Wednesday, June 24, 2009

பயணம் - சிறுகதை

ரொம்ப பயமா இருக்கு நிதின். கிளம்பும் போது 20G அழுத்தம் இருக்கும்ன்னு சொல்றாங்க. மொத்த ரத்தமும் தலையிலேந்து காலுக்கு வந்துடும். இது எல்லாம் எனக்கு தேவையா ?

ஸ்பேஸ்ஷட்டிலில் கயலை வழியனுப்ப வந்திருந்த நிதின் அவளை நோக்கி ஒரு அலட்சிய பார்வையை வீசினான்.

உனக்கு முன்னாடி நானூறு பேரு இதே ஷட்டில்ல பயணம் பண்ணிட்டு பத்திரமா திரும்பி வந்து இருக்காங்க. ஜாலியா அனுபவிச்சுட்டு வா. பாதுகாப்பு இல்லைனா சீகேட் இன்சூரன்ஸ் கொடுத்து இருக்கமாட்டான். நானும் உன்னைய அனுப்பியே இருக்கமாட்டேன். இதை கேட்ட கயலுக்கு தைரியம் வருவதற்கு பதிலாக ரீதாவின் ஞாபகம் ஏன் வந்து தொலைந்தது என்று நிதினுக்கு புரிய சில நிமிடங்கள் ஆயிற்று. ஆனால் பயணத்தை குறித்த பயம் வேறு திசையில் சென்றதில் அவனுக்கு மகிழ்ச்சியே.

ட்பிச்ட்பாஅனனாவ் நஜந்ம௦அ ஜ்ச்டுபாஅஸ் அஸ்ட்ப் அனாவட்பிதஷ்ட்பில்

ஒவ்வொரு வினாடியும் என்ஜாய் பண்ணினேன் நிதின். உடம்பே முறுக்கேறினா மாதிரி இருக்கு. ஒரு மாதிரியான நொஸ்டால்ஜிக் பீல் டா. இது மாதிரி வருசத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது ஒரு அட்வென்ச்சர் பண்ணனும். உன்னைய தான் ரொம்பவே மிஸ் பண்ணினேன். நெக்ஸ்ட் டைம், நீ இல்லாம போகமாட்டேன் சொல்லிட்டேன்.

ஒகே கயல். நீயே சொல்லு அடுத்த வருஷம் என்ன பண்ணலாம்ன்னு. எதுவா இருந்தாலும் ஐ ம் ரெடி.

யப். நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன் டியர். அடுத்த வருஷம் அரசாங்கம் ஏதோ ஒரு ரசாயனம் மூலமா பூமில ரோடு போட பிளான் பண்ணி இருக்காங்களாம். அந்த பிளான் சக்சஸ்னா நம்ப airbottoms எல்லாம் கழட்டிட்டு கால அந்த ரோடு மேல வச்சி நடக்கலாமாம். வாவ் ! I feel as if i am already over the earth man !

14 comments:

மணிகண்டன் said...

யாராவது ஒருத்தருக்கு புரிஞ்சா இருந்தா கூட, i would be really happy :)-

கயல்விழி நடனம் said...

எனக்கு என் பேர் மட்டும் தான் புரிஞ்சிது...என்னமோ சொல்ல வரீங்க....ஆனா என்னான்னு தான் புரியல... :S

குடுகுடுப்பை said...

நான் பிஏ வரலாறு

சித்ரா said...

புரியிது. ஆனா புரியல. :-)

கதை புரிந்தது.

//ட்பிச்ட்பாஅனனாவ் நஜந்ம௦அ ஜ்ச்டுபாஅஸ் அஸ்ட்ப் அனாவட்பிதஷ்ட்பில்//

இதான் என்னன்னு புரியல.

சித்ரா

Athisha said...

டப்பா டான்ஸ் ஆடுகிறதே..!

மாமா பிஸ்கோத்து

லக்கிலுக் said...

நல்ல புனைவு திரு மணிகண்டன் அவர்களே. எனக்கு நன்றாகவே புரிந்தது. அடுத்த பின்னூட்டம் ரவிசங்கர் ஸ்டைலில் ட்ரை செய்கிறேன்.

லக்கிலுக் said...

ஆரம்பம் ஜெட் வேகம். ஆனால் காட்சிப்படுத்துதலின் கற்பனைக்கான வெளி அதிகமாக இருக்க வேண்டும்.

//கிளம்பும் போது 20G அழுத்தம் இருக்கும்ன்னு சொல்றாங்க. மொத்த ரத்தமும் தலையிலேந்து காலுக்கு வந்துடும்.//

20ஜி என்றால் என்னவென்று ஒரு பத்தியில் விளக்கம் தரவேண்டும். சுஜாதா விக்ரம் தொடரில் ராக்கெட் என்றால் என்னவென்றே ஒரு வாரம் எழுதியிருந்தார்.

//கயலை வழியனுப்ப வந்திருந்த நிதின்//

கயல் அழகான தமிழ் பெயர். ஆனால் நிதின்?

சுஜாதாவின் என் இனிய இயந்திரா படிக்கவும். நாயகன் பெயர் சிபி.

//ட்பிச்ட்பாஅனனாவ் நஜந்ம௦அ ஜ்ச்டுபாஅஸ் அஸ்ட்ப் அனாவட்பிதஷ்ட்பில்//

நல்ல கதையோட்டத்துக்கு இடையே ஏன் இந்த ஆபாசம்?


க்ளைமேக்ஸ். ஒன்றும் சொல்வதற்கில்லை. சுஜாதா கடந்த தூரம் அதிகம். நாம் கடக்க வேண்டிய தூரத்தை கடக்க முதலில் சுஜாதா ஆரம்பித்த புள்ளியையாவது தொட முயற்சிக்க வேண்டும்.

ஆபரேஷன் அவுட். ஆனால் பேஷண்ட் மட்டும் பிழைத்துக் கொண்டான்.

என்னுடைய ‘அவள்’ சிறுகதை படித்தீர்களா? படிக்காவிட்டால் காறி உமிழ்ந்து பின்னூட்டம் போடுங்கள்.

மணிகண்டன் said...

//ட்பிச்ட்பாஅனனாவ் நஜந்ம௦அ ஜ்ச்டுபாஅஸ் அஸ்ட்ப் அனாவட்பிதஷ்ட்பில்//

சித்ரா, இது ச்பேஸ் ட்ராவல் !!!! :)-

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆகா....கிளம்பிட்டாங்க ஐயா கிளம்பிட்டாங்க..

மணிகண்டன் said...

கண்ணா, நோ, யெஸ், உப்பு :- மன்னிச்சுக்கோங்க. பின்னூட்டம் டெலீட் பண்ண வேண்டியதா போச்சு. நோ, உங்க கிட்ட ஒரு ஸ்பெஷல் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏன்னா உங்க பின்னூட்டம் எழுதவே அஞ்சி நிமிஷம் ஆகி இருக்கும்.

ரவி said...

ஏன் இந்த கொலைவெறி ?

வாசகர்களை கொஞ்சம் உயரத்தில் வைத்து பாருங்கள். அவர்களின் தரம் இப்போதெல்லாம் உயர்ந்துவிட்டது..

காமிக்ஸ் படித்ததில்லையா ? அதில் ஒலிகளை எப்படி வெளிப்படுத்துக்கிறார்கள் என்று பாருங்கள்...

இங்கே அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல துருத்திக்கொண்டு நிற்கிறது..

நல்ல தீம். அருமையாக கலக்கியிருந்திருக்கலாம்...

இந்த தீமில் லக்கியை எழுதசொல்லிப்பாருங்கள் ? கலக்குவான்.

அதே சமயம், உங்கள் படைப்பில் உள்ள மொக்கையான விஷயங்களை எடுத்துக்காட்டினால் அதனை திருத்திக்கொள்ளும் மனோபாவம் வேண்டும்...

அது இன்னும் உங்களை தரம் உயர்த்திக்கொள்ள உதவும்...

இன்னும் கொஞ்சம் பெரிதாக நீட்டி முழக்கி எழுதியிருந்திருக்கலாம். பொதுவாக சின்ன கதைகளை ஷாட்ர் அண்டு ஸ்வீட் என்று சொல்வேன், ஆனால் இது ஷாடர்ட் அண்ட் மொக்கை. இன்னும் நிறைய ட்ரைபண்ணுங்க...

மணிகண்டன் said...

கயல்விழி, குடுகுடுப்பை, அதிஷா, லக்கி, ராதாகிருஷ்ணன் - நன்றி.

ரவி, உங்கள் விமர்சனம் மற்றும் அக்கறைக்கு நன்றி. இது எனது முதல் சிறுகதை முயற்சி. ஆதலால், தீமை ஒரு சிலருக்காவது புரியும்படி எழுதியது எனக்கு மகிழ்ச்சியே. நான் பயன்படுத்தி இருக்கும் அவ்வெழுத்துக்கள் சயின்ஸ் பிக்ஷன் கதைகளில் பிரபலமானதே. ஆனாலும் மொக்கை தான் ! அடுத்த சிறுகதை எப்பொழுதாவது எழுதினால் இன்னும் பெட்டரா முயற்சி பண்றேன். ஆனால் ஷார்ட் அண்ட் ஸ்வீட் என்று நீங்கள் சொல்லும்வரை உங்கள் ஈமெயில் ஸ்பேம் செய்யப்படும். லக்கியுடன் நீங்கள் செய்து இருக்கும் comparison unjustified.

NO said...

//நோ, உங்க கிட்ட ஒரு ஸ்பெஷல் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏன்னா உங்க பின்னூட்டம் எழுதவே அஞ்சி நிமிஷம் ஆகி இருக்கும் //

No Problem. Its afterall your house and you get to decide what should be in it.No issues!!

Thanks

சென்ஷி said...

:-)

சொல்ல வந்த கதை எனக்கு நல்லா புரியுது மணிகண்டன்.

ஆமா.. கயல் போன இடத்துல அந்த ஈவாவையோ இல்ல வால் -ஈ யையோ மீட் செஞ்சாங்களா? கேட்டு சொல்லுங்க