Monday, October 26, 2009

கடைசியில் ஒரு திருப்பம் (சர்வேசன் 500 நச்ன்னு ஒரு கதை 2009 போட்டிக்காக)


ஒரு பத்திரிகைக்கு நாளை மறுநாள் கதை அனுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளேன். ஏனோ எழுதிவைத்த கதைகளை அனுப்ப மனம் இடம்கொடுக்கவில்லை.

- இந்த பத்திரிகை வாசகர்களுக்கு தகுந்த மாதிரியான சிறுகதைகள் அவற்றுள் இல்லை.

- என்னிடம் இருக்கும் கதைகளை இந்த பத்திரிகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை. அதைத்தவிர, இது போட்டிக்கான சிறுகதை. இப்போட்டியின் விதிமுறைப்படி கடைசியில் ஒரு திருப்பம் இருக்கவேண்டும்.

- பலராலும் அறியப்பட்ட நான் போட்டியில் கலந்து கொள்வது குறித்து எனது முதன்மை வாசகியான பத்மா வருத்தம் தெரிவித்தாள்.இதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

- போட்டியின் முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டது தான்.

- முடிவும் நான் அறிந்ததே.

- எழுத்தையே தொழிலாக கொண்ட எனக்கு இதுவரை கதைக்கருவுக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. ஆனால் இன்று ஏனோ வறட்சி. கடந்த ஆறு வருடங்களாக எழுதாதது கூட காரணமாக இருக்கலாம்.

- கதை எழுத எப்பொழுது முயன்றாலும் ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்வது எனக்கு வழக்கம்.

இன்றும் நடக்கத் தொடங்கினேன். பழைய கதைகளுக்கு வந்த விமர்சனத்தை அசை போட்ட படியே நடந்தேன். நான் எழுதிய கதைகள் பலதும் வேறு யாரிடமிருந்தாவது எடுத்தாளப்பட்டதே ! ஆதலால் விமர்சனங்கள் என்னை பாதித்ததே இல்லை. அத்திபூத்தாற் நானே சொந்தமாக எழுதும் கதைகளை பிரசுரத்துக்கு அனுப்புவதே இல்லை. எந்த பத்திரிகையும் பதிப்பகமும் அதற்குரிய தகுதியை அடையவில்லை என்பதே எனது வாசகிகளின் கருத்து. நடந்ததில் பத்மாவின் வீட்டருகே வந்துவிட்டேன். ஜன்னல் வழியாக மிதுன் என்னைப் பார்த்து முறைத்தான். சிறு புன்முறுவலோடு அவனைக் கடந்தேன். பத்மாவை மணம் புரிவதற்கு முன்பு அவனுடன் நான் சிறிது காலம் நட்பாக பழகியுள்ளேன். அதன்பிறகு ஏனோ ஒரு இடைவெளி. இன்னும் சிறிது தூரத்தில் ரமேஷ். அவனையும் கடந்தால் சிறிது இடைவெளிவிட்டு முனைவீட்டில் பிரவீன். நடையின் வேகத்தை சற்றே தளர்த்தினேன். நட்பு, காதல் எதுவுமே எனக்கு நிலையானதாக இருந்ததில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் அதற்கான காரணம் என் அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.

ம்ம்ம் நினைவை கலைத்துக் கொண்டே நடந்தேன்.

- சிறுகதை என்பது ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கான நிகழ்வை அழகாக கூறுவது என்று பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன்.

இன்று ஏனோ ஒரு குறுநாவலுக்கான கருவே மனதில் தோன்றுகிறது. நாளை தொலைபேசியில் கதை அனுப்ப முடியாது என்று தெரிவித்துவிட வேண்டியது தான். அதுதான் நியாயமும் கூட. இல்லையென்றால் திருப்பம் கொடுப்பதற்கு மெனக்கெட வேண்டியிருக்கும். இல்லாத கதையில் முடிவு எழுதுவதே கடினம். அதிலும் ஒரு திருப்பம் வேறு என்றால் படிப்பவருக்கு எரிச்சலே மேலிடும். எனக்கென்ன காசா பணமா ? நான் கதையை திருப்பிப் படிக்கக் கூட வேண்டியதில்லை. படித்தாலும் சிரிப்பு தான் வரும். பத்திரிகை ஆசிரியர் மற்றும் வாசகனின் தலையெழுத்தை நினைத்து. நொந்தபடியே தெருவின் எல்லைக்கு வந்திருந்தேன்.

இனி திரும்ப வேண்டும். வலது புறத்தில் ஒரு திருப்பம் இருந்தது.

38 comments:

நசரேயன் said...

//வலது புறத்தில் ஒரு திருப்பம் இருந்தது. //

ஆமா இருக்கு

கோபிநாத் said...

நல்லாயிருக்கு தல ;)

பீர் | Peer said...

நல்லா திருப்புறாய்ஙய்யா... நச்ன்னு கதைய. :)

வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

திருப்பம் இருக்கு

Anonymous said...

//பீர் | Peer said...

நல்லா திருப்புறாய்ஙய்யா... நச்ன்னு கதைய. :)

வாழ்த்துக்கள்.
//

ரிப்பீட்டேய். :)

பிரபாகர் said...

நம்ம மணின்னாவே பயங்கர திருப்பம் இருக்கும்னு நினைச்சிட்டே படிச்சிட்டு வந்தேன். இந்த மாதிரி திருப்பம் மயக்கத்தையே கொடுத்திடுச்சி.

பிரபாகர்.

வால்பையன் said...

என்கிட்டயும் ஒரு தீம் இருக்கு!

அந்த சர்வேஷனோட லிங்க் கொடுங்க!
நானும் ஒண்ணு எழுதிடுறேன்!

வித்யா said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

☀நான் ஆதவன்☀ said...

இப்படி பட்ட திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை :)

ஆனா இதை விட 2007ல சர்வேசன் போட்டிக்காக நம்ம குசும்பன் “ஊசி கொண்டை வளைவை”யே பெரிய திருப்பமா கொடுத்திருப்பார். டைம் கிடைச்சா பாருங்க :)

மணிகண்டன் said...

இந்த கதை பிரபலமடைய தமிழ்மணம் தேவையில்லை என்று விட்டு இருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் சேர்த்துள்ளார் !

நசரேயன் - :)-

@கோபிநாத் - இது எல்லாம் ரொம்பவே அதிகம்.

@பீர் - எதுக்கு வாழ்த்துக்கள் ?

@ராதாகிருஷ்ணன் - இதுமாதிரி ஒத்துகிட்டதுக்கு நன்றி. இல்லாட்டி மறுபடியும் மறுபடியும் திருப்பம் கொடுப்பேன்.

@சின்னஅம்மிணி - நாம் competitiors. வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லக்கூடாது.

நன்றி பிரபாகர் :)-

@வாலு - எல்லாரும் இந்த மாதிரி தலைப்புல போட்டு எழுதினாங்க. நானும் அதையே செஞ்சேன். surveysan பதிவுல போய் பாக்கணும். ஒழுங்கா தீம் இருந்தா எழுதுங்க. நான் சப்மிட் பண்றேன் :)-

@வித்யா - நீங்க ஜட்ஜ் ஆக இருந்தா எனக்கு வெற்றி தான் :)-

@ஆதவன் - :)- குசும்பனோட கதையை தேடிக்கண்டுபிடிக்கறேன். இவரு இவ்வளவு வருஷமா போட்டி நடத்தறாரா ?

பீர் | Peer said...

ஒலக கத ஒரு முட்டு சந்துகுள்ள முடங்கிடக்கூடாதுல்ல...

பீர் | Peer said...

உண்மையிலேயே போட்டி நடக்குதா? :(

மணிகண்டன் said...

நன்றி பீர். ஆமாம் போட்டி நடக்குது.

Jegu said...

நல்ல திருப்பம்!

Sammy said...

கடைசியில் ஒரு திருப்பம்....எப்படிலாம் எமாத்துராங்கயா.

எப்படா கதை ஆரம்பிக்கும்னு படிச்சிட்டே இருந்தா, கதை வராம, திருப்பம் மட்டும் சரியாய் வந்திட்டு...

அன்புடன் அருணா said...

நல்ல திருப்பம்!!!!

மணிகண்டன் said...

ஜெகு, சாம், அருணா - நன்றிகள் பல.

பிரபாகர் said...

அந்த புண்ணியவான் நாந்தான்னு நினைக்குறேன்... சாரி மணி...

மணிகண்டன் said...

பிரபாகர், இதுக்கு எல்லாம் என்கிட்ட சாரி சொல்றது ரொம்பவே ஓவரு !
தமிழ்மணம் வழியா என்னோட இந்த பதிவை படிச்சவங்க கிட்ட தான் நீங்க கேக்கணும் :)-

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு. வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

thanks vigneshwari for your visit.

செந்தழல் ரவி said...

நச்சு கதை போட்டியில உன் பேரு டிஸ்ப்ளே ஆவுதா ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எல்லாம் சரி, திருப்பம் கேட்டாங்க, குடுத்தீங்க!

கதையில் நல்ல கரு இருக்கணும்னு சொல்லி இருந்தா?

(யப்பா....சர்வேசன் காப்பாத்திட்டார்!!!!!!!)

சுவாசிகா said...

நல்ல திருப்பம்யா :)

கொஞ்சம் பரபரப்பு கம்மினாலும் நல்லாவே இருந்தது

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

மணிகண்டன் said...

வாங்க ரவி. இப்பதான் ரூல்ஸ் படிச்சி சேர்த்துட்டேன். நன்றி.
பெ சொ வி - வருகைக்கு நன்றி. கரு கேட்டா முட்டை கதை எழுத வேண்டியது தான் :)-
சுவாசிகா - வருகைக்கு நன்றி.

திகழ் said...

நல்ல திருப்பம்

thenammailakshmanan said...

நட்பு, காதல் எதுவுமே எனக்கு நிலையானதாக இருந்ததில்லை. எவ்வளவு யோசித்து பார்த்தும் அதற்கான காரணம் என் அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.

fantastic words.........

MANIKANDAN anubavam pesugirathu

same blood....

thenammailakshmanan said...

என் அன்பின் சகோதரர் மணிகண்டன்

நீங்கள் அனுப்பிய தொடர் இடுகையை நான் தற்போதுதான் எழுதி உள்ளேன் ..

என் வலைத் தளத்துக்கு வருகை தந்து நன்றாக எழுதி இருக்கிறேனா என தெரியப்படுத்தவும்..

இவ்வளவு மிக நீண்ட இடுகை எழுதியதே இல்லை ...

எனக்கு இன்னொரு எக்ஸ்போஷர் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி
மணி கண்டன்

மணிகண்டன் said...

நன்றி திகழ்.
வருகைக்கும் தொடரை எழுதியதற்கும் நன்றி தென்னம்மை.

thenammailakshmanan said...

இது என்ன போட்டி மணிகண்டன்

இப்போதுதான் பார்க்கின்றேன்

சரளமாக உள்ளது

பெரிய கதையா

திருப்பங்கள் அதிகம்னு நினைக்கிறேன்

ராம்குமார் - அமுதன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்...

pappu said...

கொஞ்சம் பெரிய திருப்பம் தான்!

அப்படியே ஸ்டிரைட்டா போய் லெப்ட்ல திரும்புனா ஒருத்தர் பிள்ளையார் கோவில் வாசலில் பேப்பர் படிச்சிட்டிருப்பார். அவர்தான் ஒசாமா பின் லேடன்..

கதை நல்லாருந்துச்சு!

வருண் said...

அவர் கேட்ட மாதிரியே சிறுகதை, இதுவரை யாருமே யோசிக்காத புதுமையுடன், கடைசியில் நச்சுனு ஒரு திருப்பத்துடன் இருக்கு!

அட்வாண்ஸ் கங்க்ராட்ஸ் :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

திருப்பம், வந்துவிட்டதே....,

மணிகண்டன் said...

Thanks to thennamai, amudhan, pappu, varun and suresh.

கோமதி அரசு said...

வித்தியாசமான திருப்பம்.

வெற்றிப் பெற,வாழ்த்துக்கள்.

கே.ரவிஷங்கர் said...

நல்லா திருப்பினீங்க.மனது வைத்தால இதை விட நல்ல கதைகள் எழுத முடியும்.உங்களிடம் திறமை இருக்கிறது.

மணிகண்டன் said...

நன்றி கோமதி அரசு & கே ரவிசங்கர்.