Tuesday, July 21, 2009

சுவாரசிய பதிவர்கள்

சீரியஸா எழுதுன்னு சொல்லிட்டு, வசந்தகுமார், ஸ்ரீதர் நாராயணன், ஹரன் பிரசன்னா, ராஜாராம், ரௌத்ரன் கூட எனக்கும் விருது கொடுத்து காமெடி பண்ணிட்டீங்களே அனுஜன்யா ! உங்க சார்பா, அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். நான் சென்ஷி பதிவுல அம்மா தாயேன்னு போட்ட பின்னூட்டம் படிச்சுட்டு இன்ப்ளுயன்ஸ் ஆகிட்டீங்க போல. Anyways, thanks a lot anujanya.

செந்தமிழ்ரவிக்கும் பாராட்டுக்கள். ஒரே சண்டையா இருந்தபோது நிச்சயமா தேவைப்பட்ட டைவர்ஷன்.

சரி, பேக் டு தி டாப்பிக். இப்ப நான் ஒரு ஆறு பேரை செலக்ட் பண்ணனும். நான் ரொம்ப விரும்பி படிக்கறது ஜ்யோவ்ராம், ஹரன்ப்ரசன்னா மற்றும் பத்ரியோட பதிவுகள். பட், இவங்களுக்கு எல்லாம் விருது கொடுக்க முடியாது. ரீசனும் சொல்ல முடியாது :)-

சோ, என்னோட தேர்வுகள்

அவீங்க ராஜா - பதிவு எழுத வந்து அஞ்சே மாசம் தான் ஆகுது. அதுக்குள்ளார செம ரீச். எழுத்து நடை சூப்பர். அமெரிக்காவுல உள்ள நல்லவங்களை பத்தி நெகிழ்ச்சியா பல பதிவுகள். முதல் பதிவான ஏர்டெல் சூப்பர் சிங்கர் டாப். பிரபலம் ஆவது எப்படி, எனக்கு தெரிந்த பதிவுலகம், சாரு நிவேதிதா, லக்கிலுக்ன்னு எல்லாம் எழுத வேண்டிய அவசியமே இல்லை ராஜா உங்களுக்கு. உங்களோட எழுத்துநடை, presentation ஸ்டைல் எல்லாம் அபாரம். கலக்குங்க.

பிரபாகர் - லக்கிலுக்குக்கு போடும் பின்னூட்டத்தை படிச்சுட்டு இவரோட பதிவை போய் பார்த்தேன். எளிமையான நடை. எழுத வந்து மூணு மாசம் தான் ஆகுது. எல்லாத்த பத்தியும் எழுதறாரு. Continue the good work prabakhar.

வித்யா - கொட்டிக்கலாம் வாங்க தான் இவங்களோட ஸ்பெஷாலிட்டி. ஒரு மெலிதான நகைச்சுவை உணர்வு எல்லா பதிவுலயும் இருக்கும். நான் விரும்பி படிக்கும் பதிவுகள். அடிக்கடி எழுதுங்க வித்யா.

ப்ருனோ - இட்லிவடைக்கு பிறகு நான் படிக்க ஆரம்பித்த இரண்டாவது தமிழ் வலைப்பூ. துறை சார்ந்த பதிவுகள் அபாரம். இடஒதுக்கீடு குறித்த பதிவுகள், அரசு துறையை சார்ந்த மருத்துவர், ஊழியர் தொடர்பான பதிவுகளும் எனக்கு பிடித்தமே. இளையராஜா, சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசும் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் பரமாத்மா.

பீர் - இவரோட"நானும் சிறை சென்றேன்" பதிவு படிச்சதுலேந்து கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் விடாம படிக்கறேன். ஈசி டூ ரீட் அண்ட் வெரி இன்டரஸ்டிங்.

Mr No - இதுவரைக்கும் பதிவு எதுவும் எழுதலைன்னு சொல்றாரு. இவரோட கமெண்ட் எல்லாம் எங்கேயாவது ஒரே இடத்துல செதுக்கி வைக்கனும். தருமியை பத்தி எழுதின போது மட்டும் வருத்தமா இருந்தது. மிச்சம் எல்லாம் டாப். ஆங்கிலத்துலயே எழுதுங்க நோ.

இதைத் தவிர எனக்கு இன்னபல பதிவர்களும் பிடிக்கும்ன்னு சொல்லி தெரியவேண்டியது இல்லை. சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் பிடிக்கும்ன்னு சொன்னா, புல் பிடிக்காதா, ஆன் டிரைவ் பிடிக்காதான்னு ரொம்பவே போர் அடிச்சா மட்டும் தான் கேள்வி கேட்கலாம். கேட்டா பதில் நிச்சயமா சொல்லுவேன்.

அடிக்கடி எவ்வளவு ஹிட்ஸ்ன்னு பார்க்க ஆரம்பிச்துனால கொஞ்சநாள் பிரேக் எடுத்துக்கலாம்ன்னு இருக்கேன். சோ, hopefully let us meet after a short break.

14 comments:

ரவி said...

என்னுடைய பெயர் செந்தழல் ரவி. செந்தமிழ் ரவின்னு மாத்திட்டீங்க :)))

வாழ்த்துக்கள், நன்றிகள்...!!!!

கோவி.கண்ணன் said...

விருது கிடைக்கப்பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் !

பிரபாகர் said...

மணி,

கொஞ்சம் பிரமிப்பா இருக்கு., உங்களோட அன்பையும் ஆதரவையும் நினைச்சு.

எழுதனுங்கற ஆர்வம் ரொம்ப இருந்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கல...

விகடன்ல குட் பிளாக், மணிகிட்ட சுவராசிய பதிவர்கள் லிஸ்ட்ல...

கண்டிப்பா பேரை காப்பத்திக்கனும் மணி...

நெகிழ்ச்சியுடன்,

பிரபாகர்.

NO said...

அன்பான நண்பர் திரு மணி அவர்களே,

I was surprised. If not taken aback. Thanks anyway.

ஒரே ஒரு திருத்தம், திரு தருமி அவர்களை கிண்டல் செய்தது உண்மை ஆனால் நான் அவரின் பல பதிவுகளை படித்துவிட்டு he is no empty vessel என்பதை தெரிந்து கொண்டேன். அவரை ஒருமுறை வாழ்த்தி பிநூட்டமும் இட்டு என் தவறை திருத்திக்கொண்டுவிட்டேன்! But please be aware that nothing is holy!

One more information for your eyes and ears. திரு வினவு என்ற ஒருவர் (அல்லது ஒரு கோஷ்டி) ஒரு வருடமாக எழுதிமுடித்துவிட்டாராம். ஊரை திருத்தும் வேலையை இவர்கள்தான் குத்தகை எடுத்திருக்கிறார்களாம்! ஸ்டாலினிசம் அல்லது மாவிசம் என்றழைக்கப்படும் ஒரு கொலைகார சித்தாந்தத்தை இதயத்தில் தாங்கிக்கொண்டு, அந்த கொடூர வன்முறை தத்துவத்தை முன்வைத்து சமுக அவலங்களை களையப்போகிரார்களாம்! இவர்கள்ளப்பற்றி இவர்களது தளத்தில் எழுதப்போகிறேன். (I have got a weeks break before the next project). இவர்களின் பொய்முகங்களை கிழிக்கப்ப்போகிறேன்! There will be quite an acrimony for sure as I am going to touch a raw nerve or two and most certainly its not going to be a comical one. If you are interested, peek in their posting in a day or two. The battle would have begun! One with facts, logic and precision against a bunch of ill educated and misdirected no nothings!

Thanks again for your kind and generous words.

நன்றி

பீர் | Peer said...

மணி, உங்க லிஸ்ட்ல நானா? நல்லா யோசனை பண்ணிதான் சொல்றீங்களா?

பொறுப்பு கொடுத்திருக்கீங்க.
ஏதாவது எழுதணும். இனியாவது எழுதணும்.

நன்றி!!!

விருது கிடைக்கப்பெற்ற மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

வாங்க ரவி. இனிமே சரியா போடறேன். :)

வருகைக்கு நன்றி கோவி.

பிரபாகர், பீர் - நீங்களும் எழுதுங்க சீக்கிரமா.

Mr No - Acrimonious சண்டைகள் மேல எனக்கு அந்தளவு விருப்பம் இல்லை. மொக்கை எழுதறவங்களை நக்கல் பண்ணினத ரசிக்க முடிஞ்சது :)- வருகைக்கு நன்றி.

NO said...

அன்பான நண்பர் திரு மணி,

என்ன சார், வினவில் நடப்பதை follow பண்ணுகிறீர்களா? நீங்க நினைத்தப்படி ஒன்னும் பெரிசா acrimony எல்லாம் இல்லை. In fact ரொம்ப காமெடியாக போயிட்டிருக்கு!

இன்னும் ஒரு நாள் டைம் எனக்கு இருக்கு! ஆனால் நான் முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! Interesting என்று நீங்கள் நினைத்தால் இன்னும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்கலாம்! சொல்லவும்

Sometimes even the most low profile ones start loving a bit of fame and following! I am no exception but still have the choice to stop!

நன்றி

புருனோ Bruno said...

//. இளையராஜா, சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசும் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் பரமாத்மா.//

:) :) :)

Radhakrishnan said...

சுவாரசிய பதிவர்களுக்கான விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மிக்க நன்றி.

மணிகண்டன் said...

ப்ருனோ, வெ இராதகிருஷ்ணன் - வருகைக்கு நன்றி.

vigna said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் உங்கள் தளம் உயர வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

நன்றி விக்னா.

Karthikeyan G said...

நானும் Mr.No-வின் ரசிகன்தான்.. :)

மணிகண்டன் said...

வாங்க கார்த்திகேயன்.