Thursday, July 9, 2009

நான் பாஸாயிட்டேன்

இது எழுதாம தான் இருந்தேன். அம்மாஞ்சி மற்றும் ராப் மாதிரி முன்னணி எழுத்தாளர்களின் பதிவுகளை மட்டுமே படித்து வந்த எனது மனைவி திடீரென்று எனது பதிவையும் படிக்க ஆரம்பித்ததால் - பதிவின் மூலமாவது உன்னை பற்றி ஏதாவது தெரிந்து கொள்கிறேன் என்று கூறியதால் இப்பதிவு.

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ஐயப்பமலை போய் வந்த ஒரு குடும்ப நண்பர் சஜஸ்ட் செய்த பெயர். பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிச்சது இல்லை.

2.கடைசியாக அழுதது எப்போது..?
இந்த பதில் எழுதும் போது

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
லா லா லா லா லா

4.பிடித்த மதிய உணவு..
உணவு விஷயத்துல எனக்கு எல்லாமே பிடிக்கும். ரொம்ப பிடிச்சது உருளை மற்றும் வெஜிடபிள் ரைஸ்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நிச்சயமா.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டும் பிடிக்கும். கடல் ரொம்பவே பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
யோசிச்சி பார்த்தேன். ஒன்னுமே தோணலை.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - எனது கற்பனைகள்.
பிடிக்காத விஷயம் - ஓவராக சில ------- சமயங்களில் நான் செய்யும் ரகளைகள்.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : எல்லாமே
பிடிக்காத விசயம் : எதுவுமே இல்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமே பக்கத்துல இல்லையேன்னு தான்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
ப்ளூ

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
நேட்டிவ் இந்தியன் மியூசிக். பல தமிழ் பாடல்களை ஒருசேர கேட்கும் பீல் !! மியூசிக் டைரக்டர் பேரு சொன்னா ப்ருனோ தவிர மிச்சம் எல்லாரும் பிரச்சனை பண்ணுவாங்க.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ப்ரைட் கலர் எதுவானாலும்.

14.பிடித்த மணம்.
பசியோட வீட்டுக்கு வரும்போதும் மணக்கும் சமையல்.

15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
நான் யாரை கூப்பிட்டாலும் அவங்க எழுத மாட்டாங்க. சரி அப்துல் கலாம், அமிதாப் பச்சன், கலைஞர் மற்றும் சாம்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
அதிஷாவோட பதிவுகளில் slum dog millionaire விமர்சனம். அதற்கு பிறகு அவர் எழுதிய பல பதிவுகள்.

17.பிடித்த விளையாட்டு...
எல்லா விளையாட்டும். இப்போதைக்கு புட்பால், ஐஸ் ஸ்கேடிங், skiing, டென்னிஸ், கோல்ப், cricket

18) கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
கொஞ்சம் நாளா எதுவும் பிடிக்கலை. முன்பு தெலுகு டப்பிங் படம் பிடிக்கும்.

20.கடைசியாக பார்த்த படம்..
ஆணிவேர். இந்த வருடத்தில் பார்த்த மூன்றாவது படம். ஆனால் இதை ஒரு திரைப்படமாக பார்க்க முடியவில்லை.

21.பிடித்த பருவ காலம்...
யூத்தாக உணரும் காலங்கள் யாவும்.

22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
செம்பருத்தி - தி. ஜானகிராமன்
அரசூர் வம்சம் - இரா முருகன்
All The Rivers Run - Nancu Cato

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
13 நாட்களுக்கு ஒருமுறை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : நான் போடும் தாளம். எனது இனிமையான குரலில் ஒலிக்கும் பாடல்கள்.
பிடிக்காதது: உடனடியாக நிறுத்த சொல்லி வரும் கத்தல்கள்.

25.வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
USA - columbus, ohio

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
இல்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
பொறுப்புணர்வு.

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
எனக்குள் இருக்கும் தேவதையின் விரோதியா ? நானா ?

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
பார்சிலோனா

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
மகிழ்ச்சியா

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
கல்யாணம்.

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
வாழ விருப்பப்படு.

17 comments:

சென்ஷி said...

:-)

//
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
கல்யாணம்.
//

யாரைன்னு சொல்லலையே??

மணிகண்டன் said...

***
யாரைன்னு சொல்லலையே??
***

உங்க கேள்வி யாருக்குன்னு இல்லை இருக்கணும் ? நீங்க சரியா தான் டைப் பண்ணி இருப்பீங்க. ஏதோ சாப்ட்வேர் தொல்லை போல.

பீர் | Peer said...

//உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த விசயம் : எல்லாமே
பிடிக்காத விசயம் : எதுவுமே இல்லை.//

மெய்யாலுமா?

பீர் | Peer said...

//10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமே பக்கத்துல இல்லையேன்னு தான்.//

டச்...

//19).எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
கொஞ்சம் நாளா எதுவும் பிடிக்கலை. முன்பு தெலுகு டப்பிங் படம் பிடிக்கும்.//

குசேலனும், குருவியும்?

//23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
13 நாட்களுக்கு ஒருமுறை.//

//2.கடைசியாக அழுதது எப்போது..?
இந்த பதில் எழுதும் போது//


மணி, உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்குது.

கோவி.கண்ணன் said...

//4.பிடித்த மதிய உணவு..
உணவு விஷயத்துல எனக்கு எல்லாமே பிடிக்கும். ரொம்ப பிடிச்சது உருளை மற்றும் வெஜிடபிள் ரைஸ்.
//

மணி,
அட நம்ம டேஸ்ட் !

///9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு
பிடிக்காத விசயம் : எதுவுமே இல்லை.//

புரியுது, எதையாவது எழுதிட்டு அப்பறம் அடுத்த வேளை சோற்றை 32 கேள்விபதில் எழுத கூப்பிட்ட பதிவரா போடுவாங்க :)

மணிகண்டன் said...

பீர் - என்கிட்ட கத்துக்கிட்டா நீங்க உருப்பட்டா மாதிரி தான் !!

வாங்க கோவி.

Anonymous said...

mani pathil ellam super ,kalakuringa.unga postla ethu than enaku romba pidichathu.u r really smart.

மணிகண்டன் said...

ithu yaaru ?

Prabhagar said...

மணி,

எனது முதல் பின்னுட்டம்... பதில்கள் வித்தியாசமாய் இருக்கு...

பிரபாகர்

Swaminathan said...

Mani,
The intervew was hilarious. I laughed the hell out while reading.It reminded me of Jai Jawan. First of all, I should say that your frustration threshold has gone up as you managed to answer 30 odd questions :-). Questions 7, 24 were rocking.
-Swami.

அதிஷா said...

ஐயோ ஐயோ... நீங்களுமா 32

பாசகி said...

//3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
லா லா லா லா லா//
அறிவுப்பூர்வமான பதில் :)

//24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : நான் போடும் தாளம். எனது இனிமையான குரலில் ஒலிக்கும் பாடல்கள்.
பிடிக்காதது: உடனடியாக நிறுத்த சொல்லி வரும் கத்தல்கள்.//

சூப்பரப்பு :)

//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
கல்யாணம்.//

என்னா வில்லத்தனம் :)

மணிகண்டன் said...

நன்றி பிரபாகர். அடிக்கடி வாங்க.

Sammy said...

//நான் யாரை கூப்பிட்டாலும் அவங்க எழுத மாட்டாங்க////

எழுதியாச்சு மணி, பதிவு பாருங்க.

☀நான் ஆதவன்☀ said...

நீங்களுமா?

//31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
கல்யாணம்.//

இதெல்லாம் செல்லாது மணிகண்டன். நான் ஏற்கனவே இந்த பதிலை சொல்லிட்டேன் :)

மணிகண்டன் said...

Swami, That was loooong back da. This is 2009 ! 30 questions are nothing :)-

மணிகண்டன் said...

பாசகி, அதிஷா - வருகைக்கு நன்றி.
நான் ஆதவன் - அப்படியா ? ஆனாலும் பதில் இனிமே மாத்த முடியாதே !