Friday, October 16, 2009

கிச்சடி - 16 அக்டோபர்

போன வாரம் திடீர்னு நல்ல மழை. வழக்கம்போல ஏதோ ஒரு எடத்துக்கு போயிட்டு திரும்பி நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். சூர்யா / திரிஷா / ஸ்ரேயா / விஜய் / விக்ரம் க்கு மழைல நனைஞ்சா வீரம் / ரொமான்ஸ் எல்லாம் வருதே - நமக்கும் வருமான்னு பாக்க மழைல நடக்க ஆரம்பிச்சேன். விட்டு வெளுத்து வாங்கிடுச்சு. ஒவ்வொரு தூறல் போதும் பெரிய கல்லு வந்து உடம்புல விழற மாதிரி இருந்தது. சரியான வலி.அது போதாதுன்னு சரியான காத்து வேற. இங்க autumn சீசன் ஆரம்பிச்சுடுச்சு. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு. அந்த நேரத்துல ஒரு வினாடி கூட bore அடிக்கல. அதுனால இது ஒரு குட் அனுபவமா வரையறுக்கப்படுகிறது.

இனி வரும் கிச்சடிகளில் நான் அந்த வாரத்தில் ரசித்த பின்னோட்டங்களை வெளியிட இருக்கிறேன்.

சித்தூர் முருகேசன் சுந்தரின் பதிவில் எழுதியது.
"இனிமே இந்த மாதிரி மீட்டிங் எதுனா இருந்தா சித்தூர் வந்துரச்சொல்லுங்க. இங்கே புலி இருக்கு. சித்தூர் புலி http://www.chittoortigerckbabu.blogspot.com"
பின்னூட்டம் எனக்கு மிகுந்த எரிச்சலையோ / கோபத்தையோ / சிரிப்பையோ ஏற்படுத்தி இருந்தால் அவைகளை நான் ரசித்தவையாகவே வரையறுக்க இருக்கிறேன். ஏனென்றால் montonous boring momentsகளில் இருந்து விடுதலை அளிப்பதால்.

அலீம் தார் ஒரு நல்ல அம்பயர். அவர் ஒரு பேட்டியில் அம்பயர்கள் தவறு செய்வது இயல்பே. ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தானேன்னு சொல்லி இருக்கார். "அப்படின்னா ஸ்டீவ் பக்னர் extraordinary மனிதரா இருப்பாரோ" - அதுக்கு வந்த ஒரு கமெண்ட்.

World Wide Web கண்டுபிடித்தவருக்கு சிறந்த அறிவியல் நோபல் பரிசு கொடுக்கலாமா / கூடாதா ? இல்லை Basic Science ஆக தான் இருக்க வேண்டுமா ?

WWW கண்டுபிடித்த Tim-Berners-lee வெப்சைட் அட்ரஸ்களில் "//" சேர்த்ததிற்கு வெட்டப்பட்ட மரங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முற்றுபுள்ளி, கமா போன்றவைகள் இல்லாமல் எழுதும் பின்நவீனத்துவவாதிகளின் காரணமும் இது தானோ !

எனக்கு மிகவும் போர் அடிக்கும் தருணங்களில் மோகன்தாஸ் சச்சின் டெண்டுல்கரை பற்றி எழுதும் பதிவுகளையோ / ட்விட்டர்களையோ படித்தால் மனது ரிலாக்ஸாகிறது. அவர் இப்படி அடிக்கடி எழுதினா என் மூலமாக பல புண்ணியங்கள் சேரும்.

எனக்கு தமிழ்மணம் வைத்திருக்கும் நெகடிவ் வாக்கு பிடிக்கும்.பயங்கர interesting. இதை தமிழ்மணம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றே நம்புகிறேன். ஆனால் இந்த வாக்குகளை சேகரித்து வைத்து திடீரென்று ஒருநாள் ஒவ்வொருவரின் voting history வெளியிட்டால் இன்னுமே கலக்கலாக இருக்கும் :)- எனக்கு வந்த நூற்றுக்கணக்கான நெகடிவ் வோட்டுக்களை யார் இட்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

மன்னார்குடியில் நடக்க இருக்கும் குறும்படபோட்டியில் உண்மைதமிழனின் "புனிதப்போர்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன்.

18 comments:

T.V.Radhakrishnan said...

கிச்சடி சூடாக இருந்தது..மழை சமாச்சாரம் இருந்தும்

☀நான் ஆதவன்☀ said...

அட சென்னையிலயா இருக்கீங்க? தீபாவளி வாழ்த்துகள் :)

’ரசித்த பின்னூட்டம்’ வித்தியாசமான முயற்சி.

நெகடிவ் ஓட்டு. பலபேர் பலவிசயங்களில் எடுத்துள்ள உண்மையான நிலையை அறிய வாய்ப்பாக இருக்கும் தான். ஆனால் அப்படி பேரு வெளியிட்டா நெகடிவ் ஓட்டு போட ஒரு அனானி ஐடி வச்சுப்பாங்களே?

பிரபாகர் said...

மணி,

அவிங்க நனையிறது சுடுதண்ணி மழைல, நனைஞ்சாலும் கலையாத மேக் அப்போட.

வாரிசுக்கு முதல் தீபாவளில்ல? ம்... கலக்குங்க மணி.

பிரபாகர்.

பீர் | Peer said...

இதே மாதிரி ரசித்த பின்னூட்டங்களை நானும் வெளியிட ஆரம்பித்தால், ஒவ்வொரு ஜிகர்தண்டாவிலும் உங்களுடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்படிக்கும்.

யூ ஆர் தி பெஸ்ட் பின்னூட்டர்.

பிரபாகர் said...

//இதே மாதிரி ரசித்த பின்னூட்டங்களை நானும் வெளியிட ஆரம்பித்தால், ஒவ்வொரு ஜிகர்தண்டாவிலும் உங்களுடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்படிக்கும்.

யூ ஆர் தி பெஸ்ட் பின்னூட்டர்.
//

சரிதான். படித்துவிட்டு முழுமையாய் பின்னூட்டமிடுபவர்களுள் மணிக்குத்தான் முதலிடம்.

பிரபாகர்.

பீர் | Peer said...

பிரபாகர்,

நீங்களும் என் லிஸ்ட்ல இருக்கீங்க.. இங்க போய் பாருங்க

பிரபாகர் said...

இந்த இடுகையை ஓரிரு நாட்கள் தாமதமாய் கவனித்தேன் பீர். படித்தது முதல் பின்னூட்டமிடும்போதெல்லாம் உங்களை நினைத்துக்கொள்வேன்... என்னை கவனித்து குட்டிய இருவரில் நீங்களும் ஒருவர். மற்றவர் யாரென்றால்.... அவரது பதிவில்தான் நாம் கும்மியடிக்கிறோம்

பிரபாகர்.

Sammy said...

//சென்னையில் இருப்பவர்களின் கவனத்திற்கு :- எனது மகனுக்கு வெடிச்சத்தம் பிடிக்காததால் / அவனது தூக்கம் கலைவதால் இந்தவருடம் சென்னையில் வெடிப்பதற்கு தடைவிதிக்கிறேன். ///

பலகாரம் கொடுத்தால் மட்டுமே ஒத்து கொள்ளப்படும்.

டண்டனக்கா டமிலன் said...

உமக்கு இதுவரைக்கும் டமில்மணத்துல மொத்தமா பத்து வோட்டு கூட விழுந்தது கிடையாது.....இதுல நூத்துக்கணக்கான நெகடிவ் வோட்டா

புருனோ Bruno said...

”கால் செண்டர்” போன்ற மறுமொழிகளுக்கும் இடம் உண்டா ??

மணிகண்டன் said...

புரியலையே ப்ருனோ ?

மணிகண்டன் said...

நன்றி TVRK

ஆதவன் - என்னோட பையன் சென்னைல இருக்கான். நெகடிவ் வோட்டு வரலாறு திடீர்னு வெளியிட்டா இத்தனை நாள் யாரு போட்டாங்கன்னு தெரியுமே. அது நல்லா இருக்கும்.

பிரபாகர் - அது தெரியாம தான் மழைல போய் நின்னேன். ஆமாம். பையனுக்கு முதல் தீபாவளி.

பீர் - இது மாதிரி சொன்னா எனக்கு பதில் எழுத வராது :)- நன்றி.

sammy - சென்னைல வீட்டுக்கு போங்க. பையனை விட்டு மூச்சா அடிக்க சொல்றேன் :)-

டண்டனக்கா - நீங்க ஒழிக !

வருகைக்கு நன்றி ப்ருனோ.

Krish said...

//. நான் வழக்கம் போல, செருப்பு / அரைடவுசர் வேற போட்டுக்கிட்டு போயிருந்தேன். கொஞ்ச நேரத்துல பாதம் எல்லாம் விறைச்சிபோயிடிச்சு. வீட்டுக்கு வந்து சேர முக்கால்மணி நேரம் ஆச்சு.//

Mani Sir,
wife illana ippo evalvu Kashtam'nu theiruyuda..?

மணிகண்டன் said...

கிருஷ், மனைவி இருந்தா மழை வராதா ?

Anonymous said...

:)-

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

மிகுந்த ஆச்சரியம். எந்த அளவிற்கு நீங்கள் உள் வாங்கிஇருக்கிறீர்கள் என்பதை உங்களை மரியாதையின் மூலம் உணர்ந்து கொண்டேன்.

நன்றி மணிகண்டன்.

மணிகண்டன் said...

@jothi - Your blog is pretty good. Keep writing. thanks for the visit.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நன்றி மணிகண்டன்.