Friday, June 12, 2009

கிச்சடி - 12/06/09

ஏதாவது ஒரு வலையுலக பிரபலத்துக்கிட்ட சேட்டில் விடாம உங்களை தொடர்பதிவுக்கு கூப்பிட சொல்லி புடுங்குங்க. அவங்க கூப்பிட்ட பிறகு "பிஸி" ன்னு சொல்லி எழுதாதீங்க. இப்படி பண்ணினா, நீங்க உங்களை கூப்பிட்டவரை விட சீக்கிரமா பிரபலம் ஆகிடலாம். அட்லீஸ்ட் மனசை தேத்திக்கலாம்.


எந்தவொரு பழக்கமும் என்னைய ரொம்ப எளிதா அடிச்ஷனுக்கு கொண்டு தள்ளும். அதுனாலயே நான் முன்னாடி எழுதிக்கிட்டு இருந்த பல பதிவுகளை திடீர்ன்னு ஒரு நாள் டெலீட் பண்ணிடுவேன். ஆனா, இந்த முறை ஆறு மாதம் ஆகியும் வச்சிருக்கேன். கடந்த ஒரு மாசமா ரொம்ப இன்டர்நெட் பக்கம் வராம இருந்தேன். நல்லாவே இருக்கு.


ஒருவாரம் ஊருக்கு வந்து இருந்தேன். பல ரசிக/ரசிகைகள் போன் பண்ண சொல்லி இருந்தும் யார்க்கிட்டேயும் பேச முடியலை. எல்லார்கிட்டையும் பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கறேன்.


திருச்சி ரம்பா திரையரங்குல "அயன்" படம் பார்த்தேன். ஓரளவுக்கு தியேட்டரை சீரமைச்சு இருக்காங்க. போனமுறை மகாமோசமா இருந்தது. இதுக்குமேல படத்தை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல.

எங்க ஊருல ஜீயர் யார்க்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயோ போயிட்டாரு. (டெல்லின்னு சொல்றாங்க.) ஒரே தர்ணா, களேபரம். போலீஸ்ல வேலை செய்யற நண்பர் ஒருவர் பயங்கர கடுப்புல இருக்காரு. தொண்ணூறு வயசுக்கு மேல இவர் ஏன் எங்களை இப்படி பாடாய் படுத்தராறேன்னு.

தமிழ்நாட்டுல தாம்பிராஸ்ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க இந்த முறை தேர்தல்ல (மதுரையில்) அழகிரிக்கு வாக்களிக்க சொல்லி பிரச்சாரம் பண்ணினாங்களாம். என்ன காரணமா இருக்கும் ?

ஊருல அதிமுக தோத்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு எல்லாம் அலசி ஆராஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஏகோபித்த கருத்து அம்மா அரசு ஊழியருக்கு பண்ணின துரோகம்தான்னு. என்னத்த சொல்லுறது !

நான் இருந்த ஒருவாரத்துல எந்த தொலைக்காட்சியிலும் ஈழப்பிரச்சனை பத்தி மருந்துக்கு கூட எதுவும் காட்டலை. ப்ளாக்ல மட்டும் தானா ?

மும்பை தாக்குதல்ல என்னோட அக்கா (கசின்) கணவரோட அண்ணன் சுடப்பட்டு இறந்தார். இவரையும் சேர்த்து தமிழ்நாட்டில் இருந்து நாலு பேரு இறந்தாங்களாம். இருவர் BSF. ஒருத்தர் போலீஸ். இன்னொருத்தர் பேங்க். (வாய்வழி செய்தி தான். எந்தளவு சரின்னு தெரியாது) தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ?

ரெங்கநாதர் கோவில்ல சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு மட்டும் போயிருந்தேன். ஸ்ரீரங்கத்துல இருக்கறவங்க ரெங்கநாதர் சந்நிதிக்கு ரெண்டுவருஷத்துல ஒருமுறை போவாங்களா ? அதுவே சந்தேகம் தான். ஐய்யங்கார்வாள் புளியோதரை சூப்பரா இருக்கும்ன்னு கேட்டுக்கேட்டு காதே புளிச்சு போச்சு. ரெங்கநாதர் கோவில் புளியோதரை மண்ணு மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி மண்ணும் இருக்கும்.

ஏன் பதிவு போடலைன்னு கேட்டு என்னோட கூகிள் ஐடிக்கு நூறு பேருக்கு மேல மெயில் பண்ணி இருந்தாங்க. இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின பெங்களூர் மற்றும் மும்பை வாசகிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

18 comments:

Kanna said...

வாங்க மணிகண்டன்

welcome back

//மும்பை தாக்குதல்ல என்னோட அக்கா (கசின்) கணவரோட அண்ணன் சுடப்பட்டு இறந்தார்//
தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ? //

முதலில் அனுதாபங்கள்..

:((

நிராகரித்தது மிக கேவலமான செயல்...

மணிகண்டன் said...

கண்ணா, எனக்கு அவரை சுத்தமாவே தெரியாது.
அடுத்தது நிராகரிச்துக்கான ரீசன் தெரியல. அதுனால அது தவறான்னு தெரியல.
Financially manage பண்ண கூடிய family தான். பட் ஸ்டில் ?

T.V.Radhakrishnan said...

//தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ? //

:-(((

மைய அரசை அணுகச் சொல்லலாமே..

rapp said...

//தமிழ்நாட்டுல தாம்பிராஸ்ன்னு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க இந்த முறை தேர்தல்ல (மதுரையில்) அழகிரிக்கு வாக்களிக்க சொல்லி பிரச்சாரம் பண்ணினாங்களாம்//

:):):)

rapp said...

//எங்க ஊருல ஜீயர் யார்க்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயோ போயிட்டாரு//

அதுக்கப்புறம்தான் ரெண்டு மூணு அறிக்கையெல்லாம் விட்டு கலக்குனாரே:):):)

புருனோ Bruno said...

//தமிழ்நாட்டு அரசாங்கம் இவங்க குடும்பத்துக்காக விண்ணப்பம் செஞ்ச நஷ்ட ஈடை நிராகரிச்சுட்டாங்க. என்ன காரணமா இருக்கும் ?//

அவர்கள் மகாராஷ்ட்ர அரசிடம் விண்ணப்பத்திருந்தார்களா

அங்கு என்ன கூறினார்கள்

புருனோ Bruno said...

//ஊருல அதிமுக தோத்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு எல்லாம் அலசி ஆராஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஏகோபித்த கருத்து அம்மா அரசு ஊழியருக்கு பண்ணின துரோகம்தான்னு. என்னத்த சொல்லுறது !//

தேர்தல் முடிவு வந்த அன்று இதை நான் கூறியபோது இணையத்திலுள்ள “அறிவுஜீவிகள்” ஏற்றுக்கொள்ளவேயில்லை :)

மணிகண்டன் said...

ரொம்ப நாள் கழிச்சி எழுதினாலும் மக்கள் வராங்க. நன்றி ராப், ப்ருனோ மற்றும் ராதாகிருஷ்ணன் சார்.

அனுஜன்யா said...
This comment has been removed by the author.
வெட்டிப்பயல் said...

வாங்க மணிகண்டன்,

//ஊருல அதிமுக தோத்ததுக்கு என்ன காரணமா இருக்கும்ன்னு எல்லாம் அலசி ஆராஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஏகோபித்த கருத்து அம்மா அரசு ஊழியருக்கு பண்ணின துரோகம்தான்னு. //

நான் எங்க வீட்ல கேட்ட போதும் அது தான் சொன்னாங்க. அதுவும் ரிட்டயர் ஆகற நிலைமைல இருக்கவங்க எல்லாம் அந்த அம்மாக்கு போட கூடாதுனு தெளிவா இருக்காங்க.

அனுஜன்யா said...

Welcome Back Mani.

எங்க நான் தான் பதிவுகளை மிஸ் பண்ணிவிட்டேனோ என்று நினைத்தேன்.

மும்பை தாக்குதல் - உங்க உறவினர் இறந்தது - :((

மகாராஷ்டிரா அரசைக் கேட்பது சரி; அல்லது மத்திய அரசையும் கேட்கலாம். தமிழ் நாடு அரசு, குறைந்த பட்சம், இதில் இவ்வாறு தலையிட்டு எங்கு உதவி கிடக்கும் என்று சொல்லி, துரிதப் படுத்தலாம்.

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா said...

welcome back

:)

மணிகண்டன் said...

வெட்டிப்பயல், அனுஜன்யா மற்றும் அப்துல்லா - வருகைக்கு நன்றி.

Sammy said...

///எந்தவொரு பழக்கமும் என்னைய ரொம்ப எளிதா அடிச்ஷனுக்கு கொண்டு தள்ளும்///
...
//இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின//.

'அடிச்ஷன்' உங்களை விட உங்கள் பதிவை படிப்பவர்களுக்கு அதிகம் போல

நான் ஆதவன் said...

//இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின//.

நீங்க வெளியில சொல்லிட்டீங்க...நான் சொல்லல அவ்வளவு தான் :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//இனிமேயும் எழுதாட்டி "தீ குளிப்பேன்னு" மிரட்டின//.

yennanga? :) :) :)

வித்யா said...

கொஞ்சம் லேட்டா வெல்கம் பேக் சொல்லிக்கிறேன்.

மணிகண்டன் said...

நான் ஆதவன், சாம், இராஜலக்ஷ்மி, வித்யா - வருகைக்கு நன்றி.