Wednesday, July 8, 2009

கிச்சடி - Wimbledon மற்றும் Ashes

இந்த வாரம் விம்பிள்டன் பைனல் பார்த்தேன். கடந்த மூணு வருஷமா பைனல்ஸ் எல்லாம் 5 செட்டர் தான். ஒவ்வொரு வருஷமும் ரெண்டு டை-ப்ரேக்கர். ஆறு டைபிரேக்கர்லயும் ரோஜர் தான் ஜெயிச்சி இருக்கார். எனக்கு என்னவோ பெடரர் சர்வீஸ்ல அவ்வளவு நம்பிக்கை கிடையாது. பட் ரிசல்ட் வேறுவிதமா ப்ரூவ் பண்ணுது. நடால் விளையாடி இருந்தா இன்னும் கொஞ்சம் இண்டரச்டிங்கா இருந்து இருக்கும். அடுத்தமுறை வருவாரான்னு பார்க்கலாம்.


15 முறை கிராண்ட்ஸ்லாம் ஜெயிச்சி பெடரர், சாம்ப்ராஸ் ரிகார்ட பிரேக் பண்ணிட்டார். இவரோட era ல சாம்ப்ராஸ் விளையாடின போது இருந்த குவாலிட்டி அபோஷிஷன் இல்லைன்னு பரவலா எழுதப்பட்டு இருந்தது. எனக்கு என்னவோ அதுல உடன்பாடு இல்லை. சாம்ப்ராஸ் கூட பையோளின், சாங், டாட் மார்ட்டினுக்கு எதிரா நாலு பைனல்ஸ் விளையாடி இருக்காரு. அவர் காலகட்டத்துக்கும், பெடரர் காலகட்டத்துக்கும் உள்ள மேஜர் மாற்றம் சர்வீஸ்ன்னு நினைக்கறேன். அதுக்கு பால் சேஞ்ஜ் காரணமா இருக்கலாம் இல்லாட்டி கோச்சிங் காரணமா இருக்கலாம். யங் ப்ளேயர்ஸ் எல்லாரும் ஆறு இல்லாட்டி ஏழு வயசுலயே அகாடமி மூலமா டென்னிஸ் கத்துக்கும் போது தனித்தன்மைக்குரிய வாய்ப்புக்கள் கம்மி. பேஸ்லைன் கேம்க்கு முக்கியத்துவம் அதிகமாகும். அதிகமாயிடுச்சு. அதுல கேம் கொஞ்சம் ஸ்லோ ஆக தான் செய்யும். பட், இந்த வருஷம் டாமி ஹாஸ், பெடரர், ராடிக் கேம் பார்க்க சூப்பரா இருந்துச்சு. குறிப்பா ஹாஸ்.


இந்த தலைமுறை ப்லேயர்ஸ்ல ஏற்கனவே நடால் அண்ட் பெடரர் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபன் ஜெயிச்சுட்டாங்க. இனிமே வரவங்களும் ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்க்கறேன். முன்னாடி எல்லாம் பிரெஞ்சுன்னா லென்டல் - வில்லாண்டர் ,விம்பிள்டன்னா பெக்கர்-எட்பர்க்ன்னு இருக்கும். அதுக்கு பிறகு போன தலைமுறைல பிரெஞ்சு ஓபன் க்ளே கோர்ட் ஸ்பெஷலிஸ்ட் மட்டுமே ஜெயிச்சாங்க. விம்பிள்டன் சாம்ப்ராஸ், இவாநிசெவிக், க்ரேஜ்செக் மாதிரியான செர்வ் - வாலீ ஸ்பெஷலிஸ்ட் டாமினேஷன். இப்போ ஆல் அரவுண்ட் versatility. வுமன்ஸ் டென்னிஸ்ல இந்த மாற்றம் கொஞ்சம் முன்னாடியே நடந்துடுச்சு.


இங்கிலிஷ்ல தமிழ் வார்த்தைகள் டைப் பண்ணினா படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதே அளவு இதுவும் மோசமா இருக்கா ?


Ashes கிரிக்கெட் ஆரம்பிச்சுடுச்சு. விம்பிள்டன்ல முரே செமிபைனல், ஹெவிட் குவார்டர் பைனல். அதுனால Ashes ல இங்கிலாந்துக்கு வாய்ப்புக்கள் அதிகம். ப்ரீ-சீரியஸ் ஹைப் ரொம்பவே கலக்கல்.

ஆஸ்திரேலியா பவுலிங் எல்லாரும் புதுசு. ஸ்பின் பவுலர் இல்லை. Nathan Hauritz இந்தியாவுக்கு விளையாடின Noel David மாதிரி. பட், நிச்சயமா கிரேக் வைட் விட நல்ல பவுலர். ஸ்பின் பவுலர் சரியா ஹேண்டில் பண்ண கூடிய கேப்டன் யாரும் இல்லை போல. (ஸ்டேட் லெவல்ல). அடுத்த ஷேன் வார்னே வேண்டாம். அட்லீஸ்ட் டிம் மே மாதிரியாவது வரலாம். இந்த சீரியஸ்ல ஆஸ்திரேலியாவோட ஒரே நம்பிக்கை இங்கிலாந்து பேட்ஸ்மன் தான். இங்கிலாந்து பேட்ஸ்மன்ல எனக்கு peterson அண்ட் collingwood பிடிக்கும். collingwood இந்தியாவோட லக்ஸ்மன் மாதிரி. எவ்வளவு ரன் அடிச்சாலும் அடுத்த மேட்ச்ல உண்டா இல்லையான்னு மேட்ச் காலைல தான் தெரியும். ஐ ஹோப் ஆஸ்திரேலியா வின்ஸ்.


வயசான ரிட்டயர்மென்ட் அனவுன்ஸ் பண்றது அவசியம்ன்னு சொல்ற மக்களுக்கு - இதுவரை லக்ஸ்மன் ஒன் டே கிரிக்கெட்லேந்து ஓய்வுன்னு சொல்லலை. அவர் இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் விளையாடி ஆறு வருஷம் ஆகி இருக்கும்ன்னு நினைக்கறேன். ஸோ,

7 comments:

பீர் | Peer said...

கிச்சடில Ingredients கம்மியா இருக்கே மணி.

மணிகண்டன் said...

பீர், உண்மையை சொல்ல போனா எந்த ingredients ம் இல்லை. இது ஒரு சோதனை முயற்சி. எடிட் பண்ணாம பதிவு போட்டா எப்படி இருக்குன்னு பாக்க. சோ, எழுதும் போதே இன்னும் ஒழுங்கா எழுத கத்துக்கணும்.

Vidhya Chandrasekaran said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

வந்தாச்சு
:)

மணிகண்டன் said...

நன்றி வித்யா மற்றும் அப்துல்லா

Samuel | சாமுவேல் said...

//ஐ ஹோப் ஆஸ்திரேலியா வின்ஸ். ////

இதை வன்மையாக கண்டிக்கிறோம் ...
எப்படி சார் ....இந்திய மாணவர்கள் உதை வாங்குவது வழக்கம் போல் உங்களுக்கு நினைவில் இல்லை போல இருக்கு.. உங்களை நாடு கடத்தலாம்னு இருக்கோம்...

மணிகண்டன் said...

சாம், நல்லா கண்டிங்க. இங்கிலீஷ் ஹைப் தாங்காம எழுதினது.