Wednesday, November 4, 2009

கிச்சடி - 04/11/09

உளறல்கள் பேத்தல் பிதற்றல்கள் blabberings - பதிவுகளின் தலைப்புக்களில் காணக்கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள். ஏன் படிக்கறவங்களுக்கு இது கூடவா தானா புரியாது ?

சில நாட்களாக ட்விட்டரில் எனது பிதற்றல்களை எழுதி வருகிறேன். ஒருவிதத்தில் ப்ளாக் அடிக்ஷனில் இருந்து வெளிவர உதவுகிறது. ட்விட்டர் அலுவுலகத்தில் block செய்யப்பட்டுள்ளதால் புதிதாக போதை ஏற வாய்ப்பு இல்லை.

வலையில் சும்மா மேய்ந்தபொழுது "மூணார்" என்ற ஒரு படம் பார்த்தேன். (முதல் பத்து நிமிடங்கள் மட்டும்). படத்திற்கு இசை வேதம்புதிது "தேவேந்திரன்". இவ்வளவு வருடங்கள் எங்கு சென்றிருந்தார் ?

புதிதாக எனது பதிவில் Live Traffic Feed பார்க்க ஒரு விட்ஜெட் வைத்துள்ளேன். தமிழ்மணம் மூலமாக வருபவர்களை காட்ட மறுக்கிறது. ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையா ?

ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன. சரியென்று வீட்டில் கிடந்த வேறொரு புத்தகத்தை படித்ததில் கிடைத்த ஒரு பொன்மொழி.

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர் தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாக பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

( உங்கள் இல்லத்துக்கு தேவையான 1008 வீட்டுக்குப் குறிப்புகள் - திருமதி M. சாந்தி அன்னம் பி. ஏ. லிட். இது குறிப்பு எண் 648.)

பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் எந்த ஒரு தொடர்பதிவிலும் எனக்கு அழைப்பு இல்லாததால் donald barthelme எழுதிய பலூன் என்ற ஒரு சிறுகதையை மொழிப்பெயர்க்க முயன்று வருகிறேன். இதுவரை திருப்தி இல்லை. பார்க்கலாம்.

முதல்முறையாக இம்மாதத்தில் ஒரு இலக்கிய இதழ் படித்தேன். அகநாழிகை வாசுதேவனுக்கு நன்றி. முதலில் இருந்த பாவண்ணன் சிறுகதை எளிதான மொழியில் இருந்ததால் "இலக்கிய இதழ்" தானா என்ற சந்தேகம் வரவே செய்தது. பூனைக்குட்டி ஆக்கிரமித்து இருந்ததால் சந்தேகம் நிவர்த்தியானது. கவிதைகளை படிக்கவில்லை.

வாழ்க்கையில் முதல்முறையாக தனியாக இருக்கும்பொழுது தனிமையை உணருகிறேன். மாற்றம் அவசியமாகிறது.

கந்தனைக் காணவென்று
கார்த்திகைக்கு வந்தேனடி
உந்தனைக் கண்டேன் இனி
ஊருக்கு போக மாட்டேன்

இதை வெண்பாவாக மாற்றுவது சாத்தியமா ?

ஈசியா கிச்சடி எழுதிக்கிட்டு இருந்தேன். யாரு கண்ணு பட்டதோ தெரியல, இப்ப இதுவும் எழுத வரமாட்டேங்குது. எழுதற மொழியும் திருப்பிப் படிச்சா எரிச்சலா இருக்கு.

நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?

writerpaiyon என்பவரின் ட்விட் கலக்கலாக இருக்கிறது. சாட்டில் ஒரு நண்பர் அதுவேறு யாருமல்ல "நானே" என்று கூறினார். அந்த நண்பரின் பெயரை சொல்வது நாகரீகமாக இருக்குமா ?

ஒருமுறை மக்கள் டிவி பார்த்தபொழுது "நாகரீகம்" என்பதற்கு சரியான தமிழ் சொல் "சால்பு" என்று கூறினர். சரியா ?

15 comments:

வேந்தன் said...

கிச்சடி நல்லாயிருக்கு...:)
//எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார்.//
யாரு அது?

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி வேந்தன். பேரு சொன்னா எனக்கு உதை விழும் :)-

பீர் | Peer said...

கிச்சடி வரலாற்றில் விளையாட்டு நிகழ்ச்சிகள் தொகுக்கப்படாதது இதுதான் முதல் முறையா? :)

ட்விட்டருக்கு அடிக்ட் ஆகிட்டீங்கன்றது தெரியுது.

சொசெசூ வைத்துக்கொண்ட பிரபல பதிவருக்கு கண்டனங்கள்.

மணி, உங்களை பிடித்தவர்/பிடிக்காதவர் என்ற ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். :)

இன்னும் ரெண்டு வரி சேர்த்து எழுதினால் ஒரு ஜிகர்தண்டா ரெடி... ஜூட்.

மணிகண்டன் said...

வாங்க பீர் ! விளையாட்டு இல்லாததை இப்ப தான் கவனிக்கறேன் :)- நேற்று தான் பிடித்தது/பிடிக்காதது எழுதி போஸ்ட் செய்தேன். படித்துப்பாருங்கள் ! இப்பொழுது உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்.

பிரபாகர் said...

மணி உங்களை நானும் அழைக்க எண்ணினேன். வேலைப்பளு காரணமாய் நீங்கள் அதிகம் எழுதவில்லையென நினைத்து... ஹி...ஹி... நண்பர் பீருக்கு நன்றி.

பிரபாகர்.

Sammy said...

//ஒருமாதமாக டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். ஏனோ பக்கங்கள் நகர மறுக்கின்றன//

கடியா ?

//நான் எழுதிய ஒரு சிறுகதையை ஒரு பிரபலபதிவருக்கு ஈமெயில் செய்து இருந்தேன். (அவரது விமர்சனம் கோரி) எனது பெயரை போடாமல் அதை அவரது பதிவில் பப்ளிஷ் செய்து விட்டார். என்ன செய்யமுடியும் ?//

பெயர் சொல்ல வேண்டாம் ? ரெண்டு எழுத்து பதிவர், முன்று எழுத்து பதிவர், முதல் எழுத்து என்ன, கடைசி எழுத்து என்ன ....அந்த மாதிரி எத்தனாச்சு க்லூ(clue) குடுங்க.

மற்றவர்கள் உஷாராக இருக்க உதவும். உங்களுக்கும் அவரை எக்ஸ்போஸ் (expose) பண்ண பீலிங் இருக்காது.

வித்யா said...

கிச்சடி நல்லாருக்கு மணிகண்டன். டான் பிரவுனின் "தி லாஸ்ட் சிம்பல்" என நினைக்கிறேன். தவறெனில் மன்னிக்கவும்:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மணிகண்டன், நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.. தொடர்ந்து எழுதுங்க.

அப்புறம் அந்த பலூன் கதை... நேத்துதான் படிச்சேன். நிச்சயம் நீங்க மொழியாக்கம் செய்யுங்க - நல்லா வரும்.

வால்பையன் said...

//டான் பிரவுன் எழுதிய "தி லாஸ்ட் வேர்ல்ட்" படித்து வருகிறேன். //

த லாஸ்ட் சிம்பள்!

மணிகண்டன் said...

வாங்க பிரபாகர். உண்மை தான். வேலையும் ஜாஸ்தி தான் :)-

sammy - பயங்கர கடி. அந்த பிரபல பதிவரோட முதல் எழுத்துக்கும் இரண்டாவது எழுத்துக்கும் இடையில "F" வரும்.

@வித்யா, @வால்பையன் யூ போத் ஆர் கரெக்ட்.

சுந்தர் - தொடர் ஊக்குவிப்புக்கு நன்றி.

அன்புடன்-மணிகண்டன் said...

மணி.. எனக்கு கிச்சடி பிடிக்காத சிற்றுண்டி... ஆனா இந்த கிச்சடி சூப்பர் மணி.. :)

அன்புடன் மணிகண்டன்

☀நான் ஆதவன்☀ said...

கிச்சடின்னு நிறைய கேள்விகள் வாசகர்களை கேட்டிருக்கீங்க போல :)

ரொம்ப சின்ன சின்னதா நிறைய விசயங்கள் இருக்கு கிச்சடில :)

மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

@ஆதவன் - எந்த கேள்விக்கும் பதில் சொல்லலியே :)- வந்ததுக்கு தேங்க்ஸ்.

செந்தழல் ரவி said...

good one

மணிகண்டன் said...

thnks ravi