மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.
உரையாடல் சிறுகதை போட்டிக்கு ஒரு பிரபல பதிவரின் பதிவில் எனது சிறுகதையை பிரசுரித்துள்ளேன். பரிசு கிடைக்குமா ?
பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது என்று எழுதினால் நான் இந்துத்துவவாதியா ?
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இந்த குறளை படித்துவிட்டு அடுத்தவரை நாண வைப்பதற்காக நல்லவற்றை செய்ய ஆரம்பித்துள்ளேன். இது சரியா ?
சரி இல்லையென்றால் தவறா ?
தமிழில் ஒரு நல்ல ஆண்பெயர் கூறுங்களேன்.
பெயருக்கு மொழி உண்டா ?
மொழிக்கு பெயர் இருக்கும்போது பெயருக்கு மொழி இருக்கக்கூடாதா ?
வித்தியாசம் என்ற புதரில் என்றாவது அகப்பட்டதுண்டா?
பல்ப் பிக்ஷன் என்ற வகையறுக்கப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே எனக்கு படிக்க பிடிக்கறது. அப்படியென்றால் நான் வெகுஜன எழுத்தாளர்களை ரசிக்கும் இலக்கியவாதியா ?
கோர்வையற்ற எண்ணங்களை எழுத்தாக மாற்றும் இலக்கியவாதிகளிடம் ஒரு கேள்வி இருக்கிறது என்னிடம்.
என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை பல லட்சங்கள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?
நான் லீனியர் முறையில் எழுதப்படும் நாவல்கள், சிறுகதைகள் எப்படி படித்தாலும் புரியாதா ?
என் முதல் கேள்விக்கு பரிசுத்தொகை ஒரு லட்சம் காசுகள் என்று அறிவித்தால் உங்கள் பதிலில் மாற்றம் வருமா ?
உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?
முடியுமென்றால் எப்படி ?
பிரபலப்பதிவர் பலரின் பதிவுகளை படித்து அவற்றை பற்றி எழுதியும், அவற்றுக்கு தமிழிஷ்ல் வாக்களித்தும் வருவதற்கு பதிலாக கும்மாங்குத்து பதிவுகள் எழுதுவது மாதிரியாகவா ?
கடைசிப் பத்தியை எழுதாமல் இருந்து இருந்தால் இதை சிறுகதையாக அறிவித்து இருக்கலாமா ?
கதையின் முடிவில் ஒரு பெரும் திருப்பத்தை கொடுக்காவிட்டால் அது சிறுகதை என்ற இலக்கண வகையறையில் வராதா ?
இந்த சிறுகதை "உரையாடல்" அமைப்பின் சார்பாக நடைபெறும் போட்டிக்காக எழுதப்பட்டது.
22 comments:
:-)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................
இவரும் பாதிக்கப்பட்டிருக்காரு
வாங்க ராப்.
ஜெகநாதன் - கரெக்டா கண்டுபுடிச்சி இருக்கீங்க :)- profile ல பெங்களூர்ன்னு போட்டு இருக்கு. அங்க என்ன டைம் இப்போ ?
:-)
இப்ப இங்க நேரம் மூணே முக்கால். இப்ப தூங்கப் போறேன். நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கேன்!
ரசித்தேன். ;-))
பிம்பிலிக்கி பிலாப்பி...மாமா பிஸ்கோத்து..
//மிடில் கிளாஸ் மெண்டாலிடி என்றால் என்ன என்று பின்னோட்டத்திலோ, பதிவெழுதியோ சிறப்பாக விளக்குபவர்களுக்கு ஐம்பது ருபாய் பரிசு என் சார்பாக.
//
மணி அண்ணே உங்க மெண்டாலிட்டியும்,என் மெண்டாலிட்டியும் என்னவோ அதுதான் மிடில்கிளாஸ் மெண்டாலிட்டி
:)
//உங்கள் எழுத்தை படிப்பவரின் ஆர்வத்தை சுத்தமாக அழித்து ஒழிக்கமுடியுமா ?//
கண்டிப்பா முடியும்
//முடியுமென்றால் எப்படி ?//
இதே மாதிரி இன்னும் ஒரு பதிவு போடுங்க
கிச்சடி - நல்ல சுவை..
இது கொத்து பரோட்டாவுக்கு எதிர் வினை இல்லையே..??
இதுவரை எதிர்வினை அந்தந்த போஸ்டில் உள்ள கமெண்ட் மூலமா தான் !
ராப், வெட்டிப்பயல், msathia, அதிஷா - நன்றி.
அப்துல்லா, நீங்க மட்டும் தான் பதில் கொடுத்து இருக்கீங்க :)- பரிசு உண்டு.
சாம் :- நீங்க மட்டும் தான் இந்த பதிவோட நோக்கம் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க.
சிந்து சொல்லறது உன்னுடைய கிச்சடி படித்தேன். நெஜமாவே எனக்கு ஒன்னும் புரியலை. எல்லாருக்கும் புரியற மாதிரி எதாவது எழுது. இப்படி போட்டு குழ்ழபாதே
மணி, உங்க இமெயில் ஐடி என்ன?
Peer
:-))))
உண்மையிலேயே பதிவுலக வாசகர்களால் தீவிரமா கவனிக்கப்பட வேண்டிய பதிவு இது!
சாமியின் பின்னூட்டம் கலக்கல்.. தொடர்ந்து எழுதுங்க பாஸ்!
:)
***
உண்மையிலேயே பதிவுலக வாசகர்களால் தீவிரமா கவனிக்கப்பட வேண்டிய பதிவு இது!
***
அப்படி சொல்லுங்க சென்ஷி. நீங்க தான் நல்லவரு.
பீர், மெயில் அனுப்பி இருக்கேன்.
வாங்க முத்துலட்சுமி.
சென்ஷி - S.a.m.m.y வந்து உங்களுக்கு தமிழ்ல சாமியா ?
// மணிகண்டன் said...
சென்ஷி - S.a.m.m.y வந்து உங்களுக்கு தமிழ்ல சாமியா ?//
ஓ.. சா.ம்.மி.யா அவர்
நல்லா உடைக்கிறாய்ங்கய்யா கட்டுகளை..
மிடில் கிளாஸ் மெண்டாலிடிக்குப் பரிசுத் தொகை என்னனு finalize பண்ணிட்டு சொல்லுங்க.. வந்து பதில் சொல்றேன்.
Post a Comment