மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணமாக ஜமாத் உத் தாவா என்ற பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பை இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியது. உலக நாடுகள் ஒன்றினைந்து அந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக ஐ நா சபையின் மூலம் அறிவித்தது. டிசம்பர் 11, 2008 ல், பாகிஸ்தான் இந்த இயக்கத்தை தடை செய்து அதன் தலைவர்களை கண்காணிக்க தொடங்கியது.
பார்க்க http://thodar.blogspot.com/
(பெயரை குறித்தான பதிவு)
மே 2009 - தீவிரவாத ஜமாத் உத் தாவாவின் புதிய பெயர் Falah-i-Insaniat ! இது இயங்க எந்த தடையும் கிடையாது. SWAT பள்ளத்தாக்கில் இருந்து குடி மாற்றப்படும் அகதிகளுக்கு இவ்வியக்கத்தை சேர்ந்தவர்கள் முகாம்கள் அமைத்து கொடுத்துள்ளனர். ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் இன்று இயக்கத்தின் பெயரை மற்றும் மாற்றி சுதந்திரமாக உலவி வருகின்றனர்.
http://www.guardian.co.uk/
அடுத்த குண்டு வெடிப்பு எங்கோ
4 comments:
நான் கூட மீ-த-பஸ்ட்டு னு ஒரு டெரரிஸ்ட்டு கூறுப்பு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்..
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வன்முறை இயக்கங்கள் பெயரை மாற்றிக்கொண்டு பவனி வருவது நம் நாட்டிலும் நடைபெறுவது தான். ஆனால் இந்துத்துவ வன்முறை இயக்கங்கள் தடை செய்யப்படுவது கூட இல்லை. பெண் சாமியார் மாலேகன் குண்டு வெடிப்பில் கைதானது தான் தெரியும் அவர் சார்ந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை, தடை செய்யவும் முடியாது அப்படி தடை செய்யப்பட்டால் அது வேறு ஒரு முகமூடி அணிந்து வரும். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டால் கூட அதனால் அதன் துவேஷ பணியை தொடர்ந்து செய்ய பல முகமூடியை கொண்டுள்ளது. பாரபட்சம் ஒழியும் போது பயங்கரவாதமும் சேர்ந்தே ஒழியும்.
***
பாரபட்சம் ஒழியும் போது பயங்கரவாதமும் சேர்ந்தே ஒழியும்
***
உண்மை தான்.
அதைத் தவிர ஒரு தீவிரவாத செயலுக்கு மற்றொரு தீவிரவாத செயலைக் கூறி நியாயப்படுத்துவதும் ஒழிய வேண்டும் சார்.
நிச்சயமாக இந்து மதத்தை காரணம் சொல்லியோ / மதத்தை காவந்து செய்வதாக நினைத்தோ / ஒரு மதத்தினர்க்கு எதிராக மக்களை திசை திருப்பியோ செய்யப்படும் தீவிரவாத செயல்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதத்தை விட அபாயகரமானதே.
அதிஷா, தடை விதிச்சா சொல்லுங்க. "நான் தான் முதல்ன்னு" பேரு மாத்திடலாம். வரிவிலக்கு கூட கிடைக்கும்.
Post a Comment