Thursday, November 5, 2009

சச்சின் டெண்டுல்கரின் 11 + 1 ODI சதங்கள்

ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்து இந்தியா தோற்ற மேட்ச் எண்ணிக்கை - 11 + 1. இதை வைத்து சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற கண்ணோட்டத்தில்

http://blog.mohandoss.com/2009/05/3.html

கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

என்னிடம் நேரம் மிகுதியாக இருப்பதால், (பெயர் தேட/வைக்க எந்த நாயும் வளர்க்காததால்) இந்தியா தோற்ற அந்த 11 + 1 மேட்ச்கள் குறித்த கீழ்வரும் ஆராய்ச்சி.

0) சச்சின் - 175. அடுத்தபட்சம் அதிகமாக ரன் எடுத்தது சுரேஷ் ராயினா. அவர் எடுத்த ஓட்டங்கள் - 59. சச்சின் ஆட்டம் இழந்தபோது இந்தியா 17 பந்துகளில் 19 ரன் எடுக்கவேண்டிய நிலை. அவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இந்தியாவின் இலக்கு 351. இந்தியா 49.4 ஓவர்களில் 347 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

1) சச்சின் - 146. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் ஜாகீர் கான். அவர் எடுத்த ரன் எண்ணிக்கை 32. இந்திய அணி முதலில் பேட் செய்து 283 ரன்கள். சேஸ் செய்த ஜிம்பாபவ் கடைசி பந்தில், கடைசி விக்கட் மூலம் வெற்றி பெற்றது.

2) சச்சின் - 143. அடுத்தபட்சமாக இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்தவர் லக்ஸ்மன். அவர் எடுத்த ரன்கள் 35. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 284 ரன்களை சேஸ் செய்த பொழுது 250 ரன்களை மட்டுமே பெற்று தோற்றது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்த மேட்சின் முக்கிய நோக்கம் பைனலுக்கு தகுதி பெறுவதே. அந்த இலக்கை அடைந்த பிறகே சச்சின் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் தெரிந்த யாரும் மறக்கமுடியாத சதம். இதன் பிறகு நடந்த பைனலில் சச்சின் மறுபடியும் சதம் அடித்து இந்தியா வென்றது.

3) சச்சின் - 141 not out. அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை பெற்றவர் இர்பான் பதான். 64. இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 309. இதன்பின் விளையாடிய மேற்கு இந்திய அணி 141 ரன்களே எடுத்தபொழுது மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. DL method மூலம் WI வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

4) சச்சின் - 141. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். இந்திய அணி 329 ஓட்டங்களை சேஸ் செய்தது. 38 ஓவர்களில் இந்தியா 245 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சச்சின் நான்காவதாக ஆட்டம் இழந்தார். இந்தியா 48 ஓவர்களில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. சச்சினுக்கு பிறகு அதிக ரன்களை எடுத்த டிராவிட் 36 ரன்களை எடுத்தார் !

5) சச்சின் - 137. முதலில் பேட் செய்த இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 271. சச்சினுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கை எடுத்த அசார் 72 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இலங்கை 49 ஓவர்களில் இலக்கை அடைந்தது. இது இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி. மனோஜ் பிரபாகர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து off spin பவுலிங் போட்ட பந்தயம். ஜெயசூர்யா அருமையாக விளையாடிய ஆட்டம். சச்சின் தனது பத்து ஓவர்களில் நாற்பது ரன்கள் கொடுத்தார்.

6) சச்சின் - 123. முதலில் பேட் செய்த இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 315. அடுத்ததாக டோனி 47 ரன்கள் எடுத்தது குறிப்படத்தக்கது. சேஸ் செய்த பாகிஸ்தான் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

7) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்தியா எடுத்த மொத்த எண்ணிக்கை 226. சச்சின் சற்று மெதுவாகவே விளையாடி இருக்கிறார். அவரது strike rate 80. அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் குவித்த அசார் ஸ்டிரைக் ரேட் 59. அவர் எடுத்த ரன்கள் 58. இலங்கை 45 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றி பெற்றது.

8) சச்சின் - 110. முதலில் விளையாடிய இந்திய அணி எடுத்த எண்ணிக்கை 224. இலங்கை 44 ஓவர்களிலே சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன்களை எடுத்தது RR singh. அவர் எடுத்த எண்ணிக்கை வெறும் 35 ரன்கள்.

9) சச்சின் - 101. சவுரவ் - 127. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 279. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2001ல் நடைபெற்றது. இந்த ரன்கள் போதுமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் SA 49 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது.

10) சச்சின் - 100. இர்பான் பதான் - 65. டோனி - 68. இந்திய அணி எடுத்த மொத்த எண்ணிக்கை 328. சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்கு தெரியாத நிலையில் அடிக்கப்பட்ட சதம்.

11) சச்சின் - 100. இந்திய அணி - 226. அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த பெருமை manjrekar. 41 ரன்கள். சேஸ் செய்த பாகிஸ்தான் 190 ரன்களை எடுத்து DL method மூலம் வெற்றி பெற்றது.

சச்சின் சதம் அடித்து தோற்ற 11 + 1 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில்.

மிஞ்சி இருக்கும் இரண்டு + ஒன்று போட்டிகள் குறித்து 2) 0) மற்றும் 4) பார்க்கவும்.

84 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கிரிக்கெட் ஆராய்ச்சியாளராக இருக்கிறீர்கள் தல..,


உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த இடுகை மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மீதமுள்ள 31ல் வென்றுள்ளதே.... தல....

புருனோ Bruno said...

சூப்பர் தல !!!

//சச்சின் சதம் அடித்து தோற்ற 11 போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்தது 9 போட்டிகளில். //

அதில் எத்தனை போட்டிகளில் இரண்டாவது அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பந்து வீச்சாளர்கள் என்று பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது

//மிஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகள் குறித்து 2) மற்றும் 4) பார்க்கவும். //
அந்த விவாத்த்திலேயே அந்த இரண்டாவது ஆட்டம் குறித்து நான் பல முறை கோடிட்டு காட்டியிருந்தேன். இலக்கை அடைந்ததாக்வே கருத வேண்டியிருப்பதால் இதை 33-10 என்று பார்க்கலாம்.

//மீதமுள்ள 31ல் வென்றுள்ளதே.... தல....//
இது தான் என் முக்கிய கேள்வி
32 பெரிதா
11 பெரிதா :)


அதில்

புருனோ Bruno said...

தான் பங்கு பெற்ற அனைத்து ஆட்டங்களிலும் தனது அணியை வெற்றி பெற வைப்பவர் தான் மேட்ச் வின்னரா

அப்படி இல்லை என்றால் குறைந்த பட்ச சதவிதம் எத்தனை

இந்த கேள்வியை நானும் பல வருடங்களாக கேட்கிறேன். பதில் வருவதே இல்லை. (பதில் வந்தால் அதன் பிறகு என் தரப்பு பலமாகும் என்பதால்)

மணிகண்டன் said...

ப்ருனோ, படுத்து தூங்குங்க. நாளைக்கு பேசலாம்.

Anonymous said...

Are you working/worked in Digital GlobalSoft?

மணிகண்டன் said...

Yup. (worked)

Bruno said...

//ப்ருனோ, படுத்து தூங்குங்க. நாளைக்கு பேசலாம்.//

இப்பத்தான் எழுந்திருக்கிறேன் :)

முரளிகண்ணன் said...

கலக்கல். புருனோவை வழிமொழிகிறேன்

முரளிகண்ணன் said...

சுரேஷையும் வழிமொழிகிறேன்

Vidhya Chandrasekaran said...

ஆஜர் மட்டும் போட்டுட்டு நான் எஸ்ஸாகிறேன்.

மணிகண்டன் said...

****
இந்த கேள்வியை நானும் பல வருடங்களாக கேட்கிறேன். பதில் வருவதே இல்லை. (பதில் வந்தால் அதன் பிறகு என் தரப்பு பலமாகும் என்பதால்)
****

விடியற்காலைல நாலு மணிக்கு எழுந்து சச்சின் பதிவுகள் தேடி கமெண்ட் போடறீங்க. உங்களுக்கு புதுசா பதில் வேற கொடுத்து உங்க தரப்பை பலமாக்கமன்னுமா ?? !!!!! எல்லாரும் ரொம்ப பயப்படறாங்க உங்ககிட்ட !

சுரேஷ், முதல் வருகைக்கு நன்றி.

வித்யா/ முரளி - நன்றி.

நம்பர் 2 - வேறு எங்கோ போடவேண்டிய கமெண்ட் இங்கு வந்துள்ளது.

புருனோ Bruno said...

//விடியற்காலைல நாலு மணிக்கு எழுந்து சச்சின் பதிவுகள் தேடி கமெண்ட் போடறீங்க.//
ஹி ஹி ஹி

//உங்களுக்கு புதுசா பதில் வேற கொடுத்து உங்க தரப்பை பலமாக்கமன்னுமா ?? !!!!!//
உண்மையை சொல்லுங்க தல
வாய்மையே வெல்லும்

//எல்லாரும் ரொம்ப பயப்படறாங்க உங்ககிட்ட !//
உங்களை பார்த்தும் பயப்பட வேண்டுமா

1. விவாதத்திற்குள் நுழையும் முன்னர் குறைந்த பட்ச தகவல்களை சேகரித்துக்கொள்ளுங்கள்

2. subjectiveவாக இல்லாமல் objectiveவாக பேசுங்கள்

3. கருத்து - தகவல் - நம்பிக்கை வேறுபாடுகளை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்

4. தட்டச்சு பிழையாலோ அல்லது ஞாபக மறதியாலோ அல்லது சரியான விஷயம் தெரியாததாலோ அல்லது புரிதலில் குழப்பதினாலோ ஒரு தவறான கருத்தை / தகவலை தெரிவித்தால், அதை நீங்களாக உணர்ந்தவுடன் உடனடியான மன்னிப்பு கேட்டு தவற்றை திருத்தி விடுங்கள்.

மணிகண்டன் said...

ப்ருனோ,

***
உண்மையை சொல்லுங்க தல
வாய்மையே வெல்லும்
***

என்னைப் பொறுத்தவரை சச்சின் இந்தியாவின் most effective player. (one of) உலகத்தின் தலைச் சிறந்த பேட்ஸ்மனில் ஒருவர். மேட்ச் வின்னரா/ இல்லையா ? இது ஒரு சரியான கேள்வியே இல்லை என்பது என் கருத்து. ஆனால் சச்சின் விளையாடிய 21 வருடங்களில் உலக கோப்பையை வென்ற அணியில் ஒருமுறை இருந்திருந்தால் கூட இந்தளவிற்கு நெகடிவ் பேக்லாஷ் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

விவாதம் -

நீங்கள் கூறிய 4 பாய்ண்ட்களை விட முக்கியமான ஒன்று.

விவாதத்தை விட்டு எப்பொழுது வெளியே வரவேண்டும் என்பது தெரியவேண்டும்.

முடிந்தவரை படிப்பவருக்கு / விவாதிப்பவருக்கு அயர்ச்சி அளிக்காத வகையில் பேச / எழுத தெரிந்திருக்க வேண்டும்.

புருனோ Bruno said...

//நீங்கள் கூறிய 4 பாய்ண்ட்களை விட முக்கியமான ஒன்று. //

நல்லது தல. உங்களை பார்த்தும் அனைவரும் பயப்படுவார்கள் :) :)

மணிகண்டன் said...

இது யாரு தல ? நான் ஒண்ணும் சாருவின் ரசிகர் கிடையாதே ! எனது அடுத்த பதிவு உங்களுக்கு எப்படி முன்பே தெரிந்தது ???? ஹா ஹா

Samuel | சாமுவேல் said...

2. Desert Storm.

மணிகண்டன் said...

yup sam.

Samuel | சாமுவேல் said...

i can see that..there are many 'comment' specialist's comments in this post.

////என்னைப் பொறுத்தவரை சச்சின் இந்தியாவின் most effective player ///

i would'nt agree completely with your view. he has not performed well when going gets tough...and most importantly he has not motivated or been a successful captain.

மணிகண்டன் said...

***
i would'nt agree completely with your view. he has not performed well when going gets tough.
***

ok.

***
most importantly he has not motivated or been a successful captain.
***

So ?

Bruno said...

//. he has not performed well when going gets tough...//

இதற்கு உதாரணம் தர முடியுமா

going gets tough என்பது இறுதி போட்டி மட்டும் தானா

கால் இறுதி, அரையிறுதி தகுதி சுற்றில் வெற்றி பெறாமல் எப்படி இறுதி போட்டி செல்ல முடியும் (உதாரணம் உலக கோப்பை 2003, 2007)

Bruno said...

//most importantly he has not motivated or been a successful captain.//

அவர் sucessful காப்டன் இல்லை என்பது உண்மை

motivated காப்டன் இல்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

Samuel | சாமுவேல் said...

///. he has not performed well when going gets tough...///
//இதற்கு உதாரணம் தர முடியுமா //

அப்படி பண்ணவுங்க உதாரணம் தரேன் ...நீங்களே 'compare' பண்ணுங்க, அந்த மேட்ச் சுழ்நிலை மற்றும், அதன் முக்யத்துவம் பற்றி.

kapil dev against ZIm.
Steve Waugh against South Africa.

20 வருட career ல, he has played many world cups, played many matches, i am sure similar situations would have come when he was around. situations when everybody thinks it is all over and lost...do you think sachin can play similar innings like that in similar situations. Both innings were not in final's but it inspired the rest of the team to win the world cup. if his batting order is an excuse for this argument, the order itself proves he is not an effective player at tight situation’s,

////motivated காப்டன் இல்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா/////

as a captain he didn’t bring out the best from the rest of the team players.


///அவர் sucessful காப்டன் இல்லை என்பது உண்மை///

இவ்வளவு எளிதாக ஒத்து கொண்டதுற்கு மிக்க நன்றி

DHANS said...

my 2 cents
It was a game in the recently concluded India-Sri Lanka series, and he gave Tendulkar out lbw, but the ball had pitched outside leg stump. A couple of days after that game, I met Arjuna Ranatunga, and somehow the talk veered to Dharmasena. After praising him for being such a "character", Ranatunga went on: "Did you see that dismissal? I called him up later and asked him why he gave it out. Especially when he took so much time to think. Dharmasena told me that he felt it pitched on the leg stump. I told him, 'When you take so long to make a decision, remember, if you have doubt, don't give it.' And also told him, 'People have come to see Tendulkar bat, not you umpire!' And we both laughed."

DHANS said...

The best assessment of Tendulkar's masterpiece came from an Australian with a gift for the pithy phrase. Merv Hughes' language may usually have been colourful, even blue, but he was spot on when he turned to Border and said: "This little prick's going to get more runs than you, AB."



- Merv Hughes

thootruvoor thootratum pootruvoor pootratum en kadan viyaaduvathu mattume :)

புருனோ Bruno said...

//, i am sure similar situations would have come when he was around. situations when everybody thinks it is all over and lost..//

உதாரணமாக

1992 பாகிஸ்தானுடன் ஆட்டம்
1996ல் நடந்த ஆட்டங்கள்
2003ல் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுடன் ஆட்டங்கள்

எல்லாம் tough going இல்லையா !!

நீங்கள் சொன்ன இரு உதாரணங்களுக்கும் வருகிறேன்

கபில் தேவ் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு வந்தார். இறுதிப்போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்தது ஸ்ரீகாந்த. அணி வென்றது

ஸ்டிவ் வாக் தென் ஆப்பிரிக்காவுடன் ஆன போட்டியில் அடித்து அணியை இறுதி போட்டிக்கு கொண்டு வந்தார். அடிக்க கில்கிறிஸ்ட் இருந்தார்

நீங்கள் சொல்லாத ஒரு உதாரணம்

1996 முதலில் அதிரடியை கிளப்பிய ஜயசூர்யா அரை இறுதி மட்டும் இறுதி போட்டி இரண்டிலும் எத்தனை ஓட்டங்கள் பெற்றார் தெரியுமா

ஆனால் டி சில்வா இருந்தார்

--

எனவே ஒரே நபரால் முதல் சுற்றிலிருந்து இறுதி சுற்று வரை அனைத்து போட்டிகளும் சதமடிக்க முடியாது

கூட யாராவது உதவ வேண்டும்

--

2007ல் சச்சின் முதல் போட்டிகளில் கலக்க வில்லை. அணி அடுத்த சுற்றுக்கே செல்லவில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்

புருனோ Bruno said...

//do you think sachin can play similar innings like that in similar situations. Both innings were not in final's but it inspired the rest of the team to win the world cup//

கண்டிப்பாக

ஆனால் அப்படியும் அணி inspire ஆகாமல் இருந்தால் அவரது தவறு கிடையாது

நீங்கள் பழைய உலக கோப்பை ஆட்டங்களை எடுத்து பாருங்கள்

புருனோ Bruno said...

//. if his batting order is an excuse for this argument, the order itself proves he is not an effective player at tight situation’s, //

பிரச்சனை என்னவென்றால் அவர் effective ஆக இருக்கும் போது அது tight situation என்பது மாறி விடுகிறது.

law of averages படி அவர் சிக்கிரம் அவுட் ஆகும் போட்டிகளை மட்டும் நீங்கள் கணக்கிலெடுக்கிறீர்கள்

அது சரி

சென்ற வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த இரு இறுதி போட்டிகளும் உங்களை பொறுத்தவரை tight situations கிடையாதா

புருனோ Bruno said...

//
//அவர் sucessful காப்டன் இல்லை என்பது உண்மை//
இவ்வளவு எளிதாக ஒத்து கொண்டதுற்கு மிக்க நன்றி//

உண்மையை, scorecards சொல்லும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது

புருனோ Bruno said...

//அப்படி பண்ணவுங்க உதாரணம் தரேன் ...நீங்களே 'compare' பண்ணுங்க, அந்த மேட்ச் சுழ்நிலை மற்றும், அதன் முக்யத்துவம் பற்றி.

kapil dev against ZIm.
Steve Waugh against South Africa.//

அதே ஸ்டிவ் வாக் பற்றி பேசும் போது 1996 உலக கோப்பையை ஏன் மறந்து விடுகிறீர்கள்

சச்சினை பற்றி பேசும் போது இந்தியா தோற்ற ஆட்டங்களையும், பிற வீரர்களை பற்றி பேசும் போது அவர்கள் அணி வெற்றி பெற்ற ஆட்டங்களையும் பேசுவது முறையா

ஸ்டீவ் வாக் அவரது அணிக்கு வென்று கொடுத்த ஆட்டங்களை விட சச்சின் இந்தியாவிற்கு அதிக ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளார்

புருனோ Bruno said...

ஒரு வேளை 2003ல் பாகிஸ்தானுடன் தோற்று இறுதி போட்டி செல்லவில்லை என்றால் என்ன சொல்லியிருப்பீர்கள் - tight situationல் விளையாட வில்லை என்று

ஆனால் அந்த ஆட்டத்தில் வென்ற உடன் அது சாதா ஆட்டம் ஆகி விட்டதா

என்ன கொடுமை சார் இது

அணியை இறுதி போட்டிக்கு அழைத்து வருவது யார் என்று கவனியுங்கள் சார்

கபில், வாக் போன்றவர்களில் கால் இறுதி, அரை இறுதி ஆட்டங்களை tight situationஆக எடுக்கும் நீங்கள் சச்சின் என்ற வந்தால் இறுதிப்போட்டியை மட்டும் எடுக்கும் முரண் ஏன்குற்றம் சுமத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டு ஆதாரம் தேடுவதை போலல்லவா இருக்கிறது

ஆதாரத்தை வைத்து குற்றம் சுமத்தவேண்டுமே தவிர குற்றம் என்னவென்று முடிவு செய்து விட்டு ஆதாரம் என்ற பெயரில் ஏதாவது தரக்கூடாது சார் :) :) :)

புருனோ Bruno said...

//
//motivated காப்டன் இல்லை என்பதை எப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா//
as a captain he didn’t bring out the best from the rest of the team players.//

சச்சின் அணித்தலைவராக இருக்கும் போது விளையாடியவர்களின் average மற்றும் Strike rate போன்றவை அவர்கள் பிறரின் கீழ் விளையாடும் போது இருந்ததை விட மோசமாக இருந்தது என்று நீங்கள் statisticalஆக நிருபித்தால் தான் இந்த குற்றச்சாட்டை ஏற்க முடியும்

ஒரு அணி தோற்கிறது என்ற ஒரே காரணத்திற்கா அணி தலைவர் motivated அல்ல என்று கூறமுடியாது

லாராவையும் ரிச்சர்ட்ஸையும் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் மட்டும் ஒப்பிட்டு யார் மோட்டிவேட்டட் என்று கூற முடியுமா

அல்லது

அரவிந்த டி சில்வா மோடிவேட்ட காப்டன் இல்லை என்கிறீர்களா

அல்லது

டேவ் ஹவ்டன் மோடிவேட்டட் காப்டன் இல்லையா


--
Sucessful Captain வேறு
Talented Captain வேறு
Fortunate Captain வேறு
Motivated Captain வேறு
--
சச்சின் not successful என்பது உண்மை
unfortunate என்பது வேண்டுமானல் உண்மையாக இருக்கலாம்
ஆனால் not talented, not motivated என்று கூறுவதற்கு ஆதாரம் தேவை
--
பின் குறிப்பு : சச்சின் ஒரு பாரபட்சமற்ற காப்டன் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. (சந்தேகம் இருந்தால் அகர்கரை கேட்டு பாருங்கள்) ஆனால் அதையும் motivationஐயும் ஒன்றாக குழப்ப நான் தயாரில்லை.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மிக மோசமான அணியை வைத்து விளையாடியது அவராகத்தானிருக்கும் என்பது அடுத்த பக்க உண்மை.

மணிகண்டன் said...

ப்ருனோ சார்,

சாம் தமிழ் ப்ளாகுக்கு புதுசு. அவர் கிட்ட நான் நேற்றே இதுல உள்ள addiction பத்தி சொன்னேன். கொஞ்சம் விலகி இருக்க சொல்லி !!! அவர் விடாம கமெண்ட் போடறாரு ! அவருக்கு தேவை தான்.

சச்சின் பொருத்தவரைக்கும் ஏகப்பட்ட மேட்ச் கலக்கலா விளையாடி ஜெயிக்க வச்சி இருக்கார். உலக கோப்பையை வென்ற அணில இல்லை. அதுனால அந்த வகைல மட்டும் evaluate பண்ணினா ஏமாற்றம் தான். ஒருத்தரோட statistics மட்டும் வச்சி evaluate பண்ணினா இப்படிப்பட்ட conclusions தான் கிடைக்கும்.

சச்சின் சக்சஸ்புல் கேப்டன் கிடையாது. ஒரு சமயம் காப்டைன்சி வேண்டாம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணி இருக்கார். சோ, அவருக்கு captaincy motivation இல்லைன்னு சொல்லலாம். அத தவிர, இந்த motivation, inspiration, pep talk, laptop எல்லாம் மேட்ச் ஜெயிக்க வைக்கதுன்னு எந்தவகைளையும் நிரூபிக்க முடியாது. சச்சின் கலக்கல்லா ரன் அடிக்கும்போது நம்ப டீம்ள உள்ள மிச்சம் எல்லாரும் inspire ஆகாம வெறும் வேடிக்கை மட்டும் பாத்தா அதுக்கும் அவர் தான் பொறுப்பு போல ! ஷார்ஜால நடந்த மேட்ச் எடுத்துக்கோங்க. அந்த இன்னிங்க்ஸ்ல கூட மத்தவங்க inspire ஆகல. அவர் அவுட் ஆன எல்லாரும் அவரை பாராட்ட உடனே திரும்பி வந்துட்டாங்க !

புருனோ Bruno said...

//அந்த இன்னிங்க்ஸ்ல கூட மத்தவங்க inspire ஆகல. அவர் அவுட் ஆன எல்லாரும் அவரை பாராட்ட உடனே திரும்பி வந்துட்டாங்க !//

அவர் அவுட் ஆன எல்லாரும் அவரை பாராட்ட உடனே திரும்பி வந்துட்டாங்க !-- ரொம்ப நேரம் சிரித்தேன் தல ..

புருனோ Bruno said...

//. ஒரு சமயம் காப்டைன்சி வேண்டாம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணி இருக்கார். சோ, அவருக்கு captaincy motivation இல்லைன்னு சொல்லலாம். //
இது நல்ல வாதமாக தோன்றுகிறது. ஏற்றுக்கொள்கிறேன்
ஒரு தடவை அல்ல, இரு முறை என்றே நினைக்கிறேன் - 1997 மற்றும் 2000 என்று ஞாபகம்

Samuel | சாமுவேல் said...

..தமிழ் படம் ஒன்றை பத்தி இப்ப நான் சொல்லியே ஆகவேண்டும் .
படம் பேரு தெறியல..ஆனா ஹீரோ வந்து சத்யராஜ்..

ஒரு சின்ன பையன் அவர பார்த்து கேட்பான் ...
"மூச்சுக்கு முன்னுறு தடவை பாலு தேவர் , பாலு தேவர் ..என்று சொல்லிகிறிங்களே, பாலுன்றது உங்க பேரு ..தேவர்ணறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா """

அப்ப சத்யராஜ் எப்படி feel பண்றாருன்னு director நல்லா காமிசிருப்பார்..அந்த மாதிரி தான் இருக்கு ...எனக்கு இப்ப .

////

ஆனா நீங்க ரொம்ப easya போற போக்குல நிறைய விஷயம் அடிச்சு விட்டுடீங்க ...

Samuel | சாமுவேல் said...

any cricket observer woudnt compare sachin's any world cup innings with that Kapils single innings against Zim....you and me know that it is unfair comparison.

my argument is extra ordinary situation reqires extreme contributions....note the word ''extreme''...kapil has done that..sachin is yet to do that

therotically if kapil was playing in that 2003 wc final, in my opinion he would have pulled it off for the country.


and your compariosn about sachin being greater match winner than steve waugh ...is also doubtable. i doubt that in ODI. in test in no way sachin would have been a better match winner than s waugh..

Samuel | சாமுவேல் said...

i said he didnt motivate the other players to bring out the best in them. i think it would be any leader's KRA.

i didn't say anything about motivates captain...

மணிகண்டன் said...

sam,

This is what i have said in my posts. and i am sticking with it.

கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது. ஆதலால் ஒருவர் மேட்ச் வின்னரா / இல்லையா என்பது அவரவரின் கண்ணோட்டத்தை குறித்தது. அவ்வாறு ஒருவரை மேட்ச் வின்னர்/இல்லை என்று கூறுபவர்களின் கருத்துக்கு என்னிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

To comment on kapil's innings :- It should have been one of the most fabulous innings. Sad that there is no video available.

By reading your comments, i can safely say this :-

Match winners make sure that they win the match when the going gets tough.

and

----
----

Most effective players make sure that the going does not get tough !

Which one would you prefer ?

Samuel | சாமுவேல் said...

mani....you didnt comment about that tamil video i mentioned. i was expecting some comment for that.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு பூர்ஷ்வா விளையாட்டைப் பற்றி இவ்வளவு பூர்ஷ்வா மறுமொழிகளா... உங்களையெல்லாம் நாடு கடத்தணும்யா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் தவறானவை. கருத்து வேறு, தகவல் வேறு (புண்ணாக்கும் வேறுதான்). ஆனால் நீங்கள் ஏன் சதங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்... சச்சின் எடுத்த 10+ ஓட்டங்கள், 20+ ஓட்டங்கள், அவர் மராத்தனில் ஓடிய ஓட்டங்கள் எனச் சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதைத் தவிர இன்னும் சில informations இருக்கின்றன. சச்சின் சதம் அடித்து இந்தியா தோற்ற 11 பந்தயங்களில், அவர் பந்து வீசி 18 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்; 9 காட்ச்களைப் பிடித்திருக்கிறார். ஆனால் பாருங்கள், மொத்த ஆட்டங்களில் எல்லாரும் சேர்ந்து எடுத்த விக்கெட்கள் 85 (அதாவது சச்சின் 45%), பிடித்த காட்ச்கள் 18 (அதாவது 90%). ஆனாலும், சிலர் சச்சின் சரியில்லை என்று சொல்வது அவர்களது காழ்ப்பினைத்தான் காட்டுகிறது :(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நான் 20 வருடங்களாகவும் (இல்லை அதற்கு மேலாகவும்) பார்க்கிறேன் கிரிக்கெட்டை. அதன் அடிப்படையிலேயே இவ்வளவையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் பிறந்ததிலிருந்தே ஒன்றுக்கிருந்தாலும், அதைப் பற்றிப் பேசத் தெரியவில்லை (ஏன் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா)

மணிகண்டன் said...

****
நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் தவறானவை. கருத்து வேறு, தகவல் வேறு (புண்ணாக்கும் வேறுதான்). ஆனால் நீங்கள் ஏன் சதங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்... சச்சின் எடுத்த 10+ ஓட்டங்கள், 20+ ஓட்டங்கள், அவர் மராத்தனில் ஓடிய ஓட்டங்கள் எனச் சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
***

ஹா ஹா ஹா !

சச்சின் 425 மேட்ச் விளையாடி இருக்காரு ! அவ்வளவு மேட்சும் கணக்குல எடுத்து எழுதும் அளவுக்கு இன்னும் லூசு ஆகல.

இந்த பதினோரு போட்டிகள் மட்டும் எடுத்ததுக்கு இந்த பதிவுலயே ரீசன் சொல்லி இருக்கேன். மோகன்தாஸ் சச்சின் அதிக ரன்கள் எடுக்கும் போட்டிகளில் அவருக்காக / சுயநலமாக விளையாடி தோல்விக்கு காரணம் ஆகிவிடுகிறார்ன்னு சொல்லி இருந்தார். அதுக்காக நோண்டியதில் வந்ததே இந்த பதிவு.

அடுத்த வருஷம் எங்க ஊருல நடக்கும் மராத்தான் போட்டியிலே கலந்துக்கற ஆசை இருக்கு. அதுக்கு இப்பவே preperation ஆரம்பிச்சி இருக்கேன். சச்சினுக்கு பதிலா நான் !

மணிகண்டன் said...

சுந்தர், எழுத்தாளர்களை பத்தி எழுதினா யாரும் படிக்க மாட்டேன்கறாங்க ! சாருவை பத்தி எழுதினா கூட !

மணிகண்டன் said...

sam / jeguu -

சில கமெண்ட் டெலீட் பண்ணிட்டேன். வூட்டுல ஒதை விழும் அதான் !

புருனோ Bruno said...

//Most effective players make sure that the going does not get tough !Which one would you prefer ?//
அட்றா சக்கை !!!

ஏன் அலன் பார்டரும், ரமீஸ்ராஜாவுன், அர்ஜூனா ரனதுங்காவும் பொதுவாக matchwinnerஆக கூறப்படுவதில்லை என்று வெகு அழகாக கூறிவிட்டீர்கள்

NO said...

அன்பான அண்ணன் திரு மணி அவர்களே,

இந்த செந்தேழில் ரவி பற்றி ரொம்ப கேட்டீங்களே, திரு லக்கி அண்ணன் ப்லோக் போயி நான் போட்டதை பார்த்தீர்களா?? போதுமா, இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா! (Sorry that was all completely in English)

நான் ஒரு மூன்று மாதம் இல்லாததால், இந்த கடைசி கடமையை முடிக்க துடிக்கிறேன்! (மே, 14th முதல் பிரெஞ்சு குயானாவில் ஈரியானே ஐயிந்து பறக்கும் வரை, பின்னர் on site navigational telematics சரியாகும்வரை full பிஸி - அங்க சோறு கூட செரியாக இல்லை and தமிழ் font இல்லை) !

ஆதலால் உங்களிடமும் மற்றும் திரு சஞ்சய் "G" இடமும் விண்ணப்பங்கள் வைத்துள்ளேன்!

சீக்கிரும் சொல்லுங்கள்!

நன்றி

Samuel | சாமுவேல் said...

imagine you are in world cup, and your team is faced with a suituation, where it has to win a particular group match to proceed to the super six level, a do or die situation.
or
your team is in a semifinal match in WC and you are chasing a stiff target in a difficult pitch, and wickets have fallen and required run rate is raising and there is immense pressure on the chasing team.
or
your team is in Final of WC and you are chasing a record total in world cup, the moment you walkin to bat you know that it is not a easy situation, opposition has tough bowling attack,,,,the going is already tough before you start the chase..

ஓகே..யோசிச்சு பார்க்க கஷ்டம்மா ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன்...

now i am asking the same question to you...
///////////////
மேட்ச் winners make sure that they win the match when the going gets tough.
and
Most effective players make sure that the going does not get tough !
//////////////////
which one would you prefer ?

also

which win would you cherish or remeber the most, WC win or a win in sharjah or a win against pakistan in world cup league matches ?

Samuel | சாமுவேல் said...

/////சில கமெண்ட் டெலீட் பண்ணிட்டேன். வூட்டுல ஒதை விழும் அதான் !///////
i dont know what comments you have deleted, have not read jegu comment...., but i can easily say that the comment would not have been deleted if it was something that praised sachin...

சார் நீங்க நினைக்கிற மாதிரி sachin பத்தி மோசம்மா எழுதுனுமேன்னு சொல்லிட்டு நான் எழுதலை.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க t20 wc அவர் இல்லாம ஜெயிசிருக்கோம்.
i would also never agree that he is playing for personal records at the cost of winning, he is playing for records but not at the cost of winning.never. and thats what the team wants.

if he is so dedicated and commited to the national team, or as he keep saying "love for the game" ....as he was not carrying any injury, why did he opt out of the T20 WC, would he do that if they felt a fair chance of winning the T20 cup....when team was hopeless of winning and there was no prior records or experience they had in that format..he opted out. "love for game" has suddenly become "decided to give chance to youngsters"....and in IPL for another 2 years "give chance to youngsters" will automatically become "love for the game".

he has win many matches for India, no one can question that. he is one of the greatest batsmen in world cricket, without any doubt. he has created many records, which might not be broken for a long long time. but i want to ask you this question. what moments would you think might be the most defining or celebrated moments in indian cricket history.? and what role sachin has played in that, specially when he has played for so many years ?.

hope i have not offended any die-hard sachin fan's, that is not the intention of this comment'er.

மணிகண்டன் said...

****
what moments would you think might be the most defining or celebrated moments in indian cricket history.?
****

matches i played in my street !

*****
And i have not deleted any comments about sachin !
*****

உட்டலாக்கடி யம்மா said...

திருவாளர் நோ அவர்களே தாங்கள் பதிவர்களின் தாக்குதலில் பயந்துபோய் ஊரைவிட்டு ஓடுவதுபோல் இருக்கிறதே!

NO said...

Mr Uttalakkadi,

Me...running....why should I ???
Anyway, Ariane 5 is up and I will be quite busy for next 3 months!

See u guys some time later!

Bye

Bruno said...

இன்றைய ஆட்டத்தில் தோனியின் தவறான முடிவுகள் குறித்து எந்த விவாதமும் வரவில்லையே

ஏன்

மணிகண்டன் said...

ஏனென்றால் அவர் முடிவு எடுத்தபொழுது தவறாக தெரியாததால். பதினெட்டு பந்தில் பத்தொன்பது ரன்கள் எடுக்க வேண்டும். கையில் 4 விக்கெட்டுக்கள் இருக்கிறது. இந்த நிலையில் இருந்து தோற்றால் தோனியால் ஒன்றும் செய்யமுடியாது.

ரவி said...

good post da

Prakash said...

Reg this ODI , Aussies are proven end game specialists. They wait for sachin to make a mistake or misjudge a ball and they crash the tail enders.Not that our tail enders are poor , but aussies can penetrate deep into any kind of batting order.

Karthikeyan G said...

வார்னே, முரளிதரன் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்?
Match winner என்பவர் மற்றவர்கள் சுமாராக ஆடும்போது நன்றாக ஆடி வெற்றி பெற வைப்பவரே. Sachin is not a match winner, He is not selfish, He jst dont have the skills to be matchwinner.

புருனோ Bruno said...

//ஏனென்றால் அவர் முடிவு எடுத்தபொழுது தவறாக தெரியாததால். //

நான் கூறியது முதலில் பந்து வீசும் போடு எடுத்த முடிவுகளை

மற்றும் ஹர்பஜனை அனுப்பியது பற்றி

புருனோ Bruno said...

//வார்னே, முரளிதரன் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்?//

ஐயா

பேட்ஸ்மேனை பேட்ஸ்மேனுடன் ஒப்பிடுங்கள்

பந்து வீச்சாளரை பந்து வீச்சளருடன் ஒப்பிடுங்கள்

மணிகண்டன் said...

ஹர்பஜனை அனுப்பியது தேவை இல்லாதது. stupid decision. அவ்வளவே.

Karthikeyan G said...

//பேட்ஸ்மேனை பேட்ஸ்மேனுடன் ஒப்பிடுங்கள்//

ok.. சேவாக் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்?

வவ்வால் said...

இந்தியாவில கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டுகள் ஏன் தூங்கி வழிகின்றது என்பது இப்போது தான் தெரிகிறது :-)) நள்ளிரவிலும் எத்தனைப்பேர் வந்து விளாசுறாங்க!(நானும் ஒரு பாழாப்போன கிரிக்கெட் ரசிகன் தான், ஆனாலும் இப்போதெல்லாம் ஏனோ மனம் லயிப்பதில்லை அதில்)

புருனோ கடப்பாரை , மண்வெட்டி சகிதம் வந்திருப்பார் எனவே மிச்சம் தோண்டும் வேலைய அவரே பார்த்துப்பார்!

சச்சின் ஒருத்தரே எத்தனை நாள் தான் அணியை தூக்கி சுமப்பார், எல்லாம் கை கொடுக்க வேண்டாமா?

சச்சின் யார் என்ன சொன்னாலும் கிரிக்கெட்டில் ஒரு சூரியன் தான்.ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை!..லை..லை!

புருனோ Bruno said...

//Match winner என்பவர் மற்றவர்கள் சுமாராக ஆடும்போது நன்றாக ஆடி வெற்றி பெற வைப்பவரே. //

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்

ஆனால் மற்றவர்கள் மோசமாக ஆடும் போது ????

அதே போல் எனது கேள்வி ஒன்று இது வரை விடை வராமல் இருக்கிறது

தான் பங்கு பெற்ற அனைத்து ஆட்டங்களிலும் தனது அணியை வெற்றி பெற வைப்பவர் தான் மேட்ச் வின்னரா

அப்படி இல்லை என்றால் குறைந்த பட்ச சதவிதம் எத்தனை

புருனோ Bruno said...

//ok.. சேவாக் விடவா டெண்டுல்கர் மேட்ச் வின்னர்?
//

சேவாக் எத்தனை போட்டிகள் வெற்றி பெற்று தந்திருக்கிறார்

சச்சின் எத்தனை போட்டிகள் வெற்றி பெற்று தந்திருக்கிறார்

மணிகண்டன் said...

வாங்க ரவி.

@பிரகாஷ் ஆஸ்திரேலியா ஜெயிச்சுட்டாங்க. சோ, no arguments. But i personally think that indian lower middle order / tailenders are very very weak :)-

@கார்த்திகேயன் - நீங்கள் கேட்பது டெஸ்ட் மேட்ச் குறித்து என்று நினைக்கிறேன் :)- டெஸ்ட் மேட்சில் ஒரு மேட்ச் வின்னர் என்பது பல சமயங்களில் ஒரு பவுலர் ஆக தான் இருக்கமுடியும். As a cricketer, ப்ரட்மானுக்கு அடுத்து முரளி தான் பெஸ்ட்.

ஒன் டே கிரிக்கெட்ல சேவாக் ஒன்னும் சரியில்லைங்க.

அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு. பாண்டிங் 175 எடுத்து இருந்தா லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து முடிச்சி இருப்பாங்க. பாண்டிங் மேட்ச் வின்னர் ஆகி இருப்பாரு :)-

புருனோ Bruno said...

வவ்வால் அவர்களே வருக

அது சரி

இவ்வளவு நாளா எங்கே சென்றிருந்தீர்கள்

நீங்கள் இல்லை என்றாலும், உங்களைப்போலவே உங்கள் அளவு “புத்திகூர்மையுடனும்” “நேர்மையுடனும்” ஒருவர் டிவிட்டரின் விவாதம் புரிந்து கொண்டிருக்கிறார் :) :)

மணிகண்டன் said...

வவ்வால் - வயசாயிடுச்சு உங்களுக்கு :)- ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைம் ஜோன்ல இருக்கோம்ன்னு நினைக்கறேன். ப்ருனோவுக்கு சச்சின் பத்தி எழுதினா நோ டைம் ஜோன் பிரச்சனை :)-

புருனோ Bruno said...

//அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு. பாண்டிங் 175 எடுத்து இருந்தா லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து முடிச்சி இருப்பாங்க. பாண்டிங் மேட்ச் வின்னர் ஆகி இருப்பாரு :)-//

well said !!

Karthikeyan G said...

//அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு. பாண்டிங் 175 எடுத்து இருந்தா லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து முடிச்சி இருப்பாங்க. பாண்டிங் மேட்ச் வின்னர் ஆகி இருப்பாரு//

நாம் குறைந்த பட்சம் எவ்வளவு ரன் அடித்துவிட்டு வந்தால் அடுத்து லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து அணியை ஜெயிக்க வைக்க முடியும்னு தெரிந்தது இருப்பதாலும் அதன்படி ஆடுவதாலும் தான் பாண்டிங் Match winner.

அந்த திறமை சச்சின்னுக்கு இல்லையே.. கும்ப்ளே & ஸ்ரீநாத் ஒன்றும் லீ & கில்லேச்பியை விட மோசமானவர்கள் கிடையாது.


//அடுத்தது இந்த மேட்ச் வின்னர் எல்லாம் விளையாடற டீம் பொறுத்து இருக்கு.//
அப்பவும் லாரா அல்லது KP தான் Match winner.

மணிகண்டன் said...

*****
நாம் குறைந்த பட்சம் எவ்வளவு ரன் அடித்துவிட்டு வந்தால் அடுத்து லீ இல்லாட்டி கில்லேச்பி வந்து அணியை ஜெயிக்க வைக்க முடியும்னு தெரிந்தது இருப்பதாலும் அதன்படி ஆடுவதாலும் தான் பாண்டிங் Match winner.
*****

இந்த அளவுக்கு கிரிக்கெட்ல ஒருத்தரால analyze பண்ணி விளையாட முடியுமா ? கஷ்டம் கார்த்திக்கேயன்.

ஸ்ரீநாத், ஹர்பஜன் எல்லாம் இந்தியாவுக்கு 125 ரன் தேவை - எல்லா batsman அவுட் ஆயிட்டா வெளுத்துக்கட்டி ரொம்ப க்ளோசா கொண்டு வந்து தோப்பாங்க.

அதே 30 ரன் தேவைன்னா திரும்பி போயிடுவாங்க. லீ, gillespie கம்பேர் பண்ணினது அதுக்கு தான்.

***
ராஜேஷ் chouhan இந்தியாவுக்கு 21 டெஸ்ட் மேட்ச் விளையாடி இருக்கார்.
11 டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சி இருக்கார். 6 இன்னிங்க்ஸ் விக்டரி. ஒரு மேட்ச் கூட தோத்தது கிடையாது
***
இவர் தான் இந்தியாவுக்கு பெஸ்ட் மேட்ச் வின்னர் :)-

இரவு கவி said...

enga vitu pakkathla oru naai sethu pochu. athukkum sachin than karanamnu solla neraiya peru irrukuraanga. avangalukku velakkam solla vendiya avasiyam ennakku illai.

Karthikeyan G said...

Another evidence for "Why Sehwag is better than Sachin"..
Holding Willey report ->
http://www.holdingwilley.com/thehwreport/player-ranking.php

the parameters of Holding Willey ranking.

Overall consistency.
Performances abroad, in matches away, outside the player's comfort zone; in different pitch/ weather conditions.

Performances in matches won - usually a good indicator to a player's true value in a team.

Match-winning ability - the solo contribution a player makes in winning efforts and how often he makes them.

Match situations taken into account to determine how a player performs under pressure.

மணிகண்டன் said...

Good then :)- sehwag is better than sachin. Let us leave it there.

But on statistics :-

Statistics can provide some indications if performances are evaluated over a long period of time with valid parameters. Here the parameters are not bad. But :)-

How would you evaluate a player who has played 156 tests with someone who has just played 65 tests.

How would you evaluate the difficult conditions - example

a) Pitches in WI till 00's and in the past 10 years.

b) Perth wicket. (92 and 08)

c) pitches in SA (90's to the past 5 years)

If i have enough time, i can disprove this report or any other report which tries to substantiate player's class or value through statistics. Fortunately for me, that is what i don't have now :)-

It is about perception though !

Karthikeyan G said...

//If i have enough time, i can disprove this report or any other report which tries to substantiate player's class or value through statistics. Fortunately for me, that is what i don't have now :)-//

Similarly you can say loud “Sachin is BEST", But you can never prove it with me given any amount of time. :-)

மணிகண்டன் said...

Why do i need to say "Sachin is the best" ?

(மேல எழுதி இருக்கற வரியை கவிதையா ஏத்துக்கிட்டு அவங்கவங்க அனுபவத்துக்கு ஏத்தா மாதிரி அர்த்தம் பண்ணிக்கலாம்)

creativemani said...

மணி.. நானும் கிரிக்கெட் பத்தி இன்னிக்கு எழுதிருக்கேன்.. வந்து பாருங்க..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ, திரும்பவும் ஆரம்பிசிடுச்சா இந்த அக்கப்போர் :)

ஏன்யா மொத்த ஸ்கோர்ல ஒருத்தரே பாதிக்கு மேல அடிச்சிருக்காரு - இன்னும் என்னய்யா வேணும்? என்னைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் இப்போதைக்கு சச்சினை அடித்துக் கொள்ள ஆளில்லை :)

Karthikeyan G said...

//இந்திய அளவில் இப்போதைக்கு சச்சினை அடித்துக் கொள்ள ஆளில்லை :) //

ஐயா, இந்திய அளவில் எனும்போதே கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கு. அனால் சிலர் அவர் உலக அளவில் சிறந்த வீரர் என சொல்கிறார்களே.. Wat to do..?
கொஞ்சம் அக்கபோர் பண்ணிதான் ஆகவேண்டும். :)

Samuel | சாமுவேல் said...

சச்சின் அவுட் ஆனதுக்கு அப்புறம், ஜடேஜா, பிரவீன்,,,இவிங்க ஏதோ கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி தான் இருந்தாய்ங்க. மொத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதுக்கு fielding தான் முக்கியமான காரணம் அப்படின்னு நினைக்கிறேன்.

சச்சின் 175 அடிச்சதுனாலயோ என்னமோ மறுபடியும். 1983 வேர்ல்ட் கப் 175 not out அடித்தவர் நியாபகம் வந்து தொலைது. என்ன பொறுத்த வரைக்கும் அவர் தான் சார் இந்தியாவின் all time great.

Rajalakshmi Pakkirisamy said...

Good post n comments:) :) :)

Thenammai Lakshmanan said...

கிரிக்கெட்டில் அவ்வளவு ஆர்வமில்லை

ஆனா நீங்க இவ்வளவு புள்ளி விவரத்தோடு கொடுத்து இருப்பது சூப்பர்ப் மணிகண்டன்