமாடியில் பயங்கரவாத முதலாளித்துவத்தை தகர்த்தெறிந்தது போல் இத்தயக்கத்தையும் தகர்த்தெறிவோம்.)

36 comments:

மணிகண்டன் said...

தமிழில் வெளிவந்த உலகத்திரைப்படம் பலரையும் சென்றடைய தமிழ்மணம் மற்றும் தமிளிஷ் வாக்குபெட்டியை உபயோகிக்குமாறு வேண்டுகிறேன்.

Prabhagar said...

// விளிம்பு நிலை நாயகனின்//

மணி,

கலக்குறீங்க... இன்னும் கொஞ்சம் எளிமையா... அந்த மாதிரி எழுத நிறைய பேர் இருக்காங்க பாஸ்...

பிரபாகர்

மணிகண்டன் said...

படம் ரொம்பவே உணர்ச்சிவசப்பட வச்சதுனால இதுமாதிரி. இனிமே இந்த பிழைகள் வராது பிரபாகர்.

யாத்ரீகன் said...

பாஸ் சான்சே இல்ல இப்படியும் ஒரு பார்வையா, படம் பார்க்காத யாராவது இதை படிச்சிட்டு படம் பார்க்க போனா... உங்க வீட்டுக்கு ஆட்டோ வந்திரப்போகுது :-)))

லவ்டேல் மேடி said...

தலைவரே உங்குளுக்கு ஏன் இத்தன கொல வெறி...!! நாங்க நல்லாருக்குறது உங்குளுக்கு புடிக்கலையா ....??

வர... வர .... உங்க கலை கண் பார்வைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.....!!


முடியல.... வலிக்குது......

KISHORE said...

நல்லா இருக்கு... படத்தின் ஸ்டில் சேர்த்து போட்டு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்..

Rajavel_2k12 said...

எல்லாரும் பாருங்க படத்த பாத்துட்டு ஒருத்தர் இன்னும் உயிரோட இருக்கார்... நல்ல பாருங்க... sir கவலைபடாதீங்க சார் உங்களுக்கும் தியாகிகள் லிஸ்டில் இடமுண்டு

பீர் | Peer said...

உலகத்திரைப்படத்தின் ஆங்கில கேப்ஷனை இருட்டடிப்பு செய்த மணியை வன்மையாக கண்டிக்கிறேன்.

எங்கும் தடைக்கற்கள்.

அதிஷா said...

;-) சாம் ஆண்டர்சன் வாழ்க

James Rajendran said...

இந்த பதிவு எழுதினது படம் பார்த்து

மரணமான ஆவி தான!!!!!!!!!!!!!!!!!!!!!?????

கோவி.கண்ணன் said...

//// விளிம்பு நிலை நாயகனின்//

மணி,

கலக்குறீங்க... இன்னும் கொஞ்சம் எளிமையா... அந்த மாதிரி எழுத நிறைய பேர் இருக்காங்க பாஸ்...

பிரபாகர்//

நான் இதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் என்று இருந்தேன், 'விளிம்பு நிலை' யுடன் படத்தில் பின்னவினத்துவ கூறுகள் இருப்பதையும் மணி சுட்டி இருக்கலாம். தன்னடக்கத்தால் அதையெல்லாம் சொல்லாமல் விட்டாரா ? அல்லது படத்திற்கு அலைமோதும் கூட்டத்தை விமர்சனம் மூலம் மேலும் மேலும் கூட்டி சிக்கலாக்க வேண்டாம் என்று பார்த்தாரா தெரியவில்லை.

மணி,
படம் பார்த்துவிட்டு இன்னும் தரமாக இன்னொரு தரமாக விமர்சனம் எழுத வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//டேவிட்டின் லட்சியத்திற்கு ஊன்றுகோளாகி அவனை தனது பணத்தால் அடைய நினைக்கும் தீபா//

படத்துல இப்படி வருதா ? பார்க்கனும் !

மணிகண்டன் said...

கோவி - ஹிஹி.........படம் பார்த்தா ஜேம்ஸ் மாதிரி ஆவியா தான் வரமுடியும் :)-

Konguthamizh said...

இந்த படத்தை யாரோ ஒருத்தர் வலையல சிபாரிசு வேற பண்ணுனாங்க, அவரு மட்டும் கிடைச்சா, கதம் கதம் கதம் ............

ICQ said...

சூப்பருங்க.. தொடரவும்..

ramalingam said...

விமர்சனம் பின்நவீனத்துவ பாணியில் இருந்தது. வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒரு வேளை இந்த படத்தின் டைரக்டர் , தயாரிப்பாளரிடம் இந்த மாதிரி ஒரு பில்ட் அப் கொடுத்து வாய்ப்பு வங்கிருபாரூ போல ! எனக்கு பல இயக்குனர்கள் தங்கள் படம் ஒரு வித்தியாச படம் என்று ஜம்பமாக பேட்டி கொடுத்துவிட்டு , அப்புறம் படம் , இந்த உலகம் படம் மாதிரி பல அவார்ட்டுக்கு போட்டி போடும்போதுதான் அவங்க எந்த வித்தியாசதை மனசில வெச்சு சொன்னாங்க நே நம்மக்கு புரியும்!

மணிகண்டன் said...

யாத்ரீகன், அதுக்கு சான்ஸ் இல்ல. ஒண்ணு படம் பாத்துட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிச்சி வாழ்த்துவாங்க இல்லாட்டி கடுப்புல அங்கயே மண்டையை போட்டுடுவாங்க. சோ, நோ வொர்ரி.

மேடி, வலை உலகத்துல எதையும் தாங்கும் இதயம் உள்ளவங்க மட்டும் தான் சர்வைவ் பண்ணமுடியும். அதுக்காக கொடுக்கப்படும் சில எளிய ட்ரைனிங்.

கிஷோர், உங்களோட கமெண்ட்டின் உள்நோக்கம் புரியாம இல்லை. ஒரே ஒரு ஸ்லைட் போதும். நான் பத்தாயிரம் வரில விமர்சனம் எழுதினா கூட அந்த ஸ்லைட அடிச்சிக்க முடியாது. நான் ஏமாற மாட்டேன்.

ராஜவேல், நன்றி. நிச்சயம் நீங்களும் பாருங்கள். உண்மையான தியாகிகளுக்கு என்றுமே மதிப்பு உண்டு.

பீர் :- என்ன செய்வது ? பாருங்கள் உங்கள் பெயரில் உள்ள இங்கிலீஷ் கேப்ஷனை கூட விட்டுவிட்டேன்.

அதிஷா - ரசிகர் மன்றம் உடைந்துவிட்டது. நான் இப்பொழுது நற்பணி மன்ற தலைவன்.

கொங்குதமிழ் - யாரு அவரு ? யாரு அவரு ?

ICQ - உங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி.

ராமலிங்கம் - வந்திருக்கும் பின்னூட்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது உங்களது தான்.

அனானி - நீங்க கரெக்டா பாயிண்ட் புடிச்சீங்க. ஆனா இந்த படத்தோட இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எல்லோரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக தான் இருக்கமுடியும்.

பதி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா... கண்ண கட்டுதே சாமி...

இந்த படத்தோட யூ டுயூப் இணைப்புல இருக்கும் "ரசிகர்கள் கருத்துக்களை" நண்பன் ஒருத்தன் சத்தம் போட்டு படிக்க, அதக் கேட்டு நாங்க 4 பேரு வயித்து வலி புடிச்சு கீழே உருள, நடு ராத்திரில இந்த இம்சை தாங்கமா பக்கத்து அப்பார்ட்மெண்டல இருக்குற ஒரு பாசக்கார பய புள்ள, நிர்வாகிக கிட்ட போய் புகார் கொடுத்து அவங்க வந்து அர்த்த ராத்திரில மொறைச்சுட்டு போனாங்க !!!!

;))))))

மணிகண்டன் said...

பதி, நிர்வாகிக கிட்ட இந்த படத்தை போட்டு காட்டி இருக்கணும் நீங்க.

கலையரசன் said...

ஏன்யா மணிகண்டா..
உன் மணிக்கு கண்டம் வரபோகுது!
(நேரத்தை சொன்னேன்பா..)

இப்படிக்கு,
அகில உலக ஆன்டர்சன் அண்ணன்
அன்பில் அனையும் ஆன்றோர் சங்கம்!!

மணிகண்டன் said...

கலையரசன், திட்டக்கூடாது. அதான் முதல சொன்னதே. உங்களுக்கு மட்டும் ஒரு concession. படத்தை முழுசா ஒருதடவை பார்த்துட்டு வந்து என்ன வேணாலும் சொல்லுங்க. :)-

Karthikeyan G said...

இந்த திரைபடத்தின் உட்சகட்ட காட்சியில் நாயகன் STEPNEE என்பதற்கு தரும் பின் நவீனத்துவ விளக்கம், சாரு போன்ற பின் நவீனத்துவ ஜாம்பவான்கள்(??) கூட தர இயலாது.

மேலும் இத்திரைப்படத்திற்காக 35வருடங்கள் உழைத்த எளிய, அனால் லட்சிய வேட்கை மிகுந்த படைப்பாளி டைரக்டர் JOE STANLEY பற்றி விமர்சனத்தில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இவன்,
டைரக்டர் டைனமோ "JOE STANLEY" ரசிகர் மன்றம்.

மணிகண்டன் said...

நான் படம் பாக்காம விமர்சனம் எழுதினேன் தான். ஆனா நீங்க இப்படி விமர்சனம் படிக்காம கமெண்ட் எழுதறீங்களே கார்த்தி. இது நியாயமா ?

jackiesekar said...

மணி கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க முயற்ச்சிக்கின்றேன்

தகவலுக்கு நன்றி

Karthikeyan G said...

//நீங்க இப்படி விமர்சனம் படிக்காம கமெண்ட் எழுதறீங்களே கார்த்தி. இது நியாயமா ?//

மணி சார், தவறுதான் மன்னித்தருள்க..

//ஆன்மீகத்தை, மதத்தின் சம்பிரதாயங்களை அதனுள் நம்பிக்கை கொண்ட நாயகனை வைத்தே எள்ளி நகையாடியுள்ள காட்சிகள் இயக்குனரின் சால்புகளை குறித்த பார்வையை பிரதியின் பிரதியாக வெளிக்கொணர்கின்றன. உதாரணத்திற்கு காரின் மேல் பற்றுள்ள நாயகன் டேவிட் காரை அக்னியாக பாவித்து தனது பற்றை தாரை வார்க்கும் திருமணக் காட்சி.//

இந்த காட்சி படம் பார்க்கும் போது எனக்கு புரியவே இல்ல(தமிழ் சினிமாவின் திருமண காட்சி Cliche BGM, கெட்டிமேளம் சத்தம் இல்லாததால்). "என்னது இது, கேனத்தனமா காரை சுத்துரானுகோ" என கேனத்தனமாக நினைத்துக் கொண்டேன். இப்பதான் அது திருமண அக்னி சாட்சி என உங்கள் விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி!!

மணிகண்டன் said...

ஜாக்கி, இந்த பதிவுக்கு வரும் சீரியஸ் பின்னூட்டங்கள் தான் எனக்கு பிடிச்சி இருக்கு :)- உங்களை எனக்கு தெரியாதா ?

மறுபடியும் படிச்சதுக்கு நன்றி கார்த்தி. நீங்க திருப்பி திருப்பி பாருங்க. இன்னும் உங்களோட புரிதல்ல தப்பு இருக்கு. அவர் அங்க தாரை வார்க்கறார். அவர் எப்படி அதே பொண்ண கல்யாணம் பண்ண முடியும் ? இந்த கட்டவிழ்த்தல் தான் படத்தோட கருவே. அதை பலமுறை பார்க்கணும். அப்பத்தான் புரியும்.

Anand said...

Dei Moothevi.....u never told me that you are writing a blog till today.

மணிகண்டன் said...

இன்னிக்கு உனக்கு ராசி சரி இல்ல :)-

தமிழ்ப்பறவை said...

சாரு தோற்றார் போங்கள்...
விமர்சனம் அருமை...

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை சார்
சாரு பாவம் :௦) அவரை விட்டுடுங்க.

வெங்கிராஜா said...

படத்தின் ஆர்ட் டைரக்டரின் கடும் உழைப்பை சொல்ல மறந்துட்டீங்களா? என்ன அழகழகா கார் பொம்மை வரைஞ்சு டைட்டில் கார்ட்லயும் சுவர்லயும் தொங்க விட்டிருந்தாரு... மாமாவுக்கு பிஸ்கோத்தே குடுக்கலையாமே!

மணிகண்டன் said...

ஆமாம் ராஜா. படத்தின் காட்சிகளோட அப்படியே ஒன்றி போனதுனால ஆர்ட் டைரக்ஷன் தனியா ஒருத்தர் பண்ணினாருன்னு தெரியாம போய்டுச்சு.

அதிஷா said...

ஹேப்பி பஸ்ட் இயர் அனிவர்சரி ஆப் அவர் பிலோவட் ஹீரோ சாம் ஆண்டர்சன்ஸ் பிலிம்ஸ் ரிவ்யூ! ஊஊஊஊ

thamizhan said...

adichchu keppaamga appavum sollaatha.aamaam padaththoda peru ennaa?

thamizhan said...

aamaam,padaththin pere illiyeba!