Monday, December 21, 2009

மார்கழி

அழகழகான வடிவங்கள். நேர்கோடாக, சுழிசுழியாக, வளைவாக

மெலிதான குளிர். குறுக்கும் நெடுக்குமாக, குனிந்தும் எம்பியும் வடிவத்தை சமன் செய்யும் பெண்கள்.

விதவிதமான வண்ணங்கள், கலர்பொடிகளின் எல்லைக்கு உட்பட்டு.

எண்ணங்களின் பிரதிபலிப்பாக, அழகியலின் அளவுகோளாக, கற்பனையின் எல்லையாக.

நைட்டியின் மேல் துண்டோடு, வெளிர்நீல சுடிதாரோடு

சாணத்திற்கு நடுவில் செம்பருத்தியும், சூரியகாந்தியும்.

தலையை துவட்டியபடியே, புத்தம் புதிதாக, வாசனையாக அருகில் வந்தமரும் எனது மனைவி.

என்னடா செல்லம் யோசிச்சிக்கிட்டு இருக்க ? விழித்தெழுப்பிய அவளது குரல்.

இல்லடி. மழை சோன்னு கொட்டினா எப்படி இருக்கும் !

15 comments:

Anonymous said...

//மழை சோன்னு கொட்டினா எப்படி இருக்கும் !//

என்னா வில்லத்தனம் :)

மணிகண்டன் said...

வாங்க சின்ன அம்மிணி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு மணி..

^

^

^

^

^


^


^


^


^


^

நான் சொன்னது உங்க குரூர என்னத்தை

மணிகண்டன் said...

@tvrk

ஒருவருஷம் முன்னாடி இந்த பதிவை பார்த்தப்ப நல்லா இருக்கு மட்டும் தான் சொன்னீங்க :)-

அன்புடன் நான் said...

மிக நல்ல ரசனை.... குளிர்வருடுகிறது!

நாஸியா said...

அட எப்படி எல்லாரும் இப்படித்தான் யோசிப்பீங்களா? என் தம்பியும் இப்படித்தான்

Athisha said...

நல்ல வாசிப்பனுபவம் !

Vidhya Chandrasekaran said...

நான் போட நினைச்சதை சின்ன அம்மிணி போட்டுட்டாங்க.

Raju said...

அண்ணே, நீங்களும் நானும் ஒரே கேரக்டர் போல்யே.

oh..Athisha is Alive.
:-)

creativemani said...

ஊருல ஒரு பொண்ணு விடாம சைட் அடிச்சிட்டு, என்னான்னு பொண்டாட்டி கேட்டா, மழை வருமான்னு யோசிக்கிறேன்னு டகால்டியா? யாருங்க அந்த கதையோட ஹீரோ??
:)

மணிகண்டன் said...

கருணாகரசு - உங்கள் முதல் வருகைக்கு நன்றி

நாசியா - நானும் உங்கள் தம்பி மாதிரி நல்லவன் தான்.

வாங்க ஆதவன்.

நன்றி வித்யா.

ராஜு - வருகைக்கு நன்றி. அதிஷா கொஞ்ச நாளா வானத்துல பறந்துகிட்டு இருக்காரு :)-

அதிஷா - அப்படின்னா என்னன்னு மரியாதையா சொல்லுங்க !

மணிகண்டன் said...

என்னங்க இப்படி ஒரு கேள்வி :)- அந்த கதையோட ஹீரோ மணிகண்டன் தான் ! அன்புடன் - மணிகண்டன் :)-

creativemani said...

ஹா.. ஹா.. ஹா... ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருக்கறதுனால எவ்வளோ சௌகர்யம் பார்த்தீங்களா?

கா.பழனியப்பன் said...

மார்கழி சும்மா ஜில்லுனு இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
@tvrk

ஒருவருஷம் முன்னாடி இந்த பதிவை பார்த்தப்ப நல்லா இருக்கு மட்டும் தான் சொன்னீங்க :)-//

அப்போ மணிகண்டனை மணிகண்டன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்..இப்போ மணி ன்னு சொல்றேனே ..அதுபோலத்தான்