சில பேருக்கு மனசுல ஓடற உணர்ச்சிகள் முகத்துல அப்படியே பிரதிபலிக்கும். அவங்களை எல்லாம் வெள்ளந்தி என்றும், மனசுல ஒண்ணு வச்சிக்கிட்டு வெளில வேற மாதிரி நடிக்க தெரியாதவங்கனும் சொல்லுவாங்க. அதுவே வேற சில பேரு என்ன பிரச்சனைனாலும் முகத்தை ஒரே மாதிரி வச்சிப்பாங்க.(ரங்கமணிகள்) இவங்களை எல்லாம் "என்னமா நடிக்கறா/நடிக்கறான்" பாருன்னு சொல்லுவோம். ஆனா, சினிமால அஜித் எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை முகத்துல காட்டினாலும் அவருக்கு நடிக்கவே தெரியலன்னு சொல்றாங்க. என்ன அநியாயம் ?
நான் ஒரு சிறுகதை எழுதி வச்சி இருக்கேன். ஆனா அதுக்கு முடிவு எழுத தெரியலை. இதுக்கு உதவி செய்ய ஏதாவது புத்தகம் இருக்கா ?
கல்லூரி சிறுகதை போட்டில வெற்றி பெற்ற பாலாஜிக்கு வாழ்த்துக்கள். கார்க்கியின் கதை டாப் 10ல வராதது பயங்கர அதிர்ச்சி தான். எனக்கு அவரோட கதையும் ரொம்பவே பிடிச்சி இருந்தது. Tastes differ !
Augusta National Golf tournament பைனல் ரவுண்ட் பாத்தேன். கார்பரா, கென்னிபெரிய ஷூட் அவுட்ல தோற்கடித்தார். டைகர் வுட் 17/18th ஹோல் ரெண்டுமே bogey. ஆறாவதா வந்தாரு. Is tiger woods capable of choking ?
தமிழ்ல எழுதும்போது எழுத்து பிழைகள் அதிகமா வருது. சரின்னு, மனசுல தோணும் எல்லா கருமாந்திரத்தையும் ஒரு நோட் புக்ல எழுதினேன். ரெண்டு மூணு நாள் கழிச்சி அதே மாதிரி NHM மூலமா வூட்டுல இருக்கும் கணிப்பொறில டைப் பண்ணினேன். இன்னொரு நாளைக்கு Google Transliterate மூலமா முயற்சி பண்ணினேன். கடைசி முறையில் பயங்கர பிரச்சனை. பலவித "ந" , "ன", "ண" ஆப்ஷன் வரும்போது எதை செலக்ட் பண்ணறதுன்னு குழப்பம் வருது. நோட்ல எழுதும் போது நூறுல ஒரு பத்து வார்த்தைகள் தவறா எழுதினா, இதுல முப்பது வார்த்தைக்கும் மேல தகிடுதத்தம் தான். I suppose language skills are more habitual.
கடைசியாக ஒரு சமையல் குறிப்பு.
அராபியாட்டா வேப்பம் பூ ரசம்
தேவையானவை :
அராபியாட்டா சாஸ்
புளி சிறிதளவு
சிகப்பு மிளகாய்
வேப்பம் பூ
துவரம் பருப்பு
இஞ்சி சிறிதளவு
சீரகம், கடுகு, உப்பு, எண்ணை தேவையான அளவு.
செய்முறை :
தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைக்கவும். அதனுடன் அராபியாட்டா சாஸ்(பழங்களுடன்), அரைக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ரசப்பொடியை சேர்த்து அடுப்பில் கொதிக்கவிடவும். (ரசப்பொடியின் வாசனை போகும் வரை)
மற்றொரு அடுப்பில் வாணலியில் எண்ணையை விட்டு கடுகை போடவும். கடுகு தாளித்தவுடன் சீரகம், இஞ்சி, துவரம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை கிள்ளி போடவும். கடைசியில் வேப்பம் பூவையும் சேர்த்து வறுக்கவும். (கருகாமல் பார்த்துக்கொள்ளவும்)
கொதிக்கும் ரசத்துடன் இவற்றை சேர்த்தால் அராபியாட்டா வேப்பம் பூ ரசம் ரெடி.
சற்றே புளிப்புடன் துவர்ப்பு கலந்து சுவையுடன் கூடிய இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Management Lesson : If you can't buy tomato before easter vacation, look up on your refrigerator and think sensible.
Tuesday, April 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
சமையல் குறிப்பின் தலைப்புலே இருக்கும் ஐட்டங்களில் முக்கியமானது இங்கே கிடைக்கறதில்லை.
அதனால் வெறும் ரசம் மட்டும் செய்யப்போறேன்:-)
நல்லவேளை, கிடைக்கறது இல்ல ! வருகைக்கு நன்றி துளசி மேடம்.
பாராட்டிற்கு நன்றி மணிகண்டன்.
வேணும்னா கதையை அனுப்பி வெச்சிட்டு பிங் பண்ணுங்க. முடிவை முடிவு பண்ணிடுவோம். நமக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும் :-)
துளசி கோபால் said...
சமையல் குறிப்பின் தலைப்புலே இருக்கும் ஐட்டங்களில் முக்கியமானது இங்கே கிடைக்கறதில்லை.
அதனால் வெறும் ரசம் மட்டும் செய்யப்போறேன்:-)
//
நான் சாப்பிடப்போறேன்
கதையை எழுதிவிட்டு...இதற்கு முடிவு என்ன என்று தெரிந்ததுபோல (அஜித் போல) நடித்திருக்க வேண்டும்.
//நான் ஒரு சிறுகதை எழுதி வச்சி இருக்கேன். ஆனா அதுக்கு முடிவு எழுத தெரியலை.//
தொடர் கதையாக்குங்கள் !
நல்லா இருக்கு பதிவு & ரசம்.
//நான் ஒரு சிறுகதை எழுதி வச்சி இருக்கேன். ஆனா அதுக்கு முடிவு எழுத தெரியலை. இதுக்கு உதவி செய்ய ஏதாவது புத்தகம் இருக்கா//
கதை என்பது கற்பனை தல(இது அஜித் தல அல்ல).இதுக்கெல்லாம் கோனார் நோட்ஸ் போட மாட்டாங்க.
சொல்லுங்க நான் சொல்றேன்.
அதுக்கு முன்னாடி.....
என்னோட முடிவு வைக்காத கதையைப் படிச்சீங்களா?அதுல என்னோட 14வது comment படிங்க.
எப்படி கதையோட முடிவு செலக்ட் செஞ்சேன்னு சொல்லியிருக்கேன்.
தலைப்பு:-
//கதையின் முடிவு என்ன? சொல்லியாச்சு!//
http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை
சமையல் குறிப்பு வேறயா? அடக்கடவுளே:)
சூப்பரப்பு
குடுகுடுப்பை ;- நானும் வரேன்.
பாலாஜி :- வருகைக்கு நன்றி.
ராதாகிருஷ்ணன் சார் :- கதையே எழுதாம நடிக்கறது போதாதா !
கோவிகண்ணன் :- தொடர் கதை எல்லாம் எழுத திறமை வேணும் ! (நான் இதுவரை எழுதி வந்த எதுக்கு அது தேவை படலை)
ரவிசங்கர் :- வருகைக்கு நன்றி. உங்களோட எல்லா கதைகளும் படிச்சி இருக்கேன். இதை மறுபடியும் படிக்கறேன்.
வித்யா :- இதுக்கெல்லாம் கடவுள் என்ன பண்ணுவாரு ! சமைச்சி பாருங்க. பிரமாதமா இருக்கும்.
அதிஷா :- என்ன அப்பு ? எனக்கு இந்த வாரம் எழுதினது பிடிக்கல !
கதைக்கு முடிவெதுக்கு? அப்படியே போஸ்ட் பண்ணிடுங்க :)
@சுந்தர்
நான் என்ன பி.ந கதையா எழுதறேன் ? :)-
கிச்சடி நல்லா இருக்கு.
Golf - மச்சி மச்சி டூ மச்சி.
கவிதை எழுதி .... ஆச்சு. இப்போ கதையா :(((
மனைவி ஊரில் இல்லையா? சமையல் குறிப்பெல்லாம் அமர்க்களப்படுது?
அனுஜன்யா
அனுஜன்யா, நானும் கோல்ப் எல்லாம் அடிக்கடி பாக்கமாட்டேன். ஆனா அன்னிக்கு ரொம்ப பிரமாதமா இருந்தது. அதான் !
மனைவி ஊருல இருந்தா நான் எதுக்கு ப்ளாக் எழுத போறேன்.
வருகைக்கு நன்றி அனுஜன்யா.
சில பேருக்கு மனசுல ஓடற உணர்ச்சிகள் முகத்துல அப்படியே பிரதிபலிக்கும். அவங்களை எல்லாம் வெள்ளந்தி என்றும், மனசுல ஒண்ணு வச்சிக்கிட்டு வெளில வேற மாதிரி நடிக்க தெரியாதவங்கனும் சொல்லுவாங்க. அதுவே வேற சில பேரு என்ன பிரச்சனைனாலும் முகத்தை ஒரே மாதிரி வச்சிப்பாங்க.(ரங்கமணிகள்) இவங்களை எல்லாம் "என்னமா நடிக்கறா/நடிக்கறான்" பாருன்னு சொல்லுவோம். ஆனா, சினிமால அஜித் எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை முகத்துல காட்டினாலும் அவருக்கு நடிக்கவே தெரியலன்னு சொல்றாங்க. என்ன அநியாயம் ?
mani nan thirumbi uruku vanthuduven gnabaham irukatum
@uthira
மணி யார் அவங்க நான் இருக்கும் போது உங்களுக்கு.
மணி எனக்கு துரோகம் மட்டும் பண்ணிடாதீங்க செல்லம் ப்ளீஸ்
Post a Comment