Monday, October 19, 2009

மிருதுளாவின் நாட்குறிப்புக்கள் - சிறுகதை


ரமேஷ் வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 29 வருடம் - 3 மாதம் - 17 நாட்கள் ஆகின்றன. பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட். தனிவாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருபவன். அவனுக்கு திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவனது மனைவியின் சொத்து மதிப்பு இந்த க்ஷணத்தில் மதிப்பிட்டால் 63 கோடிக்கும் மேல். அழகானவள். ரமேஷிடம் ஆத்மார்த்தமான அன்பு கொண்டவள். செஸ் விளையாட்டில் GM பட்டம் பெற தகுதி பெற்றவள். அவளது பெயர் மிருதுளா.

அவனின் வாழ்க்கைக்குறிப்பை மேலும் எப்படி தொடர்வது என்று எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

"தனது கையில் இருந்த பந்தை விட்டெறிந்து 42' இன்ச் Plasma தொலைக்காட்சியை எப்பொழுது உடைக்கிறானோ அதனுடன் நிறுத்திக்கொள்ளேன்" என்று மிருதுளா கூறியதாக ரமேஷ் என்னிடம் சொன்னான். அப்படிச் செய்தால் அவன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தியது எழுதப்படாமலே போய்விடுமே. அதனால்.

ரமேஷ் தனது 23வது வயதில் சுவீடனில் வசித்து வந்தபோது ஒரு ski ரெசார்ட்டில் மிருதுளாவை சந்தித்தான். இருவருக்கும் மலையேற்றம் ஒரு விருப்பமான விளையாட்டு என்பது புரிந்தது. 2001 - 2003 வரை சிலி மற்றும் டான்சானியாவில் உள்ள பல மலைக்குன்றுகளை ஒன்றாக hike செய்தனர். ஆனால் ஏனோ அதன்பிறகு இன்றுவரை வேறு எந்த hiking செய்யவும் இல்லை / அனுபவத்தைப் பற்றி பேசுவதுமில்லை. ஒரேயொருமுறை மிருதுளாவின் தோழி நன்றாக குடித்திருந்த சமயத்தில் அவளிடம் கிளிமஞ்சாரோவை ஏறியவுடன் வெறுமையாக உணர்ந்ததாக ரமேஷ் கூறியுள்ளான். காரணம் தெரியவில்லை. ரமேஷிற்கு.

சுலக்ஷ்னாவை கத்தியால் குத்த என்ன காரணம் இருக்கமுடியும் ? அவளைப் பற்றி ரமேஷிடம் கேட்டால் ஒரே வார்த்தையில் "வெதுவெதுப்பானவள்" என்று கூறுவான். அதன் அர்த்தம் என்னைப்போலவே பலருக்கும் புரியாததால் அவளின் குணங்களை விரிவாக ஆராய வேண்டும். பிறகொரு சமயத்தில்.

மிருதுளா/ரமேஷ் இருவரும் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வந்தனர். பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே. மனஅமைதி தேவைப்பட்டால் தோழன் தோழி மற்றும் நைட் கிளப். உடல் அசதியை போக்க Sauna மற்றும் Massage. மிருதுளாவும் ரமேஷிற்கு massage செய்வது உண்டு. அவளுக்கு Acu-Puncture கூட தெரியும் என்று ரமேஷ் பெருமைபட்டுப்கொள்வான். அந்தரங்கமான எந்த விஷயத்தையும் அவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதில்லை. ஒருசமயம் அவர்களுக்கு ஒரு ஆன்மீக குருவின் அறிமுகம் கிடைத்தது. ஆன்மாவை சொஸ்தப்படுத்த அவரின் வழிமுறைகளை நாடினார்கள். மசாஜ் செய்யப்படும்போது massaeurயின் கைகள் வலிக்குமோ என்று ரமேஷிற்கு தோன்ற ஆரம்பித்தது அவரின் அறிமுகத்துக்கு பிறகு தான். மசாஜ் மற்றும் ஆன்மிகம் - இரண்டையும் விட்டு விலகி வந்தான்.

சுலக்ஷனாவின் மூக்கு மற்றும் புருவம் மிகவும் நேர்த்தியானது.அவள் மிருதுளாவிற்கு வியன்னாவில் அறிமுகமானாள். ஆஸ்திரிய பெண்களும், சிறுவயதில் பார்த்த ஸ்ரீரங்கத்து பெண்களும் ஒரே இனமாக இருக்கவேண்டும் என்று மிருதுளா கூறுவதாக ரமேஷ் என்னிடம் பலமுறை கூறியுள்ளான். அவனுக்கு சுலக்ஷனா செய்யும் Schnitzel மிகவும் பிடிக்கும். அதற்கெனவே அவளிடம் அடிக்கடி செல்வான். மிருதுளாவிற்குப் பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்பு ரமேஷ் ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணிநேரங்கள் பணிபுரிவான். ஹைபர் ஆக்டிவ்வாக இருப்பான். அதற்கென neuro enhancement drug உபயோகித்ததாக கூறுவான். அதனால் எந்த கெடுதலும் இல்லை என்பது அவனுக்கு அப்பொழுதே தெரியும். அடராள் / ப்ரொவிஜில் பயன்படுத்தினான் என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு மில்லிகிராம் என்று என்னிடம் சொன்னதில்லை. எதேச்சையாக ஒருமுறை தொலைக்காட்சி ரிமோட்டை நோண்டியபோது மைஜென்டிவி என்ற ஒரு சேனல் அறிமுகம் ஆனதாம். அதில் வந்த யோகாவால் கவரப்பட்டு தனது காது மற்றும் மூக்கை விரல்களால் சுழட்டி பார்த்தான். முதல் பதினைந்து நிமிடத்திற்கு மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்ததாம். பிறகு தான் நான் முன்பு கூறியதுபோல் பக்கத்தில் இருந்த பந்தை விட்டெறிந்து தொலைக்காட்சியை உடைத்தான். இத்துடன் இந்தக்குறிப்பை முடித்துக் கொள்ளவேண்டியது தான். ஏனென்றால்.

இப்பொழுதும் அவன் ஏன் சுலக்ஷனாவை கத்தியால் குத்தினான் என்பதை எழுத முடியவில்லை. கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதைத் தவிர.

ரமேஷ், தன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், அதற்கான காரணங்களையும் விலாவாரியாக நாட்குறிப்பில் எழுதவேண்டும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவான். படிப்பவர்களின் அனுமானத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் கடுமையாக இருந்தான். நானும் அப்படியே எழுதியுள்ளேன்.

மிருதுளா, சுலக்ஷனாவிடம் இருந்த தனது தொடர்பை துண்டிக்கமுடியாமல் ரமேஷின் உதவியை நாடினாள் என்றே சந்தேகிக்கிறேன். வேறு எந்த அனுமானமும் நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதால் இதை எழுதுகிறேன். அதைத்தவிர அவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டம் இல்லை.

இப்படிக்கு இனியாள்.

பின்குறிப்பு - எனக்கு மிருதுளாவை அதிகம் தெரியாததால் மிருதுளாவின் நாட்குறிப்புக்களை எழுதமுடியவில்லை. தெரிந்தவர்கள் எழுதலாம்

முற்றும்).

24 comments:

மணிகண்டன் said...

இது தொடரின் முதல்பகுதி ஆவதால் அனைவரும் தமிழ்மணம் மற்றும் தமிளிஷ் வாக்கு செலுத்துமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

தொடர விருப்பபடாதவர்கள் தமிழ்மணத்தில் +ve வோட்டு அளிக்கவேண்டும்.

பீர் | Peer said...

ந.இலக்கியவாதிகள் மேடை ஏறுவதற்கு முன்னால், என்னுடைய மலர் மாலையை மாணிக்க...

வாழ்த்துக்கள் மணி.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள் மணி

மணிகண்டன் said...

வாழ்த்துக்கள் எதுக்கு ?

பீர் | Peer said...

ம்.. தொடர ஆரம்பிச்சதுக்கு...

பீர் | Peer said...

ஆமா.. Schintzel அப்டின்னா என்ன? Schnitzel?

மிருதுளா ஸ்ரீரங்கத்து பொண்ணா?

(இப்பவே மூச்சு முட்டுதே.. நான் எப்டி கதையை முடிக்க போறேன்)

மணிகண்டன் said...

http://en.wikipedia.org/wiki/Wiener_Schnitzel

மிருதுளா பத்தி இனியாள் கிட்ட தான் கேக்கணும் :)- ஆனா, அவளுக்கும் அதிகம் தெரியாதாம்.

கதையை எதுக்கு முடிக்கணும் ? :)-

பீர் | Peer said...

Schnitzel, ஒரு என் மாறினதுல்ல என்னா குழப்பமா போச்சு ;)

அட... ஆமா.. கதையை முடிக்க வேண்டாம்ல. ரெண்டு வரி வந்திருக்கு அதோட போஸ்ட் பண்ணிடவா?
ச்சே வேண்டாம்.. இன்னும் ஷ்ரிங்க்ராப் பண்ணினா பேலட் ஸ்டார்ங்கா இருக்கும், ஸேஃபா டெலிவர் ஆகும். சுத்துறேன் ;)

மணிகண்டன் said...

"n"changed.

Anonymous said...

தொடரின் முதல் பகுதிலயே முற்றும்னு போட்டுட்டீங்க :)

மணிகண்டன் said...

@அம்மிணி

முதல் பகுதி முற்றும்ன்னு அர்த்தம் :)-

கோபிநாத் said...

தல ஒரு மாதிரி புரியுது...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

மணிகண்டன் said...

வாங்க கோபிநாத். அடுத்த பகுதி நிச்சயமா புரியும். யாராவது எழுத தெரிஞ்சவங்க எழுதுவாங்க.

செந்தழல் ரவி said...

very nice start. keep going. avoid english in between.

மணிகண்டன் said...

நன்றி ரவி. அடுத்த முறை நோ இங்கிலீஷ்.

Anand said...

Dei...unnai ellam Sriramapurathu veedula thatti vechu irukanum.

மணிகண்டன் said...

Anand :)- No !

ஜகன்மோகினன் said...

பாஸ்! சிறுகதைனு போட்டுட்டு தொடரும்னு சொல்றீங்களே .. இதுக்கு பேருதான் பின்னவீனத்துவமா!

இந்த கதைய நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்

மணிகண்டன் said...

இந்த கதையின் கடைசியில் முற்றும் என்றே வருகிறது :)- ஆதலால் மீண்டும் படியுங்கள்.

இந்த சிறுகதையை தொடர வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கதை நான் எதிர்பார்த்தது போலவே திராபையாக இருக்கிறது.

அது 42’ இன்ச்? 42’ என்றால் 42 அடி. உடைக்க வேண்டியதுதான், அதற்கென்று இப்படியெல்லாம் கண்டபடி உடைக்கக் கூடாது என்பதை ஸ்ம்ரனாஃப் அருந்தியபடி நான் விமானத்தில் செல்லும்போது கூடவே தரையில் ஓடிவந்த காண்டாமிருகம் சொல்லிச் செத்துப் போனது. அதன் முதுகிலிருந்த புறா தன் வெண்மையான மெல்லிய சிறகுகளால் என் கன்னத்தைத் தொட்டுத் தடவ அருகிலிருந்தவர் கால்களில் ரத்தம்!

மணிகண்டன் said...

****
இந்தக் கதை நான் எதிர்பார்த்தது போலவே திராபையாக இருக்கிறது.
*****

:)- வேற எப்படி இருக்கமுடியும் ?

****
அதன் முதுகிலிருந்த புறா தன் வெண்மையான மெல்லிய சிறகுகளால் என் கன்னத்தைத் தொட்டுத் தடவ அருகிலிருந்தவர் கால்களில் ரத்தம்!
****
அந்த ரத்தத்தை குடித்ததால் தான் சுலக்ஷனா வெதுவெதுப்பாக இருந்து இருக்கவேண்டும். கொட்டாவி விடும்போது அவள் வாயில் இருந்த கங்காரு ரமேஷ் வழியாக அப்படித்தான் சொல்லியது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்த விளையாட்டு நல்லா இருக்கே :)

Krish said...

Mani Sir,

Final'a enna solla varigana..?

--Krish

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கதை சொல்லுறீங்களா, அல்லது கதை விடறீங்களா என்றே தெரிய வில்லை.

வடிவேலு பாணியிலே சொல்லுவது என்றால்......

"புரியுது......ஆனா புரியலே"