Friday, January 23, 2009

அம்மி மிதித்து

ஆதிஷ்ட இமம் ஆஸ்மானம்

அஸ்மே வத்வம் ஸ்திராபவா


பெண்ணே ! இந்த அம்மிய போல நீ. உன்னோட குடும்பத்தை எவ்வளவு பேரு எம்பி மிதிச்சாலும் தாங்கிக்கணும். சந்தேகம் என்கிற பேய் குடும்பதுக்குள்ளார வராம பாத்துக்கணும். குடும்பத்தோட ஸ்திரதன்மைக்கு நீ பொறுப்பேத்துக்கணும். துன்பம் அளிக்க கூடிய நிலைகள் வாழ்க்கைல எவ்வளவு வந்தாலும் அத தாங்க கூடிய மனபக்குவத்த வளர்த்துக்கணும்.


***********************************************************************


மடையா :- அந்த காலத்துல இயற்கையோட ஒன்றி வாழ்ந்த பழங்குடியினர் எந்தொரு காரியம் செய்யறதுக்கு முன்னாலயும் கல்லு மேல ஏறி நின்னு உறுதிமொழி எடுத்துப்பாங்க. அத கல்யாணத்துல ஒரு சடங்கா கொண்டு வந்துட்டாங்க ! உடையாத கல்லு இருக்கணும் ! வீட்டுக்கு உபயோகமாவும் இருக்கணும் ! சோ, அம்மி. அம்மியும் ஒரு சீரே ! வரதட்சணை மாதிரி அம்மியவும் ஒழிக்கணும்.


*************************************************************************

பாத்து விழுந்துடாம நில்லு. புடவை தடுக்கிடபோகுது.

கேமரா பக்கம் பாருடி. நல்லா திரும்பிப்பாரு.பையனையே பாத்துக்கிட்டு இருந்தா எப்படி!

கால்ல மருதாணி தெரியற மாதிரி நில்லு. அப்புறம் அது போட்டுதே வேஸ்ட். ஆன்ட்டி, அது மருதாணி இல்ல மெஹந்தி !

நீங்க வேணும்னா அந்த சேர் மேல ஏறி போட்டோ எடுங்க. இங்கேந்து ஒன்னும் சரியா வராது.

அவன இந்த மாதிரி தான் கண்ட்ரோல்ல வச்சிக்கணும். அதுக்கு தான் ட்ரைனிங் இது ! தம்பி இனிமே ஆப்பு தாண்டி உனக்கு !

இந்த மாலைய கொஞ்சம் நகத்தி விடுங்க. பயங்கரமா குத்துது. ஒரு நாள் தான, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்றோம். நீ என்னடானா !

மாமா, ஒரு நிமிஷம். அவர் ஒரே ஒரு போட்டோ எடுத்துடட்டும். அதுக்கு அப்புறம் அருந்ததி பாக்கலாம் !நல்ல நேரம் முடியரதுக்குள்ளார நடந்தா சரி ! நமக்கென்ன, குழந்தேள் நல்லா இருக்கணும் அவ்வளவு தான் ! கவலைப்படாதீங்கோ. நம்ம சம்ப்ரதாயாத்த என்னிக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் !

7 comments:

Samuel | சாமுவேல் said...

அம்மி explanation ok ....அந்த ஊஞ்சல் எதுக்கு sir ?

மணிகண்டன் said...

**** அந்த ஊஞ்சல் எதுக்கு sir ***


ஊஞ்சல் ஆடறதுக்கு !

Samuel | சாமுவேல் said...

தெரியலனு சொல்லிருக்கலாம் !

ராஜ நடராஜன் said...

வித்தியாசமாகத்தான் தெரிகிறீர்கள்:)

மணிகண்டன் said...

:)- எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை "வித்தியாசம்" தான்.

Vijay said...

//வித்தியாசமாகத்தான் தெரிகிறீர்கள்:)//
//:)- எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை "வித்தியாசம்" தான்.//

அது சரி.

மணிகண்டன் said...

உங்க வருகைக்கு நன்றி விஜய்.