Tuesday, July 14, 2009

கிச்சடி - 14/07/2009

ஆம்ஸ்டர்டாம்மில் உள்ள சிகப்பு விளக்கு தெருக்கள் சுவாரசியமானவை. மிகப் பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன். இவற்றை கண்டுகளிக்க பல Guided tours இருக்கின்றன. இவை ஆரம்பிக்கும் இடம் சர்ச்சுக்கு நேரெதிரில் உள்ள PIC (Prostitution Information Centre). அங்கு விபச்சாரியாக இருந்த / இருக்கும் ஒரு பெண் நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

விலைமாதுகளுக்கு அரசின் மூலம் அனைத்து மருத்துவ வசதிவாய்ப்புக்களும் உள்ளன. இருந்தபோதிலும் எந்த பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது.

இங்கு நடைபெறுவது விண்டோ ப்ராஸ்டிடியூஷன் என்ற வகையறையை சேர்ந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிகப்பு விளக்கு உண்டு. விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் வீடுகளை தொந்தரவு செய்வது தவறு. மற்ற வீடுகளில் கண்ணாடி கதவிற்கு அருகே நின்று உங்களை அழைப்பார்கள். யாரையும் அழைக்கவும் / நிராகரிக்கவும் செய்வது அவர்களின் உரிமையே.

சில தெருக்கள் மிகவும் குறுகலானது. மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே நடக்கும் அளவிற்கு நெருக்கமானது. சில தெருக்கள் அகலமாகவும் இருக்கும். குறுகலாக இருக்கும் தெருக்களில் வீடுகளின் வாடகை அதிகம். அகலத் தெருக்களில் சிறிது குறைவு. (ஏனென்று கடைசியில்)

தொழில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை. ஏனென்று யூகிப்பது எளிதே.

இத்தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் விபச்சாரம் நடைபெறுவது இல்லை. சராசரி மக்களும் வசித்து வருகின்றனர். சராசரி மக்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் போது குழந்தைகளை விட்டுச்செல்ல குழந்தை காப்பகங்கள் தேவைப்படும். குழந்தைகள் படிக்க மற்றும் விளையாட கிண்டர் கார்டன்கள் தேவைப்படும். அவைகளும் இத்தெருக்களில் அடக்கம்.

தொழில்முறையாக, பெண் விபச்சாரிகள் மட்டுமே உள்ளனர். ஆண்கள் இதுவரை இல்லை.

Trafficking மூலமாக அனுப்பப்பட்ட மொரோக்கோ நாட்டு பெண்கள் விபச்சாரிகளாக கட்டாயமாக மாற்றப்பட்டு தொழில் புரிகின்றனர். அதைத் தவிர பப்பி நாய்க்குட்டி வாங்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரம் செய்ய வந்த பெண்களும் உள்ளனர்.

இங்கு காபி பார்களும் மிகவும் பிரபலம். இவற்றில் ஹாசிஷ் போன்ற ஸாப்ட் போதைப்பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன. இதற்காகவே பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆம்ஸ்டர்டாமை மொய்க்கின்றனர். பாபா காபி பார் ஒரு பிரபலமான மீட்டிங் பாயிண்ட்.

(தனது மனைவியையோ, பெண் தோழியையோ ஏமாற்றி வரும் ஆண்கள் குறுகலான தெருக்களையே தேர்ந்தெடுப்பதால், அங்குள்ள வீடுகளின் வாடகை அதிகம்)
*********************************************

இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது. முரளிதரன், வாஸ், மலிங்கா இல்லாத புதுவித இலங்கை பவுலிங் அட்டாக். விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டை
இலங்கை கடைசியில் எளிதாக கைப்பற்றியது. You strategize for every session and if you win enough number of sessions, you win the test.(Latest Coaching Philosophy) கடைசி செஷனை தவிர பாகிஸ்தான் அனைத்தையும் டாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்க்சில் தொன்னூறே ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதைப் போன்ற பல டெஸ்ட் மேட்ச்களில் இலங்கை தோற்றுள்ளது. ஒருமுறை ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் முதல் இன்னிங்க்ஸ் லீடுடன் தோற்றார்கள் என நினைக்கிறேன். பார்க்கலாம்.
*********************************************

திடீரென்று உங்களிடம் யாராவது கத்தி பேசினால் ஒரு படபடப்பு ஏற்படுமே, அதே போன்ற ஓர் உணர்வு எனக்கு கவிதைகளின் முதல் வரியை படிக்கும் போதே ஏற்படுகிறது. (கவிதையுணர்வு!) மூன்று வரிகளுக்கு மேல் படிக்கமுடிவதில்லை. படித்தால் புரியாது என்ற எண்ணமே மேலோங்குகிறது. உண்மையும் கூட. சிறுபத்திரிகைகள் மூலம் பிரபலமான கவிஞர் அனுஜன்யாவின் அறிவுரைப்படி கவிதை எழுதி பழக முயற்சி செய்தேன். பல மாதங்கள் கடந்தும் ஓரெழுத்து கவிதை "அ", இரண்டெழுத்து கவிதை "அ ஆ" போன்றவைகளே மனதில் வருகிறது. சரி, இது சரிப்பட்டு வராது என்று வேறொரு முறையை தேர்ந்தெடுத்துள்ளேன். குட்டீஸ் விரும்பும் பாப்பா பாடல்களை படிக்க ஆரம்பித்துள்ளேன். அனைத்தும் அருமை. ஒருசில வருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து கவிதைகள் புரிந்தாலும்
புரியலாம். பிடித்தாலும் பிடிக்கலாம்.

12 comments:

Prabhagar said...

மணி,

சுவாரசியமா இருக்கு. ஆமா, எங்க இந்த மாதிரி தகவல புடிக்கிறீங்க?

தகவலுக்கு நன்றி பாஸ்... அய்யய்யோ தப்பா நினைச்சிக்காதிங்க போறதுக்கு இல்ல, ஜென்ரல் நலேட்ஜ் டெவலப் ஆகுதுல்ல...

கலக்கல் பாஸ்... கிப் இட் அப்....

பிரபாகர்...

கோவி.கண்ணன் said...

மணி,

பாலியல் தொழில் ஒழுங்குபடுத்தப்பட்ட நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குறைவுதானே ?

நிகழ்காலத்தில்... said...

\\குட்டீஸ் விரும்பும் பாப்பா பாடல்களை படிக்க ஆரம்பித்துள்ளேன். அனைத்தும் அருமை. ஒருசில வருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து கவிதைகள் புரிந்தாலும்
புரியலாம்.\\

அருமையான வழியா இருக்கே.,

வாழ்த்துக்கள் வருங்கால கவிஞருக்கு

லவ்டேல் மேடி said...

பஸ்ட் மேட்டரு... செம குஜாலா இருந்துது....!!! தொடரா எழுதுவீங்களா???

---------------------------------


கவிதை எழுதப் போகும் இளைய கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்....!!!!

மணிகண்டன் said...

வாங்க பிரபாகர். உங்களுக்கு இருக்கற ஜெனரல் நாலெட்ஜ் அதிகமாமே :)-

நோ ஐடியா கோவி.

நிகழ்காலத்தில் :- இது கவிதையை புரிஞ்சிக்க நான் தேர்ந்தெடுத்து இருக்கற வழி. :) நிச்சயமா எழுதமாட்டேன்.

மேடி - என்னோட ப்ளாக்ல எழுதப்படர எல்லாமே தொடர் தான். ஏன்னா you are browsing thodar.blogspot.com . ஹி ஹி ஹி

rapp said...

//இங்கு காபி பார்களும் மிகவும் பிரபலம். இவற்றில் ஹாசிஷ் போன்ற ஸாப்ட் போதைப்பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன. இதற்காகவே பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆம்ஸ்டர்டாமை மொய்க்கின்றனர். //

இதை நானும் எக்கச்சக்கமா கேள்விப்பட்டுள்ளேன். எனக்கு ஒரு டவுட்டு. இது அங்க சட்ட விரோதமில்லையா? இங்கருந்து வேற ஊருக்கு கடத்திட்டு போக மாட்டாங்களா?(கேக்குற கேள்வில்லாம் பிளானோட கேக்குறாப்டி இருந்தாலும், அப்டில்லாம் ஒன்னுமில்லைன்னு சம்மனில்லாமல் சொல்லிக்கறேன்).

மணிகண்டன் said...

நெதெர்லாந்துல சட்டவிரோதம் இல்லை. மத்த european countries ல கூட சட்டவிரோதம் தான். ஆனா பிரான்ஸ்க்கு Thalys ட்ரைன்ல தள்ளிக்கிட்டு போகலாம். யாரும் செக் பண்ணமாட்டாங்க. பறந்தா தான் பிரச்சனை.

தப்பித்தவறி மிடில்ஈஸ்ட் போகும்போது பேக்ல இருந்தா அவ்வளவு தான் :)-

பீர் | Peer said...

//குட்டீஸ் விரும்பும் பாப்பா பாடல்களை படிக்க ஆரம்பித்துள்ளேன்.//

ஏதாவது முன்னேற்றம் தெரிந்தால் சொல்லியனுப்பங்க மணி, எனக்கும் கவிதை என்றாலே பயம் விருகிறது.

மணிகண்டன் said...

பீர், நீங்க அனுஜன்யா சொன்ன முறையை ட்ரை பண்ணி பாருங்க :)-வொர்க் அவுட் ஆனாலும் ஆகும்.

Sammy said...

பாகிஸ்தான் ரெண்டாவது இந்நிங்க்ஸ்ல ....35 ரன்கு 9 விக்கெட் இழந்தது ....இந்தியாவுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் இந்த ரெகார்ட் பிரேக் பண்ண !!

அந்த guided tour ல எவ்லொ செலவாகும்னுலாம் சொல்ல மாட்டாங்களா ? ஜெனரல் knowledge காக கேட்டேன் ...

மணிகண்டன் said...

****
அந்த guided tour ல எவ்லொ செலவாகும்னுலாம் சொல்ல மாட்டாங்களா ? ஜெனரல் knowledge காக கேட்டேன் .
****

நிச்சயமா. Guided Tour அரவுண்ட் பதினைஞ்சி யுரோன்னு நினைக்கிறேன். :)-

Earn Staying Home said...

புதிய செய்தி. நன்றி.