Monday, May 11, 2009

மனிதவள மேம்பாட்டுத்துறை - கோபிநாத்தின் நீயா நானா !

கோபிநாத் நடத்தும் நீயா நானாவில் மனிதவள மேம்பாட்டு துறையில் வேலை பாக்கறவங்களும் மத்தவங்களும் கலந்து கிட்டாங்க. சுவையான விவாதங்கள்(!!) இருந்தன. உடனே இந்த பதிவு !!!

இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் மனிதவள மேம்பாட்டு துறைக்கு போதிய அளவு மரியாதையோ / அதிகாரமோ கொடுப்பது கிடையாது. சும்மா ஏதோ பேச்சுக்கு போர்டு மீட்டிங் / பாலிசி மீட்டிங் / XXXXX மீட்டிங் எல்லாவற்றிலும் ஒரு HR மேனேஜர் இருப்பார். அவ்வளவு தான். இன்றும் HR ஒரு necessary evil என்கிற கண்ணோட்டம் தான்.

Ethics :-
டெக்னிக்கல் இன்டர்வியூ க்ளியர் பண்ணிட்டு, HR ரவுண்டு வந்தா முதல் கேள்வி "நீ எப்ப ஜாயின் பண்ணுவன்னு தான்" . அடுத்த அஞ்சி நிமிஷத்துல ப்ராஜெக்ட் குறித்து சொல்லி "ஏன் நீங்க அடுத்த வாரமே ஜாயின் பண்ணனும்ன்னு விலாவாரியா விளக்குவாங்க". வேலை பார்த்து வரும் கம்பெனியோட நோடீஸ் பீரியட் பத்தி எல்லாம் கவலையே படமாட்டாங்க.

common sense :
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் காமன்சென்ஸ் கூட ரொம்பவே கம்மி ! சென்னையில 102 டிகிரி வெய்யில் அடிக்கும். எந்தவித client interaction இல்லாம வேலை பார்த்துகிட்டு இருக்கற employees கிட்ட வந்து Tie & shoe எல்லாம் எதிர்பார்ப்பாங்க. கேட்டா கம்பெனி பாலிசி.

ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு மிக பிரபலமான IT service கம்பெனி மூலமாக ஐரோப்பா வந்தார். அவங்க கம்பெனி பாலிசிப்படி பக்கா பார்மல் டிரஸ் போட்டுக்கிட்டு ஆபீஸ் வருவார். (blazer, tie etc). வந்த எடத்துல எல்லாரும் பெர்முடா போட்டுக்கிட்டு டேபிள் மேல காலை வச்சிக்கிட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா அவர் இருந்த மூணு மாசமும் பார்மல் டிரஸ்ல போக சொல்லி இந்தியாவுலேந்து ஒரே டார்ச்சர். கேட்டா கம்பெனி பாலிசி.

நான் வேலை பார்த்த ஒரு கம்பெனியில் வெளிநாடு செல்லும் அனைவருக்கும் Travel Facilitation program நடக்கும். கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத ஒரு HR வந்து ஏதாவது உளறுவாங்க. அதை கேட்டுக்கிட்டு ஒருசில அம்மாஞ்சிகளும் அமெரிக்கா போகும் விமானத்துக்கு கோட் & சூட் போட்டுக்கிட்டு வருவாங்க. கேட்டா immigration கடக்கும் போது ஒரு நல்ல impression கொடுக்கனும்ன்னு சொல்லி இருப்பாங்க. (பக்கத்துக்கு ஊருக்கு கூட போகாத ஏதாவது ஒரு HR கொண்டு வந்த பாலிசியா இருக்கும்.) இதே தொல்லை விசா இன்டர்வியூவுக்கும் உண்டு.

Integrity :
employee referral program இந்தியாவில் recruitment க்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிகளில் முக்கியமான ஒண்ணு. ஆனா பல சமயம் HR recruiter கிட்டேந்து ரெஸ்பான்ஸ் வராது. HR recruiter வோட ப்ரைமரி முறை கன்சல்டன்ட் கிட்டேந்து ஆள் பிடிக்கறது தான். காரணம் யூகிக்க ரொம்பவே ஈசி.

இவங்க இப்படினா, நம்ப மக்கள் HR கிட்ட எதை கேக்கலாம், எதை கேக்கக்கூடாதுன்னு கூட தெரியாது. கொஞ்சம் கூட professionalism கிடையாது. அடுத்த கம்பனிக்கு ஏன் போறன்னு கேட்டா வரும் ஒரே பதில் "பர்சனல் ரீசன்" இல்லாட்டி ஏதாவது தேவையில்லாத பொய்.

கோபிநாத் நிகழ்ச்சியில் வழக்கம் போல பலர் உணர்ச்சிவசப்பட்டு பேச முயற்சி பண்ணினாங்க. HR கிட்டேந்து fake resume போட்டு வேலைக்கு வராங்கன்னு ஒரு குற்றச்சாட்டு. அதுக்கு பதில் HR லயும் பலர் fake resume போடறாங்கன்னு ! என்ன சொல்றது ! எல்லா எடத்துலயும் ஒரு கேள்விக்கு பதில் எதிர் கேள்வி தான் போல. இந்த கூட்டத்தை வச்சி உருப்படியான விவாதம் நடத்தறது ரொம்பவே கஷ்டம்.

ஒரு HR கல்யாணமான பெண்களை வேலைக்கு / ப்ராஜெக்டுக்கோ சேர்க்கமுடியாதுன்னு நியாயப்படுத்தினார். வேலை பிளான் பண்ண முடியாதாம். ப்ராஜெக்ட் வேலை பாதிக்கப்படுமாம். கம்பெனில அவரோட ரோலே அவருக்கு தெரியல. ஜென்டர் மற்றும் வயது காரணமா discrimination இருக்ககூடாதுங்கற ஒரு Basic அறிவு கூட இல்லை. இவர் எப்படி மேனேஜ்மண்ட கொடுக்கற பிரஷர் ஹேண்டில் பண்ணுவார் ?

6 comments:

Samuel | சாமுவேல் said...

வீட்ல 'permission' வாங்கிடீங்கலா மணி....???

மணிகண்டன் said...

வாங்க சாம் !

Unknown said...

இது மாதிரி நிறைய பேரு இருகாங்க, என்ன வேல செய்யனும்னு கூட தெரியாம!!!! ஒருத்தர் ரெண்டு பேருனா திருத்தலாம்... ஒரு கும்பலே இருக்குதுனா கொஞ்சம் கஷ்டந்தான்!!!


இதுக்கும் அனுமதி இல்லனா டெலீட் பண்ணுங்க.. :)

மணிகண்டன் said...

வாங்க jegu. அனுமதி எல்லாம் பிரச்சனை இல்லைங்க ! இனிமே டெலீட் எல்லாம் பண்ணமாட்டேன் :)-

anujanya said...

என்ன மணி, இவ்வளவு கோவம். உங்க கொம்பேனி HR Manager உடன் சண்டையா :)

Gender bias கூடாதென்பது politically correct. But widely prevalent and sometimes they are unavoidable. Generally pregnancy will be an issue (pun intended).

அனுஜன்யா

மணிகண்டன் said...

***
sometimes they are unavoidable. Generally pregnancy will be an issue (pun intended).
***

கோவம் எல்லாம் இல்லை அனுஜன்யா. ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர்க்கு இந்த attitude இருந்தா புரிஞ்சிக்க முடியும். "I am on my family way" ன்னு சொல்கிற எந்த பெண்ணுக்கும் project allocate ஆகாது.

இன்னும் corporate ethics பத்தி எல்லாம் கூவாம இருக்கற indrustries கூட ஒகே. ஆனா இந்த IT sector ல பண்ணும் அளப்பறை தாங்கமுடியல.

regulations வேணும் அனுஜன்யா.

கம்பெனில உள்ள HR க்கும் இதே attitude இருக்கறது ரொம்பவே தப்பு. அவர் தான் Broader needs - narrow needs பாலன்ஸ் மானேஜ் பண்ணவேண்டியவர்.