Tuesday, September 15, 2009

கிச்சடி - 15/09/09

அடுத்த மதர் சுப்பீரியர் kim clijsters போல.

மகளிர் டென்னிஸ் மிகவும் சுவாரசியமானது. கடந்த நான்கைந்து வருடங்களாக பலரும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர். இதை ஒரு பலவீனமாக சித்தரிக்கின்றனர். சரியா ?

சச்சின் பைனலில் செஞ்சுரி அடித்ததால் compaq கப்புக்கு மற்றுமொரு ஒரு பைனல் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

WWF ரூல்ஸ் புத்தகமாகவோ லிங்காகவோ கிடைக்குமா ?

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலம் பெற்று வரும் வேளையில் வரலாற்றை மாற்றி எழுதும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாவது உலகப்போருக்கு முதல் காரணமாக சோவியத்தை சித்தரிக்க தொடங்கியுள்ளனர். யூதர்களுக்கு எதிராக எஸ்டோனியா மற்றும் லித்துவானியா போன்ற நாடுகள் செய்த வதைகளை தள்ளுபடி செய்தும் வருகின்றனர்.

ஆதி என்பது தமிழ் சொல் இல்லையாம். ஆதலால் அதை முதலி என்று மாற்றி அகரமுதலி என்று டிக்ஷனரியை எழுத வேண்டுமாம். திருவள்ளுவரை வடமொழி புலவராக மாற்ற ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சியாக இருக்குமோ ?

சச் கா சாம்னா (உண்மைக்கு வெகு அருகில்) என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. 21 கேள்விகளுக்கு உண்மை மற்றும் கூறுபவர்களுக்கு ஒரு கோடி. செம டீல் ! ஒரு சில குளறுபடிகள் இருக்கின்றன. 50 கேள்விகள் கேட்கின்றனர். அவற்றுக்கான பதிலை POLYGRAPH மூலம் சோதிக்கின்றனர். அதே கேள்விகளை நிகழ்ச்சியின் போது மறுபடியும் கேட்கின்றனர். முன்பு எடுத்த POLYGRAPH மூலம் பதிலை உண்மையா / பொய்யா என்று முடிவு எடுக்கின்றனர்.
போட்டியாளர் ஒரு குடிகாரர். கல்யாணத்திற்கு பிறகும் மற்ற பெண்களுடன் தொடர்பு உள்ளவர். அவருக்கு ILLEGITIMATE CHILD இருப்பதும் இப்போட்டியின் முதல் கேள்விகளின் மூலம் அவரின் தந்தைக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு ஒரு கேள்வி : உங்கள் எண்ணப்படி உங்கள் தந்தைக்கு உங்களின் மேல் பெருமை உண்டா ? போட்டியாளரின் பதில் : இல்லை. அதை தவறு என்று POLYGRAPH ரிசல்ட்(முதல் கேள்விகளின் பதில்கள் அவர் தந்தைக்கு தெரியும்முன் எடுக்கப்பட்ட) கூறியதால் அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். உண்மை, பொய் என்ற புள்ளிகள் time என்ற coordinate க்கு கட்டுப்பட்டது.

சமீபத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள அருமையான பூங்கா ஒன்றில் ஆறு வயது தாண்டிய சிறுவர் சிறுமியர் சிலம்பம் பயிற்சி செய்வதை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது.

யு எஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் மகளிர் பட்டதை வீனஸ் மற்றும் செரினா வென்றார்கள். அவர்களின் post match interview :-

TIM CURRY: Thanks for joining us for our press conference with our 2009 US Open women's doubles champions. We ask that any questions in today's press conference refer to events of today only.

With that, we'll open the floor.

Q. Congratulations Venus and Serena on your doubles championship. As it relates to events of today, you issued a statement as it relates to your actions the other night. Why did it take 48 hours for you to release the statement?

20 comments:

☀நான் ஆதவன்☀ said...

கிச்சடில எல்லாம் இருக்குது. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா...அப்புறம் சீக்கிரம் தீர்ந்து போன மாதிரி ஒரு ஃபீல் :) ஆனா நல்லா இருக்குது

எம்.எம்.அப்துல்லா said...

//ஆதி என்பது தமிழ் சொல் இல்லையாம் //

அப்ப நம்ப தாமிரா ஆதிமூலகிருஷ்ணனின் பேரு அகரமுதலி கிருட்டிணனா :)

மணிகண்டன் said...

நான் ஆதவன் - ஆமாம். ரொம்ப நாள் கழிச்சி எழுதறதுனால எதையோ எழுதி போஸ்ட் பண்ணிடலாம்ன்னு போட்டேன்.

அப்துல்லா :- இது என்ன கதை ? அவரோட பேரு முதலிமூல கிருட்டிணா !

Raju said...

கிச்சடி ஒரு கோப்பத்தான்யா இருக்கு.
என்ன நாஞ் சொல்றது மணி அண்ணே..!

அறிவிலி said...

கிச்சடி சுவை.

(இன்னொரு பதிவரும்(துக்ளக்) கிச்சடி கிண்டறாரே.....)

மணிகண்டன் said...

வாங்க ராஜு. முதல் வருகைக்கு நன்றி.

நன்றி அறிவிலி. லிங்க் கொடுங்க. நானும் அவரும் மாறி மாறி நீர் செய்தது நியாயமா / தகுமான்னு பதிவு போட்டுக்கறோம்.

Samuel | சாமுவேல் said...

//உண்மை, பொய் என்ற புள்ளிகள் time என்ற coordinate க்கு கட்டுப்பட்டது.//


என்னை கேட்டால் அது ஒரு சம்பவத்துக்கு கட்டுப்பட்டது......ஒரு நினைப்பையோ , நடக்காத சம்பவத்தையோ ...உண்மை, பொய் என்பது கடினம்.

மணிகண்டன் said...

No sam. questions are like what do you think about a particular incident or a future prospect ? it is about expressing truthfully what you think at that time. And so, the concept is correct. Only issue is that things change with respect to time and also your thinking. Time lag between the polygraph test and the actual questions during the programme is an issue !

Samuel | சாமுவேல் said...

சரி உங்களுக்கு ஒரு சச் கா சாம்னா கேள்வி......ஏற்கனவே பெரிய பரிசு கிடைச்சிருக்கு போன மாதத்தில், அதனால பரிசு ஒன்னும் இல்லை. சரியா

இந்த பதிவுலகில் நீங்கள் தொடர்ந்து படிக்கும் பதிவர்களில், நீங்கள் படித்து மிகவும் எரிச்சல் அடைந்த பதிவோ ..பின்னுடோமோ எது ?

Samuel | சாமுவேல் said...

if time lag is a issue, the question becomes a variable, truth or lie cannot be a variable.

thats why i do not agree with those questions.


do you think polygraph reading will be similar for lieing about an incident and thinking about an never happened event and then lieing about it ?

was polygraph designed for wether he is thinking correctly or incorrectly. good or bad.

மணிகண்டன் said...

****
do you think polygraph reading will be similar for lieing about an incident and thinking about an never happened event and then lieing about it ?
****

உங்களுக்கு புரியும் மாதிரி சொல்ல ட்ரை பண்றேன். உலகம் உருண்டையா தட்டையான்னு ஒரு கேள்வி கேக்கறாங்க. தட்டைன்னு நம்பறவன் பதிலா தட்டைன்னு பதில் சொன்னா polygraph டெஸ்ட் யுவர் பதில் சச் ஹைன்னு தான் சொல்லும்.

மணிகண்டன் said...

***
இந்த பதிவுலகில் நீங்கள் தொடர்ந்து படிக்கும் பதிவர்களில், நீங்கள் படித்து மிகவும் எரிச்சல் அடைந்த பதிவோ ..பின்னுடோமோ எது ?
***

http://www.athishaonline.com/2009/07/blog-post_10.html

மணிகண்டன் said...

***
if time lag is a issue, the question becomes a variable, truth or lie cannot be a variable.
***

We both are saying the same.

I accept that something becomes truth or a lie with respect to time.

Your thinking is as follows :- As it varies over time, it cannot be so.

Samuel | சாமுவேல் said...

//உங்களுக்கு புரியும் மாதிரி சொல்ல ட்ரை பண்றேன். உலகம் உருண்டையா தட்டையான்னு ஒரு கேள்வி கேக்கறாங்க. தட்டைன்னு நம்பறவன் பதிலா தட்டைன்னு பதில் சொன்னா polygraph டெஸ்ட் யுவர் பதில் சச் ஹைன்னு தான் சொல்லும்.///


சரி அவன் உருண்டை சொன்னா....மற்ற பொய் சொல்லும் பொது வரும் அதே பயம் வருமா ? ....எதோ ஒன்றை யோசிச்சு சொல்றவன் எதுக்கு பயப்டுவான்...

மணிகண்டன் said...

***
சரி அவன் உருண்டை சொன்னா....மற்ற பொய் சொல்லும் பொது வரும் அதே பயம் வருமா ?
***

நோ ஐடியா.

வரும்ன்னு நம்பி தான் அவ்வளவு வயர் எல்லாம் உடம்புல சொருகறாங்க :)-

மறுபடியும் ஒருமுறை Basic Instinct பாக்கணும் :)-

Samuel | சாமுவேல் said...

இது தான் சான்ஸ் 'basic instinct' பார்க்கிறேன் சொல்றீங்க...உண்மையா சொல்லுங்க, polygraph பார்கவா இல்லை வேற விஷயமாவா?

'basic instinct' நடந்த கொலை....அப்ப எங்க இருந்தீங்க ..அந்த மாதிரி தான் கேள்வி கேட்பாங்க... நீங்க ஒரு ஆளை கொலை பண்ண துநிபவரா ? இந்த மாதிரி கேட்க மாட்டாங்க .

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுவையான கிச்சடி

மணிகண்டன் said...

thanks TVRK.

Anonymous said...

//Why did it take 48 hours for you to release the statement?//

ஏதே கேட்டாங்களே:) ஆனா அந்த லைன் அம்பையர் கிட்ட போன வேகத்தப்பாத்தா எனக்கே பயமாத்தான் இருந்துது.

மணிகண்டன் said...

வாங்க மேடம். கொஞ்சம் ஓவர் த டாப் ரியாக்ஷன் தான்.