Friday, May 1, 2009

கிச்சடி 01 / 05 / 09

ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.


சமீபத்தில் ட்விட்டர்ல பார்த்த/கவர்ந்த ஒரு மெசேஜ் :-


நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?


தமிழ்மணம் முகப்பு பகுதில "எங்கே பிராமணன் - நிறைவு பகுதி" எப்போ வரும் ?


ஷெல் நிறுவனம் கடந்த வருடம் 8 பில்லியனுக்கும் மேலாக லாபம் ஈட்டி கார்ப்பரேட் வரலாறு படைத்தது. கடந்த மூன்று மாதங்களாக புதிதாக வேலைக்கு யாரையும் சேர்க்காமல் நிறுத்தி வைத்து இருக்கிறது. என்ன காரணமா இருக்கும் ?


என்னோட கம்பெனில பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து செய்த ஒரு ஆப்படிக்கும் பிளான். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதில் உங்களுக்கு ஏதாவது முக்கிய முரண்பாடு தெரிகிறதா ?





சமீபத்தில் படித்த புத்தகங்கள் :-



1) Murder


2) Fatal Attraction


3) Crime in London


4) Murder


5) The Testament of Adolf Hitler


6) சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்


7) எங்கே பிராமணன்.


உண்மையிலே ஒரு பத்து வாக்கியம் கொண்ட கட்டுரையோ / கதையோ கூட எழுத தெரியல. அதனாலே அடிக்கடி கிச்சடி எழுத வேண்டியதா இருக்கு.


சமீப காலமா வலையுலகத்துல politically correct பதிவுகள் மட்டும் தான் எழுத முடியுது. ஏதாவது நக்கலோ / satire எழுதினா யாராவது வந்து ரகளை பண்றாங்க. பதிவுலக தீவிரவாதம்.


பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்துமதம் - பா ஜ க - இந்துத்துவா. உண்மையிலே மேலோட்டமா எழுதறத குறிப்பால உணர்த்துவதாம் இந்த தலைப்பு. இது தெரியாம என்னனவோ நினைச்சிட்டேன்.


இந்திய கிரிக்கெட் போர்டு ஐ.சி.எல்ல விளையாடினவங்க எல்லாம் மறுபடியும் IPL / இந்திய அணிக்கு வருவதற்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க. எங்க ஏரியா பையன் ஒருத்தன் ICL சென்னை அணில விளையாடறான். ICL இந்திய அணிக்கு கூட கேப்டனா இருந்தான். சதீஷ்ன்னு பேரு. மறுபடியும் ஒரு சுத்து வந்தா நல்லா இருக்கும்.


இன்னும் ஒரு வாரத்துக்கு கண்தானம் விட்ஜெட் வச்சி இருக்கலாம்ன்னு இருக்கேன். யாருக்காவது ஆர்வம் இருந்தா அந்த லிங்க் கிளிக் பண்ணி படிச்சு பாருங்க.

16 comments:

மணிகண்டன் said...

பின்னூட்ட டுபுரித்தனம்.

வால்பையன் said...

//நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?//

”மெய்”யாலுமே தெரியலையே!
அப்ப நான் சொல்றது ”பொய்”யா?

மணிகண்டன் said...

கேள்வி மட்டும் தான் கேக்க தெரியும் எனக்கு !

முதல் வருகைக்கு நன்றி வால்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//


புத்திசாலித்தனமான முடிவு

:-))))

எம்.எம்.அப்துல்லா said...

//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

//

பதிவு எழுதுமுன் நான் ரொம்ப நாளா அந்த வேலை மட்டும்தான் செய்துகிட்டு இருந்தேன்.

(இப்ப மட்டும் நீ எழுதுறது பதிவான்னெல்லாம் கேக்கப்படாது)

:))

லக்கிலுக் said...

இந்தப் பதிவே ஒரு பெரிய பின்னூட்டம் மாதிரி நல்லாவே இருக்கு :-)

பீர் | Peer said...

//ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம்.//

அந்த பிரபல பதிவரை சுண்டு இழுப்பதற்காகத்தானே கிச்சடியில் 'சமீபத்தில் படித்த புத்தகங்கள்'?


அவர் பின்னூட்ட ஸ்டைல் லாங்குவேஜை பதிவுகளிலும் பயன்படுத்த சொல்லியிருந்தாரே... வெகுசன எழுத்தில் வெற்றி பெற்றவர், அவர் சொல்லுவதையும் நடைமுறை படுத்திப்பாருங்களேன்.

கிச்சடி ருசி

மணிகண்டன் said...

ராதாகிருஷ்ணன் சார் ! :)- நான் பாவம் இல்லையா ? அப்படி இருந்துடாதீங்க மணிகண்டன்னு யாருமே சொல்லல !!

அப்துல்லா அண்ணேன் :- ரொம்ப தன்னடக்கம் கூடாது. ஆனா உங்க பழைய ப்ளாக் ஹேக் பண்ணும்போது அதுல நிறைய பதிவுகள் பார்த்தேனே !

லக்கி :- வஷிஸ்டர் வாயாலே பிரம்மரிஷி ! இனி மேனகாவை தேடி ஓட வேண்டியது தான்.

chill peer - உண்மையான லிஸ்ட் தாங்க அது ! அவர் அட்வைஸ் புரிஞ்சது. ஆனா ஏதோ நான் தெரிஞ்சிக்கிட்டு எழுதாத மாதிரி சொல்றீங்களே ! நானா ஒண்ணு எழுதறதுக்கும், இன்னொருத்தருக்கு பதில் சொல்ல எழுதறதுக்கும் பயங்கர வித்தியாசம் இருக்குங்க. (என்னைய பொறுத்தவரை )

no2 :- வேற எங்கேயோ போடவேண்டிய பின்னூட்டம் இங்கே போட்டுட்டீங்க.

பீர் | Peer said...

அந்த லிஸ்ட நம்பிட்டேன் மணி,
இங்க எழுதரவங்க எல்லோரும் எல்லாம் தெரிஞ்சுகிட்டுதான் எழுதுராங்கன்றீங்களா? தெரிஞ்ச விசயத்தில் அவரவர் கருத்து அவ்வளவே...

அவர் சொல்வது, ஸ்லாங் பற்றி.
இப்போது கூட எனக்கு சந்தேகம், நீங்களும் பின்னூட்ட ரிலீஸர் வச்சுருக்கீங்களோ? என்று.

என்னை அங்கு இழுத்துச்செல்வது அவரது ஸ்டைல் மட்டுமே. மற்றபடி, அவரது சில கருத்துகளில் எனக்கும் முரண்பாடு இருப்பதுண்டு. ஆனாலும் உங்களளவு ஆர்கியுமண்ட் ஸ்கில் எனக்கில்லை.

மணிகண்டன் said...

***
அவர் சொல்வது, ஸ்லாங் பற்றி.
***

இனி நிச்சயமா ட்ரை பண்றேன். ஆர்கியுமண்ட் ஸ்கில் எல்லாம் எனக்கும் கிடையாதுங்க !

பீர் | Peer said...

முந்தைய எனது பின்னூட்டத்திலுள்ள //பின்னூட்ட ரிலீசர்// என்பதை பதிலூட்ட ரிலீசர் என்று மாற்றி வாசிக்கவும். கொவப்படப்போகிறார் :)

Vidhya Chandrasekaran said...

\\ஒரு பிரபல பதிவருக்கு நான் பின்னூட்டம் எழுதும் ஸ்டைல் பிடிச்சி இருக்காம். சோ, இனிமே நான் பதிவுகளுக்கு பதிலா பின்னூட்டம் மட்டும் போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

சொல்வதற்கு ஒன்றுமில்லை:))

anujanya said...

மணி,

//பற்றியும் பற்றாமலும் - பகவத் கீதை - இந்துமதம் - பா ஜ க - இந்துத்துவா. உண்மையிலே மேலோட்டமா எழுதறத குறிப்பால உணர்த்துவதாம் இந்த தலைப்பு. இது தெரியாம என்னனவோ நினைச்சிட்டேன். //

இது உன் கேள்வி என்று வைத்துக் கொண்டால்,

//நீங்கள் சொல்லும் செய்தி பொய் என்று எனக்கு முன்பே தெரியும்போது நீங்கள் சொல்வது பொய்யாகுமா ?//

இது என் பதிலும் கூட என்று வைத்துக் கொள்ளலாம் :)

இல்லை அது ஒரு provocative comment என்று வைத்துக் கொண்டால்,
"ஏதாவது நக்கலோ / satire எழுதினா யாராவது வந்து ரகளை பண்றாங்க. பதிவுலக தீவிரவாதம்" என்பதை புத்திசாலித் தனமான டிஸ்கி என்றும் வைத்துக் கொள்ளலாம்.

Murder இரண்டு முறை படித்தாய் போலும். கடைசி இரண்டு புத்தகங்களும் கூட நீயே சொல்லும் political correctness என்று தான் பிறருக்குத் தோன்றும்.

அனுஜன்யா

மணிகண்டன் said...

அனுஜன்யா, இவ்வளவு பெரிய கமெண்ட் ! முதல் பதில் தான் கரெக்ட். நீங்க அரசியல் பதிவு எழுதினதுனால அங்கே போடவேண்டிய பின்னூட்டம் கிச்சடியில் எழுதப்பட்டது.

provocative comment எல்லாம் கிடையாது.

கடைசி ரெண்டு புத்தகத்தோட ரீசன் கூட கரெக்ட் தான். பட், உங்க டிஸ்கி ஐடியா சூப்பர். கவிஞரின் கற்பனை திறமை !

வித்யா, ரெண்டாவது பாயிண்ட்டுக்கும், முதல் பாயிண்ட்டுக்கும் ஒரு லிங்க் இருக்கு.
வருகைக்கு நன்றி.

Samuel | சாமுவேல் said...

உங்க கம்பெனில நீங்க தான் பெரிய தலைன்னு கேள்வி பட்டேன் ....

///////

கொஞ்சம் author பெயரும் எழுதி இருந்தா உதவியா இருக்கும் ...எனக்கு

////////

சதிஷ் ICL ..அவர் பிடித்த 'famous catch' பார்த்திருக்கேன். நீங்க பார்கலைனா youtube ல பாருங்க.

this move is more related to bringing down the icl event than to give opportunity to players..only beneficiary board may be NZ.

மணிகண்டன் said...

***
உங்க கம்பெனில நீங்க தான் பெரிய தலைன்னு கேள்வி பட்டேன்
****

:)- ஏன் ?