Thursday, September 24, 2009

கிச்சடி - உபோஒ மவுனத்தின் மொழிக்கு எதிர்வினை

கார்க்கியோட வேட்டைக்காரன் பாடல் விமர்சனம் படிச்சுட்டு பாட்டு கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சி மனசு விட்டு சிரிச்சேன்.

உன்னைப் போல் ஒருவன் - விமர்சனம், எதிர்விமர்சனம், தார்மீக கோபம், கிண்டல்கள், மவுனத்தின் மொழி, பார்ப்பனீயம், ஆபாசம்.

எல்லாரும் பின்னூட்டத்துல ஜ்யோவ்ராம் சுந்தர் கிட்ட எதுக்கு நியாயம் கேக்கறாங்கன்னு தெரியல.

சரியோ / தவறோ விமர்சனம் தைரியமா பல பேரு எழுதினாங்க. சரியோ / தவறோ பலபேர் அதற்கு எதிர்வினை செஞ்சாங்க.

விமர்சனம் எழுதினவரை விளக்கம் கேட்டா கவிதை எழுத போன்னு சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்கும் சுகுணா திவாகர் வாழ்க.

நல்லவேளையா நேர்மை என்பது ஒரு பண்பு - அவ்வளவேன்னு எந்த பதிலும் இல்லை.

நீரஜா என்னும் பார்ப்பனீய பெண்ணை கொண்டு நீதி கொடுக்கும் கமலேன்னு வாய்ஸ் கொடுப்பாரு.

மவுன மொழி மூலமா நீரஜா பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சத கூட விட்டுடலாம்.

பொண்ணு பேரு வரும் போது எல்லாம் mute பண்ணிட்டு மவுன மொழி அர்த்தம் கண்டுபிடிச்சா என்ன செய்ய !

அதை சுட்டிக்காட்டினா "தகவல் பிழையாம்". அந்த பொண்ணு பாப்பாத்தின்னு கண்டுபிடிச்சி கமல் கிட்ட கேட்ட நீதி எல்லாம் ?

நடிகை பேரு அனுஜா ஐயர்ன்னு எங்கயாவது படிச்சு இருப்பாரு. படத்தையே பாக்காம பப்ஸ் தின்னுட்டு விமர்சனம் எழுதி இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இடைவேளைல பப்ஸ் திங்கறவன் காமன் மேன். முழுசா பப்ஸ் தின்னுக்கிட்டே படம் பாக்காம வந்தா பல்ப் எரியற மேன் போல.

ஒரு ஏட்டு மோகன்லால் கிட்ட கமலை பத்தி விவரிப்பாரு - ‘‘அவர் தாடி வச்சிருந்தாரு, கையில வெங்கடாசலபதி பை வச்சிருந்தாரு’. உடனே மோகன்லால் சிலுவை போட்டு இருந்தாருன்னு கேப்பாரு. மவுன மொழி சொன்னது இது தான்.

வெங்கடாச்சலபதி - இந்து, சிலுவை - கிறிஸ்தவன், தாடி - முஸ்லீம்.

சுகுணா பப்ஸ் தின்னுட்டு, தக்காளி சாஸ் கிடைக்காத கடுப்புல தாடி வச்சவன் எல்லாம் இஸ்லாம் தீவிரவாதின்னு கமல் சொன்னாருன்னு மவுன மொழி விமர்சனம் எழுதுவாரு. அதை படத்தோட விமர்சனமா எடுத்துக்கணும். இதை விட படத்தை வெறும் பொழுதுபோக்கா எடுத்துக்கறது ஆபத்து போல.

கமலோட தீவிரவாதம் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஸ்ரீபெரும்புதூர் வரை நீளுதாம். கமல் விடுதலைபுலிகளுக்கு எதிரியாம்.
கமல் துர்நிகழ்வுன்னு சொல்லி இருக்கலாம்.

குண்டுவெடிப்பு சொல்லி தான பதினெட்டு வருஷம் இந்திய அரசியவாதிங்க ஜல்லி அடிக்க முடிஞ்சது. அதை கமல் தீவிரவாதம்ன்னு சொல்லி இருப்பாரோ என்னவோ. மவுன மொழிக்கு அர்த்தம் தான. எதை வேணும்னாலும் எழுதலாமே. அது தான் கருத்து ஆயிடுமே.

சரி. இவ்வளவு மவுன மொழிக்கு அர்த்தம் கண்டுபிடிச்ச விமர்சகர் படத்துல நேரிடையா வந்த பெண்ணோட கையை பின்னால கட்டுறது, கிருஷ்ணா, லால் கிருஷ்ணான்னு கூப்பாடு போடுறது, மோதி பாருன்னு சொல்றது - இதைப் பத்தி எல்லாம் பேசாம மவுனமா இருப்பாராம். நிறுவ வரும் கருத்துக்கு எதிரா இருந்தா சும்மா இருக்கறது தான நேர்மை. இல்லாட்டி அதை rationalize பண்ண ஒரு ரெண்டு பத்தி எழுத வேண்டி வரும்.

செல்வேந்திரன் பதிவை நான் ஆடிக்கு ஒருதடவை அமாவாசைக்கு ஒரு தடவை தான் படிக்கற வழக்கம். ஆனா புன்னரசியல் பதிவை படிச்சேன். ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கற சாக்கடைல தான நாமும் கலக்கறோம்ன்னு நினைச்சாரோ என்னவோ.

99 - 1 எல்லாம் அபார கண்டுபிடிப்பு. மிச்சம் எல்லாரும் சினிமால வரும் மவுன மொழியை புரிஞ்சிகிட்டா இவரு சமூகத்தோட மவுன மொழியை கூட புரிஞ்சிப்பார் போல.

போலி டோண்டு பிரச்சனை நடக்கும்போது நான் தமிழ் வலைப்பதிவுகள் படிச்சது கிடையாது. ஆனா இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா புரியுது. உன்னை போல் ஒருவன் சம்பந்தமா 60 பதிவு வந்தா எல்லாத்தையும் படிக்கணும் போல. இல்லாட்டி நரசிம், கார்க்கி மாதிரி ஆகிடும். நீங்க தான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே ஜ்யோவ். எல்லா எடத்துக்கும் ஒரே பார்முலா கிடையாதுன்னு. அப்புறம் எதுக்கு கேள்வி ? அவங்க புரிஞ்சிகிட்டாங்களோ என்னவோ.

சரி, இந்த படத்துல நாலு இந்து தீவிரவாதி போட்டு வேன்ல காஷ்மீரீ பண்டிட்ட்னு சொல்லியோ, கோத்ரா ரயில் எரிப்பு சொல்லியோ, கோயம்புத்தூர் பாம்ப் ப்ளாஸ்ட் சொல்லியோ இந்து தீவிரவாதி விளக்கம் கொடுத்தா விமர்சனம் எப்படி இருக்கும் ?

தீவிரவாதியா நாலு chimpanzee காட்டி இருக்கலாம். PETA, Blue Cross வராம இருந்தா.

பேரு இல்லாத தீவிரவாதி தான் பெஸ்ட் சாய்ஸ்.

தீவிரவாதிக்கு பதிலா நாலு திருடனை போட்டு இருக்கலாம். திருட்டுக்கு ஏழ்மை தான் காரணம். அன்பே சிவம்ல கம்யூனிசம் பேசின கமல் தன்னை போலி கம்யூனிஸ்ட்ன்னு நிரூபிச்சிட்டாருன்னு மவுன மொழி பேசுவாங்க. ஆனா விமர்சகரை ஏதாவது சொன்னா நண்பர் சி மணி பச்சையம் கவிதையை ஒட்டி மொழில விளையாடுவார். நமக்கு வருமா ?

சம்பந்தப்பட்ட பதிவுகள்

www.athishaonline.com
jyovramsundar.blogspot.com
suguna2896.blogspot.com
selventhiran.blogspot.com
www.narsim.in

ஆசிப் அண்ணாச்சி ப்ளாக் லிங்க் தெரியலை. கமெண்ட்ல சொல்லுங்களேன். அவர் வெறும் இலக்கியம் மட்டும் எழுதுபவர்ன்னு வராம இருந்தேன் !!!

கமலின் மிக சாதாரணப் படங்களில் இதுவும் ஒன்று.

சற்று அழுத்தமாக / மக்களுக்கு எடுத்து செல்லும் விதத்தில் இந்த படத்தில் உள்ள பொதுமைப்படுத்தும் கூறுகளை சென்ஷி விமர்சனமாக எழுதி இருக்கிறார். படிக்க http://senshe-kathalan.blogspot.com/

லக்கிலுக் விமர்சனம் கூட நடுநிலையா இருந்தது. ஆனா படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இஸ்லாமியர் மீது வெறுப்பு மண்டிவிடும்ன்னு சொல்றது கொஞ்சம் ஓவர். எனக்கு வரலை. நானும் தேர்தல்ல சினிமாகாரங்களுக்கு வாக்கு போடுபவன் தான்.

28 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஒரிஜினல் காமன் மேன்

படித்துவிட்டீர்களா..,

குடுகுடுப்பை said...

சினிமா அதுக்கு மேல இதுல ஒன்னும் இல்லை. நானும் பதிவு போட்டிருக்கேன் கூட்டம் பிச்சிக்கிட்டு வருது.

♠ ராஜு ♠ said...

நீங்களுமா மணி அண்ணே,
நடத்துங்கோ...!
ஆயுஸ்மான் பவ.

Karthikeyan G said...

//
விமர்சனம் எழுதினவரை விளக்கம் கேட்டா கவிதை எழுத போன்னு சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்கும் சுகுணா திவாகர் வாழ்க.
//

நீங்கள் மாற்று கருத்துக்களை சொல்லவில்லை, விமர்சகரை மட்டம்தட்டி அவரை காமடி பீசாக்க நினைத்தீர்கள். அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

நேரடியாக.. நீங்கள் கமல் செய்தது சரி என்கிறீர்களா?

மணிகண்டன் said...

கார்த்திகேயன், அனுஜா ஐயர் என்ற நடிகையின் பெயரை பார்த்து விட்டு, காட்சிகளை பார்க்காலமலையே விமர்சனம் எழுதி இருந்தார். அதற்கு பதில் சொன்னேன். அடுத்ததாக, என்னை அவர் கவிதை எழுத போ என்று எல்லாம் சொல்லவில்லை. அவர் கூறியது உமா சக்தியை. அவங்களும் காமெடி பீஸ் ஆக்க முயற்சி பண்ணினாங்களா ?

உன்னைப் போல் ஒருவன் ஒரு மிக சாதாராணமான படம். பிரேம் பை பிரேம் ரீமேக். நிச்சயமாக பொதுமைப்படுத்தும் பிரச்சனைகள் இருந்தன. அவ்வளவே.

இதே போன்று கருத்துக் கூற சொல்லி அவர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டு பாருங்களேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இதே போன்று கருத்துக் கூற சொல்லி அவர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டு பாருங்களேன்./

யாரிடம்?

உங்களுடைய நடை பிடித்திருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியிருப்பது உளறல்தான் (ஐயையோ, கண்ணியம் போயிடுச்சேன்னு கதற மாட்டீங்கன்னு நினக்கறேன்!).

யுவகிருஷ்ணா said...

பல இடங்களில் கத்திமேல் நடக்க வேண்டியிருக்கிறது. நான் நடந்து கொண்டிருக்கிறேன் :-)

நீங்கள் நடக்க முயற்சித்திருக்கிறீர்கள் என்று மட்டும்தான் இப்போதைக்கு கூறமுடியும்!

மணிகண்டன் said...

சுந்தர், வருகைக்கு நன்றி. அட்லீஸ்ட் நீங்க கமெண்ட் போட்டவுடன மக்கள் பயப்படாம இடுகைக்கு கருத்து சொல்லுவாங்கன்னு நினைக்கறேன் :)-

சுகுணாவிடம் எதிர்க்கேள்வி கேட்டவங்களை அவர் ஹேண்டில் பண்ணின விதத்த வச்சி சொன்னேன். அமெச்சூர் கேள்வின்னு விட்டுடுங்க.

*****
மற்றபடி நீங்கள் எழுதியிருப்பது உளறல்தான். (ஐயையோ, கண்ணியம் போயிடுச்சேன்னு கதற மாட்டீங்கன்னு நினக்கறேன்!)
*****

:)- மாட்டேன் பயப்படாதீங்க.

உங்களுக்கு முன்னாடி எல்லாம் விவாதத்துல analogy / out of context example பிடிக்காது. இப்போ பிடிக்க ஆரம்பிச்சி இருக்கு ! அதிஷா எழுதின analogyக்கே தூள் சொல்லி இருக்கீங்க. காலம் மாறி இந்த உளறல் கூட பிடிக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷாவோட அந்தப் பதிவுக்கு ‘தூள்’ போட்டது சும்மா :) வேணும்னுதான் செஞ்சேன் :) அதிஷாகிட்ட வேணா கேட்டுப் பாருங்க :) அதனால நிச்சயம் இந்த விதமான உளறல் பிடிக்காது :) :)

கேள்வி கேக்கறது என்பது வேற விஷயத்துக்காக... இங்க நினைக்கறா மாதிரி இல்லைங்க.. நான் இன்னொரு சமயம் இதைப் பத்தி விரிவா பேசறேன்.

பிரபாகர் said...

மணி,

உ.போ.ஒ பற்றி எழுதியவைகளில் மிகவும் யதார்த்தமாகவும், நியாயமாகவும் இருப்பது உங்களின் பதிவு மட்டும்தாம் மணி... உங்களுக்கென் வாழ்த்துக்களும் நன்ன்றியும்...

பிரபாகர்.

சுகுணாதிவாகர் said...

/விமர்சனம் எழுதினவரை விளக்கம் கேட்டா கவிதை எழுத போன்னு சொல்லும் அளவுக்கு மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்கும் சுகுணா திவாகர் வாழ்க./

நான் படம் பார்க்காமலே விமர்சனம் எழுதினேன் என்று சொல்லும் உங்களை மாதிரியான முட்டாள்களுக்கு நான் தொடர்ச்சியாக கிளாஸ் எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

உமாஷக்தி, இப்போது தமிழ்ச்சூழலில் வளர்ந்து கொண்டிருக்கிற கவிஞர். சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகிறார். ஆனால் அவர், 'கமல் ஒரு கலைஞன், கலைஞனை பிறப்பின் அடிப்படையில் விமர்சிக்கலாமா?' என்றெல்லாம் எல்.கே.ஜி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்குப் பதில் சொல்ல அயர்ச்சியாகத்தானிருக்கிறது.

எப்படியிருந்தபோதும் ஒரு மாற்றுப்பார்வையை ஒத்துக்கொள்ள உங்களைப் போன்ற ஆட்கள் தயாராயில்லை என்பது தெரிகிறது. நாய் என்று எழுதலாம், காக்கா ‍ வடை கதையில் 'கட்டவிழ்ப்பு" செய்து கேலி செய்யலாம். எல்லாவற்றிற்கும் சுதந்திரம் இருக்கிறதுதானே!

நடாஷாவைப் பற்றிய ஒரே ஒரு தகவல்பிழையால் ஒட்டுமொத்த விமர்சனமும் தவறாகி விடுகிறதா? இதற்கு நீங்கள் எதிர்வினை ஆற்றுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அடுத்து 'ஆறுமுகம்' படம் வருகிறது. மொக்கை விமர்சனம் எழுதி கூடிக் கும்மி அடிங்கள். வாழ்த்துக்கள்!

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி சுகுணா.

***
நடாஷாவைப் பற்றிய ஒரே ஒரு தகவல்பிழையால் ஒட்டுமொத்த விமர்சனமும் தவறாகி விடுகிறதா? இதற்கு நீங்கள் எதிர்வினை ஆற்றுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
***

ஆம். எதிர்வினை செய்ய தான் வேண்டும்.

தகவல் பிழை, தகவல் பிழை என்று பிதற்றிக்கொண்டு இருந்தால் நான் முதலில் இருந்து பாலபாடம் மறுபடியும் எடுக்க முடியாது. நீங்களும் சென்று கவிதை எழுதலாம். வராவிட்டால், உமா சக்தியிடம் கற்றுக்கொள்ளலாம்.

T.V.Radhakrishnan said...

:-)))

பிரபாகர் said...

// சுகுணாதிவாகர் said...
....
உங்களை மாதிரியான முட்டாள்களுக்கு நான் தொடர்ச்சியாக கிளாஸ் எடுத்துக்கொண்டிருக்க வேண்டுமா?//

உங்களை போன்ற முட்டாளை முன்னிருத்தி மணி போன்றோர் பதிவிட வேண்டுமா எனும் கேள்வி என்னுள் எழுகிறது...

தேவையா மணி...?

பிரபாகர்.

மணிகண்டன் said...

பிரபாகர்,

அவரை நான் படம் பாக்காம விமர்சனம் எழுதினேன்னு சொன்னதுனால டென்ஷன் ஆனார்.

நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க ?

ரிலாக்ஸ். சிங்கப்பூர் GrandPrix பாருங்க. :)-

பிரபாகர் said...

பார்த்துக்கொண்டிருக்கிறேன் மணி... உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு டிக்கெட் வாங்கி வந்துள்ளேன், இரவு காட்சிக்கு... பார்க்கலாம் அப்படி என்னதான் இருக்கிறது என...

பிரபாகர்.

மணிகண்டன் said...

சுரேஷ், குடுகுடுப்பை, ராஜு, யுவகிருஷ்ணா, ராதாகிருஷ்ணன் - வருகைக்கு நன்றி.

****
அவரை நான் படம் பாக்காம விமர்சனம் எழுதினேன்னு சொன்னதுனால டென்ஷன் ஆனார்.
****

ஒரு சின்ன திருத்தம். "எழுதினேன்" அல்ல "எழுதினார்" என்று வரவேண்டும்.

இரும்புத்திரை அரவிந்த் said...

தல இத கொஞ்சம் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..

கார்க்கி said...

//கார்க்கியோட வேட்டைக்காரன் பாடல் விமர்சனம் படிச்சுட்டு பாட்டு கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சி மனசு விட்டு சிரிச்சேன்//

ரொம்ப நாள் சிரிக்காமலே இருப்பதால் வந்த பிரச்சினை இது. psynil போன்ற மாத்திரைகள் சாப்பிடவும்.அல்லது எலுமிச்சை உத்தமம்.

சகா, விஜய் பாடல்கள் குத்துதான் என்பதை அறியாதவரா நீங்கள்? அல்லது என் விமர்சனத்தில் அவை மனதை வருடம் என்று சொன்னேனா? சில காலமாக உங்கள் நக்கலை என்னால் ரசிக முடியவில்லை. இது நக்கல் இல்லை கார்க்கி நிஜமா வெறுப்பு என்று சொலிவிட்டால் ஒதுங்கிக் கொள்வேன். :)))

மணிகண்டன் said...

புலி வருது பாட்டு சூப்பர் கார்க்கி.

இல்லைங்க நீங்க அவ்வளவு உருகி எழுதினதுல ரொம்பவே expectationல கேட்டேன். அது தான் பிரச்சனை.

வெறுப்பு எல்லாம் ரொம்பவே பெரிய வார்த்தை !)

கார்க்கி said...

:)))

Karthikeyan G said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அதிஷாவோட அந்தப் பதிவுக்கு ‘தூள்’ போட்டது சும்மா :) வேணும்னுதான் செஞ்சேன் :) அதிஷாகிட்ட வேணா கேட்டுப் பாருங்க :)//

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.. :(

☀நான் ஆதவன்☀ said...

//உங்களுக்கு முன்னாடி எல்லாம் விவாதத்துல analogy / out of context example பிடிக்காது. இப்போ பிடிக்க ஆரம்பிச்சி இருக்கு ! அதிஷா எழுதின analogyக்கே தூள் சொல்லி இருக்கீங்க. காலம் மாறி இந்த உளறல் கூட பிடிக்கலாம்.//

இத படிச்சு சிரிச்சுகிட்டே கீழே வந்தால் சுந்தர்ஜியோட பதில் இருக்குது :)

SanjaiGandhi said...

தூள் :-)

ஊர்சுற்றி said...

ஓ... இங்கிட்டு இப்படியெல்லாம் நடந்துதா!

செல்வேந்திரன் said...

:) :(

புருனோ Bruno said...

//
தீவிரவாதியா நாலு chimpanzee காட்டி இருக்கலாம். PETA, Blue Cross வராம இருந்தா.
//

:) :) :)

புருனோ Bruno said...

//நீங்கள் நடக்க முயற்சித்திருக்கிறீர்கள் என்று மட்டும்தான் இப்போதைக்கு கூறமுடியும்!
//

:) :)