சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.
என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?
கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?
பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?
ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?
நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.
மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?
சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?
எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?
இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?
இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?
இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?
அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?
நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?
கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?
எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் - நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?
அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?
அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?
பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.
ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.
ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.
25 comments:
நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பகிர்ந்துக்கொள்ளலாம். :)-
முடிந்தால் தமிழ்மணம் vote போடலாம்.
நான் ஒரு துருக்கி காப்பி குடித்து,பிறகு சிகரெட் நிறைய குடித்ததில்,மேற்கொண்டு ஐந்து ஈரோ செலவு செய்து,நட்டமான ஐந்து ஈரோவை மீண்டும் தெருவில் தேட தொடங்குவேன்.
ஆனாலும் நீங்க அனியாயத்துக்கு நல்லவர் மணி!
இதில சிக்கல் ஒண்ணுமில்லையே. அந்த 5 யூரோவை காணாமல் போன பொருள்களை சேர்ப்பிக்கும் இடத்தில் சேர்க்கலாம். இல்லைன்னா எங்காவது டொனேஷனா கொடுக்கலாம்.
2 வாட்டி ஸ்டார் பக்ஸ்ல போய் டபுள்ஷாட் லாட்டே குடிச்சாலும் தப்பில்லை. பர்ஸிலேயே வச்சிட்டு ஏன் சுத்தனும்? :)
ஏன் தப்பில்லை சொல்லுங்க ஸ்ரீதர் :)- அது தான் நான் தெரிஞ்சிக்க விரும்புவது.
வாங்க பாரா. நீங்க கூட தான் ரொம்ப நல்லவரா இருக்கீங்க :)- அனுபவம்ன்னு போடறது எல்லாம் உண்மையான அனுபவம்ன்னு நம்பறீங்க
ஏதாச்சும் சாரிட்டிக்கு குடுத்திருப்பேன்.
ஓட்டும் போட்டாச்சு :)
வாங்க சின்ன அம்மிணி. என்னோட பதிவுக்கு வோட்டு போடசொன்னா எங்காயாவது போயி போடறீங்க :)- நல்லது இல்ல.
மணி, அந்த காசுல லாட்டரி வாங்குவேன், நம்ம காச போட்டு வாங்குனாத்தான் லக்கு இல்லையே? அப்புறம் ரொம்ப முடியாம பிச்சை எடுக்கிறவங்களுக்கு கொஞ்சம் அதிகமா தருவேன்...
ரெண்டுலயும் சரியா ஓட்டு போட்டிருக்கேன் மணி.
பிரபாகர்.
ஒரு நாள் அந்த துருக்கிப் பெண்ணிற்கு முன்னால் சென்று யுரோவை கீழே போடுங்கள்..அவள் எடுத்துக் கொண்டு சென்றுவிடுவாள்
மணிகண்டன்
நான் பல முறை கடைக்காரர் தவறாக கொடுத்த அதிக பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறேன், ஒரு பெண்மணி தவற விட்ட 100$ நோட்டை எடுத்து அவரை அழைத்து கொடுத்தேன். இன்னாருடையது என்று தெரிந்தால் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கொடுத்து விடுவேன், ஆனால் கீழே கிடந்த, யாருது என்று தெரியாத பணத்தை எடுத்தால் ரொம்ப யோசிக்காமல் பாக்கெட்டில் போட்டுக்குவேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள்.
நீங்க இலக்கியவாதி ஆயிட்டீங்க..!
:-)
அஞ்ச யூரோ கிடைச்சா ஒரு கட்டிங் அடிச்சிட்டு குப்புற படுத்துக்காம!
//♠ ராஜு ♠ said...
வாழ்த்துக்கள்.
நீங்க இலக்கியவாதி ஆயிட்டீங்க..!
:-)//
அப்ப.. இதுக்கு முன்னால என்னாவா இருந்தாராம்??
(படிக்காமலேயே ஓட்டு போட்டாச்சு..)
அன்பின் மணி க்ண்டன்
ஐந்து யூரோ படுத்தி விட்டதா
புரிகிறது - யாருடையது என்று தெரியாவிட்டால் என்ன தான் செய்வதாம்
நல்வாழ்த்துகள்
//அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?//
எனக்கும் அப்படிதான் தோணுது... :)
---
btw.. ரொம்ப நல்லா இருந்துதுங்க மணி...
கீழே போட்டு விட்டு சென்று விடுங்க்ள். பிரச்சனை முடிந்தது !!
""கொஞ்சத்தில் உண்மை உள்ளவன் அனேகத்தில் அதிகாரி ஆக்கப்படுவான்....... "" இந்த மாதிரி பாடங்கள் நிறைய சொல்லி கொடுத்திருக்காங்க.
சோ... இந்த "சிறு தொகை", "ஐந்து யுரோ தானே" .....அப்படின்னு நீங்க கேட்ட கேள்வி எல்லாம் ரொம்ப தப்பு..
சரி இப்ப சம்பவத்துக்கு வருவோம், எனக்கு என்னமோ அந்த துருக்கி பெண் வேண்டும் என்றே பணம் கீழ போட்டு இருக்காங்கனு தோனுது, எங்கடா இந்த மனிதர் நம்மளிடம் வந்து பேச மாட்டாரான்னு.....கொஞ்சம் அழகா இருந்தா இந்த பிரச்சினை தான், விடுங்க பாஸ்.
வாங்க பிரபாகர். லாட்டரி நல்ல ஐடியா. நான் ஆன்லைன் காசினோ ட்ரை பண்ணி பார்க்கறேன் :)-
@ TVRk என்ன சார் ? ஏதோ தமிழ்ப்பட heroine வந்தா ஒரு ரூபா கீழ போடுவாங்களே ! அது மாதிரி ஐடியா தரீங்க :)-
@ஸ்ரீராம் - நீங்க சொல்றது கரெக்ட் தான்.
@ராஜு - இது எல்லாம் ஓவரா இல்லையா ?
@அதிஷா நல்ல அறிவுரை. நன்றி.
@பீர் படிச்சி பாருங்க. நாளைக்கு டெஸ்ட் வைப்பேன் :)-
@சீனா - ஆமாங்க. அது தான் பிரச்சனையே !
@அன்புடன் மணி - :)- நன்றி.
@ப்ருனோ - நான் சும்மாவிட்டுட்டு போனா வேற யாராவது எடுப்பாங்களே !
@சாம் - உங்க பின்னூட்டத்துல முதல் ரெண்டு பத்தி புரியலை. மூணாவது பாராவுல பொருள் பிழை இருக்கு :)-
அன்பான நண்பர் மணி,
This is a too simple of a dilema from which one can infer a moral judgement!
சொல்லுவது என்னவென்றால், நீங்கள் இந்த ஐந்து euro வை வைத்து எது செய்தாலும் அது யாரையும் பெரிதாக பாதிக்கபோவதில்லை! நீங்கள் ஒரு ஐரோப்பிய நாடில் இருந்து இதை செய்வதால் (I assume you are some where in Europe) இதை இழந்தவருக்கு இது மிக மிக சிறிய இழப்பே! So i sincerely feel there is no case for a moral dilema of any sort immaterial of what you do with this small change!!
But I see your point. Nevertheless, there are much more serious moral dilemas one can be thro. For example, imagine if what you found was a wad of rupee bills amounting to a ten thousands and without any cover or address marking and it so happens that it was lost by a guy who needs it for an emergency operation which you come to know later but meanwhile you have given this to some charity which you cannot retrive. Imagine that you come to know about it somehow and that the guy who has lost this amount died on account of loosing this money! So the question is "are you responsible?" The point is, even this complicated activity is not a difficult one to judge on moral terms for the simple reason that you cannot do anything about this and morover you have given it for a charity!
In case you want more clarity on what a moral dilema really is and how it affects our decision making and how our brain evolved to look at such things read "The Moral Minds' by Marc D Hauser. Will give you many answers on the topic you have raised.
நன்றி
http://nonono-no-no.blogspot.com/
ஹலோ நோ - ப்ளாக் ஆரம்பிச்சுட்டீங்களா ? குட் குட். ஆனா வெறும் விமர்சனங்கள் மட்டும் எழுதாதீங்க :)- கொஞ்ச நாள்ல எரிச்சல் ஆகி பர்சனலா மாறிடும். ஐ மீன் யு வுட் பீ addicted to do hard criticism as you are nameless.
****
நீங்கள் இந்த ஐந்து euro வை வைத்து எது செய்தாலும் அது யாரையும் பெரிதாக பாதிக்கபோவதில்லை! நீங்கள் ஒரு ஐரோப்பிய நாடில் இருந்து இதை செய்வதால் (I assume you are some where in Europe) இதை இழந்தவருக்கு இது மிக மிக சிறிய இழப்பே! So i sincerely feel there is no case for a moral dilema of any sort immaterial of what you do with this small change!!
*****
அப்படியா சொல்றீங்க ? :)- பத்தாயிரம் ரூபாய்ன்னா ஒரு பிரச்னையும் இல்லையே ! நேரடியா போலீஸ் கிட்ட போயி கொடுக்கபோறீங்க. தொலைச்சவரும் ரிப்போர்ட் பண்ண போறாரு. போலீஸ் அவங்க கிட்ட ஒப்படைக்க போறாங்க ! நோ மாரல் dilemma.
5, 10, 20, 50, 150, 200 ரூபான்னா என்ன பண்ணறோம் ?ethics என்ன ? எப்படி டிசிஷன் எடுக்கணும் ? அப்படிப்பட்ட decision எடுக்கறவங்களை மத்தவங்க எப்படி ஜட்ஜ் பண்றாங்க ? அவங்க
கூட பழகவே பயப்படுவாங்களா ? மிட்-பாயின்ட் எப்படி ஜட்ஜ் பண்ணுவது ? என்ன parameter ?
மறுவுலகத்துல என்ன ரிவார்ட் , என்ன பனிஷ்மென்ட் ?
இதுக்கு புக் எல்லாம் படிச்ச நாம் யோசிப்பது தான் மாறுபடும். நான் தெரிஞ்சிக்க விரும்புவது நீங்க என்ன பண்ணுவீங்கன்னு :)- தட் இஸ் இட்.
Personally, i never have any moral dilemmas :)-
i liked the way the article is written ,a different persception.
Mani,
thedikite irukinga...? Appram antha turkey ponna pathi full'a sollame vitutigale..rombha kastama irundadu...
அந்த பெண்ணின் முழு விவரத்தையும் உங்களது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி உள்ளேன் க்ரிஷ். படித்து பயன் பெறவும் :)-
Dear Mr. Manikandan,
I visited your blog site only today and read this post on 5 Euros. You have too much concience to worry about 5 Euros knowing well what it is worth. True, you wou and I would have tried to hand over to the right person or the Police if the amount was larger. Now you have earned the 5 Euros as it has given you lot of dilemma and tension! Enjoy! I will be going through your other older posts and follow in the future as well.- R. Jagannathan
Post a Comment