நண்பர் பீர் அவர்களின் அழைப்பை ஏற்று பலமுறை எழுதி ஏனோ பதிவிடாமல் இருந்து வந்திருக்கிறேன். இந்தப்பதிவை தொடங்கிய மாதவராஜ் "பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர்" என்று எழுதி இருந்தார். எனக்கு பிடிக்காதவரை எழுதவதில் ஒரு பிரச்னையும்/மனத்தடையும் இல்லை. பல categoryகளில் பிடித்தவர் உடனடியாக மனதிற்கு தோன்றினாலும் பிடிக்காதவர் பிடிபட மறுக்கிறது. Anyways, முயற்சி செய்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
பதிவர்
பிடித்தவர் - தண்டோரா. பிரமாதமான எழுத்துநடை. நகைச்சுவையும் சூப்பர். (உன்னைப்போல் ஒருவன் பட விவாதத்தில் தேவையில்லாமல் வெட்டியாக கலந்துக்கொண்டபோது நான் கண்டெடுத்த பதிவர் !)
பிடிக்காதவர் - எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் :)-
கவிஞர்
பிடித்தவர் - நான் கவிதைகளை பதிவுகளில் மட்டுமே படித்துள்ளேன். அவற்றுள் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதைகள் பிடிக்கும். (most of them)
பிடிக்காதவர் - முதல் ஒன்றிரண்டு வரிகளில் கவிதை புரிய கடினமாக இருந்தால் படிப்பதில்லை. ஆதலால் பிடிக்காத கவிதைகள்/கவிஞர்கள் என்று எதுவும்/யாரும் இல்லை.
எழுத்தாளர்
பிடித்தவர் - தி ஜானகிராமன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ஆதவன் தீட்சண்யா, சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர்
பிடிக்காதவர் - விமலா ரமணி, பாலகுமாரன், ராஜேந்திரகுமார்
விளையாட்டு வீரர்/வீராங்கனை
பிடித்தவர் - ஜன்ஷேர் கான் , கேரி கஸ்பரோவ், ஸ்டீபான் எட்பர்க், வீனஸ் வில்லியம்ஸ், மரடோனா, அஷ்ராவின், அசாருதீன், லாரா, வாசிம் அக்ரம், டைகர் வுட்ஸ் (விளையாட்டுக்கு மட்டும் நாடு / மாநிலம் ரூல்ஸ் ஒதுக்கப்படுகிறது)
பிடிக்காதவர் - நண்பர் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த் பெயரை எழுதி இருந்தார். அதுக்கு காரணமாக அவர் ஸ்பெயினில் வசிப்பதை சொல்லி இருந்தார். அவரை பின்னூட்டத்தில் பிடிக்காததற்கு "இது எல்லாம் ஒரு காரணமா" என்று கேட்டு இருந்தேன். அதற்கு அவர் பிடிக்காத விளையாட்டு வீரர் எழுதுவது சுலபமில்லை. யோசித்துப் பாருங்கள் என்று கூறி இருந்தார். அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சச்சின் பேட்டிங் செய்யும்போது வாசிம் அக்ரம் பந்துபோட வந்தால் "டேய், அவன் காலை உடைங்கடா" என்று கத்தினாலும் மனதின் ஒரு மூலையிலாவது அவரது பந்துவீச்சை ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை.
நடிகர் / நடிகை
பிடித்தவர் - கமல், சிம்ரன், சிவாஜி
பிடிக்காதவர் - நமீதா !
இசை அமைப்பாளர்
பிடித்தவர் - முன்பு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். இப்போழுதென்னவோ சற்றுப் பழையப் பாடல்கள் பிடிக்கின்றன.
இதைத்தொடர புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை அழைக்கிறேன் :)-
18 comments:
//எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் :)//
:-))))
//
சச்சின் பேட்டிங் செய்யும்போது வாசிம் அக்ரம் பந்துபோட வந்தால் "டேய், அவன் காலை உடைங்கடா" என்று கத்தினாலும் மனதின் ஒரு மூலையிலாவது அவரது பந்துவீச்சை ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை.
//
அக்ரம், அக்தர் எல்லாம் அப்படி கஷ்டமா பந்து வீசி, அதையும் சிக்சருக்கு தூக்கினதுனால தான் சச்சினுக்கு பெருமை....வில்லன் இல்லாட்டி ஹீரோவே டம்மி ஆயிடுவாருல்ல :0))))
(எழுத்தாளர் தவிர, பிடிக்காதவர் பெயர் எதையும் எழுதவில்லை சாமர்த்தியம்தான். :)
@பீர் என்ன இப்போ ? பிடித்தவர் எல்லாம் பிடிக்காதவர்ன்னு படிச்சுக்கோங்க :)-
@கிரி - முதல் பின்னூட்டம். தேங்க்ஸ்.
@அதுசரி - வருகைக்கு நன்றி.
:)
@vidya இப்படியே ஸ்மைலி பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் ? ப்ளாக்ல ஏதாவது எழுதுங்க. கரையான் அரிச்சிடப்போகுது.
:-)
//பிடிக்காதவர் - நமீதா !//
தல நீங்க ரொம்ப நல்லவரு..
//எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் //
ஹை நானும்....
அன்பு, நான் ஆதவன் - வருகைக்கு நன்றி.
வசந்த் - நீங்க சான்ஸ் இல்லை வசந்த் :)- உங்க பதிவுகள் படிச்சி இருக்கேன். நல்லாவே இருக்கும்.
//இதைத்தொடர புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை அழைக்கிறேன்//
அண்ணே.. இதையே அழைப்பாக ஏற்று, இங்கு எழுதி இருக்கிறேன்.. டைம் இருந்த படிச்சு பாருங்க (படிச்சுட்டு திட்ட படாது) :)
பிரசன்னா, நல்லா எழுதியிருக்கீங்க.
மீதி இரண்டு இடங்களே உள்ளன். எனவே, முந்தி வரும் அடுத்த இருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்பதை...
ஊக்கத்திற்கு நன்றி பீர் :)
பாராட்டத்தக்க தைரியம்!!
மணி ...இந்த தொடர் பதிவு உற்பத்தியான இடத்தில் நீங்கள் எழுதியது...
//நல்லா இருக்கு மாதவராஜ். நல்ல மஜாவான தொடர் .................எனக்கு பிடிக்காத பதிவர் sammy //
முதலில், இந்த உண்மையை உங்கள் பதிவில் எழுதாமல் மறைத்ததற்கு, கண்டனம்.
ரெண்டாவது, நான் மொத்தமாவே பத்து பதிவு தான் எழுதிருக்கேன், இதில் எப்படி உங்களுக்கு பிடிக்காத பதிவர் ஆனேன். ஏன் ?. ஏன் ?..ஏன் ? (அன்னிக்கு மாதவராஜ் பதிவில் சண்டை போட வேண்டாம்னு விட்டுட்டேன், இன்னிக்கு நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் )
மணி ..தற்போதைய அரசியல் தலைவர் சொல்லுங்க ? பிடித்தவர்? பிடிக்காதவர் ? (காமராஜர், ராஜாஜினு,பெரியார்னு ஆரம்பிச்சுராதீங்க..pls)
ஆனந்த, ஸ்பெயின் வேலை பார்க்க போகலை, சொந்த நாடு பிடிக்லைன்னு போயிருக்கார். சோ எனக்கு அது நல்ல காரணமா தான் தெரியுது.
//பிடிக்காதவர் - நமீதா !//
எம்புட்டு தெகிரியம் உமக்கு. என் தலிவியவா புடிக்கலனு சொல்ரிங்க. கவின்ச்சிகிறேன்.
Enna Mani Sir,
Nammithava pidikatha? then whats the use of living...
apram pidikara list'la Tedulakar'a vittutigale..?
வாங்க பிரசன்னா. நல்லா எழுதி இருக்கீங்க :)- உங்க சைட்ல மால்வேர் இருக்கு. பாருங்க
சாம் - மாதவராஜ் பதிவுல நான் எப்ப சொன்னேன் ? :)- எனக்கு பிடிச்ச அரசியல் தலைவர் - அடைக்கலராஜ் பிடிக்காத தலைவர் - வெங்கடேஸ்வர தீட்சதர். போதுமா ? satisfied ? ஆனந்த் உங்க கிட்ட வந்து நேரா சொன்னாரா ? :)- எனக்கு என்னவோ ரீசன் flimsy ஆக இருக்கு. பட், அது உங்க சாய்ஸ் :)-
@தேவன்மாயம் - நன்றி !!!
@சஞ்சய்காந்தி @க்ரிஷ் - நன்றி. பயமா இருக்கும் உங்க மிரட்டலை பார்த்தா :)-
Post a Comment