Thursday, May 7, 2009

கிச்சடி - சாரு, இசை மற்றும் நான்

சாருநிவேதிதாவின் இசைக் குறித்தான கருத்துக்களை அவரது தளத்தில் தொடர்ந்து படித்து வந்துள்ளேன்/வருகிறேன்.  அவர் கொடுத்தப் பல சுட்டிகளை கிளிக் செய்து பாடல்களை கேட்டும் உள்ளேன். சிலது எனக்கு பிடித்தும் இருக்கின்றன. ஆனால் அவரது இசைக் குறித்தான எந்த புத்தகமும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஆதலால் அவரது கருத்துக்களை விமர்சனம் செய்யவோ / பாராட்டவோ உரிமை இருக்கிறதா/இல்லையா என்று தெரியவில்லை.

தொண்ணூறுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்த தாயுமானவன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். அவனது அண்ணன் மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீராம் அந்தக்காலத்திலே சாருவின் "தல" ரசிகர்கள். அவர்கள் மூலமாக சாரு மற்றும் அவரது எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். பேன்சி பனியன் மற்றும் அவரது வேறு சில சிறுகதைகளை படித்ததாக ஞாபகம்.  அந்தச்சமயத்தில் கையில் கிடைக்கும் புத்தகங்கள் எதுவென்றாலும் படிப்பேன்.  பிடித்தது / பிடிக்காதது / இலக்கியம் / குப்பை என்ற எந்தவொரு வேறுபாடுமின்றி. உண்மையை சொல்வதென்றால் அந்த வேறுபாடுகள் எனக்கு பல சமயங்களில் புரிவதில்லை. சுஜாதாவின் எழுத்துக்களை பல்ப் பிக்ஷன் என்ற வகையறையில் படித்து பின்பு அதுவே இலக்கியம் என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டு.    

இந்த நண்பர் குழுமம் மூலமாக எனக்கு கிடைத்த மற்ற அறிமுகங்கள் ஓஷோவும்,  உலக திரைப்படங்களும்.  ஆனால் ஒருசில மாதங்களிலையே தெளிவுப் பெற்று இன்றிருக்கும் மத்திய தர வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டினேன்.  இவ்வகை வாழ்க்கை தரும் அனுபவங்கள் அலாதியானது.   "ஏக்கம்" என்ற சொல்லின் அர்த்தம் வேறு எவ்வித பிரிவிலும் புரிய உழைக்க வேண்டியிருக்கும்.

உழைப்பு என்று எழுதியவுடன் ஒரு நினைவு.  இதுவரை எதையும் ஆராய்ந்து எழுதுவதற்காக உழைத்ததில்லை. நேற்று சச்சினின் ஒருநாள் போட்டி செஞ்சுரிகளை ஆராய்ந்தபோது ஒரு மகிழ்ச்சி.  அதை எழுதியபோது ஒரு திருப்தி.  யாரும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிந்தபோது ஒரு தெளிவு.  இவை அனைத்தும் சாரு யுவனுக்கு எழுதிய பதில் மூலமாகவே சாத்தியப்பட்டது.

எனக்கும் இசை பயின்றவர்கள் பாடும் பாடல்களை விட இசை தெரியாதவர்கள் பாடும் பாடல்கள் கேட்க பிடிக்கும். ஒருவித rawness தான் காரணம் என்று நினைக்கிறேன். ஸ்ருதி, ராகம், ஸ்வரம், அபஸ்வரம் என்று குழம்ப வேண்டியதில்லை. இன்று தொலைக்காட்சியில் நடைபெறும் இசை தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்ப / தகுதி சுற்றுக்களில் கேட்கும் பாடல்களே சாட்சி. ஒருசில வரிகளில் கவரும் பல தனித்துவமான குரல்கள்.  மெதுவாக தேய்ந்து ப்ரொபஷனல் குரலாக மாறுவதை கண்டு வந்துள்ளேன். எனது இசையார்வம் பின்நவீனத்துவரகமா என்றறிய பதினைந்து கட்டளைகளை பலமுறை படித்தும் பயனில்லை.  எனக்கு இளையராஜாவின் இசை பிடிக்கும். ஆதலால் பயப்பட அவசியம் இல்லை என்று எனக்கு நானே தேற்றிக்கொண்டேன்.  அதைத் தவிர எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம் நாதஸ்வரம்.  நான் ஸ்கூல் / காலேஜ் படித்துக் கொண்டு இருந்த காலக்கட்டம். மாலையில் நண்பர்களுடன் கூடும் இடம் ரயில்வே பிளாட்பாரம் தான். தினமும் வீட்டில் இருந்து சைக்கிள் பிரயாணம். போகும் வழியில் ஷேக் சின்னமௌலானாவின் வீடு. அங்கு அவரது இரு புதல்வர்களும் தினம் தவறாது சாதகம் செய்வார்கள். பல சமயங்களில் அவர்களின் இசையை நின்று  கேட்டுவிட்டு மெதுவாக நண்பர்கள் குழாமுடன் இணைந்துள்ளேன். இசை என்னை மிகவும் கவர்ந்த நிமிடங்கள் அவை தான். 

இளையராஜாவை வட இந்திய மக்கள் கேட்பதில்லை. ரகுமானின் தில்லி - 6 பாடல்களை கொண்டாடுகிறார்கள் என்று எழுதி பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதியதால் இந்தக் குளறுபடி என்று ஒரு திருத்தம் செய்துள்ளார். அதே போன்று தான் மொரோக்கோவின் இசை வடிவங்களை பிரான்ஸ் நாட்டில் கேட்பதும். மொரோக்கோ நாட்டை சேர்ந்த வம்சாவழியினர் ஒரு மில்லியனுக்கும் மேல் பிரான்சில் வசிக்கின்றனர்.

எனக்கு ஒரு உணவகம் பிடித்து விட்டால், அங்கேயே அடிக்கடி செல்வேன். அதில் அலுப்பு வந்தால் மட்டுமே மாற்றம் வரும். இதில் பல குறைகள் இருந்தாலும் எனக்கு சரியாகவே வருகிறது. அதே போன்றே இசையும். பல புதிவித இசை வடிவங்கள் கேட்கும் பொழுது பிடிக்கிறது. ஆனால் மற்றவைகளை தேடிச்செல்ல முயற்சி செய்வதில்லை. இதில் உள்ள தேக்கமோ / குறைகளோ பிறர் சொன்னால் தான் புரிகிறது. ஆனால் ஒருசில நிமிடங்கள் கடந்தால் புரிய மறுக்கின்றது.  அதற்காக நாட்டார் கலை / செவ்வியல் கலை மற்றும் அதனை சான்ற குளறுபடிகள் என்று எழுத விருப்பமில்லை.

சாருவின் பல கட்டுரைகளில் பிடித்தமானது அவரது உணர்வுப்பூர்வமான எழுத்து மற்றும் மெல்லிய நகைச்சுவை. அதே சமயம் அவரது மையக்கருத்தை புரிய வைக்க /  அழுத்தம் கொடுக்க அவர் கொடுக்கும் பல உபரித் தகவல்கள் தவறாக இருப்பதாக தோன்றும். துருக்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஓரான் பாமுக் குறித்த கட்டுரையில் பல தகவல் பிழைகள் இருந்ததாக நினைவு.  அதைக்குறித்து ஒரு நண்பருடன் பேசியபொழுது அவரின் கருத்து வியப்பை அளித்தது. சாருவின் கட்டுரைகளில் "இம்பாக்ட்" மட்டுமே பார்க்கவேண்டும் என்றார். சரி என்று விட்டுவிட்டேன்.

தூக்கம் வருகிறது. நான் கடவுள் படப்பாடலை raaga.com ல் போட்டுவிட்டேன். தூங்க வேண்டும்.

எனது எழுத்து நடை கோழிக்கிறுக்கலை போன்று இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறினார். பள்ளியில் லீவ் லெட்டர் எழுதுவது மட்டுமே எனக்கு எழுத தெரிந்த எழுத்து. அதே கவனத்துடன் எழுத முயன்றேன். சரியாக வந்து இருக்கிறதா என்று தெரியவில்லை.  பார்க்கலாம்.

14 comments:

Vidhya Chandrasekaran said...

நீங்க எழுதிய லீவ் லெட்டரை நான் படித்ததில்லை. இது பெட்டராக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

என்னன்னவோ சொல்லத் தோன்றுகின்றது. சொல்ல ஓன்றும் இல்லை. ஜஸ்ட் அட்டெண்டென்ஸ்

:)

☀நான் ஆதவன்☀ said...

இது கோழிகிறுக்குனதுன்னா நாங்க எழுதுறதெல்லாம் என்னென்னு சொல்றது.

நல்லா வந்திருக்கு மணிகண்டன்

அவனேதான் said...

ஆமா இந்த பதிவின் மையக்கருத்து என்ன?

சாரு நல்லா எழுதறாருன்றீங்களா?

இல்ல தப்பா எழுதறாருன்றீங்களா?

இசைய பத்தி பாருங்கடா எனக்கும் தெரியும்ன்றீங்களா?

அய்யனார் சார் பதிவு படிக்கறாப்ல இருக்குங்கோ..

கொஞ்சம் செல்ப் எடிட் பண்ணுங்க எசமான்.

Athisha said...

அனானியா பின்னூட்டம் போட்டா எப்படி மெயில்ல மத்த பின்னூட்டம்லாம் வரும் அதனால இந்த பின்னூட்டம் அதுக்கு.

Anonymous said...

manikandan,
it is true that your article has come good. by the way, i, too, used to read charu...nowadays, i stopped reading because he gives numerous wrong informations on several issues, he tries to be right what he has written though it is wrong, writes some sensitive issues only to get popularized among, he judges others are useless and not good at writing..etc...

மணிகண்டன் said...

***
இசைய பத்தி பாருங்கடா எனக்கும் தெரியும்ன்றீங்களா?
***

:)- point taken.

அய்யனார் படிச்சது இல்லைங்க. இதோட உண்மையான inspiration விகடன் பொக்கிஷம்ல வந்த சுஜாதா சிறுகதை.

எனக்கு இசை தெரியுமா ?

எடிட் பண்ணி இருக்கலாம். ஒரே வார்த்தையை மறுபடியும் மறுபடியும் எழுதி இருப்பேன். அத மாத்துவேன். அப்புறம் மொத்தத்தையும் டெலீட் பண்ணிடுவேன். சோ, நோ ஸெல்ப் எடிட்டிங்.

மணிகண்டன் said...

தேங்க்ஸ் வித்யா, அப்துல்லா.

ஆதவன் :- முதல்முறையா வந்து இருக்கீங்க. பாராட்டு வேற. ரொம்ப நன்றி.

@அதிஷா, நான் அனானியா எழுதின பின்னூட்டத்துக்கு நீங்க சொந்தம் கொண்டாட முயற்சி பண்றீங்க !

@anonymous, His style is always interesting.

Unknown said...

கேக்காம செய்யாம என்ன சாருவோடல்லாம் சம்பந்தப்படுத்தி பதிவெழுதக்கூடாது.

வீடல சந்தேகப்பட ஆரம்பிச்சிருவாங்க. :)

Suresh said...

சத்தியமா நான் சாரு பத்தி படித்ததில்லை, அவரை விஜய் டிவியில் பார்த்து இருக்கிறேன் எந்த பதிவு போனாலும் அவர பற்றி நல்லதாவோ இல்லை கெட்டதாகவோ பேசுகிறார்கள்...

ஹம் படிக்கிறேன் நிங்க திருச்சியா

உங்க பதிவு ;) நல்ல ரசிப்பு

Sanjai Gandhi said...

ரொம்ப அற்புதமா எழுதி இருக்கேன். சச்சின் சதம் பற்றிய பதிவை யாரோ முழுசா படிக்காத மாதிரி எல்லாம் ஏமாத்தலை. நிஜமாவே உங்க எழுது நடை வேகம் குறையாம பாத்துக்கிது. சூப்பர்ணே.

நீங்க நல்ல இசப் பிரியர்னு தெரியுது. எனக்கும் கூட இசை பயிலாதவர்கள் பாடுவதை கேட்கத் தான் பிடிக்கும். அந்த குரல்களில் “ கத்துக்கிட்ட” எதையும் வலுக்கட்டாயமா திணிக்க மாட்டாங்க.

இசைக்கு ராகாவைவிட thiraipaadal.com ரொம்ப அற்புதம். நான் தினமும் விசிட் பண்ணும் தளம். அவர்கள் வகைப் படுத்தி இருப்பதே அருமை.

மணிகண்டன் said...

இசை - நன்றி.

சஞ்சய் - thiraipaadal.com அறிமுகத்துக்கு நன்றி. நல்லா இருக்கு. தேங்க்ஸ். நான் பாடுவதை கேட்டா உங்களோட கருத்த மாத்திப்பீங்க ! :)-

சுரேஷ் - வருகைக்கு நன்றி. ஆமாம், நானும் திருச்சி தான்.

anujanya said...

இந்த தடவ கிச்சடி வித்தியாசமான ஸ்டைல். நல்லா இருக்கு மணி. குறைந்த பட்சம் இந்த அளவு சீரியஸ்நெஸ் இருந்தால் நல்லா இருக்கும். ஏனென்றால் ஹாஸ்யம் உங்களுக்கு இயல்பா வருது.

நிறைய எதிர்பார்ப்புகளுடன்

அனுஜன்யா

மணிகண்டன் said...

வாங்க அனுஜன்யா.