புவியீர்ப்பு சக்தி
வேறுபட்ட, வித்தியாசமான, குடும்பப்பாங்கான, மசாலாவான, வகையறுக்கப்படாத - இந்த வகையறையில் வரும் எந்த தமிழ் / ஹிந்தி படமா இருந்தாலும் ஒரு நிச்சயமான காட்சி ஒற்றுமை இருக்கு. அதாவது நம்ப ஹீரோ, ஹீரோயின் வூட்டுக்கு முதல் முறையா வராருன்னு வச்சிக்கோங்க. ஹீரோயின் வூட்டுல யாரும் இருக்கமாட்டாங்க. அந்த அம்மா, அப்பதான் குளிச்சுட்டு துண்டு கட்டிக்கிட்டு வெளில வருவாங்க. அவங்களோட துண்டுக்கும், புவியீர்ப்பு சக்திக்கும் ஒரு பைட் நடக்கும். இயக்குனரோட முடிவு நியூட்டனுக்கு ஆதரவாவே இருக்கும்.பாட்டு நல்லா இருக்கே, படம் ஏதோ வித்தியாசமா இருக்குன்னு சொன்னாங்களேன்னு டெல்லி - 6 பாத்தேன். மரண மொக்க.
அடிக்க வராதீங்க. நான் காலா பந்தர்ங்கர ஹிந்தி வார்த்தைய வெண்மேகம்ன்னு புரிஞ்சிக்கற ஆளு. அதுவும் சப்-டைட்டில் இல்லாம வேற பாத்தேன். சோ, நீங்களும் ஒருமுறை பைட் பாக்க ஆசைப்பட்டா, மீ நோ அப்ஜெக்க்ஷன்.
********************************************
அன்புள்ள சுந்தர் மாமாவுக்கு,
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ? ஒரு வாரமா இங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல . அடிக்கடி கடுதாசு போடு. ஆனா போன முறை நீ எழுதினது சரியா புரியல. கடுதாசில கதை எழுதாத. இந்த மாதிரி சிம்பிள்ளா எழுது.
இப்படிக்கு
மணி
********************************************
Golden Handshake
ஸ்வன் கோரன் எரிக்சன் இங்கிலாந்துக்கு கால்பந்து கோச்சா இருந்தாரு. 2006ல அவர அந்த பதவிலேந்து நீக்கினாங்க. அதுக்கு 3-4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. 2007ல மான்செச்டேர் சிடின்னு ஒரு கால்பந்து கிளப்புக்கு கோச்சா இருந்து பின்ன நீக்கப்பட்டாரு. மறுபடியும் 4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. நேத்திக்கு மெக்சிகோ அணி கோச் பதிவிலேந்து நீக்கி இருக்காங்க. இந்தமுறை 7 மில்லியன் போல.
நான் முன்னாடி வேல செஞ்ச கம்பெனி CEO பேரு கார்லி பியோரினா. அவங்கள 2005ல வேலைய விட்டு தூக்கினாங்க. நஷ்ட ஈடா 20 மில்லியனுக்கு மேல கொடுத்தாங்கன்னு செய்தி வந்தது. இவங்க தான் போன வருஷம் தேர்தல் போது ஜான் மக்கைன் டீமுக்கு நிதித்துறை ஆலோசகர். ஜான் மக்கைன்னோட சேர்ந்து Golden Handshake ஸ்கீமுக்கு எதிரா குரல் கொடுத்தாங்க.
நான் கூட பதிவு எழுதறதுலேந்து நீங்கிக்க ரெடி. சாமியோவ் !
*******************************************
சின்ன வயசுல, எதாவது துடுக்குத்தனம் பண்ணினா, அப்பா ஆபிஸ்லேந்து பூத கண்ணாடில பாத்துக்கிட்டு இருக்காருன்னு சொல்லி மிரட்டுவாங்க. கொஞ்சம் வயசு ஆனதுக்கு பிறகு பண்ற தப்பு எல்லாத்தையும் பாக்க சாமி இருக்காருன்னு பயம் காட்டுவாங்க. இப்ப இது எல்லாத்தையும் உண்மை ஆக்கிடுவாங்க போல. கூகிள் ஸ்ட்ரீட் வியூ உபயோகிச்சு பாருங்க.
**********************************************
ப்ளாக்ல யாராவாது குழந்தை போட்டோ போட்டாக்க, நான் அந்த பதிவ நிச்சயமா பாப்பேன். வரும் எல்லா பதிவுக்கும் ஒரு பதில் பின்னூட்ட டெம்ப்ளேட் இருக்கு. "மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.
******************************************
டெம்ப்ளேட் பத்தி வேற எழுதி இருக்கேன். பொதுவாவே, கட்டுமானத்துக்கு கட்டுப்பட்டவன் நான். ஏ ஜோக், நகைச்சுவை துணுக்கு எதுவும் ஸ்டாக் இல்ல. அதுனால
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
உன் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பியோடு தான்.
(எங்கேயோ, எப்பவோ படிச்சது. யாரு எழுதினதுன்னு தெரியாது. இது நல்ல கவிதையா தான் இருக்கணும். எனக்கே ஞாபகம் இருக்கே.)
Friday, April 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
கிச்சடி நன்றாக இருக்கிறது..
(மு.மேத்தாவின் கவிதை அது)
Thanks for the info sir. இதுனால தான் நான் எழுதினேன்னு சொல்லல.
என்னோட கவிதைக்கு மட்டும் யாரும் ஆதரவு தெரிவிக்கமாட்டேங்கறீங்க. :(-
:-)
ரொம்ப அருமையான கிச்சடியா இருக்குது..
//"மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.//
ஆமாமுல்ல.. ஏன்??
////"மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.//
உங்க பதிவுல இந்த வார்த்தைய பத்தி ஒரு மூத்தப்பதிவர்கிட்ட பேசுனப்ப அவங்க சொன்ன டயலாக்..
"ஒரு வேளை நம்ம புள்ளையும்தான் இருக்கேன்னு வயித்தெரிச்சலா இருக்கும்"
ஆனா நான் நிறைய்ய இடத்துல திருஷ்டி சுத்தி போட சொல்ற கமெண்ட போட்டிருக்கேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. :-)
அதுக்காக என்னைய நினைச்சு வயித்தெரிச்சல் பட்டேன்னு நினைக்காதீங்க.. நாங்கள்லாம் பர்சனாலிட்டில பார்டர்ல பாஸ் ஆனவங்க :-)
மறுபடியும் சொல்லிக்குறேன் பதிவு நல்லா இருக்குது!
சென்ஷி, வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றி. கேள்விக்கு எல்லாம் பதில் கண்டுபிக்க முயற்சி பண்றீங்க. அதுனால தான் பார்டர்ல பாஸ் பண்றீங்க ! ப்ளாங்கா விட்டு பாருங்க, பஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணுவீங்க !
****
"ஒரு வேளை நம்ம புள்ளையும்தான் இருக்கேன்னு வயித்தெரிச்சலா இருக்கும்"
****
:)- LOL
//விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
உன் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பியோடு தான்.//
:)
விழிகள் ஜன்னல் கம்பியை வருடினால் கண்ணுல இரத்த களறி ஆகிடாதா ?
//அதுக்காக என்னைய நினைச்சு வயித்தெரிச்சல் பட்டேன்னு நினைக்காதீங்க.. நாங்கள்லாம் பர்சனாலிட்டில பார்டர்ல பாஸ் ஆனவங்க :-)//
பாஸ் நீங்களே பார்டர்ல பாஸ் பண்ணிய ஆளுன்னா.....!
ஆண்டவா...! என்னிய மட்டும் ஏனப்பா இந்த எக்ஸாம்ல பெயிலு பண்ணிப்புட்ட...... !
//அன்புள்ள சுந்தர் மாமாவுக்கு,
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ? ஒரு வாரமா இங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல . அடிக்கடி கடுதாசு போடு. ஆனா போன முறை நீ எழுதினது சரியா புரியல. கடுதாசில கதை எழுதாத. இந்த மாதிரி சிம்பிள்ளா எழுது.
இப்படிக்கு
மணி
//
கலக்கல் :)))))
இன்னொரு விதமாவும் சொல்லுங்க பேனாவை புடிச்சு எழுது அதுல ஏறி உக்காந்துக்கிட்டு எழுதாத ராசான்னு :))))
////"மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.////
ஆமாம் ஏன் இப்படி....?
எனக்கும் நிறைய தடவை திருஷ்டி சுத்தியிருக்காங்க! பட் என்னிய யாரும் கண்னு வைச்ச மாதிரியோ அல்லது அதற்கான சைடு எபெக்ட்ஸோ இல்லியே.....! :((((
***
இன்னொரு விதமாவும் சொல்லுங்க பேனாவை புடிச்சு எழுது அதுல ஏறி உக்காந்துக்கிட்டு எழுதாத ராசான்னு
***
கலக்கல் ஆயில்யன்
***
எனக்கும் நிறைய தடவை திருஷ்டி சுத்தியிருக்காங்க! பட் என்னிய யாரும் கண்னு வைச்ச மாதிரியோ அல்லது அதற்கான சைடு எபெக்ட்ஸோ இல்லியே
***
என்ன கொடுமை சார் இது ! திருஷ்டி சுத்தினபோது நல்லா வெடிச்சி இருக்கும் !
மணி,
கிச்சடி நல்லா இருக்கு. யூத்தா இருந்தாலும் உன் அண்ணன்கிற முறையில் சொல்றேன். தப்பா நினைக்காத. Flippancy கொஞ்சம் குறை. சுந்தரைக் கலாய்ப்பது பிடித்தது. கிரிக்கெட் விளையாட்டின் finer points பற்றி எழுதலாம்.
அனுஜன்யா
மணி அண்ணே ஆபிஸில் ஆடிட்டிங் போகுது. அப்புறமா வர்றேன்.
@ கோவி,
உங்களுக்கு பயங்கர எழுத்துப்பிழையோட எழுதி இருந்த பின்னூட்டத்த அழிச்சிட்டேன். மேத்தாவுக்கு கண்ணுலேந்து ரத்தம் வரும் உங்க கமென்ட் படிச்சா. ஆனா நான் சின்ன வயசுல ஜன்னல் கம்பில புருவத்த வச்சிக்கிட்டு வேடிக்கை பாப்பேன். வெயில் காலத்துல ராவேளைல நல்ல குளுமையா இருக்கும் ! முயற்சி பண்ணி பாருங்க. (குளுமையான காலத்துல மிதமான சூடோட வச்சாலும் நல்லா இருக்கும் !). பாருங்க, வேற ஒருத்தர் கவிதைய எழுதினாலே என்ன effect !
@ அனுஜன்யா,
*** Flippancy கொஞ்சம் குறை ****
இது என்னோட மேஜர் கேரக்டர் flaw. கொஞ்ச நாள் எழுதினதுலயே reflect ஆகுது. குறைக்க நிச்சயமா முயற்சி பண்றேன். இதுக்கு நான் முழு பதில் கொடுத்தா பயங்கர பெருசா இருக்கும். ஆனா, நேரடியா உங்க விமர்சனத்த சொன்னதுக்கு நன்றி.
****யூத்தா இருந்தாலும் உன் அண்ணன்கிற முறையில்****
என்னோட பசங்க அப்பா நீ பிளாக்கர்ல போட்டுருக்கற வயச பாத்துட்டு நீயும் யூத்ன்னு நம்பறாங்க போலன்னு சொல்றாங்க. அண்ணன் யூத்னா தம்பியும் யூத் தான !
****கிரிக்கெட் விளையாட்டின் finer points பற்றி எழுதலாம்****
நான் யூத்தா இருந்தபோது பெருசுங்க கிட்ட கிரிக்கெட் பத்தி பேசறதுனா ரொம்ப பிடிக்கும். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சி "அந்த ஹோல்டிங் இருக்கானே", "லாயட் இருக்கானேன்னு" பேச ஆரம்பிச்சாலே எனக்கு டர்ஜ் ஆகிடும். அது மாதிரி நான் பேச ஆரம்பிச்சி யூத் எல்லாம் என்னைய விட்டு ஓடி போய்டுவாங்களோன்னு பயமா இருக்கு. தோணிய பத்தி யாராவது பதிவு எழுதினாலோ, சச்சின் பத்தி எழுதினாலோ, நான் போடும் கமென்ட் எல்லாம் மறுபடியும் படிச்சா இப்படி தான் தோனுது.
ஓரளவு எழுத பழகினவுடன, கிரிக்கெட் பத்தி நிச்சயமா எழுதுவேன்.
@அப்துல்லா,
நீங்க எப்ப பாத்தாலும் வேல தான் பாத்துக்கிட்டு இருக்கீங்க. வூட்டுல ரொம்ப சாது போல. நம்ப திருச்சி தொகுதி பத்தி எப்ப எழுத போறீங்க ?
கிச்சடி அருமைங்க!
Thanks thevanmayam
நீங்களும் நானும் ஒரு டீலிங் போட்டுக்கலாமா :)
சுந்தர், முதல் முதலா வந்து இருக்கீங்க . உடனே டீல் போடமுடியுமா :)-
தமிளிஷ் வோட்டு போட்டுக்கிட்டு இருந்தீங்க. அதையும் என்னோட கவிதை தொகுப்புக்கு போடல. டீலுக்கு precondition அது தான்.
வருகைக்கு நன்றி.
அடிச்சு அடுறீங்க....! புகுந்து வெளாடுங்க...!
Post a Comment