Friday, November 6, 2009

சிறுகதை - கல்யாணம்

டேய், உனக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியல. நீ அடிச்சி இருக்கற கூத்துக்கும், உன்னோட ரசனைக்கும் ஒரு கிராமத்து பொண்ணு கேக்குதாடா ? குடும்ப சகிதமாக கிராமத்தில் பிறந்து வளர்ந்த செம்பருத்தியை பெண் பார்க்க சென்று கொண்டு இருந்த ரவியை நோக்கி கேள்விகனையை வீசினான் மூர்த்தி.

கொஞ்சம் அடக்கி வாசிடா! கிராமத்துல யாராவது கேட்டுட்டு தப்பா நினைச்சிக்க போறாங்க என்று நண்பனை அடக்கியவாரே நடந்தான் தாயின் விருப்பத்திற்காக கல்யாணத்தில் நாட்டம் கொண்ட ரவி. பெண் வீட்டில் ஒரு படையே கூடி இருந்தனர். பெண்ணின் தந்தை பிள்ளை வீட்டினரை வரவேற்று உட்கார வைத்தார். வழக்கம் போல், போண்டா மற்றும் காபி கொண்டு வந்தாள் செம்பருத்தி.

பெரியவர்கள் செம்பருத்தியையும் ரவியையும் தனியே பேசுமாறு விளித்தனர். பம்பரம் போன்று சுழன்று செம்பருத்தியின் கூட பிறந்தவர்கள் அனைவரையும் கவனித்தனர். தோட்டத்தில் செம்பருத்தி ரவியிடம் அவளது காதலனை பற்றியும், குடும்பப்பகை பற்றியும் கூறி, தன்னை தயவு செய்து நிராகரிக்குமாறு கெஞ்சினாள். திரும்பி வந்த ரவி தனது பிடித்தத்தை தெரிவிக்க பெண் வீட்டினர் திடுக்கிட்டனர். பெண்ணின் பாட்டி தனது மகனிடம் சென்று "இது எல்லாம் இப்போ சகஜமா நடக்கிறது தான். உன்னோட பசங்க, பையன் முன்னாடி வந்து நிக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது. சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணிடு " என்று கூற ரவியின் திருமணம் செம்பருத்தியின் தம்பி சங்கருடன் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் இனிதே நடந்தேறியது !

( எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை )

16 comments:

அதிஷா said...

கதை நல்லாருக்கு..

லேபிள்ல அது என்ன ராணி முத்து

மணிகண்டன் said...

ராணிமுத்து - முதல்தர சிறுகதைகள் வரும் பத்திரிகை.
குமுதம் / விகடன் - இரண்டாம் தர
சிறு பத்திரிகைகள் மற்ற அனைத்தும் - மூன்றாம் தர

T.V.Radhakrishnan said...

மணி..உங்கள் திறமைக்கு இன்னும் சிறந்த கதைகளை படைக்கமுடியும்.முயலுங்கள்.

நவநீதன் said...

// எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரிந்த நபர்களுக்கான சிறுகதை //
என்னா ஒரு நக்கல்....!
நீங்களும் பிழைச்சுக்கிடுவீங்க.....!

கே.ரவிஷங்கர் said...

மணிகண்டன்,

கதை நல்ல இருக்கு.தயவு செய்து பாரா பிரித்து எழுதவும். படிப்பத்ற்கு
strain இல்லாமல் இருக்கும்.

நான் ராதாகிருஷ்னண் பதிவிலிருந்து
இஙுகு வந்தேன்.
வாங்க நம்ம வலைக்கு நம்ம சிறுகதைகள் (ஆறு இருக்கு)/கவிதைகள் படிச்சு கருத்துச் சொல்லுங்க.

மணிகண்டன் said...

ரொம்ப நன்றி ராதாகிருஷ்ணன் சார். நிச்சயமாக முயலுவேன்.

மணிகண்டன் said...

நவநீதன், நான் சின்ன வயசுல இந்த மாதிரி ஒரு சில கதைகள் வாசிச்ச ஞாபகம் இருக்கு. அதுக்கு அப்புறம் ஒருபக்க கதைனாலே ஓடி போய்டுவேன். (பெரும்பான்மையான கதைகள் லூசுத்தனமாவே இருக்கும்). முதன்முறையா கதை எழுதின என்னோட தராதரம் நல்லாவே புரிஞ்சதுனால அந்த இடைசொருகல். (வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி நம்பளே முந்திக்கறது)

மணிகண்டன் said...

ரவிசங்கர், இனிமே நிச்சயமா எக்ஸ்ட்ரா strain கொடுக்கமாட்டேன். பத்தி, பத்தியா பிரிச்சி எழுதறேன்.

உங்க வலைப்பதிவுக்கு நிச்சயம் வருகிறேன்.

Cable Sankar said...

க்ளைமாக்ஸ் சூப்பர்.. எழுத்து கூட்டி ஒரு வழியா படிச்சிட்டேன்.

மணிகண்டன் said...

ரொம்ப நன்றி சங்கர்.

RAMASUBRAMANIA SHARMA said...

THRU THIS STORY..WHAT THE AUTHOR WANT'S TO CONVEY..!!!..MARRIAGES BETWEEN MAN+MAN IS ACCEPTED EVEN IN VILLAGES OR IN STATES ONLY...NEED CLARIFICATION.

மணிகண்டன் said...

Author's duty is to write ! Whatever way you want to intrepret it, you are free to do so !

Anonymous said...

மணிரத்னம் வந்து உங்களுடன் சண்டை போடப்போகிறாராம்.
:-)

மணிகண்டன் said...

அனானி சார், இந்த சிறுகதைய படிச்சதுக்கு ரொம்ப நன்றி.

cheena (சீனா) said...

மேலாக படிச்சா ஒன்ணுமே புரியாது - கடசில வர முடிவு திரும்பத் திரும்ப படிக்கணும் - அப்பத்தான் புரியும் - படிச்சென் - புரிஞ்சுது

நல்வாழ்த்துகள் மணி

வானம்பாடிகள் said...

:) நல்லாருக்கே