என்னோட செல்லப்பையனை பத்தி எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே எவ்வளவு நாள் தான் இருக்கறது. ஒரு மாசமா பதிவு எழுதாம இருந்தாச்சு. கமெண்ட் எழுதறதையும் ஓரளவுக்கு குறைச்சாச்சு. இது எல்லாத்துக்கும் காரணமானவனை பத்தி எழுதாம இருக்க முடியுமா ! பொறக்கும் போதே மக்களுக்கு இவ்வளவு நல்ல சேவை செஞ்சி இருக்கறவனை பத்தி எழுதாம இருந்தா பதிவுலகம் என்னையை மன்னிக்காது.
கர்ப்பமா இருக்கும்போது அவங்கம்மா கண்ட கண்ட ப்ளாக்ல யோகா சம்பந்தமா படிச்சி இருப்பாங்க போல இல்லாட்டி முந்தைய ஜென்மத்துல ராம்தேவ் கிட்ட யோகா கத்துக்கிட்டு இருக்கான். பொறந்தவுடனயே மூச்சை இழுத்து புடிச்சிகிட்டு விடாம அழிச்சாட்டியம் பண்ணிட்டான். அப்புறம் டாக்டர் கிட்ட அடி வாங்கி மூச்சு விட ஆரம்பிச்சி, அஞ்சி நாள் ஐசீயூல இருந்து எல்லாருக்கும் திகில் கொடுத்துட்டான் ! இப்ப வீட்டுல ராத்திரி எல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு சமத்தா இருக்கான். ஆனா இப்பவும் அப்பாவை வெப்காம்ல பார்க்காம ஏதாவது பிகர் வருதான்னு லேப்டாப்ப பார்த்துக்கிட்டு இருக்கான்! ஒருவேள கிருஷ்ண ஜெயந்தில பொறந்தது காரணமோ என்னவோ !
இவரு எல்லாரையும் பயம்புடுத்தினதுல, எல்லா சாமி பேரும் இவரோட நாமகரனத்துல சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிட்டாரு. திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் நீளத்துக்கு. பையன் பொறந்தா பேரு மனைவி சாய்ஸ், பொண்ணு பொறந்தா என்னோட சாய்ஸ்ன்னு ஒரு அக்ரீமென்ட் இருந்தது. சோ, அவளோட சாய்ஸ் தான். பேரு அபயன். பொண்ணு பொறந்திருந்தா இந்த அக்ரீமென்ட்டோட மதிப்பு எப்படி இருந்து இருக்கும்ன்னு எனக்கு திடீர்னு ஞாபகம் வந்ததுனால, நானும் இந்த பேரு சாய்ஸ்ல உள்ள பூந்தேன். என்னோட சாய்ஸ் ஹயக். ஒரு நாலைஞ்சு வயசுல அவனே இந்த ரெண்டுல ஒன்னு செலக்ட் பண்ணிக்கலாம் (எவ்வளவு சுதந்திரம் பாருங்க !)
ஒருவாரம் கழிச்சி முதல் vaccination கொடுக்க போனோம். ஊசி போட்டா ஒரு சின்ன செல்ல சிணுங்கல் தான். (அவங்கம்மா ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிட்டாங்க.) முதல் வாரத்துலயே ஊசிக்கு பழக்கப்பட்டுட்டான் போலன்னு வருத்தம் இருந்தது. பட், குளிக்க வச்ச போது நல்லா சத்தம் போட்டு அழறான். (அப்பா மாதிரி போல ! )
17 comments:
அபயன், வாழ்த்துக்கள்... :)
குட்டிக்கு வாழ்த்துக்கள்.. :)
வா(வ்)ழ்த்துக்கள் மணிகண்டன்.. அபயன் அழகான பெயர் :)
வாழ்த்துக்கள், அப்பா மணிகண்டன்!
உங்களுக்கான பதில் தயாராகி விட்டது. :-)
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மணிகண்டன்.
அபயன் அருமையான பெயர்.
மிக்க சந்தோஷம் மணி.
கேபிள் அண்ணா மூலம் பிரசவ சமயம் என்பதை அறிந்திருந்தேன். இனிப்பான தகவலுக்காக ஆவலோடு காத்திருந்தேன். அபயன், அருமையான புதுமையான பெயர். தொடர்பு எண்ணை தாருங்கள், பேசவேண்டும். prabhagar@gmail.com.
பிரபாகர்.
வாழ்த்துகள் மணி.
வாழ்த்துகள்!
அபயனுக்கு வாழ்த்துக்கள்
மணிகண்டனுக்கும் சேர்த்துத்தான் :))
அபயன் நல்ல பெயர்
வாழ்த்துகள் மணி!
அபயனுக்கும் அபயனின் அம்மா-அப்பாவுக்கும் வாழ்த்துகள்! :-)
பீர், கார்த்திகேயன், சென்ஷி, தெகா - குட்டிப்பையன் சார்பாக உங்கள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
Radhakrishnan,raja, prabagar, vidhya, sangaa, nigazh kaalathil, jothibharathi, mullai & anonymous friend - Thanks a lot for your wishes.
மணி ..பயங்கர காமெடி பண்ணி எழுதிருக்கீங்க ...முக்கியமா
//பொண்ணு பொறந்திருந்தா இந்த அக்ரீமென்ட்டோட மதிப்பு எப்படி இருந்து இருக்கும்ன்னு எனக்கு திடீர்னு ஞாபகம் வந்ததுனால, நானும் இந்த பேரு சாய்ஸ்ல உள்ள பூந்தேன்.///
//ஒருவேள கிருஷ்ண ஜெயந்தில பொறந்தது காரணமோ என்னவோ !//
இல்லை சார் ...ஒருவேள அப்பா மாதிரி போல !
வாங்க சாம். அப்பா கிருஷ்ண பரமாத்மான்னு சொல்றீங்களா :)
Post a Comment